Thursday, June 25, 2009

முன்று வகையான ராகி (கேழ்வரகு)சமையல்கள்



ராகி சேமியா புட்டு



தேவையான பொருட்கள்

ராகி சேமியா = கால் கிலோ
தேங்காய் = அரை மூடி
நெய் = ஒரு மேசை கரண்டி
சர்க்கரை = 200 கிராம்

செய்முறை

1. ராகி சேமியாவை லேசான வெண்ணீரில் போட்டு ஒரு நிமிடத்தில் வடிகட்டி விடவேண்டும்.
2.அதை இட்லி பானையில் ஈரதுணியை விரித்து அவித்து எடுக்கவும்.
3. அதில் நெய்யை உருக்கி ஊற்றி, சர்க்கரை சேர்த்து தேங்காயை துருவி சேர்த்து நன்கு கலக்க்கவும்.
சுவையான ராகி சேமியா புட்டு ரெடி.
குழந்தைகள் இனிப்பு நுடுல்ஸ் என்று விரும்பி சாப்பிடுவார்கள்.






ராகி சேமியா உப்புமா













தேவையான‌ பொருட்க‌ள்


ராகி சேமியா = 100 கிராம்
தாளிக்க‌
எண்ணை = இரண்டு தேக்கரண்டி
கடுகு = கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு = அரை தேக்கரண்டி
வெங்காயம் = ஒன்று
பூண்டு = இரண்டு பல்
கருவேப்பிலை = சிறிது
ப‌ச்ச‌மிள‌காய் = ஒன்று
காஞ்ச‌ மிள‌காய் ‍= ஒன்று
எலுமிச்சை சாறு = அரை தேக்க‌ர‌ண்டி


செய்முறை


1. வெண்ணீரை கொதிக்க‌ விட்டு அதில் ராகி சேமியாவை போட்டு நூடுல்ஸ் செய்வ‌து போல் இர‌ண்டு முன்று நிமிட‌த்திற்குள் வ‌டித்து விட‌வும்.
2 .பிற‌கு வாய‌க‌ன்ற‌ வான‌லியில் எண்ணை காய‌வைத்து க‌டுகு, காஞ்ச‌ மிள‌காய், உளுத்த‌ம் ப‌ருப்பு, பூண்டு, வெங்காய‌ம், க‌ருவேப்பிலை போட்டு தாளித்து ப‌ச்ச‌மிள‌காயை இர‌ண்டாக‌ கீறி போட‌வும்.

3. வ‌டித்து வைத்துள்ள‌ ராகியை சேர்த்து கிள‌றி எலுமிச்சை சாறு சேர்த்து இர‌க்க‌வும்.ட‌யாப‌ட்டீஸ் பேஷ‌ன்ட்டுக‌ளுக்கு ஏற்ற‌ உண‌வு இது.
இதை சிக்க‌ன் ம‌ட்ட‌ன் சேர்த்து காய்க‌ள் சேர்த்து செய்து சாப்பிட‌லாம்.




























ராகி கஞ்சி (பானம்)

நான்கு மாத கை குழந்தை முதல் வயதான பெரியவர்கள் வரை குடிக்கும் சத்தான பானமாகும்.உடல் சேர்வை நீக்கும், பசி தாங்கும் பானமும் ஆகும்.

தேவையான பொருட்கள்

ராகி பவுடர் = இரண்டு மேசை கரண்டி
பால் = இரண்டு டம்ளர்
தண்ணீர் = முன்று டம்ளர்
சர்க்கரை = 10 தேக்கரண்டி
ஏலக்காய் = முன்று
சாப்ரான் (குங்கும பூ) = கால் தேக்கரண்டி
நெய் = கால் தேக்கரண்டி


முதலில் ராகி பவுடரில் பாதி அளவு தண்ணீர் விட்டு கலக்கி டீ வடிகட்டி கொண்டு வடிக்கட்டவும்.
மீண்டும் அந்த வடித்த கப்பியில் மீதி தண்ணீரை ஊற்றி வடிக்கவும்.
ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஏலக்காய் சேர்த்து காய்ச்சவும்.
ராகி வெந்து கஞ்சி பதத்திற்கு வரும் போது பால் சேர்த்து சர்க்கரை சேர்த்து கொதிக்க விட்டு அதில் சாப்ரானை தூவி நெய் உருக்கி ஊற்றி இரக்கவும்.

குறிப்பு

கை குழதைகளுக்கு பால் சேர்க்காமல் மெல்லிய வெள்ளை மல் துணியில் ஆறிய வெண்ணீரில் கலக்கி வடித்து பிறகு காய்ச்சி கொடுக்கவும்.
ஆறு மாதத்திற்கு பிறகு என்ன பால் பார்முலா மில்க் சேர்ந்து காய்ச்சி கொடுக்கலாம்.
எட்டு மாதத்திலிருந்து ராகியுடன் பொட்டுகடலை,கோதுமை,அரிசி, ஜவ்வரிசி, பாதம் எல்லாம் சேர்த்து மிஷினில் கொடுத்து திரித்து காய்ச்சி கொடுக்கலாம், குழந்தைகளுக்கு தெம்பையும் புஷ்டியையும் கொடுக்கும்.
முழு ஏலக்காயிக்கு பதில் பொடியும் சேர்த்து கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு ஒரிரு இதழ் சாப்ரான் போட்டு காய்ச்சி விட்டு பிறகு அதை எடுத்து விட்டு கொடுக்கவும்.
சில குழந்தைகளுக்கு வாயில் தட்டினால் வாமிட் வரும்.
வயதானவர்கள் நெய் சேர்க்காமல் கொஞ்சமா சர்க்கரை சேர்த்து காய்ச்சி குடிக்கலாம்.இதை கூழ் போல கட்டியாக காய்ச்சியும் ஸ்பூனால் ஊட்டி விடலாம்.
ரொம்ப மாவை அள்ளி போட்டு சரியாக வேக வில்லை என்றால் பிள்ளைகளுக்கு பிடிக்காது.காலையிலிருது மதியத்துக்கும் கொடுக்கனும், மாலை இரவு வேண்டாம்.
(வயலில் ஏர் உழபவன் ஒரு கோப்பை கேப்பங்கஞ்சியை (ராகியை) குடித்து விட்டு தான் ஏர் உழுகிறான்). உடலுக்கு அவ்வளவு தெம்பை கொடுக்கும்.
குழந்தைகள் பள்ளி செல்ல ஆரம்பிக்கும் போது சாப்பிட வில்லையே என்று கவலை பட தேவையில்லை, இது ஒரு டம்ளர் கொடுத்தால் போதும் நிம்மதியா இருக்கலாம்.






5 கருத்துகள்:

Jaleela said...

அன்பு உள்ளங்களுக்கு,
மறக்காமல் நல்ல இருக்கா இல்லை கருத்தை தெரிவிக்கவும்.

ஜலீலா

Mrs.Menagasathia said...

எல்லாமே சூப்பரா இருக்கு அக்கா.எனக்கு மாவு தான் கிடைக்கும்,சேமியாலாம் இங்க கிடைக்காது.பார்க்கவே சாப்பிடனும் போலிருக்கு..எனக்கும் அப்படியே செய்து குடுத்தால் நானும் சாப்பிடுவேன்ல..

Unknown said...

அக்கா எல்லாமே ஆரோக்கியமான சத்தான உணவுகள் எல்லா குறிப்பும் அருமை

Jaleela Kamal said...

நன்றி மேனகா நீங்கள் பதிவு போட்டதை இப்ப தான் பார்க்கிறேன்.

ஊருக்கு போனா வாங்கி வந்து செய்யுங்கள்.

Jaleela Kamal said...

பாயிஜா ஆமாம் ரொம்ப சத்து அதிகம், என் பையனுக்கு ஸ்கூல் போகும் போது காலையில் காய்ச்சி ஒரு டம்ளர், நானும் ஒரு டம்ளர் குடிப்பேன், நல்ல பசி தாங்கும்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா