பாலைவனம் என்பதால் மழையே வராது என்று யாரும் டிரெயினேஜை பற்றி யோசிக்கல போல/ மழை பெய்தாலே ஒரு பைப்ப கொண்டு வந்து தான் இந்த தேங்கியுள்ள தண்ணீரை எடுப்பார்கள்
ஷார்ஜாவில் வீடு ரெண்ட் குறைவு என்று துபாயில் வேலை பார்ப்பவர்கள் அங்கு தங்கி இருக்கிறார்கள். ஆனால் இந்த இரண்டு நாள் மழையில் எல்லாம் வெறுத்தே போய் விட்டார்கள்.ஆபிஸ் முடிந்து வீடு போய் சேர குறைந்தது 2 லிருந்து 3 மணி நேரம் ஆகுது என்றார்கள்.
அப்ப இனிமே சிலுக்கு ஜிப்பா போட முடியாதா ஜார்ஜாவுல?
மழை அடித்தாலும் அவ்வளவு தான் இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு தொடருமா இது இரண்டு நாளிலேயே எப்பா தாங்க முடியல.
சில சமயம் துபாயில் பேய் காத்து, ஐஸ் கட்டி மழையும் கூட பெய்யும்.
இப்படி தான் துபாய் வந்த புதிதில் ஒரு ஊரு வெளிய ஒரு ஒரு வீடு என்பது போல் ஒரு இடத்தில் வீடு, காலை ஆபிஸ் போனால் இரவு தான் வருவர் ஆத்துகாரர், வந்து ஒரு மாதத்தில் மண்ணு காத்து உஸ்ஸ்ஸ்ஸ் உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ன்னு அடிக்குது மண்ணெல்லாம் ஜன்னல் வழியா வருது ஒரே பயம் ( கண்ணாடி கதவு தட தடன்னு ஆடுது) நெஜமாவே பேய் தான் தட்டுதா எல்லா கதவையும் மூடிட்டு டிவிய ஜோரா வைத்து கொண்டு ஒரு நாள் முழுவது பயந்து கொண்டு இருந்தேன். கதவ திறந்ததும் ஹால் அங்கேயே உட்கார்ந்து கொண்டு இருந்தேன்.
ஆனால் இப்ப அடிக்கிற பேய் காத்தும், மண்ணு காத்தும் என்ன பார்த்து தான் பயந்து ஓடும்...
இல்லை நீரோடை மலிக்கா கவிதை எழுதி எழுதி நீரோடையா ஒட விட்டுட்டாஙகளா?
Tweet | ||||||
55 கருத்துகள்:
அக்கா, சமையல் மட்டும் இல்ல. எல்லா விஷயத்துலேயும் அசத்துறீங்க.....
Same problem in Saudi Arabia too
ஜார்ஜா - ஹா ஹா ஹா
வர வர லொள்ஸோடு கலக்குறிங்க
நல்லது நல்லது
அருனா சவுதியிலுமா விளங்கினா போல தான்
சித்ரா உண்மைய அப்படியே சொல்றேம்பா
ஷார்ஜாவுல கம்பெனி, ரூம், சாப்பிடுற ஹோட்டல் தாண்டி எங்கயும் போக முடியாத அளவுல முழுசா வெள்ளம் ஆக்கிரமிச்சா மாதிரி இருக்குது. செம்ம போர்ன்னாலும் வராமலே போகலாம் இன்னொரு மழைங்கறதால நல்லா நனைஞ்சு சந்தோசமா இருக்கேன் :)
ஜார்ஜா - ஹா ஹா ஹா
வர வர லொள்ஸோடு கலக்குறிங்க
நல்லது நல்லது
ஆமாம் சகோ. ஜமால் ஷார்ஜா என்று சொல்லும் போதே நம்ம வடி வேலு காமடி தான் ஞாபகம் வருது
பதிவு ரொம்ப நல்லா இருக்கு
ஒரு வேளை ஹுசைனம்மா வந்துட்டு போய் இருப்பாங்கலோ ?. அவங்க வந்தாத்தான் ஷார்ஜாவில எப்பவும் மழை.( ரொம்ம்ம்ம்ம்ப நல்லவங்க )
ஷார்ஜால மழை பெய்ஞ்சு ஊரெல்லாம் தண்ணியா இருந்தாலும் ஷார்ஜா கொலைவெறிப்படை கூகுள் பஸ்ல அடிக்கற கும்மி மட்டும் குறையவே இல்ல....
நான் முதலில் அமீரகத்திற்கு வரும்போது ஊரில் மழைபெய்து கொண்டிருந்தது. ப்ளைட்டில் பக்கத்திருந்தவர் மழையை நல்லா பாத்துக்கோங்க.. அமீரகத்தில் பாக்க முடியாதுன்னு சொன்னார்.
நல்ல பதிவு. இங்கு என்னுடன் பணிபுரிபவர்களும் ஷார்ஜாவுக்கு செல்ல குறைந்தது 3மணிநேரம் ஆகிறது என கூறுகிறார்கள்
ஜெய்லானி நான் போட நினைத்தேன் , இப்ப சேர்த்துட்டேன்
வாங்க சென்ஷி வருகைக்கு நன்றி ஆமாம் மழையில் நனைய சந்தோஷம், எனக்கு பார்க்க ஜாலியா தான் இருந்தது,
இருந்தாலும் டிராபிக்கில மாட்டினவங்க தான் ஓஹ் , ஊஹ், என்று அலுத்து கொள்கிறார்கள்
கண்ணா வாங்க முதல் வருகைக்கு மிக்க நன்றி,
நானும் இங்கு வந்த போது இங்கு மழையே பெய்யாது என்றார்கள், எல்லாத்துக்குமா சேர்த்து மார்த்து வாங்குது
//கொலைவெறிப்படை கூகுள் பஸ்ல அடிக்கற கும்மி மட்டும் குறையவே இல்ல....
//
சரியாக சொன்னீங்க
/ஒரு வேளை ஹுசைனம்மா வந்துட்டு போய் இருப்பாங்கலோ ?. அவங்க வந்தாத்தான் ஷார்ஜாவில எப்பவும் மழை.( ரொம்ம்ம்ம்ம்ப நல்லவங்க //
ஏன் ஹுஸைன்னாம்மாவை மட்டும் எல்லாம் குரூப்பா சேர்ந்துக்க வேண்டியது தான்
சாருஸ்ரீ நல்ல இருக்கா? என்னது மழையா? இல்லை பேய் காத்தா? ஹி ஹி
///Blogger Jaleela said...
/ஒரு வேளை ஹுசைனம்மா வந்துட்டு போய் இருப்பாங்கலோ ?. அவங்க வந்தாத்தான் ஷார்ஜாவில எப்பவும் மழை.( ரொம்ம்ம்ம்ம்ப நல்லவங்க //
ஏன் ஹுஸைன்னாம்மாவை மட்டும் எல்லாம் குரூப்பா சேர்ந்துக்க வேண்டியது தான்//
பாருங்க இது அவங்களே குடுத்த ஸ்டேட்மெண்ட்
//போனமுறை போல இம்முறையும் நான் ஷார்ஜாவிலருந்து கிளம்பிய பிறகு மழையாம்!! நான் காலடி வைக்கிற நேரமெல்லாம் மழை வருதுபோல!! கன்ஃபர்மா நான் நல்லவதான்!!///
//டிஸ்கி: ஏன் மழை பெய்கிறது, நல்லவங்க நாங்கெல்லாம் (ஜெய்லாணி, சென்ஷி, நாஞ்சிலார், ஹுஸைனனம்மா, நாஸியா ,மலர் எல்லாம் இருப்பதாலா?
இல்லை நீரோடை மலிக்கா கவிதை எழுதி எழுதி நீரோடையா ஒட விட்டுட்டாஙகளா?//
ஒரு வேளை நான் இருப்பதாலோ என்னவோ
நல்லது இன்னிக்கி நான் நீச்சலடிச்சிதான் ஆஃபீஸ் வந்தேன், ஷார்ஜா டூ துபாய், இருந்தாலும் இந்த மழை எப்போவாவது வருது, எனவே என் ஜாய்
//பாலைவனம் என்பதால் மழையே வராது என்று யாரும் டிரெயினேஜை பற்றி யோசிக்கல போல///
பெருமைய பாரேன் ,,. இவுகளுக்கு பிளான் பண்ணாததால தண்ணி போக ரெண்டு நாள் ஆகுமாம் .... நாங்கல்லாம் அருமையா பிளான் பண்னி டிரெயினேஜை கட்டியும் தண்ணி போக ஒரு வாரம் ஆகும்.
//டிஸ்கி: ஏன் மழை பெய்கிறது, நல்லவங்க நாங்கெல்லாம் (ஜெய்லாணி, சென்ஷி, நாஞ்சிலார், ஹுஸைனனம்மா, நாஸியா ,மலர் எல்லாம் இருப்பதாலா?
இல்லை நீரோடை மலிக்கா கவிதை எழுதி எழுதி நீரோடையா ஒட விட்டுட்டாஙகளா?
//
ஆண்டவா இந்த கொடுமையெல்லாம் கேட்கவா என்ன இன்னும் வுயிரோட வச்சுருக்க, எவளவு செலவானாலும் பரவால்ல என்னைய கொன்று
ஜலீலாக்கா உங்க ஊர்ல மழை பெய்யுதாக்கும் ஹ்...ம்ம்ம்(பெருமூச்சுதேன்) எங்க ஊர்ல மழையைக் கண்டு ஒருமாசமாச்சு :-(.
யாரோ வந்துட்டுப் போனா அந்த இடத்துல மழை பெய்யுதுன்னு சொன்னாங்களே! அவங்களைக் கொஞ்சம் இங்கிட்டு அனுப்பி வைங்கோ!
ஹஹஹ. .பின்னிட்டீங்கக்கோவ்...
//அனல் காற்று பிரியாணி ஆக்கி வெளியில் கொண்டு வந்து வைத்தால் தானே தம் ஆகிடும்.//
இங்கயும் நீங்க பிரியாணியை மறக்கலைப்பாருங்க...பழக்கதோஷம்..
அது எனக்குப்பிடிச்சிருக்கு...:)
ஷார்ஜா கொலைவெறிப்படைக்கு குளிப்பதற்கு இது ஓரு ஓர் அறிய வாய்ப்பு...
// யாரோ வந்துட்டுப் போனா அந்த இடத்துல மழை பெய்யுதுன்னு சொன்னாங்களே! அவங்களைக் கொஞ்சம் இங்கிட்டு அனுப்பி வைங்கோ!//
@கவி....
ஹீஹீ எதுக்குங்க சுத்தி வளைச்சுகிட்டு டேய் நாஞ்சில் ஒருதடவை வந்துட்டுப்போடான்னா வந்துட்டுப்போறேன்... டிக்கெட்லாம் உங்கசெலவு... :)
//நல்லது இன்னிக்கி நான் நீச்சலடிச்சிதான் ஆஃபீஸ் வந்தேன், ஷார்ஜா டூ துபாய், இருந்தாலும் இந்த மழை எப்போவாவது வருது, எனவே என் ஜாய்//
அது என்னவோ சரிதான்
ஓ அபு அஃப்ஸர் உங்களை மறந்துட்டேன் குரூப்பா தான் துபாய் ஜார்ஜா எல்லாம் சேர்ந்துக்கலாம்.
ஐய்ய இந்த மங்குனி அமைச்சருக்கு இருக்கிற லொள்ள பாரு
கவி சிவா உங்க ஊர் காரருன்னு நாஞ்சிலாருக்கு மட்டும் டிக்கெட்டா அனுப்பாதீங்க ( நாங்க நாங்க இங்க ஒரு குரூப்ப்ப்ப்ப்பா இருக்கேமுல்லா, எல்லாருக்கும் சேர்த்து டிக்கட்ட போடுங்க).
//ஏன் மழை பெய்கிறது, நல்லவங்க நாங்கெல்லாம் (ஜெய்லாணி, சென்ஷி, நாஞ்சிலார், ஹுஸைனனம்மா, நாஸியா ,மலர் எல்லாம் இருப்பதாலா?//
என்னைய ஆட்டத்துல சேர்க்காம விட்டுட்டீங்களே...
nice post, thanks for sharing but it takes lot time to get your texts, that table cloth takes long time to go away
கத்தார்லுயும் மழை. அப்போ நானும் நல்லவன் தான் போல இருக்கு. :))))))
// ☀நான் ஆதவன்☀ said...
//ஏன் மழை பெய்கிறது, நல்லவங்க நாங்கெல்லாம் (ஜெய்லாணி, சென்ஷி, நாஞ்சிலார், ஹுஸைனனம்மா, நாஸியா ,மலர் எல்லாம் இருப்பதாலா?//
என்னைய ஆட்டத்துல சேர்க்காம விட்டுட்டீங்களே...//
ஆதவன், அது நல்லவங்க லிஸ்டாம். உங்கள சேர்க்க முடியாதம். :)))))
அக்கா கொஞ்சம் இந்தியா பக்கம் வந்திட்டு போங்க, இங்க மழையே இல்லை :))
Fruit preservation பற்றி எழுதுங்களேன். அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களைக் கொண்டு பழரசங்களை தயாரிப்பது எப்படி என்று எழுதுங்கள்.
//ஏன் மழை பெய்கிறது, நல்லவங்க நாங்கெல்லாம் (ஜெய்லாணி, சென்ஷி, நாஞ்சிலார், ஹுஸைனனம்மா, நாஸியா ,மலர் எல்லாம் இருப்பதாலா?//
என்னைய ஆட்டத்துல சேர்க்காம விட்டுட்டீங்களே...
உங்கள் முதல் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.
ஆதவா இப்படி எல்லாம் அழப்படாது, இருங்க இருஙக் இப்பதானே வந்து இருக்கீங்க இனிமே மழைபெய்தா சேர்த்துக்குறோம்.
யாஹூ ராம்ஜி நிறைய போஸ்ட் இருப்பதால் நேரம் எடுக்கிறது, ஓப்பன் செய்துட்டுகொஞ்சம் நேரம் கழித்து சரியாகிடும்
கத்தார்லுயும் மழை. அப்போ நானும் நல்லவன் தான் போல இருக்கு. :))))))
ஹி ஹி வாஙக் ஷாகுல் அப்ப உங்களை சேர்த்துக்குறோம் எங்க லிஸ்ட்டில்.
வருகைக்கு மிக்க நன்றி
சைவ கொத்து பரோட்டா சீக்கிரம் டிக்கட்ட போடுங்கள்
//Fruit preservation பற்றி எழுதுங்களேன். அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களைக் கொண்டு பழரசங்களை தயாரிப்பது எப்படி என்று எழுதுங்கள்//
ஞானசேகரன் வருகைக்கு மிக்க நன்றி கண்டிப்பாக போடுகீறேன்.
என்ன ஜலீ கானோமே நினைச்சேன். இப்ப தான் புரியுது. மழையை பார்த்ததும் இவ்வளவு சந்தோஷம்.ம்.. அப்ப ஸ்னோ பார்த்தா எப்படி இருக்கும் சொல்லுங்க.
இங்கு குளிரில் நாங்க எப்படா வெயில் வரும் என்று காத்திருக்கோம்.நாங்க நல்ல நல்ல நல்லவங்க நிறய்ய இருக்கிறோம் அதனால இங்கு ஸ்னோ+மழை அய்யா ஜாலி எங்களுக்கு டபுள் நல்லது தெரியுமா? என்னா எங்களை குருப்பில் சேர்க்கவில்லையா இத பாருங்க நாங்க தான் எப்பவுமே டாப் இன் தி வோல்ட். இப்ப நிங்க நல்லா சூட சூட சூப் + பக்கோடா+இஞ்ஞி டீ. குடிச்சிட்டு வந்து இத படியுங்கோ.
நேற்று இங்கே லேசா தூறல்தான் இருந்தது.
நேற்று மழை பெய்தது கடும்வெயிலை வரவேற்கத்தான்.
இனிமே ஒரு 7 மாதத்துக்கு வெயிலை அனுபவிக்க வேண்டியதுதான்; என்ன செய்ய?...
விஜி நீங்கள் சொல்லும் போது இஞ்சி டீயுடன் தான் படிக்கிறேன். பகோடா மதியமே சாப்பிட்டாச்சு
//டிஸ்கி: ஏன் மழை பெய்கிறது, நல்லவங்க நாங்கெல்லாம் (ஜெய்லாணி, சென்ஷி, நாஞ்சிலார், ஹுஸைனனம்மா, நாஸியா ,மலர் எல்லாம் இருப்பதாலா?
இல்லை நீரோடை மலிக்கா கவிதை எழுதி எழுதி நீரோடையா ஒட விட்டுட்டாஙகளா?
//
அச்சோ கவிதை கவிதையா கொட்டிய இடங்களில்லெல்லாம் இப்போ மழை மழையா கொட்டுது.
என்ன நல்லவன்னு சொல்லிட்டாங்க ஜலிலாக்கா.
மழையே பெரும் மழையே
நீ வந்தினால் எனக்கு புகழே!
வாழ்க அபு அஃப்ஷர்..
//ஆண்டவா இந்த கொடுமையெல்லாம் கேட்கவா என்ன இன்னும் வுயிரோட வச்சுருக்க, எவளவு செலவானாலும் பரவால்ல என்னைய கொன்று//
மங்குனியார் பாவம் காதுல புகை புகையா வருதுபோல,,,,,,,,,,,,,
வாழ்க ஜலீக்காக்கா.
நல்லவங்க கூட்டனிகூடி கூட்டனியை ஒரு கலக்கு கலக்கிருவோம்..
நீங்கதான் தலைவி ஓகே..
//என்னைய ஆட்டத்துல சேர்க்காம விட்டுட்டீங்களே..//
எலே ஆதவா...இதெல்லாம் கேட்டுவாங்கக்கூடாது. ஜலீலாக்கா ரசிகர் மன்றத்துல உறுப்பினரா சேரு... அப்புறம் யோசிக்கலாம்....
//அன்புடன் மலிக்கா said...
வாழ்க ஜலீக்காக்கா.
நல்லவங்க கூட்டனிகூடி கூட்டனியை ஒரு கலக்கு கலக்கிருவோம்..
நீங்கதான் தலைவி ஓகே//
சூப்பர்... அப்ப நான் தான் கொ.ப.செ.
மலிக்கா இதேன்னா இதுக்கு தான் மைக்க பிடிக்க மாட்டேன் என்று சொன்னேன், உடனே மேடையிலே எற்றிட்டீங்களே/இதெல்லாம் எனக்கு பிடிக்காது.. ஹி ஹி
நானே நாஞ்சிலார போடலாமான்னு பார்க்கிறேன், அங்க தான் கூட்டம் நிறைய சேரும்
விஜி இது ஷேக்குகள் கூட்டனி, ஒபாமாவிற்கு இடம் இல்லை,
unga blog romba nalla iruku
High Definition Youtube Video Download Free
visit 10 to 15 Website and EARN 5$
CineMa Tickets Booking Online
ஆஹா...அங்கயும்...அதே கொடுமையா...
இந்த பதிவு விகடன் குட் ப்ளாக்கில் வந்திருக்கிறது.
வாழ்த்துக்கள்
ஹென்றி மிக்க நன்றி
ஆஹா...அங்கயும்...அதே கொடுமையா...
சீமான் கனி அங்கேயுமா என்றால் அப்ப அங்கேயுமா?
இந்த பதிவு விகடன் குட் ப்ளாக்கில் வந்திருக்கிறது.
வாழ்த்துக்கள்
கண்ணா தெரிய படுத்தியதற்கு மிக்க நன்றி.ரொம்ப சந்தோஷம்.
பாலைவனத்தில் மழையா? சகோதரி பிள்ளைகளுடன் படகு சவாரி போனிறீர்களா? கோலாம்பூரில் இப்பொழுது எல்லாம் தினசரி இடியுடன் கூடிய மழைதான்.ஒரு மணி நேரம் தொடர்ந்து பொய்தால வெள்ளம் தான். ஆனால் சில மணி நேரத்தில் மழையா என்று கேட்க தோன்றும்.
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்
// ஆனால் இப்ப அடிக்கிற பேய் காத்தும், மண்ணு காத்தும் என்ன பார்த்து தான் பயந்து ஓடும்... //
அமாம்மா ஜலில்லான்னா சும்மாவா? இப்படி மழை பெய்தா, உங்க இரங்கமணிக்குக் கொண்டாட்டம்தானே. உங்க அருமையான ஸ்மையலைச் சாப்பிட்டுக் குறைட்டை விடலாம் அல்லவா?. இயற்கை அதன் கடமையைச் செய்யும் போது நாமும் அதனை ஒட்டி நம் கடமையைச் செய்வேம். நல்ல பதிவு. பாலோயர் போட்டுவிட்டேன். இனி ஒழுங்கா பாலோ பண்ணிக்கின்றேன்.
இத்தனை நாள் இதனைக் கவனிக்க வில்லை என்பது கொஞ்சம் வெட்கமாக உள்ளது. சரி சாரி.
//சில சமயம் துபாயில் பேய் காத்து, ஐஸ் கட்டி மழையும் கூட பெய்யும்.
இப்படி தான் துபாய் வந்த புதிதில் ஒரு ஊரு வெளிய ஒரு ஒரு வீடு என்பது போல் ஒரு இடத்தில் வீடு, காலை ஆபிஸ் போனால் இரவு தான் வருவர் ஆத்துகாரர், வந்து ஒரு மாதத்தில் மண்ணு காத்து உஸ்ஸ்ஸ்ஸ் உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ன்னு அடிக்குது மண்ணெல்லாம் ஜன்னல் வழியா வருது ஒரே பயம் ( கண்ணாடி கதவு தட தடன்னு ஆடுது) நெஜமாவே பேய் தான் தட்டுதா எல்லா கதவையும் மூடிட்டு டிவிய ஜோரா வைத்து கொண்டு ஒரு நாள் முழுவது பயந்து கொண்டு இருந்தேன். கதவ திறந்ததும் ஹால் அங்கேயே உட்கார்ந்து கொண்டு இருந்தேன். //
ஹா..ஹா...ஹா...ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல.... ஜலீலாவோட காமெடி அவ்ளோ வழிஞ்சு ஓடுது... ஜார்ஜாவுல பெஞ்ச மழைய விட...
//ஏன் மழை பெய்கிறது, நல்லவங்க நாங்கெல்லாம் (ஜெய்லாணி, கோபிசென்ஷி, நாஞ்சிலார், ஹுஸைனனம்மா, நாஸியா ,மலர் எல்லாம் இருப்பதாலா?
இல்லை நீரோடை மலிக்கா கவிதை எழுதி எழுதி நீரோடையா ஒட விட்டுட்டாஙகளா?//
ஆஹா... இந்த ஒலகம் இன்னுமா நம்மள நம்பிட்டு இருக்கு??!!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......
பதிவு படு சூப்பர்.... அடிச்சு பெய்த மழையை விட அடிச்சு ஆடிய காமெடி பதிவு பூராவும்...
அக்கா, சாரி லேட்டா வந்துட்டேன், அதுக்குள்ளே நம்மள வச்சு இப்படி கும்மியடிச்சிருக்கீங்க எல்லாரும்!!
நான் வந்தா நல்ல மழைதான் பெய்யும், இப்படி கஷ்டப்படுத்துற மழை பெய்யாது. பிரதாப் அல்லது ஆதவன் ஷார்ஜா போயிட்டு வந்திருப்பாங்க, அதான் இப்படி பேய்மழை!!
அபுதாபியிலயும்தான் மழை பேஞ்சுது, ஆனாலும் துபாய், ஷார்ஜா மாதிரி நாங்க கஷ்டப்படவா செய்றோம் ? ஏன்னா நான் இங்கே இருக்கேன்!! ;-))))
//ஜார்ஜா// - வடிவேலு வாரிசு அல்லது பெண் வடிவேலுன்னு பட்டம்கொடுத்துடலாம் போல!!
குட் பிளாக்ல வந்ததுக்கு வாழ்த்துக்கள் அக்கா!!
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா