//இந்த கொழுக்கட்டைக்கு சைவ பிரியர்கள் மாசி போல், கேரட் சம்பல், வத்தகுழம்பு, புளிகுழம்பு போன்றவை, துவையல் வகைகள் செய்து தொட்டு சாப்பிடலாம். டயட் செய்பவர்கள் இதே போல் ரவை, சிறிது ஓட்ஸ் சேர்த்தும் செய்து சாப்பிடலாம்.//
சுவையான எண்ணை இல்லாத காலை உணவு
தேவையான பொருட்கள்
வறுத்த மாவு = 2 கப்
வெங்காய்ம் = 2 பெரியது (பொடியாக அரிந்தது)
தேங்காய் துருவல் = அரை கப்
பச்ச மிளகாய் = முன்று (பொடியாக அரிந்தது)
உப்பு = தேவைக்கு
செய்முறை
1. வறுத்த மாவில் வெங்காயம், பச்ச மிளகாய்,தேங்காய் துருவல் சேர்த்து நன்கு விறவவும்.
2. தண்ணீரை கொதிக்க விட்டு அதில் உப்பு சேர்த்து மாவி தெளித்து தெளித்து நன்கு குழைத்து விறவவும்.
3. கலந்த் மாவை பத்து நிமிடம் ஊறவிடவும்.
4. பிறகு சிறிய சிறிய கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி பானையில் ஈரதுணியை விரித்து அவித்து எடுக்கவும்.
5. இதற்கு தொட்டு கொள்ள மாசி மாசி சம்பல் நல்ல இருக்கும், பிள்ளைகளுக்கு சர்க்கரை தொட்டு கொடுக்கலாம்.
குறிப்பு
செய்வது ரொம்ப சுலபம்.
டயட் செய்பவர்கள் ரவை, ஓட்ஸ் சேர்த்து செய்து இதே போல் செய்து சாப்பிடலாம்.
Tweet | ||||||
20 கருத்துகள்:
உழுந்து மாவும் சேர்நதால் சற்று போஸாக்கு அதிகமாகுமே. ஆனால் அப்படிச் செய்தால் சுவையாக இருக்குமா தெரியாது.
வாங்க டாக்டர் முருகானந்தன் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
உளுந்து மாவு சேர்ந்தால் நல்ல இருக்கும்.
அது போஷாக்கும் கூட ,
இப்ப தான் எல்லோரும் டயட் காரணமாக பார்லி, கொள்ளு, ராகி, ஓட்ஸில் தானே எல்லாமே கொழுக்கட்டை, பொங்கல்,இன்னும் பல பல செய்கிறார்கள்.
அரிசிமாவுடன், அல்லது மேலே குறிப்பிட்டுள்ள ஏதாவது ஒன்றுடன் உளுந்துமாவு சேர்ந்தாலும் சுவை நல்ல தான் இருக்கும்,
அடுத்த முறை கொழுக்கட்டை செய்யும் போது செய்து பார்த்து பதிவில் போடுகிறேன்.
சிகப்பரிசி கொழுக்கட்டையை பார்க்கும்போதே சாப்பிட தூண்டுதே. செய்து பார்த்து ஒரு பிடி பிடித்துவிட வேண்டியதுதான்.ஓட்டும் போட்டுட்டேங்க மேடம். மிக நல்ல பதிவு.
ரேகா ராகவன்
அந்த மாசி மேட்டர் சூப்பர் சகோதரி ...
அக்கா சூப்பர் ரெசிப்பி
அக்கா,
இந்த கொழுக்கட்டையும், தாளிச்சாவும்தான் சூப்பர் காம்பினேஷன் எங்க வீட்டில (ஊர்ல); இங்க கொழுக்கட்டை செய்ய டிரை பண்ணேன், சரியா வரல்; பார்த்தவுடனே ஆசையா இருக்கு; வர வெள்ளி மீண்டும் முயற்சி செய்யணும், இன்ஷா அல்லாஹ்!
டியர் ரேகா வருகை தந்தமைக்கும் ஓட்டு போட்டமைக்கும் மிக்க நன்றி.
வாங்க நட்புடன் ஜமால் ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கீங்க
மாசி நம் இஸ்லாமிய இல்லங்களில் எல்லொருக்கும் பிடித்த ஒன்று.
அம்மு உங்களுக்க்காக தான் வெஜ் ரெசிபி கொடுத்தேன்.
இன்னும் நிறைய இருக்கு
ஹுசைனாம்மா வாங்க வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.
எப்படி ஜலீலா எப்படி...
அருமை அருமை.
சூப்பரா இருக்கு ஜலிலாக்கா!!
எளிமையான விளக்கம்... நன்றி...தொடர்ந்து கலக்குங்க....
சிங்கக்குட்டி வாங்க ரொம்ப சந்தோஷம், வருகைக்கும், கருத்து தெரிவித்தமைக்கும், ஓட்டு போட்டமைக்கும் மிக்க நன்றி.
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி மேனகா/
அதிரை அபூபக்கர் டொடர்ந்து கருத்து தெரிவித்து ஊக்குவிப்பதற்கு மிக்க நன்றி.
கொழுக்கட்டையில் மாசி. வித்தியாசமாத்தான் இருக்கு. ஆனால் கண்டிப்பா டேஸ்ட்டாத்தான் இருக்கும்.
அக்கா நலமா? உங்க, டெம்ப்ளேட் எனக்கென்னமோ ரொம்ப ப்ரைட்டா தெரியல. இதை மாற்ற முடியாது அக்கா... புதிதாகத்தான் உருவாக்கணும்...அல்லது, வேறு எதாவது ப்ரீ டெம்ப்ளேட் போடணும்.
மாசி சம்பல் இல்லாமல் சிலோன்காரர்கள் இருக்க மாட்டார்கள். படமே சாப்பிடத்தூண்டுகிறது.
நவாஸ் ஆமாம் சுலமா தயாரித்து விடலாம்
சுஹைனா வாங்க இவ்வளவு பிஸியிலும் நீங்க வந்து பின்னூட்டம் போட்டது ரொம்ப சந்தோஷம்.
டெம்லேட் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் பார்க்கலாம், ஆனால் ஓப்பன் செய்ய ரொம்ப டைம் எடுக்குது.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா