பன் = இரண்டு
வெந்த சிக்கன் = முன்று மேசை கரண்டி
கேரட் = ஒரு மேசை கரண்டி
காப்சிகம் = ஒரு மேசை கரண்டி
கேபேஜ் = முன்று மேசை கரண்டி
உப்பு = சிறிது வெள்ளை மிளகு தூள் சிறிது
மையானஸ் = சிறிது
கெட்சப் = சிறிது
சிக்கனில் ஒரு ஒரு சிட்டிக்கை அளவு (இஞ்சி பூண்டு பேஸ்ட்,மிளகு தூள், உப்பு ) போட்டு வேகவைத்து தண்ணீரை வடித்து உதிர்த்து கொள்ளவும்.
கேரட், கேபேஜ், கேப்சிகம் மூன்றையும் பொடியாக அரிந்து கொள்ளவும்
சிக்கனுடன் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.
பன்னை இரண்டாக வெட்டி ஒரு புறம் மையானஸ், ஒரு புறம் கெட்சப் தடவவும்.
ரொம்ப ஈசியான ஹெல்தியான காலை உணவு, வெந்த சிக்கன் இருந்தால் பத்தே நிமிஷத்தில் சிக்கன் சாண்ட்விச் ரெடி.
Tweet | ||||||
15 கருத்துகள்:
ரொம்ப ஈஸி,ஹெல்தி சாண்ட்விச்!!
ஈஸியான சாண்ட்விச்!! ஆனால் நான் சிக்கன் சாப்பிடமாட்டேன். வெறும் காய்கறி மட்டும் வைக்கலாமா
ஆமாம் மேனகா ரொம்ப ஈசியான சாண்ட்விச்
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றீ
சாருஸ்ரீ வெரும் காய் வைத்து இது போல் செய்யலாம், ஆலிவ் காய்கள் இரண்டு சேர்த்து கொண்டால் இன்னும் அருமை,, ஏன் மஷ்ரூம் பயன் படுத்தி செய்யலாமே.
நான் இதே மாதிரி காய்கள் மட்டும் சேர்த்து செய்வேன். மயோன்னைஸ் , கெட்சப் சேர்க்க மாட்டேன். நல்லா இருக்கும்
சிக்கனை இரவே வேகவைத்து காலையில் வெஜுடன் சேர்த்து செய்து கொடுக்கலாமா ?அதி காலை 5.30 மணிக்கே சிக்கனை வேக வைப்பது முடியாத காரியம்
மலர் இரவு வேகவைத்து வைத்து கொள்ளலாம். இந்த கலவை கூட கை படாமல் இருந்தால் முன்றூ நாட்கள் வைத்து கொள்ளலாம்.செய்ததும் உடனே பிரிட்ஜில் வைகக்னும்,
சுகந்தி மயோனஸ் அது ஸ்டிக் ஆகதான், பிள்ளைகளுக்கு அதிகமா வைக்கலாம், நமக்கு லேசாக தடவினால் போதும்
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
ஜலீலா அக்கா சண்டே காலைல எந்த டென்ஷன் இல்லாம சாண்ட்விச் சாப்பிட்டுகிட்டே
டிவி பார்க்குற சுகம் இருக்கே ஆஹா
குட்டி புள்ளைங்களுக்கு ரொம்ப பிடிக்கும்! நன்றி சகோதரி ஜலீலா!
காலை உணவு பெரும்பாலும் இதுதான். ஹ்ம்ம் என்ன பண்றது
ரொம்பவும் சுலபமான சான்ட்விச், இது கூட லெட்டூஸ் சேர்த்துக்கலாமே, இன்னும் நியூட்ர்ஷியஸா இருக்குமே.
நாஸியா ஆமாம் நீங்கள் சொல்வது சரி பிள்ளைகளுக்கு கொடுத்தால் உடனே தட்டு காலி தான்,
நன்றி
நவாஸ் என்ன செய்வது உங்களைபோல் வெளிநாட்டில் உழைப்பர்கள் எல்லோருடைய நிலையும் இப்படி தானே இருக்கு, அதுவும் சமைக்க தெரியாதவர்கள் நிலை இன்னும் மோசம் ,
ஷபி அது மற்றொரு ரெசிபி கூட இருக்கே அதுக்கு சேர்த்து இருக்கேன்( ஐஸ்பார்க் லெட்டியுஸ்) அது சிக்கன் ஸ்பிரிங் ரோலுக்கு போட்டு செய்து இருக்கேன், இதில் சேர்த்தாலும் நல்ல இருக்கும்
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா