கொள்ளு உடம்பிற்கு சூடு ஆகையால் வெந்தயம் சேர்த்து அரைத்து இருக்கேன்
கொள்ளு = அரை கப்
கடலை பருப்பு = கால் கப்
புழுங்கல் அரிசி = கால் கப்
வெந்தயம் = முக்கால் தேக்கரண்டி
சில்லி பிளேக்ஸ் = ஒரு தேக்கரண்டி
வெங்காயம் = அரை தேக்கரண்டி
தக்காளி = பெரிய தக்காளி ஒன்று
பூண்டு = முன்று பல்
உப்பு = தேவைக்கு
பெருங்காயப்பொடி = கால் தேக்கரண்டி.
1. கொள்ளு + கடலை பருப்பு + வெந்தயம் சேர்த்து முன்று மணி நேரம் ஊறவைகக்வும். அரிசியை தனியாக ஊறவைக்கவும்.
2. ஊறிய அரிசியுடன் சில்லி பிளேக்ஸ், பூண்டு சேர்த்து நன்கு அரைத்து பிறகு கொள்ளு, வெந்தயம், கடலைபருப்பை முக்கால் பதம் அரைத்தால் போதும்.
3.கடைசியாக வெங்காயம், தக்காளியை பொடியாக அரிந்து சேர்த்து அரைத்து எடுக்கவும்.
4.நான் ஸ்டிக் தவ்வாவில் அடையை ஊற்றவும்.
5.சுற்றிலும் ஆலிவ் ஆயில் அல்லது நல்லெண்ணை ஊற்றி திருப்பி போடவும்.
6. நன்கு மொருகியதும் எடுக்கவும்
7. சுவையான சூப்பரான கொள்ளு தக்காளி அடை ரெடி.
தொட்டுக்கொள்ள வெண்டைக்காய் சாம்பார், அல்லது ஏதாவது சட்னி வகைகள், புளிகுழம்பு .அருமையாக இருக்கும்.
குறிப்பு
எந்த அடையிலும் சிறிது கடலை பருப்பு + அரிசி சேர்ந்தால் தான் சிறிது கிரிஸ்பியாகவும் ருசியாகவும் இருக்கிறது, உளுந்து சேர்த்தால் மெத்தென்று ஆகிவிடுகிறது. ஆகையால் உளுந்து தேவையில்லை
Tweet | ||||||
12 கருத்துகள்:
wow akka..iniki thaan thakali kollu ada senjen..vanthu paatha neengalum potrukkeenga..ungalin muraiyil adutha thadava sanju paakkaren..
பார்க்கும்போதே பசி எடுக்கிறது.
கொள்ளுடன் வெந்தயம் சேர்த்து அரைத்திருப்பது நல்ல டிப்ஸ்!! அடை சூப்பரா இருக்கு ஜலிலாக்கா!!
அம்மு வாங்க உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி, அப்பா எவ்வளவு சுவை, தக்காளி தான் நல்ல ரெட் கலரில் வரல அடுத்த முறை நல்ல பழுத்த தக்காளியா சேர்க்கனும்.
ம்ம் நீங்களும் கொள்ளு தக்காளி தோசையா?
நவாஸ் அடை எல்லாம் நிமிஷத்தில் செய்து சாப்பிடலாம்.
ரொம்ப புளிக்க விட வேண்டிய வேலை கிடையாது,
ஆனால் சுட தான் பொறுமை வேண்டும், அதற்குள் மற்ற வேலைகளை பார்த்து கொண்டே சுடனும். கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி மேனகா,
எனக்கு சூடு அயிட்டம் ஆகாது சரியாக அதற்கு தகுந்தாற் போல் என்ன சேர்க்கலாம் என்று யோசித்தேன்,
நாம் தோசைக்கே கொஞ்சம் சிவந்து மொருகலா வர வெந்தயம் தான் சேர்ப்போம், அப்ப அடைக்கு மொருகலா இருந்தா தான் நல்ல இருக்கும், அதான் வெந்தயம் சேர்த்து கொண்டேன்.
கொள்ளு அடை சூப்பர் , உங்கள் குறிப்புகளோடு உங்கள் டிப்ஸ் சூப்பர்.
சாருஸ்ரீ நலமா?
தவறாமல் வந்து கருத்து தெரிவிப்பதற்கு.மிக்க நன்றி .
Wow Jaleela, varthaigal vara villai, yevalo arumaiyana adai, healthy!!
ரெம்ப வித்தியாசமா இருக்கே!!
http://susricreations.blogspot.com
வருகைக்கும், கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றீ சுஸ்ரீ.
இநத முறையில் செய்வது நானே டிரை செய்தது
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி பிரியா
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா