Sunday, May 22, 2011

அவித்த முட்டை புளி குழம்பு - boiled egg puli kuzampu



//வெஜ்டேரியன்கள் இதில் ஏதேனும் காய் சேர்த்து செய்து கொள்ளலாம் , சேமங்கிழங்கு, கருனை கிழங்கு,
கத்திரிக்காய் இது போல் சேர்த்து கொள்ளலாம்/
அவித்த முட்டை எக் புளி குழம்பு
 தேவையானவை
முட்டை 5
தாளிக்க
எண்ணை – 3 தேக்க்ரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
வெந்தயம்
சின்ன வெங்காயம் – 5
பூண்டு – 2 பல்
கருவேப்பிலை – 15 இதழ்

பழுத்த தக்காளி  - 3
புளி – ஒரு நெல்லிக்காய் அளவு




அரைக்க
சின்ன வெங்காயம் - 10
பூண்டு – முன்று பல்
தனியா – இரண்டு தேக்கரண்டி
மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி
மிளகு அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி
தேங்காய் பொடி – இரண்டு தேக்கரண்டி


 செய்முறை


முட்டையை நல்ல அவியபோட்டு ஆறியதும் தோலை எடுத்து விட்டு நாலா பக்கமும் கீறி வைக்கவும்.
(மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும்)
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைக்கவும்
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளித்து தக்காளியை போட்டு நன்கு குழைய வதக்கவும்.
தக்காளி மடங்கியதும் அரைத்த மசாலாவை ஊற்றீ கொதிக்க விடவும்.
புளியை கரைத்து ஊற்றவும்.
குழம்பு சேர்ந்து நல்ல கொதித்து மசாலாவாடை அடங்கியதும், கீறி வைத்துள்ள முட்டை களை போட்டு மேலும் 7 நிமிடம் கொதிக்க விடவும்.மசாலா நன்கு உள்ளே இறங்கும்.


குறிப்பு


முட்டை புளி குழம்பை  அவித்த முட்டைபோட்டும் செய்யலாம் , அப்ப்டியே முட்டையை உடைத்து ஊற்றியும் செய்யலாம்.இன்னும் இரண்டு முன்று முறைகளில் செய்யலாம்.
.
இந்த ரெசிபி ரியாதில் இருக்கும் ஜெயஸ்ரீ க்காக கேட்டு இரண்டு மாதம் ஆகுது, உடனே போட முடியல. இப்ப தான் போட முடிந்த்து.










18 கருத்துகள்:

Menaga Sathia said...

எனக்கு ரொம்ப பிடித்த குழம்பு,அருமையாக இருக்கு!!

Anonymous said...

alagana thamilil aviththa muttai kulambu nnu eluthi riukkallame.. adhu enna (baayilldu eggu) boiled egg

Anonymous said...

My favourite. Oh thanks for that moor kuzhambu recipe acca. I was looking for that only =))

ஸ்ரீ.கிருஷ்ணா said...

nice tips.....

Anonymous said...

உங்களின் வலைப்பதிவைப் படித்தால் சாப்பிடவேணும் என்ற ஆவலைத் தூண்டுகின்றது. பாயில்ட் எக் புளி குழம்பு என்பதை அவித்த முட்டை புளிக் குழம்புனு தமிழிலேயே சொல்லலாமே சகோதரி. சமையலறையிலாவது தமிழ் வாழட்டுமேன் !

Priya Suresh said...

Delicious and mouthwatering kuzhambu...

Unknown said...

மாதம் 2 முறை செய்துவிடுவேன்.. வீட்டில் அனைவருக்கும் பிடித்த குழம்பு இது.. படம் அழக்காக இருக்கு அக்கா

Nandinis food said...

Nice kuzhambu! It's very spicy and flavourful!

Reva said...

Super super super... arumai arumai arumai:)
Reva

Jaleela Kamal said...

நன்றி மேனகா.

இது அருமையாக இருக்கும் , எனக்கும் ரொம்ப பிடிக்கும், மீன் கிடைக்காத காலங்க்ளில் புளிப்பா கார சாரமா சாப்பிடனும் போல இருந்தால் அடிக்கடி இந்த குழம்பு தான் செய்வேன்,

Jaleela Kamal said...

அனா(சுனா)மிகா ஒ நீங்க கேட்ட மோர் குழம்பு கிடைத்து விட்டதா? சந்தோஷம்
வருகைக்கு மிக்க ந்ன்றி

Jaleela Kamal said...

ஸ்ரீ கிருஷ்னா கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

இக்பால் செல்வன் 2 மாதம் போட்டு வைத்து இருந்த குறிப்பு புக் மார்க் போல இஷ்டத்துக்கு பெயரை போட்டு வைப்பேன் பப்லிஷ் பண்ணும் போது சரியா பார்க்கல இப்ப மாற்றிட்டேன்
வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

நன்றி பிரியா

ஆம் பாயிஜா அனைவரும் வீட்டிலும் செய்வது எல்லோருக்கும் பிடித்தது அவசரத்துக்கு வீட்டில் உள்ல பொருட்களை வைத்து செய்துடலாம்

Jaleela Kamal said...

நன்றி நந்தினி

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ரேவா

ஸாதிகா said...

முட்டயிக்குழம்பில் புளி..வித்த்யாசமாகத்தான் இருக்கும்.

Jaleela Kamal said...

வாங்க ஸாதிகா அக்கா கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

zumaras said...

ஸலாம்
உங்கள் குறிப்பை பார்த்து இன்று எங்கள் வீட்டில் செய்தேன்.அருமையாக இருந்தது.பாராட்டும் கிடைத்தது.ந்ன்றி.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா