பீட்ரூட் பீனட் ரெய்தா பார்க்கவே அருமையான கலர்.
குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் , வேர்கடலையுடன் கடித்து சாப்பிட பிரமாதமாக இருக்கும்.
தேவையானவை:
துருவிய பீட்ரூட் – 1 பெரியது
தயிர் – 200 மில்லி
பச்சமிளகாய் – 1
பூண்டு – 2 பல்
உப்பு -தேவைக்கு
வெங்காயம் - 1
வெங்காயம் - 1
வறுத்த வேர்கடலை – ஒரு கைபிடி அளவு
கொத்துமல்லி தழை – அலங்கரிக்க
செய்முறை
பச்சமிளகாய்,பூண்டு , வேர்கடலையை கொர கொரப்பாக திரிக்கவும்( மிக்சியில் பஸ்ஸில் இருமுறை திருப்பினால் போதும்).திரித்த கலவை
துருவிய பீட்ரூட்,பொடியாக அரிந்த வெங்காயம் தயிர் அனைத்தையும் , உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். கொத்துமல்லி தூவி ,வெள்ளரியை வட்டவடிவமாக அரிந்து வைத்து அலங்கரிக்கவும்.
சுவையானரிச்சான கலர்ஃபுல் பீட்ரூட் பீனட் ரெய்தா ரெடி.
குறிப்பு
அருணா மாணிக்கம் ஒரு மேகஜினில் பார்த்து செய்த்தா போட்டு இருந்தாங்க அதில் பட்டர் மில்க் சேர்த்து செய்து இருந்தாங்க.
இந்த ரெசிபி மனோ அக்கா கேரட்டில் தக்காளி, சேர்த்து செய்து இருந்தார்கள்.
நான் என் சுவைக்கு ஏற்ப கலவைகளை பீட்ரூடில் செய்து இருக்கிறேன்.
இந்த ரெசிபி மனோ அக்கா கேரட்டில் தக்காளி, சேர்த்து செய்து இருந்தார்கள்.
நான் என் சுவைக்கு ஏற்ப கலவைகளை பீட்ரூடில் செய்து இருக்கிறேன்.
Tweet | ||||||
33 கருத்துகள்:
நல்லா இருக்கு ஜலீலாக்கா! பீட்ரூட்டை பச்சையா சாப்பிட்டதில்லை,வேர்க்கடலை சேர்ப்பதும் புதுசா இருக்கு.செய்து பார்க்கிறேன்.
Adding peanuts would definitely make it more tasty.. so good..
http://krithiskitchen.blogspot.com
Breakfast Club - Pancakes - Roundup
அக்கா புதுமையான கலவையாக இருக்கு.. செய்து பார்க்கனும்
ஜலீலாக்கா உண்மையிலேயே இம்முறை கலக்கிட்டீங்க... புதுமையான ரெசிப்பி.
பீற்றூட்டின் கலரை, ஒரு சூப்பர் கலருக்கு மாத்திட்டீங்க... இப்படி ஒரு கலருடைய டிஷ் இன்றுதான் பார்க்கிறேன்.... மிகவும் ஹப்பியாக இருக்கு கலரைப் பார்க்கவே.
a healthy raita. :-)
பார்க்க அழகாயிருக்கு,ஜலீலா.புதுவிதமாக இருக்கு.
Yummy and colorful recipe. Link with HRH-Healthy summer.
kurinjikathambam, Event: HRH-Healthy Summer, Roundup: HRH-Puffed Rice
இபோதுதான் முதன் முதலில் கேள்வி படுகிறேன், படமும் நிறத்தில் வித்தியாசம்.
Healthy, colorful and crunchy raita:)
மகி வெஜி டேபுளிலேயே, முதல் முதல் ரொம்ப பிடித்தது பீட்ரூட் தான்
கேரட் போல சும்மாவே சாப்பிடுவேன்.
எங்க பாட்டி இத சாப்பிடும் போது சொல்வாங்க நல்ல சாப்பிடு அவ்வளவும் ரத்தம் , அப்படியே செக்கச்செவேல்லுன்னு ஆயிடுவே என்பார்கள்.
முன்பெல்லாம் வாரம் ஒரு முறை பீட்ரூட் கண்டிப்பா இருக்கும்,\
இப்பவும் தான்.
இப்ப கூட ஒரு கிலோ பீட்ரூட் பிரிட்ஜில் இருக்கு
என் பையன்களுக்கும் பீட்ரூட் ரொமப் பிடிக்கும்.
மோர் குழம்பு வச்ச்சா கண்டிப்பா பீட்ரூட் பொரியல் தான்
ஆமாம் கிரித்தி பீனட்டுடன் சாப்பிட நலல் இருக்கும்
ஆமாம் பாயிஜா எனக்கு ரொமப் பிடிச்சி இருந்தது பிரியானிய விட இந்த ரெய்தாவ தன் நல்ல சாப்பிட்டேன்.
அதிரா தினம் தினம் ஏதாவது புதுமை அதுதான் என் சமையல் அட்டகாசங்கள்
வாஙக் சித்ரா ரொமப் பிஸியா, என்ன எல்லாம் நலம் தானே
வாங்க குறிஞ்சி கருத்துக்கு மிக்க நன்றி
வாங்க சிங்கக்குட்டி
ரொமப் நாள் கழித்து வந்து மறக்காமா பதிவுக்கும் கமெண்ட் போட்டமைக்கு மிக்க நன்றி
நந்தினி உஙக்ள் கருத்து க்கு ம் வருகைக்கும் மிக்க நன்றி
COlourful,catchy and delicious raita..
ரொம்ப நல்லா இருக்கு...எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு...
சூப்பர்ப்...
/திரிக்கவும்/
வறுக்கணுமா ? சரியா புரியலை
வேர்க்கடலை ரெய்தா சூப்பர்..நானும் பீட்ரூட்டை பச்சையா சாப்பிட்டதில்லை.
எல் கே
இங்கு வ்றுத்த வேர்கடலையே எங்களுக்கு கிடைக்கிறது
( பச்ச மிளகாய் பூண்டு அரிந்து போட்டு, அத்துடன் வறுத்த வேர்கடலை சேர்த்து மிக்சியில் பஸ்ஸில் இரண்டு சுற்று சுற்றினால் கொர கொரப்பாக ஒன்றும் பாதியுமாய் இருக்கும். அப்படியே கலக்கனும்.)
என் பேச்சு நடையில் திரிகக்னும் என்று எழுதி விட்டேன்
வாஙக் பிரியா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி
கீதா ஆச்சல் இத செய்து சாப்பிட்டா அதுவும் கேரட்டை விட பீட்ரூட் சூப்பரா இருக்கு, சும்மா பசிக்கு சாலடுக்கு பதில் கூட இப்படி செய்து சாப்பிடலாம்.
மேனகா பீட்ரூட், கேரட், வெண்டைக்காய் இது முன்றும் பச்சையா சாப்பிட பிரமாதமாக இருக்கும்
முன்பெல்லாம் அரியும் போதே பாதி சாப்பிட்டுவேன்.
ஆனால் இப்ப எல்லா காயிலுமே சாலட் செய்து பச்சையாக லெமன் பிழிந்து சாப்பிடுகிறோம்.
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
தேவையானவை:
துருவிய பீட்ரூட் – 1 பெரியது
தயிர் – 200 மில்லி
பச்சமிளகாய் – 1
பூண்டு – 2 பல்
உப்பு -தேவைக்கு
வறுத்த வேர்கடலை – ஒரு கைபிடி அளவு
கொத்துமல்லி தழை – அலங்கரிக்க///
இவ்ளோ கஷ்டப்பட்டு பொருகள் வாங்கி அப்புறம் அத செய்யிறதுக்கு பதிலா நான் ஒரு ஐடியா சொல்றேன் கேளுங்க
எனக்கு தெரிஞ்ச ஜலீலா மேடம் இருக்காங்க ..... அவுங்ககிட்ட நேரடியா "பீட்ரூட் பீனட் ரெய்தா" ஒரு பிளேட் கேட்டிங்கன்னா கொடுத்திடுவாங்க ....
இப்படிக்கு
ஹி.ஹி.ஹி...... ஓசியில் சாப்பிட்டு உயிர் வாழும் சோம்பேறிகள் சங்கம்
Healthy yummy raita...luks very nice...
Healthy, colorful and crunchy raita:)(i don't know Tamil dear...
தங்கள் பதிவை இணைக்க புதிய தளம்
இணையவாசிகள் தங்கள் பதிவை இணைத்து பயன் பெறுங்கள்
http://tamilthirati.corank.com
அருமையான கலர்ஃபுல் ரெய்தா..
அந்த கலர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... எப்பவும் பீட்ரூட்டை வதைக்கி சேர்ப்பேன்... அடுத்தமுறை இதுமாதிரி செய்து பார்கிறேன்.
கலர்புல் ரெய்தா நன்றாக இருக்கிறது ஜலீலா.
பீட்ரூட்டில் ஒரு புது ரூட்டா? ம் ம்
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா