Monday, October 26, 2009

கால் பாயா மிளகு சால்னா Paya Salna

//இது அடிக்கடி முட்டு வலி உள்ளவர்கள் மாதம் இருமுறை செய்து சாப்பிடலாம். பலம் பெறும்.குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும் போது கால்கள் பலம் பெற இதில் சூப் வைத்து கொடுக்கலாம், குழந்தைகளுக்கு தகுந்தமாதிரி காரம் குறைத்து நெய்யில் கூட தாளிகலாம்.செய்து முடிந்து வடிகட்டி கொடுக்கவும்//

வேக‌ வைக்க‌


ஆட்டு கால் = ஒரு செட் முழுவ‌தும்

த‌க்காளி = 3

வெங்காய‌ம் = 3

இஞ்சி பூண்டு பேஸ்ட் = 3 தேக்க‌ர‌ண்டி

ப‌ச்ச‌ மிளகாய் = 2

மிள‌கு தூள் = 2+1 தேக்க‌ர‌ண்டி

த‌னியா தூள் = ஒன்ன‌றை மேசை க‌ர‌ண்டி

ம‌ஞ்ச‌ள் தூள் = அரை தேக்க‌ர‌ண்டி

உப்பு தேவைக்கு

கொத்து ம‌ல்லி த‌ழை = சிறிது

அரைத்து கொள்ள‌


தேங்காய் ப‌வுட‌ர் = முன்று தேக்க‌ர‌ண்டி
முந்திரி = எட்டு
பாத‌ம் = முன்று
க‌ச‌க‌சா = ஒரு தேக்க‌ர‌ண்டி


தாளிக்க‌


எண்ணை = ஒரு தேக்க‌ர‌ண்டி
டால்டா (அ) ப‌ட்ட‌ர் = கால்
ப‌ட்டை = இர‌ண்டு அங்குல‌ துண்டு
ஏல‌ம் = 2
கிராம்பு = 2
சின்ன‌ வெங்காய‌ம் = 5
இஞ்சி பூண்டு பேஸ்ட் = ஒரு தேக்க‌ர‌ண்டி
கொத்து ம‌ல்லி த‌ழை = சிறிது
புதினா = நான்கு இத‌ழ்


1.ஆட்டு காலை வினிகர் சேர்த்து நன்கு உறைத்து கழுவி வைக்கவும்.
2. அரைக்க கொடுத்துள்ளவைகளை அரைத்து வைக்கவும்
3. வேக வைக்க கொடுத்துள்ள பொருட்களை எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து நன்கு பிசைந்து பத்து நிமிடம் ஊறவைக்கவும்
4. அதில் கால் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக விடவும்.
கால் வேக ரொம்ப நேரம் எடுக்கும், குறைந்து அரைமணி நேரமாவது ஆகும்
5. வெந்ததும் அரைத்த கலவையை சேர்த்து கொதிக்க விடவும்

6. மற்றொரு அடுப்பில தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.
சுவையான ஆட்டுகால் மிளகு குழம்பு ரெடி.

குறிப்பு

1.காலில் கொழுப்பு சத்து அதிகம் இருக்கும் ஆகையால் எண்ணை கொஞ்சமாக போதும், இது அடிக்கடி முட்டு வலி உள்ளவரகள் மாதம் இருமுறை செய்து சாப்பிடலாம். பலம் பெறும்.


2.குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும் போது கால்கள் பலம் பெற இதில் சூப் வைத்து கொடுக்கலாம், குழந்தைகளுக்கு தகுந்தமாதிரி காரம் குறைத்து நெய்யில் கூட தாளிகலாம்.செய்து முடிந்து வடிகட்டி கொடுக்கவும்.


3.குளிர் காலங்களில் இது போல் மிளகு சேர்த்து செய்து சாப்பிடலாம். காரம் தேவை படுபவர்கள் இன்னும் கூட்டி கொள்ளலாம். இந்த ஆட்டு காலை குருமா முறையிலும் , சூப் போலவும் செய்யலாம்.


தேங்காய் ப‌வுட‌ருக்கு ப‌தில் தேங்காயும் அரைத்து ஊற்றலாம்.

இதற்கு கோதுமை ரொட்டி, இடியாப்பம் சூப்பரா இருக்கும், மற்றபடி ஆப்பம், இட்லி, பரோட்டா , சபபத்தி வகைகளும் பொருந்தும்.

26 கருத்துகள்:

GEETHA ACHAL said...

சூப்பர்ப்...படங்கள் அருமை...

ஸாதிகா said...

ஜலி,இப்படி வகைவகையாக செய்து அசத்துகின்றீர்களே?

நாஸியா said...

அவுங்களுக்கு ரொம்ப பிடிச்சது.. எனக்கு செய்ய தெரியாது, சரி செய்ய தோணும்போது மாமிகிட்ட போன் பண்ணி கேட்டுக்கலாம்னு நினைச்சேன்.. பார்த்தா நம்ம ஆல் இன் ஆல் ஜலீலா லாத்தா செஞ்சு காமிச்சிட்டாங்க.. :)

JAZAKALLAHU KHAIR

Anonymous said...

அருமையான விளக்கம். மிக்க நன்றி.

S.A. நவாஸுதீன் said...

தலைப்புக்கு கீழே இப்படி படத்த போட்டு வச்சா எப்படி படிக்க முடியும். படத்தைப் பார்த்தவுடனே பசி கண்ணை மறைக்குது.

பரோட்டா, பாயா - எல்லா புதனும் எங்களோட கிச்சன்ல உள்ள லிஸ்ட். இந்த போட்டோவ பார்த்துட்டு அதை இனிமே எப்படி நேர்ல பார்க்கிறது.

இத ப்ரிண்ட் எடுத்து மலையாளத்தில் ட்ரான்ஸ்லேட் பன்னி நம்ம சேட்டன்கிட்ட கொடுக்கனும். இல்லேன்னா அந்த ஆள் வைக்கிறதுதான் பாயான்னு பொய்யா வாழனும். மாளாது வாப்பா மாளாது.

SUFFIX said...

படத்தை பார்த்ததும் பசி வயித்த கிள்ளுதே, பாய் கடைக்கு போன் போட்டு ஒரு டஜன் காலுக்கு இப்பவே ரிசர்வு பண்ணி வைக்கனும்!! இல்லாட்டி வேற யாராவது கொத்திக்கிட்டு போய்டுவாங்க, இது மாதிரியெல்லாம் போட்டோவ போட்டு எங்கள் சோதிக்காதிங்க ஆமா.

Jaleela Kamal said...

ஆஹா எல்லாத்துக்கும் பசிய கிளப்பி விட்டுடுச்சா இந்த ரெசிபி, இதுக்கே இப்படி சொன்னா எப்படி இன்னும் நிறைய இருக்கே இது போல் ...

Jaleela Kamal said...

நன்றி
கீதா

Jaleela Kamal said...

நன்றி ஸாதிகா அக்கா

Jaleela Kamal said...

நாஸியா ஆம் எல்லோருக்கும் ரொம்ப பிடித்தது. ஆனால் அடி பிடிக்காமல் வேக வைக்கனும். செய்து பார்த்து சொல்லுங்கள்.

Jaleela Kamal said...

அனானி , பெயரை சொல்லி இருந்தா நல்ல இருந்திருக்கும், வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.

Jaleela Kamal said...

நவாஸ் அது என்ன நிறைய இடத்தில் கேள்வி பட்டு இருக்கேன், புதன் ஆனா பாயா பரோட்டோ..

இது செய்வது ரொம்ப சுலபம், மிளகு மசாலா பிடிகாதவர்கள் குருமா போலும் செய்யலாம்.

மலையாளிகள் அவர்கள் மசலா வேறு என்று நினைக்கிறேன்.

கரம் மசாலா, சீரகதூள் சோம்பு தூள் சேர்ப்பார்கள்.

Jaleela Kamal said...

ஷ‌பிக்ஸ் பாய் கடைக்கு
உடனே சொல்லி வையுங்கள்,
ஆகா எல்லாருக்கும் பசிய கிளப்பி விட்டுருச்சா இந்த போட்டோவை பார்த்ததும், எனக்கே மறுபடி உடனே செய்து சாப்பிடனும் போல் இருக்கு,

இது கால் வலி மூட்டு வலி உள்ளார்களுக்கு , பிள்ளை பெற்றவர்களுக்கெல்லாம். உடம்பு டல்லாக இருந்தால் அதுக்க்கெல்லாம் ரொம்ப நல்லது.

Shama Nagarajan said...

nice blog..yummy recipes.....lovely chalna...please do participate in my first cooked food event..check my blog for details

Menaga Sathia said...

அய்யோஓஓஓ அக்கா ஆட்டுக்காலை ஞாபகப்படுத்திட்டீங்களே.இங்க விக்கிற ஆட்டுக்கால் மனுஷன் கால் மாதிரி குண்டா இருக்கு.அதை பார்த்தாலே ஆசையே போய்விடுகிறது.ரொம்ப சூப்பரா இருக்கு பாயா...

பித்தனின் வாக்கு said...

நான் சைவம். ஆனா படங்களுடன் பதிவு அருமை.

Preeti Kashyap said...

Nice picture and recipe(had to get it translated).

Jaleela Kamal said...

ரொம்ப நன்றி பித்தன் சார், வெஜ் சாப்பிடும் நீங்கள் வந்து நான் வெஜ் குறிப்பை பாராட்டியது ரொம்ப சந்தோஷம்.

Jaleela Kamal said...

Thankyou Preeti

Jaleela Kamal said...

ஷாமா நடராஜன் வருகைக்கும், கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.

Jaleela Kamal said...

மேனகா கால் ரொம்ப ஹார்டா இருந்தால் தனியா உப்பு , இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நன்கு ஒரு மணி நேரம் வேகவிடனும் பிறகு செய்யும் முறை படி செய்யனும்.

பாத்திமா ஜொஹ்ரா said...

ரொம்ப அருமை.ஆட்டுக்கால் பாயா சாப்பிட்டு நாளாச்சு,ஞாபகப்படுத்திட்டீங்க.நன்றி அக்கா

Jaleela Kamal said...

பாத்திமா எல்லோருக்கும் பிடித்த சால்னா முடிந்த போது செய்து பாருங்கள்

SANKAR PUNITHAM (MENAGA SISTER) said...

பாக்கும் போதே பசிக்குதே.சமைத்து சொன்ன விதம் சூப்பர்.படங்கள் அருமை...Parka romba nalla iruku, yummy.... I WANT PAROTA RECIPE

Jaleela Kamal said...

சங்கர் புனிதம், நீங்க மேனகா தங்கையா ரொம்ப சந்தோஷம்.

உங்கள் பாராட்டுக்கும், வருகைக்கும் மிக்க நன்றி

பரோட்டா தானே போட்டுட்டா போச்சு, விளக்கமாவே படத்துடன் கொடுக்கிறேன்.

கொஞ்சம் டைம் எடுக்கும்.

SANKAR PUNITHAM said...

I AM MENAGA SATHIA'S ELDER SISTER ( AKKA ) THANK YOU VERY MUCH FOR YOUR COMMENTS

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா