தேவையான பொருட்கள்
முட்டை - 6
உப்பு தூள் முக்கால் தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி
மிளகு தூள் -ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணை - பொரிக்க தேவையான அளவு
பட்டர் (அ) டால்டா - அரை தேக்கரண்டி
செய்முறை
1.முட்டையை கழுவி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அரை தேக்கரண்டி உப்பு போட்டு 10 நிமிடம் வேகவைத்து கொள்ளவும்.
2. மசாலாக்களை சிறிது தண்ணீர் தெளித்து கலக்கி கொள்ளவேன்டும். முட்டையை வெந்ததும் குளிர்ந்த தண்ணீர்க்கு மாற்றி மெதுவாக அவசர படாமல் பிரித்தெடுக்கவும்.
3. இரண்டாக கட் பண்ணி மசாலாக்களை இரு புறமும் தடவவும்.
4. ஐந்து நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
5. ஒரு நான் ஸ்டிக் தவ்வாவில் எண்ணை ஊற்றி தீயை குறைத்து விட்டு எல்லா முட்டைகளையும் போட்டு முன்று நிமிடம் மொருக விட வேண்டும்.
6.எல்லா முட்டைகளையும் திருப்பி பொட்டு மறுபடி வேக விட வேண்டும்.திருப்பியதும் வெடிக்க ஆரம்பிக்கும்.
7. தீயை குறைத்து முடி போட்டு முன்று நிமிடம் பொரிய விட வேண்டும்.
8.முடியை திரந்து மறுபடி ஒரு முரை திருப்பி போட்டு ஒரு நிமிடம் பொரிய விட்டு எடுத்து விட வேண்டும்.
சுவையான பாயில்ட் முட்டை பிரை தயார்.
குறிப்பு
இது ஒரு நல்ல கார சாரமான முட்டை பிரை.
சில பேருக்கு பாயில்ட் எக் பிடிக்காது அப்போது அதை இப்படி செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
குழந்தைகளுக்கு கொடுக்கும் போது வெரும் மிளகு மட்டும்சேர்த்து நல்ல நெய்யில் பொரித்து கொடுக்கவும்.பொரித்து முடித்ததும் அந்த மசாலா எண்ணை மிகவும் சுவையாக இருக்கும்.
அப்படியே சாதம் போட்டு பிறட்டி சாப்பிடலாம்.
எண்ணை ஆலிவ் ஆயில் (அ) நல்லெண்ணையும் பயன் படுத்தலாம்.
இது தயிர்சாதம், எல்லா வகையான் கட்டு சோறுகள், ரசம் சாதம், பருப்பு சாதம் அனைத்திற்கும் பொருந்தும்.
மாலை நேரம் பசி எடுத்தால் கூட குளிர் காலத்தில் சாப்பிட சுவையாக இருக்கும்.
Tweet | ||||||
23 கருத்துகள்:
Yummy yummy post for the tummy..
சூப்பர் எக் பிரை
பார்க்கவே அழகாக இருக்கின்றது ஜலீலா.அழகான பிரஷண்டேஷன்.என்னைப் பொறுத்தவரை நீங்கள் ஒருஆச்சர்யமான மனுஷி,ஆஃபீஸும் சென்று வந்து,வீட்டையும் கவனித்து,ஏனைய தளங்களுக்கும் பதிவு செய்வது மில்லாமல்,உங்கள் பிளாக்கையும் அழகுற சிறாப்பாக கொண்டு செல்லும் உங்கள் பாங்கு..மாஷா அல்லாஹ்.
ரொம்ப எளிமையான செய்முறை விளக்கம். பார்க்கவே சூப்பரா இருக்கே.
எங்க ஊர் பக்கம் அமுக்கு முட்டை என்று செய்வார்கள். (முழு முட்டையில்)குச்சி எல்லாம் சொருகி, அதுவும் கட்டுச்சோற்றுடன் ரொம்ப நல்லா இருக்கும். பெரும்பாலும் குடும்பத்தோடு இரயில் பயணங்களின் போது இதுதான் கொண்டு செல்வது வழக்கம்
நானும் அடிக்கடி செய்வேன்.அருமையாக உள்ளது.
டியர் சரஸ்வதி ம்ம் யம்மியா இருக்கா உடனே செய்து சாப்பிடுங்கள்.
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
கோகுல ராணி எப்படி இருக்கீங்க, மிக்க நன்றி.
ஸாதிகா அக்கா ரொம்ப புகழ்கிறீர்கள். எவ்வளவோ பெண்கள் மிகப்பெரிய சாதனைகள் செய்கிறார்கள், இதில் நான் செய்வது ரொம்ப கம்மி.
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி, இந்த முட்டை பிரை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
பிரியா, ஆமாம் இது அனைவரும் செய்வது தான் ஓவ்வொருத்தர் அவரவர் ஸ்டைலில் மசாலாக்கள் சேர்த்து செய்வார்கள். தவறாமல் வந்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
நவாஸ் நீங்கள் சொல்லும் முறையில் நான் செய்ததில்லை.
ஆமாம் கட்டு சோறுக்கு சூப்பரா இருக்கும்.
எனக்கு மிகவும் பிடித்தமானது இந்த முட்டை வறுவல்.அவித்த முட்டை எனக்கு பிடிக்காது..அதனால் இப்படி செய்து சாப்பிடுவேன்..சூப்பராயிருக்கு..
சூப்பர் சைடிஷ் (ஸ்ஸ்ஸ் ஆரும் என் தங்கமணிக்கு சொல்லக்கூடாது)...
சூப்பர் பகிர்வு நன்றி ஜலீலா.
//Mrs.Menagasathia said...
எனக்கு மிகவும் பிடித்தமானது இந்த முட்டை வறுவல்.அவித்த முட்டை எனக்கு பிடிக்காது..அதனால் இப்படி செய்து சாப்பிடுவேன்..சூப்பராயிருக்கு..//
ஆமாம்..Me too
//எண்ணை ஆலிவ் ஆயில் (அ) நல்லெண்ணையும் பயன் படுத்தலாம்.//
ஆலிவ ஆயில் நார்மலா உபயோகிக்கிறீர்களா? நாங்க சாலடுக்கு மட்டும் போடுவோம், ஆனா நல்ல ஆரோக்கியமானதுன்னு சொல்றாங்க, தங்கமணிய கன்வின்ஸ் பண்ணனும், அவங்க ஆலிவுக்கு மாற ரொம்பவே தயங்குறாங்க, டேஸ்ட் வித்யாசம் ஏதும் இருக்குமா?
எண்ணையில் பொரித்த உண்வை தவிர்க்க முடியாதவர்கள்
நல்லெண்ணை (அ) ஆலிவ் ஆயில் பயன் படுத்தலாம்
shafi நல்லெண்ணை உடம்புக்கு நல்லது அதே போல் ஆலிவ் ஆயிலும் ரொம்ப நல்லது எந்த உபாதையும் கிடையாது.
அடைக்கு எல்லாம் நல்ல எண்ணை ஊற்ற்றி சுட்டால் தான் சாப்பிட முடியும், அப்போ இந்த எண்னைகளை பயன் படுத்தி கொள்ளலாம்.
நான் எண்ணை (ஆலிவ், நல்லெண்ணை, கடுகு, பாதம் , விளக்கெண்னை, சாதா ஆயில் எல்லாமே வைத்து கொள்வது.
ரசத்துக்கு கூட ஆலிவ் ஆயில் போட்டு தாளிக்கலாம்
எனக்கும் தான் மேனகா வெரும் அவித்த முட்டை பிடிக்காது
ஒன்று நிறைய மிளகு தூள் தூவி சாப்பிடுவேன், அல்லது இந்த கள்ளு கடை முட்டை தான் ம்ம்ம் ம்ம்ம்ம் யம்மி எனக்கு ரொம்ப பிடிக்கும்.
காலை டிபனுக்கு கூட ஒன்று சாப்பிட்டு டீ குடிக்கலாம்
//சூப்பர் சைடிஷ் (ஸ்ஸ்ஸ் ஆரும் என் தங்கமணிக்கு சொல்லக்கூடாது)...//
வாங்க சிங்கக்குட்டி கருத்துக்கு நன்றி, ஏன் தங்கமணியிடம் சொல்ல கூடாது சொன்னா. நீங்கள் இரண்டு பேரும் சேர்த்து சாப்பிட்லாமே
முட்டை பிரை அருமை.எங்க ஊர்ல அமுக்கு முட்டை என்று சொல்வோம்.யம்மி யம்மி
ஓகோ இதுக்கு பேரு தான் அமுக்கு முட்டையா?
தொடர் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி பாத்திமா.
பார்க்கவே கலக்கலா இருக்கு! எனக்கு சாதரணமா அவிச்ச முட்டையே ரொம்ப பிடிக்கும், மாசலாவோட இன்னும் பிடிக்கும்!
வாங்க நாஸியா வருகைக்கும் , கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.
muttai fry miga arumai...
http://krithiskitchen.blogspot.com
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா