கலோஞ்சி என்கிற கருஞ்சீரகம் சர்க்கரை வியாதி, பிரெஷர் எல்லாத்துக்கும் நல்லது.கருஞ்சீரகத்தை இரவு தண்ணீரில் ஊறவைத்து காலை வெரும் வயிற்றில் அந்த தண்ணீரை குடிக்கவும்.
வெந்தயம் இரவு ஊறவைத்து காலையில் அதை வடித்து அந்த தண்ணீரை காலையில் குடிக்கவும். இல்லை அதை நல்ல கொதிக்க வைத்து வடிகட்டியும் குடிக்கலாம்/
லோ பேட் மோரில் கருவேப்பிலை, இஞ்சி, வெந்தயப்பொடி கலந்து அரைத்து 11 மணி வாக்கில் குடிக்கலாம், இதே வெயிட்டை குறைக்கவும் உதவும். வெயிலின் தாகத்தையும் தீர்க்கும்.
தண்ணீர் எவ்வளவு குடிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு வியாதிகளில் இருந்து விடுதலை பெறலாம்.
தண்ணீர் பயன்படுத்துவது துவைக்க, வீடுகழுவ, குளிக்க, சிக்கனமாக பயன்படுத்து நல்லது.
தண்ணீர் நிறைய குடிக்கலாம் என்றால் வெரும் தண்ணீர் நிறைய குடித்தால்சிலருக்கு கொமட்டும்.
அதை ஜூஸ், மோர் , சூப், இளநீர்,தர்பூஸ் என்று குடிக்கலாம்
காய்கள்(புடலங்காய்,கத்திரிக்காய், வெண்டைக்காய்,பீன்ஸ்,கோவைக்காய் அவரைக்காய் ,இது போல் பச்சை நிறமுள்ள நீர் சத்து மிகுந்த காய் களை பொரியல், கூட்டு குழம்பாக வைத்து சாப்பிடலாம்.
வேப்பம்பூ கிடைத்தால் அதை நெயில் வதக்கி சாதம் சாப்பிடும் முன் ஒரு ஸ்பூன் சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம்.
பிராமண ஆத்தில் பிரசத்தி பெற்ற பாகற்காய் பிட்லையை இங்கு சென்று பார்த்து சமைக்கவும். கசப்பில்லாமல் இருக்கும்
பாகற்காயை கசப்பில்லாமல் சமைக்க என் ஸ்வீட் & சோர் பாகற்காயை செய்து பாருங்கள்.இன்னும் நிறைய இருக்கு பிறகு போடுகிறேன்.
தண்ணீர் சிக்கனம் என்றது குடிக்கும் தண்ணீரின் அளவை குறைக்க வேண்டாம், எவ்வள்வு வேண்டுமானாலும் குடிக்கலாம்.
அதுக்குன்னு ஜலீலா அக்காதான் சொன்னாங்கன்னு ராத்திரில தினம் நிறைய போட்ற க்கூடாது.
உட்கொள்ளும் தண்ணீரின் அளவை கூட்டி, வெளியில் பயன்படுத்தும் தண்ணீரின் அளவை (குளிக்க, புழங்க) குறைத்து கொள்ளவும்
தண்ணீர் எவ்வளவு குடிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு வியாதிகளில் இருந்து விடுதலை பெறலாம்.தண்ணீர் பயன்படுத்துவது துவைக்க, வீடுகழுவ, குளிக்க, சிக்கனமாக பயன்படுத்து நல்லது.
குழந்தைகள் பாத்ரூமில் போனால் பின்னாடியே கவனிகக்னும் அப்படியே குழாயை திறந்துவிட்டுட்டு நிற்பார்கள். குழந்தையிலிருந்தே சிக்கணமாய் பயன் படுத்த பழக்கிவிட்டால் பிற்காலத்தில் நல்லது.
தண்ணீர் எவ்வளவு குடிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு வியாதிகளில் இருந்து விடுதலை பெறலாம்.
தண்ணீர் பயன்படுத்துவது துவைக்க, வீடுகழுவ, குளிக்க, சிக்கனமாக பயன்படுத்து நல்லது.
உலக தண்ணீர் தினம் பற்றி இங்கு சென்று அறிந்து கொள்ளலாம்.
Tweet | ||||||
31 கருத்துகள்:
ஒரே நேரத்தில் இரண்டு.
தண்ணீர் மற்றும் சர்க்கரை நோய்க்கு மருந்து.
நல்லது.
பாகற்காய் ஹைதை ஸ்டைல்ல ஃபிரை போடுங்களேன் - நேயர் விருப்பம்.
நீரிழிவு நோய் பிரச்சினைக்கும் நீர் அழிவு பிரச்சினைக்கும் டிப்ஸ். சூப்பர், அக்கா.
சகோ.ஜமால் நன்றி,
பாகற்காயினா ரொம்ப பிடிக்கும் இல்ல்லயா> போட்டுட்டா போச்சு. உடனே செய்ய தான் நேரமில்லை
அடடா அட்டகாசம், தினமும் பல நல்ல தகவல்கள் தந்து கொண்டிருக்கின்றீர்கள், மிக்க மகிழ்ச்சி.
நல்ல பதிவு ஜலீலா
தமிழ்குடும்பம்.காம்
அட்ரா சக்கை!! நீங்களும் டூ இன் ஒன் போட ஆரம்பிச்சாச்சா!!!வாழ்த்துக்கள். பட்டைய கிளப்புங்க!!!!!!!!!!!!!
Highly informative post' keep up ur great work, buddy:)
சர்க்கரை நோயிக்கு புளியங்காய் விதையை பொடியாக்கி சாப்பிட்டால் நல்லதாமே. எதாச்சும் தெரியுமா?
சர்க்கரை நோய் பற்றி காலம் சென்ற எங்கள் உமர்தம்பி மாமா அவர்கள் எழுதிய சுவாரஸ்யாமான கட்டுரையை இங்கே பார்க்கலாம்.
http://thaj77deen.blogspot.com/2008/05/blog-post.html
ஆஹா...இனி நானும் 2-1 பதிவு ஆரம்பித்துவிடவேண்டியதுதான்...பதிவு அருமை சகோதரி...வாழ்கவளமுடன்,வேலன்.
//நீரிழிவு நோய் பிரச்சினைக்கும் நீர் அழிவு பிரச்சினைக்கும் டிப்ஸ். சூப்பர், அக்கா//
சித்ரா நன்றி.
/அடடா அட்டகாசம், தினமும் பல நல்ல தகவல்கள் தந்து கொண்டிருக்கின்றீர்கள், மிக்க மகிழ்ச்சி.//
வாங்க ஷபி மிக்க நன்றி
நன்றி தமிழ்குடும்பம்.
வருகைக்கு மிக்க நன்றி
ஜெய்லானி ஆமாம் உங்க கிட்ட கத்து கொண்டது தான்.
இது 2 இன் 1 , இல்லை 4 இன் 1
இதில் நீரிழிவுக்கு என் டிப்ஸ், தண்ணீர் சேமிப்புக்கு,என் அருசுவை குறிப்பு, தமிழ் குடும்பம் நியுஸ்..
தொடர் வருகைக்கு நன்றி
நன்றி மலர் காந்தி
//சர்க்கரை நோயிக்கு புளியங்காய் விதையை பொடியாக்கி சாப்பிட்டால் நல்லதாமே. எதாச்சும் தெரியுமா?
//
தாஜுதீன் இதை பற்றி எனக்கு தெரியல.
உமர் வாப்பா பதிவை படிக்கிறேன்
வேலன் சார் நீங்க எல்லாம் பதிவு போடுவதில் புலி .
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
ரெண்டுமே நல்ல விஷயம் மேடம்
அன்புள்ள ஜலீலா!
சர்க்கரை வியாதிக்கு மிகவும் பயனுள்ள குறிப்புகள்!
தொடர்ந்து எழுதுங்கள்!
வலைத்தளமும் அழகாக இருக்கிறது!
//அதுக்குன்னு ஜலீலா அக்காதான் சொன்னாங்கன்னு ராத்திரில தினம் நிறைய போட்ற க்கூடாது.//
எதை அக்கா போடக்கூடாது? என்ன மாதிரி அப்பாவிகளுக்கும் புரியிற மாதிரி தெளிவாச் சொல்லுங்கோக்கா!! ;-)))
ஒரே கல்லுல இரண்டு மாங்காய் அடிச்ச மாதிரி, இரு விஷயங்கள், நன்றி அக்கா.
சண்டேன்னா ரெண்டு!
நல்லாயிருக்குங்க.
டூயின் ஒன் சூப்பர் அசத்துங்கக்கா
எதாயிருந்தாலும் அசரமாட்டோமுல்ல
ஜலீலா ஒரு இடுகையில் இத்தனை தகவலா?பாராட்டுக்கள்.
பாகற்காய் டிப்ஸ் அருமை!!
பாகற்காய்னாலே ஓடுவாங்க ஜுஸ் பண்ணிப் பார்க்கிறேன் ஜலிலா சொன்னாங்கன்னு
Thanks Jaleela akka. I am so glad to see that post too, You are a great person and I thought you and that web site were different...but like both the website Jaleela and blogger also very much. Have a great day.
அமைச்சரே மிக்க நன்றி
மனோ அக்கா வாங்க கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
ஹுஸைனாம்மா குசும்பு......
அதான் கீழே அக்பர் சொல்லிட்டாரு பாருங்க
சைவ கொத்து பரோட்டா மிக்க நன்றி
மேனகா, கருத்து தெரிவித்தமைக்கும் , அவார்டு கொடுத்தமைக்கும் மிக்க நன்றி.
நன்றி ஆசியா
தேனக்கா இந்த பாகற்காய் ஜூஸுக்கு ரொம்ப பவர் நல்ல கட்டு படுத்துமாம் மாமியார் சொன்னாங்க.
விகி . தொடர்ந்து கருத்து தெரிவிப்பதற்கு மிக்க நன்றி
ஒரே கல்லில் பல மாங்காய்களை (பாகற்காயும்) அடித்த ஜலீலா மேடம் அவர்களுக்கு ஸ்பெஷலாக பிராமணாள் ஆத்துல ரெடி பண்ணின “பாகற்காய் பிட்ளை” ஒரு குடுவை பார்செல்ல்ல்ல்ல்ல்....
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி கோபி,
பிரமண ஆத்து பிட்லையை பித்தன் சார் பதிவில் கிடைக்கும்.
நல்ல பதிவு, ஜலில்லா, தண்ணி எல்லாம் நான் இப்ப கொஞ்சமாத்தான் பயன்படுத்துகின்றேன். என் பாவற்க்காய் பிட்லை சொன்னதுக்கு மிக்க நன்றி.
// எவ்வள்வு வேண்டுமானாலும் குடிக்கலாம்.
அதுக்குன்னு ஜலீலா அக்காதான் சொன்னாங்கன்னு ராத்திரில தினம் நிறைய போட்ற க்கூடாது //
சரிங்க ஜலிலாக்கா, இனி கொஞ்சமா குடிக்கின்றேன். மிக்க நன்றி.
//அதுக்குன்னு ஜலீலா அக்காதான் சொன்னாங்கன்னு ராத்திரில தினம் நிறைய போட்ற க்கூடாது //
சரிங்க ஜலிலாக்கா, இனி கொஞ்சமா குடிக்கின்றேன். //
ரொம்ப லொள்ளு/
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா