தொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் சாதத்தை உருண்டை பிடித்து சாப்பிடும் படியும் வாழை பழத்தை முழுங்கும் படியும் தமிழ் குடும்பத்தில் ஒரு தோழி சொன்னார்கள்.
அது சரிதான். தொண்டையில் முள் மாட்டி கொண்டால் ரொம்ப அபாயம். பிள்ளைகளுக்கு மின் உணவு கொடுக்கும் போது ரொம்ப ஜாக்கிரதையாக கொடுக்கனும்.
அதற்கு என் டிப்ஸ், சூடான சாதத்தை முழுங்கும் சூட்டில் முழுங்க வேண்டும்.
இது ரொம்ப அபாயம் ,எனக்கு இரண்டு முறை ஆகி உள்ளது, சாதம் உருண்டை முழுங்கியும், எனக்கு சரியாகல. சிலருக்கு சரியாகலாம்.
விருந்தினர் வந்திருந்த போது பேசிக்கொண்டே சாப்பிட்டதாலும், வெளியில் போகும் அவசரத்தில் சாப்பிட்டதாலும் எனக்கு முள் தொண்டையில் குத்தி கொண்டது.
முள் மாட்டி கொண்டதும் அதை எடுக்க கையை தொண்டையில் விடாதீர்கள். அதற்கு பிறகு நிறைய ரத்தம் வரும்.
அதை எடுக்க முயற்சி செய்ததால் ஒரே ரத்தம், தொண்டை குழி தான் கிழிந்து விட்டது என்று பயந்து அப்படியே ஈ.என்.டி டாக்டரிடம் சென்றேன்.
ஒரு நீட்டா டியுப் போல குழாயை உள்ளே விட்டு பார்த்தார், கடைசியில் ஒன்றும் பயமில்லை என்று சொல்லி விட்டார்.
ஒரு மாதம் வரை சாப்பாடு என்ன சாப்பிட்டாலும் தொண்டையில் மாட்டுவது போல வே இருந்தது. கொஞ்சம் நாள் கஞ்சி ஆகாரம் தான் சாப்பிட்டேன்
ஏற்கனவே அதிக முள் உள்ள் மீன் கணவருக்கு பிடிக்காததால் வாங்க மாட்டோம், ஆனால் எனக்கும் (முள் உள்ள் எல்லா மீனும்) என் பெரிய பையனுக்கு சங்கரா மீனும் ரொம்ப பிடிக்கும் ஆகையால் எப்பவாவது வாங்குவோம்.
இன்னும் கூட முள் மீன் சமைத்தால் என் கணவருக்கு தனியா ஒரு பிலேட்டில் குழந்தைகளுக்கு கொடுப்பது போல் முள் எடுத்து தான் கொடுப்பேன்.
இதற்கு தான் முள் உள்ள மீனை சாப்பிடும் போது மற்றவர்களிடம் பேசக்கூடாது. அதிக வெளிச்சத்தில் முள் பார்த்து சாப்பிடனும்.
சாதம் சாப்பிடும் பிளேட்டில் முள் மீனை வைத்து சாப்பிடக்கூடாது, அது சாதத்துடன் கலந்து விடும், முள் மீன் சாப்பிடும் போது மீனுக்கென்று தனியாக ஒரு சின்ன சைட் பிளேட் வைத்து சாப்பிட்டால் முள் சாதத்துடன் கலப்பதில் இருந்து தவிர்கலாம். இப்படி தான் நான் செய்கிறேன்
முள் மீன்கள் சமைக்கும் போது மீன் குழம்பு சமைத்து விட்டு கடைசியாக மீனை போட்டு 5 நிமிடம் வேக விட்டு எடுத்தால் போதும்.மீன் சீக்கிரம் வெந்து விடும்.
சுறா மீன் மட்டும் வேக லேட் ஆகும்.
குழந்தைகளுக்கு மீனை வடையாக கட்லெட்டாக செய்து கொடுக்கலாம்.
கர்பிணி பெண்களுக்கு பிள்ளை பெற்றவர்களுக்கு காரப்பொடி என்று சொல்லும் பொடி மீன் பால் சுரக்க அதில் சூப் வைத்து கொடுக்கலாம்.
மற்ற பொடிமீன்களும் சாப்பிட்டால் பிள்ளை பெற்றவர்களுக்கு மிகவும் நல்லது.
முள் மீனை சூப் வைத்து நன்கு மசித்து வடிகட்டி தாளித்தும் சப்பிடலாம்.
உணவு வகையிலேயே மீன் உணவு தான் எந்த காலத்திலும் எல்லா வயதினருக்கும், நல்லது.
வெயிட் போடாது. பிரெஷர் சுகர் உள்ளவர்களும் கிரேவியாக சாப்பிடலாம்.
பிரஷர் சுகர் உள்ளவர்களுக்கு என்றால் கீழே கமெண்டில் ஹுஸைனம்மா சொன்னது போல். அதிக எண்ணை புளி, மசாலா கம்மியாக செய்து சாப்பிடலாம், பெரிய வஞ்சிரம் மீன் கேஸ் என்பார்கள்.பெரிய இறாலும் கேஸ் என்பார்கள், பொடி வகைகள் சாப்பிடலாம்.
மீன் உணவு அதிகமாக உட்கொள்வதால் தலை முடிநல்ல வளரும்.
இப்போது வெளிநாடுகளில் அமெரிக்கா லன்டன் போன்ற இடங்களில் மட்டன் சிக்கன் வகைகள் ஹலால் உணவு தேடி போய் வாங்கனும் ஆனால் கடல் உணவு, பிரச்சனை இல்லாமல் பயமில்லாமல் சாப்பிடலாம்
கண் பார்வை தெளிவாக இருக்கும்.
ஏற்கனவே மீன் டிப்ஸ் நிறைய கொடுதது இருக்கிறேன். இது மீதி கொசுறு டிப்ஸ்.
மீன் டிப்ஸ் முன்பு கொடுத்த மீன் டிப்ஸை இங்கு சென்று படித்து கொள்ளலாம்.
Jaleela Banu, Dubai
Tweet | ||||||
34 கருத்துகள்:
நல்ல பயனுள்ள அறிவுரைகள்.. குழந்தைகளுக்கு மீன் உணவு கொடுக்கும்போது பக்கத்தில் அமர்ந்து முள்ளை அகற்றிக் கொடுத்தல் சாலச் சிறந்தது.
முள்ளு குத்தும்,, ஆனாலும் மீன் சாப்புடனும்..? என்ன செய்ய டேஸ்ட்டா இருக்கே?
//பிரெஷர் சுகர் உள்ளவர்களும் கிரேவியாக சாப்பிடலாம்.//
Not exactly.
Doctors advice to diabetics is to avoid shell fish: crabs, shrimps, lobsters.
This apart, dieticians always advise all of us to go for small fishes, like sardines, salmons; and according to them, they are evidently more nutritious than big fishes.
You may check up your facts please.
வாளை மீனை, இதற்கு பயந்துகொண்டே வீட்டில் வாங்கவிடுவதில்லை. நல்ல டிப்ஸ் சாப்பிடுபவற்கு.
(ஐயோ..நா தப்பிச்சேன்)
அக்கா, கவனமா இருக்க வேண்டிய விஷயம்தான். கரெக்டா நீங்கதான் சொல்லிடுறீங்க.
//பிரெஷர் சுகர் உள்ளவர்களும் கிரேவியாக சாப்பிடலாம்.//
சிலர் அளவுக்கதிகமா எண்ணெய், தேங்காய், புளி சேர்ப்பாங்க. அதனால கவனமாத்தான் இருக்கணும். மீன் துண்டு மட்டும் எடுத்து சாப்பிட்டுக்கலாம்.
fine fantastic for how to eat fish!!!!!!!!
அக்கா, இன்றைக்கு எனக்கு பிடித்த மீன் குழம்பு சாப்பிட்டு விட்டு வந்து படிச்சா, இங்கேயும் மீன் வாசனை. அருமை.
தனி ப்ளேட்டில் வைத்து சாப்பிடனும்
இது நல்ல டிப்ஸ் சகோதரி.
ஜலீலா வழக்கம் போல் அனுபவங்களை டிப்ஸாக கொடுத்து அசத்திவீட்டீர்கள்.ஜலீலா சுறாமீன் வேக நேரம் எடுக்குமா என்ன?சில நிமிடத்தில் வெந்துவிடுமே,புட்டுக்கு வெறும் சட்டியில் மஞ்சள் உப்பு போட்டு வேகவைக்கும் போது தண்ணீர் விட்டு திரும்பி பார்ப்பதற்குள் வெந்துவிடும்.பால் சுறா பார்த்து வாங்குங்கள்.ஒரு சமயம் நீங்கள் வாங்கியது கல்சுறாவோ என்னவோ.
பயனுள்ள டிப்ஸ் அக்கா
நல்ல பகிர்வு ஜலி.முள் மாட்டிக்கொண்ட அனுபவம் நிறையவே உள்ளது.என் தாயாரை மருத்துவனமனை வரை அழைத்து சென்று சிகிச்சைப்பெற்ற அனுபவமும் உண்டு.நல்ல வேளை என் பிள்ளைகளுக்கும் மீன் சாப்பிடும் ஆரவம் மிகமிக குறைவு!
இதப் பத்தி ஒன்னியும் தெரியாது !! நானு இது வெரிக்கும் துன்னதே
இல்ல !! அதுனால அப்பீட்டு !!
எனக்கும் இப்படி ஒரு முறை குத்தி கொண்டது, அதிலிருந்து மீன் சாப்பிடுவதையே தவிர்த்தேன்...
இப்போது அந்த சிரமம் இல்லை...
ஏனா சாப்பிடுவது எல்லாம் பெரிய மீன்ஸ்... ஹி ஹி...
உபயோகமான டிப்ஸ் கொடுத்திருக்கீங்க...
சென்ஷி வருகைக்கு மிக்க நன்றி, இன்னும் பாதி டிப்ஸ் போடல அதிலேயே சேர்த்து விடுகிறேன்.
நிங்கள் சொல்வதும் சரி கிட்ட அமர்ந்து முள் பார்த்து தருவது
//முள்ளு குத்தும்,, ஆனாலும் மீன் சாப்புடனும்..? என்ன செய்ய டேஸ்ட்டா இருக்கே//
நிறைய பேருக்கு மீன் உணவு பிடிக்கும் ஆகையால் தனியா பிலேட்டில் வைத்து பொறுமையாக சாப்பிடுவது நல்லது, உங்கள் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றீ..
நல்ல பயனுள்ள தகவல் ஜலி.நல்ல வேளை என் பில்ளைகள் அவ்வளவாக மீன் விரும்பி சாப்பிடுவதில்லை.(நானும்தான்)கடல் உணவு என்றால் எறா,நண்டு,கணவாதான் விரும்பி சாப்பிடுவார்கள்.முள் பயமும் இல்லாமல் சாப்பிடலாம்.
salam jaleelaa
super tips
மீன் ரொம்ப புடிக்கும், நீங்க சொல்லுவது வாலைமீன் தானே,
சமையல் மட்டுமே செய்துகாட்டும் இந்த பகுதியில் வித்தியாசமா மீன் முள் பற்றி பதிவு
ஜார் பெர்னாண்டோ நீங்கள் சொல்வதும் சரிதான், பெரிய மீன் வகைகள், பெரிய இறால் தவிர்க்கனும், பொடி மீன் சாப்பிடலாம் ஒன்றும் ஆகாது.
ஹுஸைன்னாம்மா சொல்வது போல் புளி, காரம், எண்ணை குறைத்து சாப்பிட்டால் டயட்டுக்கும் ஏற்றது,
ஜார் பெர்னாண்டோ உங்கள் முதல் வருகைக்கும் , கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி
//வாளை மீனை, இதற்கு பயந்துகொண்டே வீட்டில் வாங்கவிடுவதில்லை. நல்ல டிப்ஸ் சாப்பிடுபவற்கு.
(ஐயோ..நா தப்பிச்சேன்)//
மீன் சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லது ஜெய்லானி சாப்பிடுங்கள் ஆனால் பார்த்து சாப்பிடுங்கள்
//பிரெஷர் சுகர் உள்ளவர்களும் கிரேவியாக சாப்பிடலாம்.//
சிலர் அளவுக்கதிகமா எண்ணெய், தேங்காய், புளி சேர்ப்பாங்க. அதனால கவனமாத்தான் இருக்கணும். மீன் துண்டு மட்டும் எடுத்து சாப்பிட்டுக்கலாம்//
ஹுஸைன்னாம்மா ரொம்ப சூப்பரா எடுத்து சொல்லி இருக்கீங்க மிக்க நன்றீ
நல்ல பயனுள்ள டிப்ஸ் ஜலிலாக்கா!!
Jazakallah sister! :)
நல்ல பயனுள்ள தகவல்...
ஹமூர் மீன் திக் கிரேவி டிப்ஸ் போட்டிருக்கேங்களா?
இந்த மீன் எல்லா கடைகளில் கிடைக்கும்.முகல் ரெஸ்டாரண்டில் இந்த் கிரேவி ரொம்ப பேமஸ் நடு பகுதியில் மட்டும் தான் முள் இருக்கும் .ரொம்ப ஸாப்டாக இருக்கும்.
வசந்த முல்லை வருகைக்கு மிக்க நன்றி.
சித்ரா உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.
சகோ.ஜமால் , ஆமாம் தனி பிலேட்டில் வைத்து (எனக்கு தொண்டையில் முள் மாட்டியதிலிருந்து) சாப்பிட்டால் நல்லது
ஆசியா சில நேரம் நல்ல போட்டதும் வெந்து விடும், ஒரு தடவை மாயா லால்ஸில் வாங்கினேன், வேக லேட்டாச்சு. அதான் அப்படி போட்டேன்.
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றீ
நன்றி பாயிஜா
நன்றி ஸாதிகா அக்கா ஓ உங்கள் தாயாருக்கும் முள் மாட்டி டாக்டரிடம் சென்றறீர்களா> நானும் முள் மீனை பார்த்தாலேரொம்ப உஷாராக சாப்பிடுவது,
//மீன் ரொம்ப புடிக்கும், நீங்க சொல்லுவது வாலைமீன் தானே,
சமையல் மட்டுமே செய்துகாட்டும் இந்த பகுதியில் வித்தியாசமா மீன் முள் பற்றி பதிவு//
அபு அஃப்சர் இதற்கு முன் கூட நிறைய டிப்ஸ்கள் போட்டு இருக்கேன். வாளை மீனை சொல்லல, சங்கரா, கிலாங்கா வை சொன்னேன்.
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
தாஜ், மேனகா, நாஸியா உங்கள் அனைவருக்கும் நன்றி,
மலர் திக் கிரேவி செய்யும் போது போடுகீறேன்., ஹமூர் இல்லை என்றால்வேற மீனில் போடுகீறேன்.
I too had this problem.Then cured by Dr
எனக்கு திடீரென்று அடிக்கடி தொண்டைக்குழியில் சாதம் மாட்டிக்கொள்கிறது பின்னர் மூக்கின் வழியாக சாதப் பருக்கை வந்து விழுகிறது... இதற்கு ஏதேனும் தீர்வு இருந்தால் சொள்ளுங்களேன் ப்ளீஸ்
மன்னிக்கவும் சொல்லுங்களேன் அக்கா
மன்னிக்கவும் சொல்லுங்களேன் அக்கா
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா