Thursday, February 11, 2010

முழு பாசிபயறு போளி - whole green dal poli


//போளியில் பலவிதம் போளி கடலை பருப்பில் செய்வார்கள், அதே போல் பாசி பருப்பு போளி, தேங்காய் நட்ஸ் போளி, கேசரி போளி என பல விதமாக அவரவர் விருப்பப்படி செய்து கொள்ளலாம். இதில் நான் முழுப்பாசிபயறில் செய்து இருக்கேன்.//







மாவு குழைக்க‌
மைதா மாவு = ஒரு டம்ளர்
மஞ்சள் தூள் = கால் தேக்கரண்டி
நெய் = ஒரு தேக்கரண்டி
உப்பு = கால் தேக்கரண்டி
தண்ணீர் = கால் டம்ளர்
சர்க்கரை = அரை தேக்கரண்டி

பில்லிங்

முழு பாசிப்பயறு = அரை டம்ளர்
வெல்லம் = கால் டம்ளர்
தேங்காய் துருவல் கால் டம்ளர்
ஏலப்பொடி = கால் தேக்கரண்டி
நெய் = ஒரு தேக்கரண்டி






பாசிப்பயறை முதல் நாள் இரவு ஊறவைத்து மறு நாள் அதை வேகவைத்து அத்துடன் வெல்லம்,ஏலக்காய் பொடி, தேங்காய் துருவல், நெய் சேர்த்து அடுப்பில் வைத்து நல்ல கிளறி கொள்ளவும். பயறு நன்கு வெந்து இருப்பதால் மசித்தல் போதும், (முழுசா முழித்து கொண்டு இருந்தால் மிக்சியில் இட்டு ஒரு சுற்று சுற்றீ கொள்ளலாம்).



மைதா மாவில், உப்பு, சர்க்கரை,மஞ்சள் தூள் நெய் கலந்து தண்ணீரை கலந்து கொஞ்சம் தளர்வாக குழைத்துக்கொள்ளவும்.



ஐந்து உருண்டைக‌ள் வ‌ரும் ஓவ்வொரு உருண்டையை லேசாக‌ த‌ட்டி அதில் உள்ளே பூர‌ண‌ம் வைத்து மூடும் அள‌விற்கு வைத்து மூடி கைக‌ளால் லேசாக‌ த‌ட்ட‌வும். பிளாஸ்டிக் ஷீட்டில் த‌ட்டினால் சுல‌ப‌மாக‌ இருக்கும்.






சுடும் போது லேசாக‌ மாவு தூவி த‌ட்டினால் இன்னும் ந‌ல்ல‌ வ‌ரும் சின்ன‌ வ‌ட்ட‌ வ‌டிவ‌மாக‌ த‌ட்டி தவ்வாவில் போட்டு நெய்+ எண்ணை க‌ல‌ந்து சுற்றிலும் ஊற்றி போளிக‌ளை சுட்டெடுக்க‌வும்.






இது கொஞ்சம் அடர்த்தியாக இருப்பதால் தீயின் தனலை மிதமாக வைத்து சுட்டெடுக்கவும்.


எனக்கு பில்லிங் கொஞ்சம் கொழவா இருந்தது, புதுசா செய்பவர்கள் கெட்டியமாவைத்து கொள்ளுங்கள். (கொழவா இருந்தாலும், முர்தபா, ஆலுபரோட்டோ போல் தான் இதுவும் ஆகையால் எனக்கு சரியாவந்தது)







//இந்த ரெசிபி ஒரு வருடமாக என் பதிவுகளுக்கு தொடர்ந்து பின்னூட்டம் போட்டு ஆதரவு கொடுத்து வரும் பதிவுலக நண்பர் ஷஃபிக்ஸ், கேட்டது அவருகாக செய்தது.//

எங்க வீட்டில் என்னை தவிர போளி வேற யாருக்கும் பிடிக்காது,ஆகையால் அவ்வளவா செய்வதில்லை, ஆனால் நேற்று செய்ததில் என் பையனுக்கும் ரொம்ப பிடிச்சி போச்சு. என் கணவருக்கும் பிடித்து விட்டது. இனி அடிக்கடி போளி செய்ய வேண்டியது தான்

( இந்த குறிப்பு ஆனந்த விகடனில் வெளியானது)
பண்டிகை கால சமையல்

36 கருத்துகள்:

Anonymous said...

ஜலீலாக்கா ஏதோ நடக்குது.. நேத்து இரவு கனவுல போளி சாப்பிடறது போல வந்துச்சு.. இன்னைக்கு என்னடான்னா உங்க பதிவு.. கூடிய சீக்கிரம் உங்க வீட்டுக்கு வர போறேன்னு நினைக்குறேன்.. இன்ஷா அல்லாஹ்

சாருஸ்ரீராஜ் said...

jaleela akka nalla irukku eppoluthum kadalai paruppla than seiven i will try with this also

ஜெய்லானி said...

///ஆனால் நேற்று செய்ததில் என் பையனுக்கும் ரொம்ப பிடிச்சி போச்சு. என் கணவருக்கும் பிடித்து விட்டது///

புதன் கிழமை ஃபாத்திஹா வா?? மலிகாக்கா ப்ளாகிலும் பச்சை பயிரா இருக்கே!!! தூள் கிளப்புங்க!!

//இந்த ரெசிபி ஒரு வருடமாக என் பதிவுகளுக்கு தொடர்ந்து பின்னூட்டம் போட்டு ஆதரவு கொடுத்து வரும் பதிவுலக நண்பர் ஷஃபிக்ஸ், கேட்டது அவருகாக செய்தது.//

இது என்னோட ஃபேவரிட் ,ஊரில் இருந்தால் அடிக்கடி செய்ய சொல்வதுண்டு.
நன்றி.

Chitra said...

அக்கா, மற்றுமொரு அருமையான இனிப்பு வகை. நன்றி.

அன்புடன் மலிக்கா said...

சேம் சேம். அக்கா இதெல்லாம் நல்லாயில்ல நான் ஒருத்தியிருக்கேன்னுரதே மறந்துகினீங்க.

எனக்குதரவேயில்ல
நான் உங்ககூட டுக்கா.
இருந்தாலும்
போளியிருக்குது
சோக்கா..

டவுசர் பாண்டி said...

//கொழவா இருந்தாலும், முர்தபா, ஆலுபரோட்டோ போல் தான் இதுவும் ஆகையால் எனக்கு சரியாவந்தது//

நல்லா செய்யறவங்க , எப்பிடி செய்தாலும் அது நல்லா தான்
வரும் !! ( ஹை, இது கூட நல்லா கீதே)


இது எனுக்கு ரொம்ப புடிக்கும் , இன்னா ஒன்னு இங்க கடைல வாங்கினா , கால் கிலோ நெய் கீது , அத்த துன்னுட்டு நாலு BP மாத்தற போடறதா கீது !!

இனி மெட்டு நானே சொந்தமா
( பின்ன இன்னா , இதுக்கு இன்னா டெண்ட்டரா உடுவாங்கோ !! )

செய்ஞ்சி துன்னலாம் , போளிக்கு நன்றிங்கோ !! ( அப்போ உங்களுக்கு இல்லியா ? )

Jaleela Kamal said...

ஆஹா நாஸியா கனவில் வேற போளி வந்து விட்டதா?
வாங்க வாங்க வசமா செய்து தாறேன்.

Jaleela Kamal said...

சாருஸ்ரீ கடலைப்பருப்பை விட இது ஹெல்தியா இருக்கும் இல்லையா? கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

ஜெய்லாணி புதன் கிழமை பாத்திஹா வா நீங்க சொல்லி தான் தெரியுது(அதெல்லாம் ஒரு காலம்) தலமாட்டில் முட்டையும், பச்ச பயிறும் வைத்து மிஸ்கீனுக்கு கொடுப்பது.ஹி ஹி. பச்சை பயறு தான் நிறைய ஊறவைத்தாச்சு இனி அடிக்கடி பச்சைபயறு தான்.


ஆமாம் போளி என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். வ‌ருகைக்கு மிக்க‌ ந‌ன்றி

Jaleela Kamal said...

மலிக்கா எப்பத்திலிருந்து தீடீருன்னு டி ஆர் ரேஞ்சுக்கு பேசாஅரம்பித்தீங்க.

நன்றி மலிக்கா

Jaleela Kamal said...

டவுசர் அண்ணாத்தே இதுக்கு பீபி மாத்திரை போட தேவையில்லை, வூட்ல செய்ரதுனால நெய் நம்ம பார்த்து காட்டானா போதும் இழ்டம்போல துன்னலாம்.

Unknown said...

jaleela akka en husband ku romba pidikum.. seythu koodukanum..

ஹுஸைனம்மா said...

நான் மட்டும் நாஸியா இடத்தில இருந்தேன்னா, தினம் சாப்பாடே ஜலீலாக்கா வீட்டிலதான்!! அப்பப்போ மலிக்கா வீட்டுலயும்.

ஹூம், சான்ஸை மிஸ் பண்றீங்களே நாஸியா!!

ஹுஸைனம்மா said...

//Jaleela said...

டவுசர் அண்ணாத்தே//

அக்கோவ், ஒண்ணு முழுசா பேரச் சொல்லுங்க, இல்ல பாண்டி அண்ணாத்தேன்னு சொல்லுங்க. இதென்னது? சிரிச்சு முடியல...

Jaleela Kamal said...

ஹுஸைனா தெரியம போட்டுட்டேம்பா, பாண்டி அண்ணாத்தே தப்ப எடுத்தக்கூடாது.

Jaleela Kamal said...

பாயிஜா உங்கள் கணவருக்கு செய்து கொடுங்க

Jaleela Kamal said...

ஹுஸைம்மா ம்ம் தெரியுது உங்கள் பெரு மூச்சு, அதுக்கென்ன அடுத்த முறை அல் அயின் வரும்போது எடுத்து எடுத்து வந்தா போச்சு.

Jaleela Kamal said...

// போளிக்கு நன்றிங்கோ !! ( அப்போ உங்களுக்கு இல்லியா ? )//

பாண்டி அண்ணாத்தா எத‌ செஞ்சாலும் முத‌ல் நான் சாப்பிட்டு விட்டு தான் (டேஸ்ட் பார்த்து விட்டு)எல்லோருக்கும் கொடுப்ப‌து.

Anonymous said...

ஹூசைனம்மா.. அப்படீங்கறீங்க? அப்போ பேசாம கிளம்பி போக வேண்டியது தான்..

Menaga Sathia said...

ரிச்சான போளி ரொம்ப சூப்பராயிருக்கு ஜலிலாக்கா...எனக்குத் தரவேயில்லை நீங்க...

Vikis Kitchen said...

Green dhal boli looks very healthy and superb pa. Inimel kadalai paruppukku pathil ithu than seiyanum. Very nice recipe.

வேலன். said...

எங்களுக்கெல்லாம் போளி கிடையாதா...ஃஎனக்கும் போளியேன்றால் அதிக விருப்பம்.. அருமையான பதிவு... வாழ்க வளமுடன் வேலன்.

SUFFIX said...

மிக்க நன்றி ஜலீலாக்கா, விடுமுறை அதுவுமா நான் கேட்டத போட்டு இருக்கீங்க, இன்றைக்கே செய்து பார்த்துடுவோம்.

Jaleela Kamal said...

ஆமாம் மேனகா ரிச்சான , சத்தான போளி உங்களுக்கில்ல்லாமலா ம்ம் பர்சல் கண்டிப்பா உண்டு

Jaleela Kamal said...

விகி கருத்து தெரிவித்தமைக்கு நன்றி, செய்து பாருங்கள் சுவை சூப்பராக இருக்கும்.

Jaleela Kamal said...

வேலன் சார் உங்களுக்கெல்லாம் இல்லாமலா?
தொடர்வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.

Jaleela Kamal said...

ஷபி நீங்கள் கேட்டு ரொம்ப நாள் ஆயிடுச்சி, போட தான் தாமதம். ருசித்து மகிழுங்கள்

suvaiyaana suvai said...

இது என்னோட ஃபேவரிட்!!

asiya omar said...

எப்பவும் சென்னை - நெல்லை இரயில் பயணம் செய்யும் பொழுது கடம்பூர் போளியை ருசி பார்க்க தவறுவதில்லை,பார்க்க அதே கலர் ,சாஃப்டாக இருக்குமா ஜலீலா?இதுவரை செய்து பார்த்ததில்லை.இனி முயற்சி செய்ய வேண்டியது தான்.

ஸாதிகா said...

முழுபாசிப்பயறில் கூட போளி.ஜலி ஆனாலும் சமையலில் ரொம்ப அட்டகாசம் பண்ணுகின்றீர்கள்.சரி எப்ப இங்கு வந்தாலும் நான் உங்கள் வீட்டுக்கு வரும்பொழுது போளி ரெடியாக இருக்கவேண்டும்.

நட்புடன் ஜமால் said...

தங்ஸுக்கு நெம்ப பிடிக்கும்

நோட் செய்திட்டாங்க ...

Jaleela Kamal said...

நன்றி சுவையான சுவை உங்கள் பேவரிட்டா அப்ப உடனே செய்து சாப்பிடுங்கள்

Jaleela Kamal said...

ஆசியா போளி போளின்னு எல்லாம் சொல்லிதான் கேள்வி பட்டு இருக்கேன், முதல் முதல்,இரண்டு வருடம் முன் மர்லி வீட்டுக்கு போன போது கடையில் இருந்து வாங்கி வைத்தார்கள். அதிலிருந்து எப்படியாவது செய்து பார்க்கனும், ஆனால் டிபெரெண்டாஅ செய்யனும் என்று அதுக்கு நேரம் இப்ப தான் கிடைத்தது. நல்ல இருந்தது.கொஞ்சமா செய்து பாருங்கள் பிடித்து இருந்தால் செய்யுங்கள்.

Jaleela Kamal said...

ஸாதிகா அதுக்கென்ன செய்து கொடுத்துட்டா போச்சு, எப்ப வேண்டும் சொல்லுங்கல்

Jaleela Kamal said...

ஜமால் நோட் பண்ணியாச்சா, அப்ப செய்து பார்த்து விட்டு சொல்லனும்

Vijiskitchencreations said...

nice sweets. I like it. I will try tamil newyear time. thanks a lot of this recipe.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா