Tweet | ||||||
Thursday, February 18, 2010
தோசை வடகறி/வடைகறி - dosai vadai kaRi
எல்லோரும் இட்லிக்கு தான் வடகறி வைத்து சாப்பிடுவார்கள் ஆனால் எனக்கு தோசைக்கு தொட்டுக்கொள்ள ரொம்ப பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
தோசை மாவு = தோசை சுட தேவையான அளவு
இந்த வடகறி சென்னையில் ரொம்ப பேமஸ் ஆனா இது ஒன்றுமில்ல , ஹோட்டலில் வடை ரொம்ப சுட்டு மீந்து போய் விட்டால் வடகறியாக்கிடுவார்கள்.சைதாப்பேட்டை வடைகறி
வடைக்கு
கடலை பருப்பு = அரை கப்
சோம்பு கால் தேகக்ரண்டி
இஞ்சி = ஒரு துண்டு
பூண்டு = ஒரு துண்டு
உப்பு = சிறிது
வெங்காயம் = ஒன்று (பொடியாக அரிந்தது)
பச்சமிளகாய் = ஒன்று (பொடியாக அரிந்தது)
தாளிக்க
எண்ணை = இரண்டு தேக்கரண்டி
பட்டை = ஒன்று சிறியது
சோம்பு கால் தேக்கரண்டி
வெங்காயம் = 3 பொடியாக அரிந்தது
இஞ்சி பூண்டு பேஸ்ட் = அரை தேக்கரண்டி
கருவேப்பிலை = சிறிது
கரம் மசாலா தூள் = கால் தேக்கரண்டி (பட்டை,கிராம்பு,ஏலம் தூள்)
தக்காளி = அரை பழம்
தனியா தூள் (கொத்துமல்லி தூள்) = ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் = கால் தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
அரைக்க
பச்சமிளகாய் = 2
சோம்பு அரை தேக்கரண்டி
செய்முறை
கடலை பருப்பை அரைமணி நேரம் ஊறவைத்து அத்துடன் உப்பு, இஞ்சி,பூண்டு,சோம்பு சேர்த்து அரைத்து வெங்காயம் பச்ச மிளகாயை பொடியாக அரிந்து சேர்த்து வடைகளாக சுட்டு வைக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை (எண்ணை+ பட்டை+சோம்பு, வெங்காயம், கருவேப்பிலை மசாலாக்களை (தனியாத்தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து அரைக்க கொடுத்துள்ளவைகளை அரைத்து ஊற்றி மேலும் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி தீயின் தனலை சிம்மில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.
10 நிமிடம் போதுமானது வடைகளை உதிர்த்து சேர்த்து கரம் மசாலா தூவி மேலும் முன்று நிமிடம் கொதிக்க விட்டு இரக்கவும்.
Subscribe to:
Post Comments (Atom)
35 கருத்துகள்:
romba nalla irukku jaleela akka
சூப்பராயிருக்கு..வடைகறியை ஞாபகப்படுத்திட்டீங்க ஜலிலாக்கா!!
தேங்காய் பால் கொஞ்சம் சேர்த்து செய்து பார்த்திருக்கேன். அது இல்லாம, இப்படியும் ட்ரை செய்து பாக்கிறேன்.
அடடே !! நம்பளுக்கு ரொம்பவே புட்ச அய்டம்பா இது !! இதுல நானு கில்லாடி கணக்கா செய்வேன் !! வடை தட்டி போட்டா , என்னை மேரி ஆளுக்கு ஆவாது இன்னு ,
ஆவி ( பேய் இல்ல ) ல , வேக
வெச்சி , அப்பால போடலாம் தூளா , இருக்கும் . பதிவு சூப்பர் தங்கச்சி !!
akka looks good!
ஜலீலாக்கா சூப்பர். மொறுமொறு தோசை இப்பவே சாப்பிடவேணும்போல இருக்கு.
நேற்றுத்தான் எனக்கு சேமியா கண்ணில் பட்டது, உடனே வாங்கிவந்தேன், உங்கள் பாயாசம் செய்யப்போகிறேன், செய்ததும் பின்னூட்டம் வரும்.. எப்ப எனத் தெரியவில்லை.
fine receipe!
தொட்டுக்க இஞ்சி சட்னியும் கூட இருந்தால் ம்...ம்....
எனக்கு வடகறி தான் மெயின் டிஷ் அப்படியே சாப்டுவேன்...செஞ்சு அனுப்புங்க அக்கா......
நல்லாயிருக்கு சகோதரி....
// டவுசர் பாண்டி said...
அடடே !! நம்பளுக்கு ரொம்பவே புட்ச அய்டம்பா இது !! இதுல நானு கில்லாடி கணக்கா செய்வேன் !! வடை தட்டி போட்டா , என்னை மேரி ஆளுக்கு ஆவாது இன்னு , //
டவுசர் சொல்லறதுதான்...இன்னும் எனக்கே செய்துதரவில்லை...நீங்களாவது சொல்லுங்க சகோதரி... வாழ்க வளமுடன். வேலன்.
yummy..yummy.
ஜலீலாக்கா உங்களின் சமையல் எல்லாம் ரொம்ப சூப்பரா இருக்கு... ஒரு நாளைக்கு எங்களுக்கு விருந்து வைக்க மாட்டீங்களா.............
என்னுடைய சனிக்கிழமை மெனு இதுதான், ஆனால் நான் செய்வது இல்லை நிறைய வேலை வாங்கும்...:)
வாழ்க வளமுடன்
மெட்ராஸ இருக்க சொல்ல இதெல்லாம் துன்னுகிறேன் ...
ஹூம் ...
ஜலீ கலக்கிட்டிங்க. நம்ம வீட்டவருக்கு வடைகறி என்றால் ரொம்ப விருப்பம். ஆனால் எனக்கு செய்ய தெரியாமல் இருந்தது நம்ம சென்னை தோழி ஒருவர் எனக்கு கற்று குடுத்தாங்க அதன் பிறகு வடகறி +இட்லி,தோசை சொல்லவே வேண்டாம் அவ்வளவு டேஸ்ட். நம்ம வீட்டில் சண்டே ஸ்பெஷல் அயிட்டம் எப்பவுமே இருக்கும். அதில் இந்த வார அயிட்டம் ஜலீ உங்க வடைகறிதான். இது தான் ஸ்பெஷல் நன்றி ஞாபகபடுத்தியதுக்கு.
ஜலீலா வடை கறி செய்து பார்க்கணும்,நல்ல இருக்கு.
ஜெய்லானி வேறு இஞ்சி சட்னின்னு சொல்றார்,அவர்கிட்ட தான் எப்படின்னு கேட்கணும்.
சாருஸ்ரீ ரொமப் நல்ல இருக்கா சந்தோஷம்
மேனகா ஞாபகப்படுத்திட்டேனா ம்ம் உடனே செய்து சாப்பிடுங்கள்.
சித்ரா நான் தேங்காய் பால் சேர்த்ததில்லை, இது செய்வது எளிது
அண்ணாத்தே உங்களுக்கு ரொம்ப புச்ச அயிட்டமா, ஆவில வேக வைத்தும்சாப்பிடலாம், (அ) மொத்தமா ஒரு அடையாக தட்டில் கூட உதிர்த்து கொள்ளலாம்.
கருத்து தெரிவித்தமைக்கு நன்றி
சுவையான சுவை நன்றி
அதிரா வாங்க ஆமாம் மொரு மொருன்னு நான் தோசை சுட்டால் எல்லோருக்கும் ரொமப் பிடிக்கும், என பையனுக்கு, ரொம்ப பிடிக்கும்.
சேமியா செய்தாச்சா?
வந்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி + சந்தோஷம்.
வசந்த முல்லை நன்றி
ஜெய்லாணி அப்படியே உங்கள் இஞ்சி சட்னியும் போடுஙக்ள் , செய்து பார்ப்போம்
பாண்டி அண்ணாத்தே எப்படியாவது வேலன் சாருக்கு செய்து கொடுத்து விடுங்கள்.
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி, வேலன் சார்
அம்மு மது வாங்க ஏன் பதிவே காணும்
மிஸஸ் ஷஹானா வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி அதுக்கென்ன வைச்சா போச்சு.
ஹைஷ் வாங்க , இது ஈசியான வேலை தான் வடை அரைத்து வைத்து கொண்டால் சீக்கிரம் முடிந்து விடும்.
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
சகோ. ஜமால் மெட்ராஸில் இது ரொம்ப பேமஸ்,
மீந்து போன வடையில் செய்வார்கள் அதான் வடகறியாயிடுச்சு.
விஜி உங்கல் வீட்டவருக்கு ரொம்ப விருப்பமா உடனே செய்து பாருங்கள் , எப்படி இருந்தது என்று வந்து சொல்லுங்கள்.
ஆசியா கண்டிப்பா நல்ல இருக்கும் செய்து பாருங்கள், ஆமாம் இஞ்சி சட்னி ஜெய்லானி இடம் தான் கேட்கனும்.
//அடடே !! நம்பளுக்கு ரொம்பவே புட்ச அய்டம்பா இது !! இதுல நானு கில்லாடி கணக்கா செய்வேன் !! வடை தட்டி போட்டா , என்னை மேரி ஆளுக்கு ஆவாது இன்னு ,
ஆவி ( பேய் இல்ல ) ல , வேக
வெச்சி , அப்பால போடலாம் தூளா , இருக்கும் . //
நானும் ஒரு நிமிடம் பேய தான் வேவ வச்சிடுவீங்களோன்னு நினைத்தேன்.
என்னப்பா ஜலி,வடைகறி செய்யும் பொழுது யார் மீது கோபமாக இருந்தீர்கள்?வடையை இந்த நொறுக்கு நொறுக்கி இருக்கின்றீர்கள்! படத்தில் வடையோட அடையாளமே தெரியவில்லையே?நாங்களும் இந்த முறையில் தான் செய்வோம்.ஆனால் வடை இதோ என்னைப்பார் என்று கூப்பிடும் அளவிற்கு அதிகம் நொறுக்காமல் செய்வோம்.
ஸாதிகா அக்கா முழுசா தான் இருந்தது, இது காலை டிபனுக்கு கட்டி அனுப்பியதால் தோசையில் வைத்து மடடித்து வைக்க இப்படி வைத்தேன்
vadaikari romba nalla irukku
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா