வெயில்காலத்துக்கு ஏற்ற மிக அருமையான வயிற்றுக்கு இதமான குளு குளு ஜூஸ் என்றால் லஸ்ஸி தான்.
லஸ்ஸி நான் ஸ்கூல் போகும் வழியில் ஒரு அம்மா வீட்டு வாசலில் லஸ்ஸி செய்யும் மோட்டார் மத்துடன் கடைந்து விற்பார்கள்.
அந்த பக்கமாக போகும் யாருமே ஒரு டம்ளர் வாங்கி குடிக்காமல் செல்ல மாட்டார்கள் அவ்வளவு ருசி.
ஃப்ரஷாக தானே வீட்டில் தயிர் தயாரித்து, ரொம்ப சுத்தமாக செய்வார்கள்.
நாங்க எல்லாரும் ஸ்கூல் போனதும் அம்மா, பெரிமா சித்தி எல்லாரும் மார்கெட்க்கு மீன் வாங்க செல்வார்கள். வெயிலில் களைத்து மீன் வாங்கி வரும் போது வழியில் அவர்கள் இந்த லஸ்ஸியை வாங்கி குடித்து விட்டு தான் வருவார்கள்.நாங்கள் மாலை வரும் போது சுட சுட மீன் குழம்பு ரெடியாக இருக்கும்.
நானும் என் தங்கையும் கடைக்கு சாமான்கள் வாங்க செல்லும் போது சில நேரம் வாங்கி குடிப்போம்.
அப்ப அவங்க லஸ்ஸி கடைவதை போது நின்று பார்த்தது தான். ஒவ்வொரு கோடையிலும் கண்டிப்பாக அந்த அம்மாசெய்தது போல் ஸ்பெஷல் லஸ்ஸி செய்வேன்.
இதென்ன பெரிய விஷியமா தயிரை அடித்தால் லஸ்ஸி வரபோகுது என்று தானே நினைக்கிறீர்கள்.
நீங்கள் கேட்பது சரி தான் , ஆனால் இந்த லஸ்ஸியின் சுவைக்கு முக்கியமான தேவை பால் ஏடு.பால் ஏடு சேர்த்து தயாரித்தால் சுவை கூடுதல்,
கெட்டி தயிருடன், சர்க்கரை, சிறிது பால், பால் ஏடு , ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு நுரை பொங்க அடிக்கனும். அப்படியே ஒரு பெரிய கண்ணாடி டம்ளர் ஊற்றி குடித்தால் ஆகா அமிர்தம்.....
வயிற்று வலி அல்சர் மற்றும் வயிற்று புண் எல்லாத்துக்கும் அருமருந்து லஸ்ஸி...
லஸ்ஸி
கெட்டி தயிர்
பால் ஏடு
சர்க்கரை
ஐஸ் கட்டிகள் பொடித்தது
ரோஸ் மில்க் லஸ்ஸி
கெட்டி தயிர்
பால் சிறிது
பால் ஏடு
சர்க்கரை
ரோஸ் எசன்ஸ் (அ) ரூ ஆப்ஷா
ஐஸ்கட்டிகள் பொடித்தது
பைனாப்பிள் லஸ்ஸி
தேவையான பொருட்கள்
கெட்டி தயிர் - 200 மில்லி
பைனாப்பிள் துண்டுகள் - கால் கப்
பைனாப்பிள் எசன்ஸ் - 2 துளி
சர்க்கரை - 2 மேசை கரண்டி (தேவைக்கு)
ஐஸ் கட்டிகள் - 5 (பொடித்தது)
ஐஸ் வாட்டர் - தேவைப்பட்டால்
விப்பிங் கிரீம் - கால் கப்
செய்முறை
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்சியில் நுரை பொங்க அடித்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி ஜில்லுன்னு குடிக்கவும்.
பிரியாணி செய்தால் தொட்டுக்க தயிர் பச்சடி செய்வோம் ஹனீஃப் சாப்பிட மாட்டான் அவனுக்காக ஒரு டம்ளர் லஸ்ஸி செய்து வைத்து விடுவேன்.
Tweet | ||||||
25 கருத்துகள்:
எல்லா லஸ்ஸிகளும் அருமை... படங்களைப் பார்த்தவுடன் குடிக்க வேண்டும் போலுள்ளது...!
எல்லா லஸ்ஸியும் பார்க்க நன்றாக,செய்முறை ஈஸியாகவும் இருக்கு. இங்கு இந்த வெயிலுக்கு ஏற்றதாய் தந்திருக்கிறீங்க.நன்றி ஜலீலா.
லஸ்ஸியும், ரோஸ்மில்க்கும் எங்க வீட்டுல எல்லாருக்கும் ஃபேவரிட்.., நானும் செய்வேன்.., ஆனா, உங்க பதிவுல பால் ஏடு போட்டாதான் நல்லா இருக்குகும்ன்னு சொல்றீங்களே! என் சின்ன பொண்ணுக்கும் எனக்கும் பால் ஏடு இருந்தா வாந்தி வந்திடுமே என்ன செய்யலாம்?!
ராஜி வருகைக்கு மிக்க நன்றி
பால் ஏடு சேர்த்து நன்கு மிக்சியிலோ, எலக்ரிக் பீட்டரிலிலோ நன்கு கடைந்து விட்டால் பால் ஏடு வாயில் தட்டாது.
வாங்க பிரிய சகி செய்து பாருங்கள்
வருகைக்கு மிக்க நன்றி தனபாலன் சார்
வணக்கம்...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_20.html) சென்று பார்க்கவும்... நன்றி...
மிக அருமை.
http://www.blogintamil.blogspot.ae/2013/06/blog-post_20.html
இன்று வலைச்சரத்தில் உங்கள் டயட் சமையலை அறிமுகப்படுத்தியுள்ளேன்.அருமை.
நன்றி.
ஜலீலா... நல்லா இருக்கீங்களா?
சூப்பர் லஸ்லி. பார்க்கவே ஜில்லுன்னு இருக்கு.
செய்து பார்க்கணும். இப்போ இங்கே நல்ல கோடை எங்களுக்கு. இதுதான் தருணம்...
ஆமா ஒரு கேள்வி ஜலீலா.. அதென்ன பாலேடு??? எதை சொல்றீங்க.. விளக்கமா சொல்லுவீங்களா?..
ரொம்ப நன்றி நல்ல குறிப்பிற்கு!...
பாருங்க ஜலீலா... என்னமோ உங்க போஸ்ட் ஒண்ணுமே இன்னிக்குவரைக்கும் எனக்கு டாஷ்போட்ல காமிக்கிறதே இல்லை.
ரொம்பவே வருத்தமா இருக்கு.
அகஸ்மாத்தா நான் இங்கின வந்தாத்தான் உண்டு...
என்னதான் தீர்விதற்கு... ம்ஹும்... எனக்கு ஒண்ணுமே புரியலை...:(.
உங்களுக்கு தமிழ்மணம் வோர்ட் சேர்த்திருக்கேன் ஜலீலா...:)
த ம.3
Aha super akka, looks super refreshing, loved your write up.. Lassi parkavae arumaya iruku.. Yum :)
லஸ்ஸி குறிப்பு அருமை.. அவசியம் செய்து பார்க்கிறேன். உங்க பதிவு எதுவும் என்னோட டாஸ் போர்ட்டில் தெரியவில்லை..உங்க வலை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஆனா நேரம் கிடைகிறப்ப வந்து பார்க்கிறேன்.
hi jaleela, yday i bought a roo afazah rose color (not sure about the spelling, sorry) from pakistani store, i thought it was our Nanaari Sarbath. i made it as sarbath but the taste was bad. I have a whole bottle donno what to do. Pls tell me what else i can make other than rose milk...Pls suggest drink recipes with roofazha....Thanks in advance
hi jaleela, yday i bought a roo afazah rose color (not sure about the spelling, sorry) from pakistani store, i thought it was our Nanaari Sarbath. i made it as sarbath but the taste was bad. I have a whole bottle donno what to do. Pls tell me what else i can make other than rose milk...Pls suggest drink recipes with roofazha....Thanks in advance
http://samaiyalattakaasam.blogspot.com/2012/03/nannari-lemon-surbath.html
Dear Shan Check above Link
http://samaiyalattakaasam.blogspot.com/2009/09/blog-post_02.html
Pls, visit the above link I posted Roo Afsa picture
http://samaiyalattakaasam.blogspot.com/2011/11/sogo-roo-apsha-jigarthanda.html
லஸ்ஸி அருமை.
எங்கள் வீட்டிலும் அனைவருக்கும் பிடிக்கும்.
என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி ஆசியா
இளமதி பாலேடு என்பது பாலை காய்ச்சி கொதித்து கொண்டிருக்கும் போது மேலே சேர்ந்து கொண்டிருக்கும் ஏடு தான்.
அதை சேர்த்து அடித்தால் லஸ்ஸி ரொம்ப அருமையான டேஸ்டுடன் இருக்கும்
எல்லாருக்கும் அப்படி தான் இருக்கு இளமதி என் போஸ்ட் டேஷ் போர்டில் வரவில்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை
திவ்யா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி
ராதா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி
ஷான் உங்கள் சந்தேகங்கள் நான் கொடுத்த லின்கின் மூலம் தெளிவடைந்து இருக்கும்
அதை செய்து பார்த்து ரொம்ப நல்ல இருந்து என்றும் கருத்து தெரிவித்து இருந்தீங்க ரொம்ப சந்தோஷம்
பார்க்க அழகா இருக்கு. பார்த்து ரசித்துவிட்டுப் போகிறேன். :-)
லஸ்ஸி முன்பு ஒரு தடவை ருசி பார்த்திருக்கிறேன். கூட இருந்தவங்க எல்லோரும் சுவையாக இருக்கு என்று ரசித்து சாப்பிட்டார்கள். எனக்கு சுவை & ஜில்ல் சரி வரல. :-) வீணாக்க வேணாமே என்று பிறகு ட்ரை பண்ணியதே இல்லை.
~~~~~~
எனக்கு 'ராகவி' தான் டாஷ்போர்ட்ல வருது ஜலீ. உங்க ப்ளாக் புதுசா ஆட் பண்ணணும் போல. இப்ப உங்க கமண்ட் வழியாகத்தா இங்க வந்தேன்.
இமா என்ன பிரச்சனை என்று தெரியல எல்லாருக்கும் அப்படி தான் இருக்கு,
முடிந்த போது வாங்க
வருகைக்கு மிக்க நன்றி
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா