Thursday, May 26, 2011

பெருந்துயரஅறிவிப்பு

அன்பின் சகோதர சகோதரிகளே...


அனைவரின் அன்புக்கும் ஆளான நம் சகோ.ஜலீலா அக்காவின் தந்தையார் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக நோய்வாய்ப்பட்டு இருந்தனர். இந்த ஒரு வாரமாகதான் சிறு முன்னேற்றம் தென்பட்டிருந்தாலும் இன்று காலை இறைவனின் நாட்டப்படி இவ்வுலகை நீங்கிவிட்டார்கள்.  தந்தைக்காகவும், அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்காகவும், தந்தையை மிகவும் விரும்பிய, கடந்த சில நாட்களாகவே இதன்பொருட்டு மன உளைச்சலில் இருந்த சகோ. ஜலீலா அக்காவின் மனம் சாந்தி அடைவதற்காகவும் இறைவனிடம் இறைஞ்சுவோம்.


”இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி’ஊன்”

இறைவன் அன்னாரது சிறு பிழைகளையும், பெரும் பிழைகளையும் மன்னித்து, மக்ஃபிரத் அளித்து, குறையாத அவன் கருணையை பொழிந்து அன்னாரின் நல் அமல்களை பொருந்திக் கொள்வானாக. ஆமீன்

அவரின் கப்ரில் விசாலத்தையும், வெளிச்சத்தையும் தந்தருள்வானாக. ஆமீன்

கப்ரின் வேதனையிலிருந்தும், அதன் நெருக்கத்திலிருந்தும் பாதுகாப்பளிப்பானாக. கேள்வி கணக்குகளை எளிதாக்குவானாக. ஆமீன்

மறுமை நாள் வரையிலும், தீர்ப்பு கூறும் அந்நாளிலும், அதன் பின்பும் எல்லா வேதனைகளிலிருந்தும் கடினங்களிலிருந்தும் காப்பாற்றி அருள்வானாக. ஆமீன்

அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்களின் ஷிஃபா’அத்தை பெற்றுத் தருவானாக. ஆமீன்

மறுமை வாழ்வில் ஜன்னத்தையே பரிசாக தந்து ஜஹன்னத்திலிருந்து விடுதலை அளித்து ரட்சிப்பானாக. ஆமீன்

எங்கள் ரப்பே அன்னாருக்காக எங்களின் து’ஆவை ஏற்றுக் கொள்வாயாக. அன்னார் நோய்வாய்ப்பட்டு வருந்திய நொடிகளனைத்தையும் அன்னாரது மறுமையில் அமல்களாக மாற்றி ஷி’ஃபா தந்தருள்வாயாக. ஆமீன்

எங்களைப் படைத்து பாதுகாப்பவனே அன்னாரை இழந்து வாடும் அவர் குடும்பத்திற்கும், மற்றும் அவரது உறவினர்களுக்கும் அமைதியையும், உன் கருணையையும் தந்தருள்வாயாக. ஆமீன்

ஜலீலா அக்காவின் மனதிற்கு தைரியத்தையும் இந்த துயரத்திலிருந்து மீண்டு வாழ்வை எதிர்கொள்ளும் சக்தியையும் தந்தருள்வாயாக. ஆமீன்

தூயோனே... உன்னிடத்திலிருந்தே வருகிறோம். இன்னும் உன் புறமே திரும்ப உள்ளோம். துயரம் சூழ்ந்த இந்த நொடிகளில் எங்களையும், எங்கள் ஈமானையும் பாதுகாப்பாயாக. ஆமீன், ஆமீன், யா ரப்பில் ஆலமீன்.

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக்க ஹமீதுன்ம் மஜீத்.

அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக்க ஹமீதுன்ம் மஜீத்.

66 கருத்துகள்:

HajasreeN said...

Innalillahi wainna ilaihi raajioon, allah melana jennathul firdows koduppanaaga aameen

Kousalya Raj said...

தங்கள் தந்தையாருக்கு என் அஞ்சலிகள்

உங்களுக்கு ஆறுதலையும், மன அமைதியையும் கொடுக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஜலீலாக்கா, உங்கள் அப்பாவின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களும், பிரார்த்தனைகளும்.

vanathy said...

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.

எம் அப்துல் காதர் said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். சபூர் செய்ங்க ஜலீலாக்கா. அல்லாஹ் மிக்க அறிந்தவனும் கிருபையாளனுமாவான்.

Mahi said...

ஜலீலாக்கா,உங்கள் தந்தையின் ஆத்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள்!

உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்!

Anonymous said...

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.=((

எல் கே said...

தந்தையாருக்கு என் அஞ்சலிகள்

உங்களுக்கு ஆறுதலையும், மன அமைதியையும் கொடுக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.

Chitra said...

அவருக்கு எங்களின் அஞ்சலிகள்.

குடும்பத்தினர் அனைவரின் ஆறுதலுக்காகவும் ஜெபிக்கிறோம்.

ஸாதிகா said...

இன்னாளில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்.இறைவனிடம் அன்னாரின் மஃபிரத்துக்காக துஆ செய்கின்றேன்.இறைவன் அவர்களின் குடும்பத்தாருக்கு நற்பொருமையைக்கொடுப்பானாக.ஜலி மாலை வரை சென்னை வந்து சேரவில்லையே?

செ.சரவணக்குமார் said...

எனது அஞ்சலிகள்.

jai said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களும், பிரார்த்தனைகளும்.

jai said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களும், பிரார்த்தனைகளும்.

jai said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களும், பிரார்த்தனைகளும்.

jai said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களும், பிரார்த்தனைகளும்.

நிலாமதி said...

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Sivakumar said...

ஜலீலா.. சோகத்தில் இருந்து தாங்கள் மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Priya Sreeram said...

my condolences jaleela, May his soul rest in peace !!

எண்ணங்கள் 13189034291840215795 said...

பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபமும் , பிராத்தனைகளும்..

எண்ணங்கள் 13189034291840215795 said...

பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபமும் , பிராத்தனைகளும்..

கூடல் பாலா said...

சகோதரி ஜலீலாவின் துக்கத்தை பகிர்ந்துகொள்கிறேன் .

இமா க்றிஸ் said...

அன்பு ஜலீலா,

உங்கள் அன்புத் தந்தையார் ஆத்தும இளைப்பாற்றிக்காக என் பிரார்த்தனைகள்.

உங்களுக்கும் அவர் பிரிவால் வாடும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

- இமா, செபா குடும்பத்தினர்

ammulu said...

அன்பு ஜலீலாக்கா உங்கள் தந்தையின்ஆத்மா சாந்திபெற பிரார்த்திக்கின்றேன். துயருற்றிருக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்,உங்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Thendral said...

ஈடு செய்ய முடியாத இழப்பு. உங்கள் தந்தையரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.

சசிகுமார் said...

ஆத்மா சாந்தி அடையட்டும் அவரை பிரிந்து சோகத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தாருக்கும் ஜலீலா அக்காவும் சீக்கிரம் துயரில் இருந்து மீண்டு வர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

சிசு said...

இட்டுநிரப்பமுடியாத இழப்பு...

உங்கள் துக்கத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன். இறைவன் அவருக்கு சாந்தியும், உங்களுக்கு சமாதானமும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிக்கொள்கிறேன்.

Lifewithspices said...

Sister,

To you and to your family sincere prayers and sorry.

ChitraKrishna said...

அன்பு ஜலீலா, உங்கள் தந்தையாரின் ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்.

சிநேகிதன் அக்பர் said...

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன். உங்கள் துக்கத்தில் நாங்களும் பங்கெடுக்கிறோம் சகோதரி. இறைவன் இதை தாங்கக்கூடிய சக்தியை தந்தருள்வானாக.

ஷர்புதீன் said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

சபூர் செய்ங்க ஜலீலாக்கா.

சாருஸ்ரீராஜ் said...

அக்கா உங்கள் அப்பாவின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம். உங்கள் குடும்பதாற்கு ஆழ்ந்த வருதத்தை தெரிவித்து கொள்கிறோம்.

வல்லிசிம்ஹன் said...

Dear Jaleela. very sad to hear this news.
God be with you always.

கமலா said...

தங்கள் தந்தையாரின் மறைவு செய்தி அறிந்து மிக்க வருத்தமுற்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.

அவரின் மறைவால் துயருற்றிருக்கும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அவர் ஆத்மசாந்திக்கும்;தங்கள் குடும்பத்தினரின் மனவமைதிக்கும் இறைவனை இறைஞ்சுகிறேன்.

மாதேவி said...

தங்கள் துயரத்தில் பங்குகொள்கிறேன்.

உங்கள் அப்பாவின் ஆன்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கின்றேன்.

இறைவன் குடும்பத்தினருக்கு மன அமைதியைத் தரட்டும்.

வெங்கட் நாகராஜ் said...

தங்கள் தந்தைக்கு எனது அஞ்சலிகள். அவருடைய ஆத்மா சாந்தி அடைய எனது பிரார்த்தனைகளும்....

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Anonymous said...

Inna lillaahi wa inna ilaihi raajioon

sabr seynga akkaa.. Allah swt unga vaappaavin paavangalai mannithu jannathul firdausil nuzhaiya seivaanaga

Menaga Sathia said...

தங்கள் தந்தைக்கு அஞ்சலிகள்..அவருடைய ஆன்மா சாந்தியடைய ப்ரார்த்தனைகள்...

தூயவனின் அடிமை said...

இன்னாலில்லாஹி வா இன்னா இளைஹி ராஜிவுன் ,
சபூர் செய்யுங்கள் சகோதரி.

Unknown said...

உங்கள் அனைவருக்காகவும்
உங்கள் தந்தையின் ஆத்மா அமைதி அடையவும்
வேண்டுகிறோம்.

Vijiskitchencreations said...

ஜலீ உங்கள் தந்தையின் ஆத்மா சாந்தியடைய என் ப்ரார்த்தனைகள்.

உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

zumaras said...

ஸலாம்
இன்னாலிலாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.அவர்களுக்கு மறுமையில் ஜன்னத்து ஃபிர்தவ்ஸை கொடுப்பானாக!ஆமீன்.யா அல்லாஹ்!
குடும்பத்தார்க்கு “ஸப்ரன் ஜமீலா” என்னும் அழகிய பொறுமையைக் கொடுத்தருள்வாயாக!

நாடோடி said...

பிரிவில் வாடும் அவ‌ர‌து குடும்ப‌த்தின‌ருக்கும், உங்க‌ளுக்கும் என்னுடைய‌ ஆழ்ந்த‌ அனுதாப‌ங்க‌ள்..

Angel said...

தங்கள் தந்தைக்கு அஞ்சலிகள், மற்றும் எங்களது பிரார்த்தனைகள் .
Angelin and family.

அஸ்மா said...

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். ஜலீலாக்கா! இது இயற்கையானது என்றாலும் அதை நம்மால் தாங்க முடியாதுதான். இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகிய பொறுமையைக் கொடுக்கவும், உங்கள் தந்தையின் மக்ஃபிரத்துக்காகவும் துஆ செய்கிறோம்.

நிரூபன் said...

மன்னிக்க வேண்டும் ஜலீலா,
தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்,
இமா மூலமாகத் தான் இந்தத் துயரச் செய்தியினை அறிந்தேன்,
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்ளைத் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.

நட்புடன் ஜமால் said...

Innalillahi wa inna ilahi raajihoon

உம்மு நஸீஹா said...

'இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் - நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள்; மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்.

உங்கள் தந்தையின் மறுமை வாழ்வை வல்ல ரஹ்மான் சிறப்பானதாக்க பிராத்தனை செய்கிறேன்.

உங்களின் அன்பான கவனத்துக்கு:

மனிதன் மரணித்த பின்பும் பயன் தரக் கூடிய அமல்கள்

மனிதன் இறந்து விடடால் மூன்று விஷயங்களைத் தவிர அவனுடைய அமல்கள் அனைத்தும் அவனை விட்டும் துண்டிக்கப்படுகின்றது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த மூன்று விஷயங்கள் 1) நிரந்தர தாமம் 2) பயன் தரும் கல்வி 3) இறந்தவருடைய சாலிஹான பிள்ளைகள் செய்யும் துஆ (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : முஸ்லிம்)

Krishnaveni said...

Jaleela madam may your father's soul rest in peace

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.ஜலீலா...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

சபூர் செய்யுங்கள் சகோ. தங்கள் தந்தையின் மறுமைக்காக துவா செய்கிறேன்.

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

பொறுமையையை கொண்டும், தொழுகையை கொண்டும் அல்லாஹ்விடத்தில் உதவி தேடுங்கள் சகோ.

அல்லாஹ் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இந்த சோகத்தை தாங்கக்கூடிய சக்தியை தருவானாக.

எந்த சூழ்நிலையிலும் ஈமானை இழந்து விடாதீர்கள் சகோ

Love2cook Malaysia said...

Hi dear, I can speak tamil but unable to read. Thanks for dropping by my blog. ;)

Unknown said...

தங்கள் குடும்பத்துக்காக நாங்களும் இறைவனை வேண்டுகின்றோம்
தமிழ்குடும்பம்.காம்

பாத்திமா ஜொஹ்ரா said...

இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்.

இறைவன் குடும்பத்தினருக்கு மன அமைதியைத் தரட்டும்.

சபூர் செய்ங்க ஜலீலாக்கா.

farvin said...

இன்னா இலாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் அல்லாஹ்விடம் தந்தைக்காக் துஆ கேளுங்கள் நீங்க தைரியமா இருங்க மனித்னால் ஒரு உயிரின் இழப்பை தாங்க முடியாது இருந்தாலும் அது அல்லாஹ் தந்த உயிர் நாம் ஏற்றுகொள்ளதான் வேண்டும் உங்க மனதை நீங்க தைரியப்டுத்திகொண்டு அல்லாஹ்விடம் தொழுது துஆ கேளுங்கள் அல்லாஹ் எல்லாருக்கும் நீண்ட ஆயுளை தர வேண்டும்

farvin said...

இன்னா இலாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் அல்லாஹ்விடம் தந்தைக்காக் துஆ கேளுங்கள் நீங்க தைரியமா இருங்க மனித்னால் ஒரு உயிரின் இழப்பை தாங்க முடியாது இருந்தாலும் அது அல்லாஹ் தந்த உயிர் நாம் ஏற்றுகொள்ளதான் வேண்டும் உங்க மனதை நீங்க தைரியப்டுத்திகொண்டு அல்லாஹ்விடம் தொழுது துஆ கேளுங்கள் அல்லாஹ் எல்லாருக்கும் நீண்ட ஆயுளை தர வேண்டும்

Anonymous said...

ஜலீலாக்கா, உங்கள் அப்பாவின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்.

mani

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீலா அக்கா... நெட் கனெக்‌ஷன் கிடைத்ததும் ஓடோடி உங்கள் பக்கம் வந்தால் மிகவும் அதிர்ச்சியான செய்தி... இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்...
மனதிற்க்கு மிகவும் கஷ்ட்டமாகி விட்டது.இறைவனிடம் தந்தைக்காக துஆ செய்யுங்கள்.அம்மா எப்படி இருக்கின்றார்கள்.அவர்களுக்கு இனி நீங்கள் தான் ஆறுதலை தர முயற்ச்சிக்க வேண்டும்.நம்மை தேற்றிக் கொள்ளவே நாட்கள் பல எடுக்கும் தான்... இருப்பினும் இறைவனிடம் துஆ செய்தவாறு அம்மாவை கவனித்துக் கொள்ளுங்கள்.

அன்புடன்,
அப்சரா.

Asiya Omar said...

ஜலீலா உங்களிடம் போனில் ஆறுதலாக பேசினாலும் இந்த அறிவிப்புடன் கூடிய துவாவை வாசிக்கும் பொழுது மனசு மிக கனத்து தான் போகிறது.கணினி பிரச்சனையால் இணையம் பக்கம் வர முடியாமல் இருந்தது,இன்று தான் சரியானது.ஜலீலா மனதை திடப்படுத்தி கொள்ளுங்கள்.அல்லாஹ் போதுமானவன்.

Biruntha said...

வணக்கம் ஜலீலாக்கா,
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் குடும்பத்தாரின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். உங்கள் தந்தையின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.

அன்புடன்
சகோதரி பிருந்தா

Geetha6 said...

சகோதரி ,நாங்கள் எந்தனை ஆறுதல் சொன்னாலும், தந்தை போல்
வராது! அவர் இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது!.அவர் ஆசி
எப் போதும் உண்டு ,மனசை தேற்றிகொள்ளுங்கள்.

'பரிவை' சே.குமார் said...

ஜலீலாக்கா,

தந்தையாருக்கு என் அஞ்சலிகள்.

அப்பாவின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்.

கோமதி அரசு said...

ஜலீலா, உங்கள் அப்பாவின் மறைவு செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.

நான் ஊரில் இல்லாத காரணத்தால் தாமதமாக விசாரிக்கிறேன் மன்னிக்கவும்.

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் மனசாந்தியை அருளுவார் எல்லாம் வல்ல இறைவன்.

ஜெய்லானி said...

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அவர்களுக்கு மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை கொடுப்பானாக!ஆமீன்.!ஆமீன்.

Vikis Kitchen said...

அக்கா, இந்த செய்தி கூட படித்து ஆறுதல் சொல்லாத என்னை மன்னித்து விடுங்கள். என் மனதிலும் சில பிரச்சினைகள், அதனால் தான் பலருக்கும் பதில் போடவும் இல்லை, சரியாக இண்டர்நெட்டிலும் இல்லை. இந்த துயர செய்தியை இப்போ தான் தெரிந்து கொண்டேன். மிகவும் வருத்தமாக உள்ளது. உங்களுக்காகவும் குடும்பதினருக்காகவும் ஜெபிக்கிறேன்.

Vikis Kitchen said...

தங்கள் தந்தையாருக்கு என் அஞ்சலிகள்
உங்களுக்கு ஆறுதலையும், மன அமைதியையும் கொடுக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா