ஸாதிகா அக்கா பிஸ்கேட் செய்ய கொஞ்சம் பட்டரின் அளவை குறைத்து கொள்ளனும்.இந்த கேக் ரெசிபி நான் எல்லாம் சம அளவில் தான் சேர்ப்பேன்.
முன்பு அடிக்கடி செய்வதுண்டு இப்போது எப்பவாவது தான் செய்வது.
வெரும் ஸ்பாஞ்ச் கேக் (லெமன் ஸ்பாஞ்ச் கேக் ) தான் செய்வேன் அதே அளவில் இந்த சாக்லேட் கேக் செய்துள்ளேன்.
முன்பு அடிக்கடி செய்வதுண்டு இப்போது எப்பவாவது தான் செய்வது.
வெரும் ஸ்பாஞ்ச் கேக் (லெமன் ஸ்பாஞ்ச் கேக் ) தான் செய்வேன் அதே அளவில் இந்த சாக்லேட் கேக் செய்துள்ளேன்.
பாயிஜா மைக்ரோவே சமையல் எனக்கு அவ்வளவா விருப்பம் இல்லை, இருந்தாலும் எப்பவாவது தான் முயற்சி செய்வது(காய் வேக வைக்க), பிட்சா பிரெட், பன் செய்வேன். ஹாக்கிங்ஸ் பிரெஷர் குக்கர் எனக்கு மைக்ரோவேவை விட ரொம்ப ஃபாஸ்ட் ஆகையால் அதான் உபயோகிப்பது. இது கேக் ஓவனில் செய்ய முயற்சி செய்த கேக், அது பழுதடைந்து போகவே , கலக்கிய மிக்ஸிங்கை என்ன செய்வது என்று தெரியாமல் இப்படி மைக்ரோவேவில் மீடியம் ஹையில் 7 நிமிடம் வைத்தேன், சான்யோ மைக்ரோவே தான் என்னிடம் இருப்பது.
ஆசியா நீங்க சொன்ன மாதிரி 20 நிமிடம் என்பது கேக், பிட்சா செய்யும் ஓவனில் செட் பண்ணனும். காலையிலேயே சமையலை முடித்து விடுவதால் மைக்ரோவேவ் சூடு படுத்த தான் பயன்படுத்துவது. அதே போல் இந்த கேக்கையும் வைத்து விட்டேன்.
ஹுஸைன்னாம்மா நான் சம அளவு தான் போட்டு கேக் செய்வது பொதுவா எப்போதும் செய்வது லெமன் ஸ்பாஞ்ச் கேக் தான்
அதற்கு உள்ள அளவில் சரிபாதியாக போட்டு கொக்கோ பவுடர் மிக்ஸ் பண்ணி கொண்டேன். இது மைக்ரோவேவில் சன்யோ வில் மீடியம் ஹையில் 7 நிமிடம் வைத்தேன். பிறகு ஒரு முறை சூடு பண்ணி கொண்டேன். நல்ல ஆறியதும் கவிழ்த்து துண்டுகள் போட்டேன்.அந்த கேக் செய்யும் போது அதை போடுகிறேன். இதுவும் ஸ்டெப் பை ஸ்டெப் தான் எடுத்தேன், போட்டோ சரியாக வரல ஆகையால் இனைக்க வில்லை.அடுத்த முறை செய்யும் போது மீண்டும் சொல்கிறேன்.
முன்பு (12 வருடம் முன்)கேக்கை மைக்ரோவேவில் தான் வைப்பேன், என்ன டாப், பாட்டம் பிரவுடனா வராது. ரொம்ப ஷாப்டாக இருக்கும். டேஸ்டும் அருமையாக இருக்கும்.
ஜெய்லானி கரம் மசாலா என்பது, நீங்கள் சொல்லும் மிளகு சேர்ந்தது இல்லை.வெரும் பட்டை, கிராம்பு, ஏலத்தூள் மட்டும் இது நான் கடையில் வாங்குவதில் கொஞ்சம் கொஞ்சம் அப்ப அப்ப வீட்டிலேயே திரித்து கொள்வது .
பட்டை தூள் எல்லா உணவிலும் சேர்த்து கொண்டால் பல நோய்களுக்கு மருந்து, முன்பு (ஹனி &; சினாமம் ) என்று மெயிலே வந்துள்ளது..
இது முடி உதிர்தல், சர்க்கரை வியாதி, ஹை பிரெஷர்,வயிறு சம்ப்ந்தபட்ட உபாதைகள், மற்றும் பல வியாதிகளை குணப்படுத்தும், நான் டீயில் கூட சில நேரம் கரம் மசாலா டீ போடுவதுண்டு.
பட்டை தூள் எல்லா உணவிலும் சேர்த்து கொண்டால் பல நோய்களுக்கு மருந்து, முன்பு (ஹனி &; சினாமம் ) என்று மெயிலே வந்துள்ளது..
இது முடி உதிர்தல், சர்க்கரை வியாதி, ஹை பிரெஷர்,வயிறு சம்ப்ந்தபட்ட உபாதைகள், மற்றும் பல வியாதிகளை குணப்படுத்தும், நான் டீயில் கூட சில நேரம் கரம் மசாலா டீ போடுவதுண்டு.
கரம் மசாலா பவுடர்
- பட்டை - ஐம்பது கிராம்
- லவங்கம் - இருபத்தைந்து கிராம்
- ஏலக்காய் - இருபத்தைந்து கிராமில் பாதி
- எல்லாவற்றையும் மிக்ஸியில் பொடித்து ஈரமில்லாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
- மட்டன் ப்ரை, சிக்கன் ப்ரை மற்றும் பல அயிட்டங்களுக்கு இதை கால் தேக்கரண்டி சேர்த்து கொண்டால் நல்ல வாசமாக இருக்கும்.
டீ, பொரிச்ச கறி, மிளகு கறி, ஈரல், கிட்னி, கேக், கட்லெட், பொரியல் வகைகள், முர்தபா போன்றவற்றில் சேர்த்து கொள்ளலாம் சேர்க்கும் அளவு (கால் தேக்கரண்டியில் இருந்து அரை தேக்கரண்டி சேர்க்கலாம் இல்லை என்றால் ரொம்ப வாடை அடிக்கும் சாப்பிட முடியாது.
Tweet | ||||||
9 கருத்துகள்:
படிக்கும் போதே ஆர்வம் தாங்கலை
சந்தேககங்களுக்கு அழகான முறையில் தெளிவான பதில் தந்திருக்கிங்க.. நன்றியக்கா. என்னிடம் மைக்ரோ ஓவன் தான் இருக்கு அதில் கேக் செய்வதில்லை.. உங்கள் குறிப்பை பார்த்த பின்பு ட்ரை பண்ணலாம் என்று பார்த்தேன். வீட்டுக்கு விருந்தினர் வருகை அதான் என்னால் நெட்டில் உட்கார முடியவில்லை
Queen of tips: Jaleela akka.
அக்கா, தனிப்பதிவே போட்டுட்டீங்களா பதில் சொல்ல? நன்றிக்கா.
சாதாரண மைக்ரோ வேவ்ல எப்படி செய்யன்னு தெரியல. ஒருமுறை செஞ்சு பாத்தப்போ, புட்டிங் போல வந்துது. டைம் அதிகம் வச்சா, கிரிஸ்பியா பிஸ்கட் மாதிரி ஆகிடுச்சு.
நீங்க சாக்லேட் கேக் செஞ்சதுனால பிரவுன் கலரா இருக்கு. சாதாரண கேக் செஞ்சா, மேலே பிரவுனா ஆகுமா மைக்ரோவேவ்ல?
இப்படி எனக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கு. நீங்க கேக் செய்ற பதிவு போடுங்க, அப்ப கேட்டுக்கிறேன்.
மாஷா அல்லாஹ் ஸ்டெப் பை ஸ்டெபா விளக்கி இருக்கீங்க .கரம் மசாலா தனித்தனியாகவும், நன்னாரி வேரை பொடித்துப் போட்டு டீ குடிப்பது வழக்கம்.(ஊரில் இருக்கும் போது).இந்த ஊரில் ஒன்லி பன்னீர்(ரோஸ் வாட்டர்)மட்டுமே.
தனிப்பதிவே போட்டதுக்கு நன்றி.......
பூக்கள் கொட்ற மேரி போட்டா , உங்க ப்ளாக்ல காப்பி ( சரியான position ல கர்சர் நிக்காது ) கஷ்டமா இருக்கும் இன்னு நெனைக்கறேன் போட்டு
பாருங்க !! அதே போல இருந்தா எட்துடுங்க, ஏதாவது சின்னதா போடுங்க , ( உங்க ப்ளாக் template அது போல இன்னு நெனைக்கறேன் ) .
கவிதை காதலன் , வருகைக்கு மிக்க நன்றி
பரவாயில்லை பாயிஜா முடிந்த போது வாங்க.
ஹுஸைன்னாம்மா அடுத்த முறை செய்யும் போது விபரம் கூடுதலாக போடுகிறேன்.
சித்ரா நன்றி.
ஜெய்லானி நன்னாரி வேர் பொடியே தனியாக வைத்துள்ளேன். அதை போட்டும் டீ குடிப்பதுண்டு
அருமையான செய்முறை.. நானும் பம்கின் கேக் செய்வது எப்படி என என் வலைதளத்தில் எழுதியிருக்கிறேன்!! பாருங்கள் Pumpkin Spice cake Recipe
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா