Wednesday, October 7, 2009

பொங்கல் - Pongalபச்சரிசி = அரை கப்
பச்ச பருப்பு = கால் கப்
ம‌ஞ்ச‌ள் பொடி = அரை பின்ச்
பொருங்காய‌ப்பொடி = ஒரு பின்ச்
ப‌ச்ச‌மிள‌காய் ‍ = ஒன்று
இஞ்சி = அரை தேக்க‌ர‌ண்டி (பொடியாக‌ ந‌ருக்கிய‌து)
முந்திரி = முன்று (பொடியாக‌ அரிந்து கொள்ள‌வும்)
க‌ருவேப்பிலை ‍ சிறிது
சீர‌க‌ம் = ஒரு தேக்க‌ர‌ண்டி
மிள‌கு அரை தேக்க‌ர‌ண்டி
நெய் = ஒரு தேக்க‌ர‌ண்டி
எண்ணை = ஒரு தேக்கர‌ண்டி1. பாசி ப‌ருப்பை லேசாக‌ வ‌ருத்து அத‌னுட‌ன் அரிசி சேர்த்து ப‌த்து நிமிட‌ம் ஊற‌வைக்க‌வும்.

2. குக்க‌ரில் ஊற‌வைத்த‌ பாசி ப‌ருப்பு ப‌ருப்பை சேர்த்து அதில் உப்பு + சீர‌கம் அரை தேக்கரண்டி + ம‌ஞ்ச‌ள் தூள் சேர்த்து முன்று க‌ப் த‌ண்ணீர் சேர்த்து கொதிக்க‌ விட‌வும்.

3. ந‌ன்கு கொதித்து முக்கால் பாக‌ம் வெந்து வ‌ரும் போது எண்ணை + நெய்யை காய‌வைத்து முந்திரி, மிள‌கை ந‌ன்கு வ‌ருத்து விட்டு இஞ்சி,ப‌ச்ச‌ மிள‌காய்,க‌ருவேப்பிலை, பொருங்காய‌ம் , மீதி சீர‌க‌ம் சேர்த்து தாளித்து கொட்டி நன்கு கிளறி குக்க‌ரை மூடி வெயிட் போட்டு இர‌ண்டு விசில் வ‌ந்த‌தும் இர‌க்க‌வும்


குறிப்பு
க‌டைசியில் தாளித்து கிள‌றுவ‌தை விட‌ இப்ப‌டி செய்தால் தாளிப்பு பொங்க‌ல் முழுவ‌தும் ப‌ர‌வி ஒரே சீராக‌ இருக்கும்.அப்ப‌டி கெட்டி ஆகிவிட்டால் சிறிது வெண்ணீர் + நெய் சேர்த்து கிள‌றிவிட‌லாம்.
தொட்டு கொள்ள‌ சாம்பார், பொட்டுகடலை துவையல், ச‌ட்னி, ம‌சால் வ‌டை, போண்டா, உளுந்து ப‌ருப்பு வ‌டை எல்லாம் பொருந்தும்.

14 கருத்துகள்:

Elanthi said...

என்னைப்போல் தனிய உள்ளவர்களுக்கு உணவு சமைப்பதற்கு உதவும் பல விசயங்கள் இங்கு உண்டு. தொடர்ந்து பதிவிட வாழ்த்துக்கள்.

Menaga Sathia said...

எனக்கு மிகவும் பிடித்த பொங்கல்!!ஞாபகபடுத்திட்டீங்க.செய்து சாப்பிடனும்!!

malar said...

சமையல் செயிம் பொது புளியை ஏன் வெந்நீரில் போடவேண்டும் .

Ammu Madhu said...

ஜலீலா அக்கா..சூப்பர் பொங்கல்..பொங்கல் சாம்பார் ரெசிப்பியும் போற்றுக்கலாமே?

GEETHA ACHAL said...

சூப்பர்ப் பொங்கல்..பார்க்கும் பொழுதே சாப்பிட தோனுச்சு...இப்ப சாப்பிட்டாச்சு...

எங்கள் வீட்டில் இன்று இதே பொங்கல் தான்..ஆனா பார்லியில்...சூப்பர்ப்...

Jaleela Kamal said...

என் இதயத்திலிருந்து...மிக்க நன்றி வருகைக்கும், கருத்து தெரிவித்தமைக்கும், இங்க வந்துட்டீங்க இல்ல இன்னும் ஆறே மாதத்தில் நீங்கள் கிரேட் குக் தான், பெயரை சொல்லி இருந்தால் நல்ல இருக்கும்.

Jaleela Kamal said...

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றீ மேனகா.

எனக்கு ரொம்ப பிடிக்கும், முன்று வேளையும் பொங்கல் சாப்பிட சொன்னாலும் சாப்பிடுவேன். ஆனால் வீட்டில் எல்லோருக்கும், சர்க்கரை பொங்கல்,அதான் பிடிக்கும், அதுக்கு காரத்துக்கு சுண்டல் செய்து கொடுப்பேன்.

Jaleela Kamal said...

மலர் புளி கெட்டியாக இருக்கும் அதை போட்டு கைய போட்டு பினைந்து நேரத்தை வீனாக்க வேண்டாம் அதுவும் என்னை போல் அவசர சமையல் செய்பவர்களுக்கு இதான் சுலபம், இன்னும் கேட்டா நான் சில சமையம் ,புளியோதுரை, மீன் குழம்பிற்கு எல்லாம் இரவே ஊற போட்டு விடுவேன்.


கெட்டியாக இருப்பதால் லேசான வெது வெதுப்பான வெண்ணீரில் ஊறவைத்தால் ஈசியாக ஒரு தடவை கரைக்கும் போதே கொட்டை தனியா புளி கரைசல் தனியா வந்து விடும், தேவைபட்டால் இரண்டாவடு முறையும் கரைத்து கொள்ளலாம்

Jaleela Kamal said...

அம்மு வாங்க நீங்கள் எல்லாம் வெஜ்டேரியன் புலி அதான்

என் வெஜ் சமையல் எடுபடாது என்று தான் அவ்வளாவா போடுவதில்லை, ஆனால் நான் வாரத்தில் முன்று தடவை, இல்லை மதியம் எனக்கும் என் பையனுக்கும் என்றால் வெஜ் தான் சமைப்பேன். ரசம் கூட ஒரு முறை வைத்த ரசம் அடுத்த முறை வைக்கமாட்டேன்.


சாம்பார்தானே போட்டுட்டாபோச்சு, ஏற்கனவே நிறைய குறிப்பு எடிட் செய்து வைத்தாச்சு, சாம்பாரும் போடுகிறென்.

S.A. நவாஸுதீன் said...

தீபாவளி ஸ்பெசல் பொங்கல்.

Jaleela Kamal said...

வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி நவாஸ்

my kitchen said...

சூப்பர்ப் பொங்கல்,
எனக்கு ரொம்ப பிடிக்கும்

Jaleela Kamal said...

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி பிரியா.

DR said...

எல்லாம் சரி தான், பொங்கலுக்கு சாம்பார் செய்யவும் சொல்லி குடுத்தா உங்களுக்கு புண்ணியமா போகும்...

( நான் சாம்பார் வச்சா ரசமா தான் வருது. அவ்வளவு தண்ணி. )

இப்படிக்கு,
சமைத்து சாப்பிடும் ஒரு பேச்சுலர்...

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா