Wednesday, February 24, 2010

மீலாது ஸ்பெஷல் மட்டன் சப்ஜி பிரியாணி

பாசுமதி அரிசி - ஒரு கிலோ ( ஐந்து டம்ளர் , 5 ஆழாக்கு)
மட்டன் - முக்கால் கிலோ
உருளை 150, கேரட் 100, பீன்ஸ் 50, - அரை கிலோ
வெங்காயம் - அரை கிலோ (நீள வாக்கில் அரிந்து கொள்ளவும்)
தக்காளி - அரை கிலோ (நீள வாக்கில் அரிந்து கொள்ளவும்)
தயிர் - 175 மில்லி (முக்கால் டம்ளர்)
எண்ணை - 225 மில்லி (ஒன்னே கால் டம்ளர்
நெய் - முன்று தேக்கரண்டி
கொத்து மல்லி தழை - அரை கட்டு
புதினா - கால் கட்டு
பச்ச மிளகாய் - ஆறு (இரண்டாக ஒடித்து கொள்ளவும்)








  ரெட் கலர் பொடி - கால் தேக்கரண்டி
எலுமிச்சை - ஒரு பழம்
பட்டை - இரண்டு அங்குலம் ஒன்று
கிராம்பு - நான்கு
ஏலம் - முன்று
பிரிஞ்சி இலை - இரண்டு
ஷா ஜீரா - ஒரு தேக்கரண்டி


இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஐந்து மேசை கரண்டி குவியலாக
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு






செய்முறை



1. தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக வைக்கவும்.
2. சட்டியை காயவைத்து எண்ணையை அளந்து ஊற்றவும்.பட்டை, பிரிஞ்சி இலை, ஷா ஜீரா, ஏலம் கிராம்பு எல்லாம் போட்டு வெடிய விடவும்.
3.நீளமாக அரிந்த வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
4. வெங்காயம் சுருண்டவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி நன்கு வாடை போய் கலர் மாறும் வரை வதக்கனும், இல்லை சிம்மில் கூட ஐந்து நிமிடம் வைக்கலாம்.
5.அடுத்து கொத்து மல்லி தழை புதினாவை போட்டு வதக்கி ஒரு நிமிடம் விடவும்.
6.தக்காளி அரிந்து போட்டு , பச்ச மிளகாயை இரண்டாக ஒடித்து போடவும்.
7.தக்காளியை மூடி போட்டு நன்கு மடங்க விட வேண்டும்.







8.அடுத்து மட்டனை போட்டு வதக்கவும்.







9.. மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு தூள் போட்டு நன்கு வதக்கி ஐந்து நிமிடம் விடவும்.


10.அரிசியை 20 நிமிடம் ஊற வைக்கவும்








11. அடுத்து கேரட்,உருளை, பட்டானியை சேர்த்து வதக்கவும்.








12.பிறகு தயிரை கலக்கி சேர்க்கவும்.
13. பாதி எலுமிச்சை சாறு பிழிந்து விடவும்.
14. கிளறி மூடி போட்டு நன்கு கூட்டு கிரிப்பாகி மட்டன், காய்களை வேக விடவும்










16.நல்ல தீயை குறைத்து வைத்து 20 நிமிடம் வேக விடவும். இடையில் இரு முறை எடுத்து கிளறி விடவும்.



17. இப்போது பிரியாணி கூட்டு ரெடி எண்ணை மேலே தெளிந்து வரும். எவ்வளவுக்கு எவ்வள்வு சிம்மில் வைத்து செய்கிறீர்கலோ அவ்வள்வு அடி பிடிக்காம இருக்கும்.






ஒரு பெரிய வாயகன்ற சட்டியில் முக்கால் பாக தண்ணீர் வைத்து கொதிக்க விட்டு அதில் சிறிது கொத்துமல்லி புதினாவை போடவும்.கொதி வந்ததும் அரிசியை அரிசியை தட்டி உப்பு சேர்த்து கிளறி விடவும்.
19. முக்கால் பாகம் வெந்ததும் அடுப்பை அனைக்கவும்.
20.ஒரு பெரிய கண் வடிகட்டியில் அரிசியை வடிக்கவும்.








22.அடுப்பை ஏற்றி தீயை சிம்மில் வைத்து அதன் மேல் தம் போடும் கருவியை வைக்கவும்.
23.இப்போது மட்டன் கூட்டு உள்ள சட்டியை ஏற்றி அதில் வடித்த அரிசியை தட்டவும்.
24.லேசாக பிறட்டி விடவும்.
25.அரை பழ எலுமிச்சை சாற்றில் சிறிது ரெட் கலர் பொடி, மற்றும் கால் டம்ளர் வடித்த சூடான கஞ்சியை சேர்த்து சாதத்தின் மேல் வட்ட வடிவமாக ஊற்றவும்.
26.மூடி போட்டு வடித்த சூடான கஞ்சியை அதன் மேல் ஏற்றி 20 நிமிடம் தம்மில் விடவும்.












27.நன்கு அடியில் இருந்து மேல் வரை சாதத்தை மிலாய்க்கவும்(பிறட்டவும்).
28 சுவையான பிரியாணி ரெடி.
29.சுவையாண மீலாது ஸ்பெஷல் மட்டன் சப்ஜி பிரியாணி ரெ







குறிப்பு:


இது மீலாது விஷாவில் (நபிகள் பிறந்த நாளையொட்டி) முன்பு 20 வருடம் முன் இப்ப ஓதுகிறார்களா இல்லையான்னு தெரியல.ஒவ்வொரு தெருவில் உள்ளவர்களும் ஒன்று சேர்ந்து மவுலூது ஓதி (அவர் புகழ் பாடி) எல்லோருக்கும் ஒரு தொன்னையில் விளம்புவர்கள். அப்போது சாப்பிட்ட‌ பிரியாணி இந்த டேஸ்டில் தான் இருக்கும்.
இது சாதராணமா அடிக்கடி வீட்டில் செய்வது தான்,அப்போது சாப்பிட்ட‌ பிரியாணி இந்த டேஸ்டில் தான் இருக்கும். ஆகையால் இதில் மீலாது ஸ்பெஷ‌ல் பிரியாணி என்று கொடுத்துள்ளேன். இதை ஏற்க‌ன‌வே போன‌ வ‌ருட‌ம் த‌மிழ் குடும்ப‌த்திலும் கொடுத்துள்ளேன்.


இது இஸ்லாமிய இல்லங்களில் தயாரிக்கும் பல வகை பிரியாணியில் இதுவும் ஒரு வகை, இது வடித்து தம் போடுவது.
அதே அளவு சட்டி இல்லாதவர்கள் அரிசி ஒரு பங்கிற்கு ஒன்னேகால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றி கொதிக்கவிட்டு அரிசியை அப்படியே அதில் சேர்த்து இதே போல் தம் போடவும்.
இதை சிக்கனிலும் செய்யலாம், சிக்கனில் செய்யும் போது ரொம்ப நேரம் வேகவிடதேவையில்லை இல்லை என்றால் கரைந்து எலும்பு தான் தேரும். இதற்கு அரைகிலோ மட்டன் கூட போதுமானது.
இதற்கு தொட்டு கொள்ள தால்சா கட்டியாக செய்தது, எண்ணை கத்திரிக்காய், தயிர் சட்னி,போன்றவை ஆகும்.
அதில் செய்யும் ஸ்வீட் மிட்டாகானா (அ) கேசரி) வீட்டில் நாம் நமக்கு பிடித்த தக்காளி ஹல்வா, கேரட் ஹல்வா,பீட்ரூட் ஹல்வா, பீர்னி, ஷீர் குருமா,இதில் ஏதாவது ஒன்றை செய்து கொள்ளலாம்


இஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையல்










33 கருத்துகள்:

Menaga Sathia said...

சப்ஜி பிரியாணி சூப்பர்ர்!! எங்களுக்கெல்லாம் பிரியாணி கிடையாதா அக்கா???

அட்வான்ஸ் மிலாது நபி வாழ்த்துக்கள்!!

Chitra said...

அக்கா, நமக்கு மட்டன் பிரியாணி தான் ரொம்ப பிடிக்கும். சப்பு கொட்ட வைத்து விட்டீர்கள். நாளைக்கு அசத்த வேண்டியதுதான்.

ஜெட்லி... said...

நைட் நேரத்தில வேற பிரியாணி படத்தை
பார்த்துட்டேன்.......வாய் ஊருது....

ஜெய்லானி said...

சூப்பர்.. சரியான நேரத்தில் பொருத்தமான (தேவையான) பதிவு..

மதுரை சரவணன் said...

good . i will try . thank u.

நட்புடன் ஜமால் said...

நல்லது - நாளை செய்ய சொல்லியாச்சி.

நன்றி.

வேலன். said...

கமெண்ட் போட இயலவில்லை...சரிபார்க்கவும்....... வாழ்க வளமடன்,வேலன்.

வேலன். said...

இப்போது சரியாகிவிட்டது...மிலர்து நபி வாழ்த்துக்கள் சகோதரி...படங்களையும் கட்டுரையையும் பார்க்கும்போதே பாதி வயிறு நிரம்பிவிட்டது..வாழ்க வளமுடன், வேலன்.

R.Gopi said...

விரிவாக எழுதி இருந்தாலும், இது நான்வெஜ் என்பதால் எஸ்கேப்ப்ப்ப்..

மங்குனி அமைச்சர் said...

வணக்கம் மேடம்
நன்றி மேடம் நம்ம வூட்டுபக்கம் வந்ததுக்கு. இபத்தான் சாப்டேன் அப்படியே உங்கவூடுபக்கம் வந்தா
மறுபடியும் பசிக்குது.

Asiya Omar said...

ஜலீலா இங்க ஊர் கந்தூரி(மீலாது விழா)ஊர்ச்சோறு சேர்ந்து ஆக்கி எல்லோரும் பகிந்து சாப்பிட வசூல் நடக்குது,அதற்கு முன்னாடியே அசத்தலான சாப்பாட்டை பரிமாறிட்டீங்க.

அதிரை அபூபக்கர் said...

மீலாது ஸ்பெஷல் அருமை.. இதற்கு தால்சா அருமையாக இருக்கும்..

Anonymous said...

சூப்பர் சப்ஜி பிரியாணி தோழி.ஊரூல இன்னக்கி எங்க முறை.ரைஹானா.

Saraswathy Balakrishnan said...

Hmm it's being sometime since I last visit..love the new look and very delicious mutton briyani..

சீமான்கனி said...

சூப்பர் பிரியாணி அக்கா....
மிலாது நபி வாழ்த்துக்கள்....

Chitra said...

akkaa, HAPPY MILADI NABI to you and to your loved ones!

prabhadamu said...

சப்ஜி பிரியாணி சூப்பர்ர் அக்கா.


ஆஷே எனக்கு பசிக்குதே. இன்னிக்கு சனிகிழமையா போச்சே. சாப்பிட முடியாதே.

prabhadamu said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
ஸாதிகா said...

அருமையான பிரியாணி.கிட்டத்தட்ட நாங்களும் இதே முறையில்தான் செய்வோம்.

Chitra said...

akkaa, milaadi nabhi samayal, saappaadu ellaam eppadi poi kittu irukku?

Chitra said...
This comment has been removed by a blog administrator.
Prathap Kumar S. said...

ஜலீலாக்கா... மிலாடிநபி ஸ்பெஷல் பார்ததாலே பசியெடுக்குது...
ரெடிபண்ணி வைங்க இதோ வந்துட்டே இருக்கேன்... :))

Prathap Kumar S. said...

ஆங் சொல்ல மறந்துட்டேன்...

உங்களுக்கும்
உங்க குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய மிலாடி நபி வாழ்த்துக்கள்.

Kanchana Radhakrishnan said...

உங்களுக்கும்
உங்க குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய மிலாடி நபி வாழ்த்துக்கள்

Jaleela Kamal said...

மேனகா, சித்ரா கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

ஜெட்லி என் பிரியாணி வாசம் வராதவர்களையும் வரவழைத்து விட்டது.
வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிகக் நன்றி.


ஜெய்லாணி நன்றி

மதுரை சரவனன் வருகைக்கு மிக்க நன்றி.

சகோ.ஜமால், வேலன், கோபி கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

மங்குனி அமைச்சர் உங்கள் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி


ஆசியா கலறி சாப்பாடு நல்ல இருக்கும்.

தோழி ரைஹானா நன்றி


அதிரை அபூ பக்கர் ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கீங்க. நன்றி.

சீமான் கனி, ஸாதிகா அக்கா, பிரபா, சரஸ்வதி அனைவரின் கருத்துக்கும் மிக்க நன்றி.

Jaleela Kamal said...

மங்குனி அமைச்சர் உங்கள் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி


ஆசியா கலறி சாப்பாடு நல்ல இருக்கும்.

தோழி ரைஹானா நன்றி


அதிரை அபூ பக்கர் ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கீங்க. நன்றி.

சீமான் கனி, ஸாதிகா அக்கா, பிரபா, சரஸ்வதி அனைவரின் கருத்துக்கும் மிக்க நன்றி.

Anonymous said...

// அதன் மேல் தம் போடும் கருவியை வைக்கவும் //

தம் போடும் கருவி என்றால் என்ன? எதாவது பாத்திரம் மாதிரியா? இல்லை கடையில் கிடைக்கும் என்றால் என்னவென்று கேட்பது?

குறிப்புக்கு நன்றி.

- பிரியாணி சாப்பிடவே பிறந்தவர்கள் சங்கம்.

Jaleela Kamal said...

அனானி இதில் மொத்தம் 25 போட்டோக்கள் இருந்தது என்னால் பதிய முடியாததால் பதிய வில்லை , ஈத் ஸ்பெஷல் மட்டன் பிரியானியில் இருக்கும் என்று நினைக்கிறேன், இருங்க லிங்க் தருகிறேன்.

அனானி வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி. பெயரை சொல்லி இருக்கலாம்/

Jaleela Kamal said...

http://allinalljaleela.blogspot.com/2009/09/blog-post_7756.html

அனானி இந்த லிங்கில் பார்க்கவும், தம் போடும் முறை போட்டுள்ளேன்.

Anonymous said...

ஈத் என்றதும் செப்டம்பர் மாத பதிவுகளுக்கு சென்று இப்போதுதான் கண்டு வந்தேன். அடுத்த முறை இந்தியா செல்லும்போது வாங்கிவிட வேண்டியதுதான்.

1. இந்த பாத்திரம் வைத்தாலும் பிரியாணி வெந்து கீழிறக்கும் வரை அடுப்பு சிம்மில் எரிய வேண்டுமா?

2. நேரடியாக அடுப்பில் வைப்பதற்கும் இந்த தம்போடும் கருவியில் வைப்பதற்கும் என்ன வித்தியாசம்? நெருப்பு நேரடியாக படாது ஆனால் சூடு மட்டும் செல்லும் என்று நினைக்கிறேன். சிலர் அகன்ற தண்ணீர் உள்ள பாத்திரத்தின் மேல் பிரியாணி சட்டியை வைக்க சொல்லி தம் போட சொல்லி கேட்டிருக்கிறேன். ஆனாலும் அப்படி செய்தால் பிரியாணி பொல பொலவென ட்ரையாக வருவதில்லை.

இங்கு சுவையான பிரியாணி சுற்றுவட்டாரத்தில் கிடைப்பதில்லை என்பதால் நானே முக்கி முனகி முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் கைவசப்படவில்லை.

மீண்டும் எளிமையான விளக்கமான குறிப்புக்காக நன்றி. உங்களுக்கு நேரம் இருந்தால் முடிந்தால் செய்முறையை யுட்யூபில் போடுங்கள். என்னை போன்றவர்களுக்கு கூடுதல் உதவியாக இருக்கும்.

- ரிஷி (பிரியாணி சாப்பிடவே பிறந்தவர்கள் சங்கம், அமெரிக்கா கிளை)

Jaleela Kamal said...

ரிஷி , உங்கள் சந்தேகங்கள் எல்லோருக்கும் உள்ளது தான் இதுக்கு நிறைய விளக்கம் தரவேண்டி இருக்கு ஆகையால் பதிலை நேரம் கிடைக்கும் போது (பிரியாணி டிப்ஸாக ) போட்டு விடுகிறேன்.

தம் போடும் கருவி வைத்து தான் போடனும் இல்லை என்றால் பிரியாணி அடி பிடித்து விடும்.

தனல் முக்கால் பாகம் வடித்து அதை தம்போடும் கருவி மேல் சட்டியை வைத்து தீயின் தனலை சிம்மில் வைத்து 20 நிமிடம் வைககனும் நல்ல பொல பொலன்னு வரும்.

//செய்முறையை யுட்யூபில் போடுங்கள்.//
யுட்யூபில் எப்ப‌டி போட‌னும் என்று என‌க்கு தெரியாது.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா