| Tweet | ||||||
Showing posts with label வெயில் கால டிப்ஸ். Show all posts
Showing posts with label வெயில் கால டிப்ஸ். Show all posts
Friday, March 7, 2014
கிட்ஸ் கலர்ஃபுல் தயிர் வடை - Kids Colourful Dahi Vada
வடையை எண்ணையில் பொரித்து சாப்பிடுவதை விட இப்படி தயிர் வடையாய் சாப்பிட்டால் ஒரு கம்பிலீட் மீலாக பில்லிங்காக இருக்கும்.
தயிர் வடை குறிப்பு பெரியவர்களுக்காக போட்டு இருந்தேன். குழந்தைகளுக்கு அவர்களுக்கு ஏற்றார் போல் கலர் ஃபுல்லாகவும் அதே நேரம் வடை போடும் பச்ச மிளகாய் இஞ்சி எதுவும் வாயில் தட்டாமல் சுலபமாக சாப்பிட இந்த முறையில் செய்து கொடுக்கலாம்.
Kids Colourful Dahi Vada
வடைக்கு
உளுந்து பருப்பு = அரை டம்ளர்
உப்பு = கால் தேக்கரண்டி
இஞ்சி ஒரு சிறிய துண்டு
பச்ச மிளகாய் = ஒன்று
ஆலிவ் ஆயில் = அரை தேக்கரண்டி
தயிர் தாளிக்க
ஒரு கப் = தயிர்
பால் = சிறிது
எண்ணை அரை தேக்கரண்டி
கடுகு = அரை தேக்கரண்டி
கருவேப்பிலை = சிறிது
பெருங்காயம் = ஒரு பின்ச்
மோர் = வடை தோய்க்க
அலங்கரிக்க
கலர் புல் = காரா பூந்தி (தேவைக்கு)
வேர்கடலை = சிறிது
வருத்த முந்திரி = (தேவை பட்டால்)
செய்முறை
1. உளுந்து பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
2. ஊறிய உளுந்தை தண்ணீரை வடித்து அதில் உப்பு, ஆலிவ் ஆயில்,இஞ்சி , பச்ச மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும். ஆலிவ் ஆயில் சேர்ப்பதால் ஈசியாக அரையும்
3. அரைத்த மாவை எண்ணையை காயவைத்து சிறிய ஒரு ரூபாய் காயின் அளவிற்கு குட்டி குட்டி மினி வடைகளாக தட்டி போடவும்.
4. வடைகளை திருப்பி போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.
5.சூடான வடைகளை எடுத்து மோரில் நனைக்கவும்.
6.தனியாக சட்டியில் எண்ணை ஊற்றி கடுகு, கருவேப்பிலை தாளித்து தயிர் நன்கு கலக்கி சிறிது பால் சேர்த்து கொள்ளவும்.தேவைக்கு உப்பு சேர்த்து கொள்ளவும்.மோரில் நனைத்த வடைகளை தாளித்த தயிர் கலவையில் சேர்க்கவும்.
7.சிறிய கிண்ணத்தில் இரண்டு இரண்டு வடைகளாக வைத்து அதில் வேர்கடலை, கேரட், கலர் ஃபுல் காரா பூந்தியை தூவி பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு கொடுக்கவும்.
குறிப்பு
இந்த கலருக்கே உங்கள் குழந்தைகள் நல்ல சாப்பிடுவார்கள்.நீங்களும் அடிக்கடி செய்ய வேண்டி வரும். பெரியவர்களுக்காக இருந்தால் நலல் காரம் தேவைக்கு சேர்த்து தாளிக்கும் போது சின்ன வெங்காயம் சேர்த்து தாளித்து கொத்துமல்லி தூவி சாப்பிடவும்.கோடைக்கு ஏற்ற குளு குளு கிட்ஸ் கலர் ஃபுல் தயிர் வடை ரெடி.இது நோன்பு காலத்திலும் செய்து சாப்பிடலாம்.
Friday, July 26, 2013
அவகோடா மாம்பழ ஜூஸ் - Mango Avacoda Smoothie
அவகோடா மேங்கோ ஜீஸ் வித் ஹனி டேட்ஸ் சிரப்
தேவையானவை
பழுத்த அவகோடா பழம் – 1
பழுத்த மாம்பழம் – 1
ஹனி டேட்ஸ் சிரப் – 1 மேசை கரண்டி
பால் – அரை டம்ளர்.
அலங்க்ரிக்க
பிஸ்தா பிளேக்ஸ்
செய்முறை
அவகோட மற்றும் மாம்பழத்தின் கொட்டை மற்றும் தோலை நீக்கி பழங்களை அரிந்து கொள்ளவும்.
மிக்சியில் அரிந்த பழங்களுடன் டேட்ஸ் ஹனி சிரப் மற்றும் பால் சிறிது ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு அடிக்கவும்
. பிஸ்தா பிளேக்ஸ் தூவி பரிமாறவும்.
சுவையான ஹெல்தியான பானம் தயார்..சுவைத்து மகிழுங்கள்
| Tweet | ||||||
Labels:
இனிப்பு,
பானம்,
வெயில் கால டிப்ஸ்,
ஜூஸ் வகைகள்
Monday, July 15, 2013
தயிர் வடை - Curd Vadai
உளுந்து வடை தமிழ் நாட்டின் பாரம்பரிய மாலை நேர சிற்றுண்டியும் காலை நேரம்
டிபனும் ஆகும். இதை தயிர் வடை, சாம்பார் வடை, மோர் குழம்பு வடை, ரசம் வடை,கீரை வடை என பல வகைகளாக தயாரிக்கலாம்.
இந்த வருடம் நோன்பில் இங்கு துபாயில் சரியான வெயில், வெளியில் சென்றால் குற்றலத்தில்
குளித்து விட்டு வந்தது போல் வேர்வையில் நனைந்து வரலாம்.
பிரியாணி தாளித்து வெயிலில் வைத்தால் கூட தானே தம் ஆகிடும் அந்த அளவுக்கு
கோடை வெயில்இங்கு கொளுத்துகிறது.
இந்த நோன்பு நேரத்தில் நோன்பு திறக்க கஞ்சியுடன் பல சிற்றுண்டிகள் செய்வோம். அடிக்கிற இந்த வெயில் நேரத்தில் குளு குளுன்னு இந்த
தயிர் வடை செய்து சாப்பிட அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
வடைக்கு
உளுந்து பருப்பு = ஒரு டம்ளர் (200கிராம்)
உப்பு = முக்கால் தேக்கரண்டி
இஞ்சி - ஒரு சிறிய துண்டு பொடியாக அரிந்தது
பச்ச மிளகாய் = இரண்டு பொடியாக அரிந்தது
ஆலிவ் ஆயில் = அரை தேக்கரண்டி
இஞ்சி - ஒரு சிறிய துண்டு பொடியாக அரிந்தது
பச்ச மிளகாய் = இரண்டு பொடியாக அரிந்தது
ஆலிவ் ஆயில் = அரை தேக்கரண்டி
கருவேப்பிலை பொடியாக அரிந்தது
- சிறிது
வெங்காயம் (பொடியாக அரிந்தது 4 மேசைகரண்டி)
தயிர் தாளிக்க
தயிர் 300 கிராம்
பால் = அரை டம்ளர்
எண்ணை அரை தேக்கரண்டி
கடுகு = அரை தேக்கரண்டி
கருவேப்பிலை = சிறிது
பெருங்காயம் = ஒரு பின்ச்
மோர் = வடை தோய்க்க
அலங்கரிக்க
ஓம பொடி ,காராபூந்தி
செய்முறைதயிர் 300 கிராம்
பால் = அரை டம்ளர்
எண்ணை அரை தேக்கரண்டி
கடுகு = அரை தேக்கரண்டி
கருவேப்பிலை = சிறிது
பெருங்காயம் = ஒரு பின்ச்
மோர் = வடை தோய்க்க
அலங்கரிக்க
ஓம பொடி ,காராபூந்தி
1. உளுந்து பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
2. ஊறிய உளுந்தை தண்ணீரை வடித்து அதில் உப்பு, ஆலிவ் ஆயில், சேர்த்து அரைத்து கொள்ளவும். ஆலிவ் ஆயில் சேர்ப்பதால் ஈசியாக அரையும்.
3. எண்ணையை காயவைத்து அரைத்த உளுந்து மாவை வடைகளாக தட்டி பொரிக்கவும்
4. வடைகளை திருப்பி போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.
5.சூடான வடைகளை எடுத்து மோரில் நனைக்கவும்.(வெண்ணீரிலும் நனைத்து எடுக்கலாம்)
5.சூடான வடைகளை எடுத்து மோரில் நனைக்கவும்.(வெண்ணீரிலும் நனைத்து எடுக்கலாம்)
6.ஒரு சிறிய கிடாயில் எண்ணை ஊற்றி கடுகு, கருவேப்பிலை தாளித்து தயிர் நன்கு கலக்கி சிறிது பால் சேர்த்து உடனே அடுப்பில் இருந்து
இரக்கவும்.தேவைக்கு உப்பு சேர்த்து கொள்ளவும்.மோரில் நனைத்த வடைகளை தாளித்த தயிர் கலவையில் சேர்க்கவும்.10
நிமிடம் ஊறவைக்கவும்.
பவுளில் இரண்டு இரண்டு வகைகளாக வைத்து
தேவைக்கு சிறிது தயிர் கலவையும் சேர்த்து ஓமபொடி ,கொத்துமல்லி தழை,காரா பூந்தி தூவி
பரிமாறவும்.
சுவையான தயிர்
வடை ரெடி
கொளுத்தும் வெயிலுக்கு
இதமான உணவு. உடலுக்கு குளிர்ச்சி தர கூடியது.
நீங்களும் சுவைத்து மகிழுங்கள்
சென்னை ப்ளாசா பேஸ் புக் பேஜ் லைக் பண்ணுங்கோ...
| Tweet | ||||||
Tuesday, June 18, 2013
லஸ்ஸி, ரோஸ் மில்க் லஸ்ஸி, பைனாப்பிள் லஸ்ஸி - Lassi ,Rose Milk Lassi,Pineapple Lassi
வெயில்காலத்துக்கு ஏற்ற மிக அருமையான வயிற்றுக்கு இதமான குளு குளு ஜூஸ் என்றால் லஸ்ஸி தான்.
லஸ்ஸி நான் ஸ்கூல் போகும் வழியில் ஒரு அம்மா வீட்டு வாசலில் லஸ்ஸி செய்யும் மோட்டார் மத்துடன் கடைந்து விற்பார்கள்.
அந்த பக்கமாக போகும் யாருமே ஒரு டம்ளர் வாங்கி குடிக்காமல் செல்ல மாட்டார்கள் அவ்வளவு ருசி.
ஃப்ரஷாக தானே வீட்டில் தயிர் தயாரித்து, ரொம்ப சுத்தமாக செய்வார்கள்.
நாங்க எல்லாரும் ஸ்கூல் போனதும் அம்மா, பெரிமா சித்தி எல்லாரும் மார்கெட்க்கு மீன் வாங்க செல்வார்கள். வெயிலில் களைத்து மீன் வாங்கி வரும் போது வழியில் அவர்கள் இந்த லஸ்ஸியை வாங்கி குடித்து விட்டு தான் வருவார்கள்.நாங்கள் மாலை வரும் போது சுட சுட மீன் குழம்பு ரெடியாக இருக்கும்.
நானும் என் தங்கையும் கடைக்கு சாமான்கள் வாங்க செல்லும் போது சில நேரம் வாங்கி குடிப்போம்.
அப்ப அவங்க லஸ்ஸி கடைவதை போது நின்று பார்த்தது தான். ஒவ்வொரு கோடையிலும் கண்டிப்பாக அந்த அம்மாசெய்தது போல் ஸ்பெஷல் லஸ்ஸி செய்வேன்.
இதென்ன பெரிய விஷியமா தயிரை அடித்தால் லஸ்ஸி வரபோகுது என்று தானே நினைக்கிறீர்கள்.
நீங்கள் கேட்பது சரி தான் , ஆனால் இந்த லஸ்ஸியின் சுவைக்கு முக்கியமான தேவை பால் ஏடு.பால் ஏடு சேர்த்து தயாரித்தால் சுவை கூடுதல்,
கெட்டி தயிருடன், சர்க்கரை, சிறிது பால், பால் ஏடு , ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு நுரை பொங்க அடிக்கனும். அப்படியே ஒரு பெரிய கண்ணாடி டம்ளர் ஊற்றி குடித்தால் ஆகா அமிர்தம்.....
வயிற்று வலி அல்சர் மற்றும் வயிற்று புண் எல்லாத்துக்கும் அருமருந்து லஸ்ஸி...
லஸ்ஸி
கெட்டி தயிர்
பால் ஏடு
சர்க்கரை
ஐஸ் கட்டிகள் பொடித்தது
ரோஸ் மில்க் லஸ்ஸி
கெட்டி தயிர்
பால் சிறிது
பால் ஏடு
சர்க்கரை
ரோஸ் எசன்ஸ் (அ) ரூ ஆப்ஷா
ஐஸ்கட்டிகள் பொடித்தது
பைனாப்பிள் லஸ்ஸி
தேவையான பொருட்கள்
கெட்டி தயிர் - 200 மில்லி
பைனாப்பிள் துண்டுகள் - கால் கப்
பைனாப்பிள் எசன்ஸ் - 2 துளி
சர்க்கரை - 2 மேசை கரண்டி (தேவைக்கு)
ஐஸ் கட்டிகள் - 5 (பொடித்தது)
ஐஸ் வாட்டர் - தேவைப்பட்டால்
விப்பிங் கிரீம் - கால் கப்
செய்முறை
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்சியில் நுரை பொங்க அடித்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி ஜில்லுன்னு குடிக்கவும்.
பிரியாணி செய்தால் தொட்டுக்க தயிர் பச்சடி செய்வோம் ஹனீஃப் சாப்பிட மாட்டான் அவனுக்காக ஒரு டம்ளர் லஸ்ஸி செய்து வைத்து விடுவேன்.
இது போல் நீங்க விரும்பும் என்ன பழம் வேண்டுமானாலும் சேர்த்து லஸ்ஸி செய்யலாம்.
கோடை காலத்துக்கு ஏற்ற குளு குளு பானம் .
| Tweet | ||||||
Labels:
இனிப்பு,
பானம்,
மருத்துவ குறிப்புகள்,
வெயில் கால டிப்ஸ்
Subscribe to:
Posts (Atom)












