//ஹோட்டலில் முந்திரியை நெயில் வறுத்து பொடித்தோ அரைத்தோ போடுவதால் தான் கிரேவி ரொம்ப ருசியாக இருக்கிறது.
இதில் தயிர் சேர்த்துள்ளது, சிக்கன் சூடு என்று சாப்பிடாமல் இருப்பவர்கள் இதுபோல் தயாரித்தால் தாராளமாக சாப்பிடலாம்//
சிக்கன் = ஒரு கிலோ
அரைத்து கொள்ள
வருத்த முந்திரி = 50 கிராம்
வதக்கிய வெங்காயம் = ஒன்று பெரியது
மிளகு = ஒரு மேசை கரண்டி
காஞ்ச மிளகாய் = ஐந்து
சோம்பு = ஒன்னறை தேக்கரண்டி
முழு தனியா = ஒரு மேசை கரண்டி
பட்டை = ஒரு அங்குலம் அளவு
கிராம்பு = முன்று
ஏலம் = இரன்டு
தயிர் = 50 மில்லி + 350 மில்லி
தாளிக்க
********
எண்ணை = 50 மில்லி
கரம் மசாலா = அரை தேக்கரண்டி
செய்முறை
1. அரைக்க கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் அரைக்கவும். அரைத்து கடைசியாக தயிர் சேர்த்து அரைத்தால் மிக்சியில் ஏதும் ஒட்டாமல் வந்துவிடும்.
2. சிக்கனை நன்கு கழுவி அதில் உப்பு,மஞ்சள் தூள் தயிர் சேர்த்து பத்து நிமிடம் ஊறவைக்கவும். அடுத்து அரைத்த பொருட்களையும் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
3. பிறகு ஒரு வாயகன்ற வானலியில் எண்ணை + கரம் மசாலா சேர்த்து ஊறவைத்த சிக்கனை போட்டு அதிக தீயில் நன்கு கிளறி , பிறகு தீயை மிதமாக வைத்து நன்கு வேகவிட்டு கிரேவி பதம் வந்து எண்ணை தெளிந்து வரும் போது இரக்கவும்.
4. குக்கரில் செய்பவர்கள் குக்கரிலும் செய்யலாம். நன்கு கொதிக்க விட்டு இரண்டு மூன்று விசில் விட்டு இரக்கவும்.
5. சூப்பரனா சுவையான மொகலாய் சிக்கன் கிரேவி
Tweet | ||||||
15 கருத்துகள்:
பார்க்க ஹைஃபையா இருந்தாலும் ரொம்ப ஈசியான முறைதான். செய்து பார்த்துடுவோம்.
வெங்காயம்,தக்காளி இல்லாத க்ரேவி,செய்வதற்க்கு ரொம்ப ஈஸியா இருக்கும் போல...நன்றாக இருக்கு.செய்து பார்க்கனும் ஜலிலாக்கா!!
மேனகா , நவாஸ் ,முதலே இதை எடிட் செய்து வைத்து இருந்தேன் தமிலிழ் இன்னும் சம்மிட் பண்ணல அப்ப அதற்குள் எப்படி ஓட்டு வந்தது, இப்ப நான் மறுபடி சம்மிட் கொடுக்கனுமா யாராவது சொல்லுங்கள்.
வாய் ஊறுது அக்கா!
Jaleela said...
மேனகா , நவாஸ் ,முதலே இதை எடிட் செய்து வைத்து இருந்தேன் தமிலிழ் இன்னும் சம்மிட் பண்ணல அப்ப அதற்குள் எப்படி ஓட்டு வந்தது, இப்ப நான் மறுபடி சம்மிட் கொடுக்கனுமா யாராவது சொல்லுங்கள்
கொடுக்க முடியாது. ஏன்னா உங்களுக்கு பதிலா நான் கொடுத்துட்டேன். நீங்க ஓட்டு மட்டும் போடுங்க சகோதரி
மிக்க நன்றி சகோ.நவாஸ்.
இந்த தமிலிழ் சம்மிட் செய்வது தான் பெரும் பாடா இருக்கு, வைரஸ் சரியா ஓப்பன் ஆகவும் இல்லை
வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி நாஸியா
நவாஸ் இது ரொம்ப ரிச் கிரேவி +ஈசி யும் கூட..
மேனகா இதில் தக்காளி சேர்க்கல சில பேருக்கு தக்காளி ஒத்துக்காது
Very delicious looking chicken gravy and goes well with any kind of rotis ma..
Yummy chicken !!
சூப்பரப்பூ, நாங்களும் இதுபோல் செய்வோம் அக்கா
ஆமாம் சரஸ்வதி எல்லாவகையான பரோட்டா , ரொட்டி, சப்பாத்தி எல்லாவற்றிற்கும் பொருந்தும்ம், கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
சாரா நவீன் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி
கலக்கல் மலிக்கா வாங்க , மிக்க நன்றீ.
கலக்குறீஙகள். நீங்கள் சமைக்கிறதை சாப்பிட எனக்கு ஒரு சட்டிக் கறி வேணும்??
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா