Monday, December 3, 2012

துருவிய தேங்காய் ஐஸ் கியுப் - Grated Coconut Ice Cubes

 
 

துருவிய தேங்காய் ஐஸ் கியுப் - Greated Coconut  cubes

 
ஒரு முழு தேங்காய் துருவியது - 1
ஐஸ் கியுப் ட்ரே
 
 
 
 

சில சமையலுக்கு தேங்காய் துருவல் மிக அவசியம். பொரியல், இனிப்பு உருண்டை , வெல்லம் உருண்டை சுண்டல். இன்னும் பல சமையலுக்கு பயன் படுத்தலாம். தேங்காயை துருவி  பிரிட்ஜில் கீழே வைத்தால் முன்று நான்கு நாளில் கெட்டு போய்விடும். அதற்கு இப்படி பிரஷாகா தேங்காய் கிடைக்கும் போது அதை துருவி ஐஸ் கியுப் ட்ரேவில் அடைத்து 2 மணி நேரம் ப்ரீஜரில் வைத்து எடுத்து தேங்காய் கியுப் களை,  ட்ரேயில் இருந்து எடுத்து ஒரு கண்டெயினரில் போட்டு ஃபீரிஜரில் வைத்து கொள்ளலாம்/

சமைக்கும் போது  தேவைக்கு பிரஷாக இரண்டு முன்று கோகனட் கியுப் களை எடுத்து போட்டு பயன் படுத்தி கொள்ளலாம்.


 
 

இது அபப்டியே  பத்தைகளாக் கீறியும் ஒரு கவரில் போட்டு வைக்கலாம்.

சமைப்பதற்கு 10 நிமிடம் முன் வெண்ணீரில் அல்லது தண்ணீரில் தேவையான பத்தைகளை எடுத்து போட்டு கொள்ளலாம்.

குருமா போன்றவை தயாரிக்க தேங்காயுடன் முந்திரி சேர்த்து அரைத்தும் பீரிஜ் ஐஸ் கியுப் செய்து செய்து வைத்து கொண்டால் சுலமாக வேலை முடிந்து விடும்.

டிஸ்கி:

பேச்சுலர் ஈவண்ட் லின்க் இங்கே கிளிக்கவும்.
 

 

19 கருத்துகள்:

Mahi said...

Never freezed grated coconut jaleela Akka..nice idea! But I don't have Thenga thuruvi here. I just cut the coconut into pieces n freeze them. Useful tips!

Jaleela Kamal said...


மகி என்னிடமும் தேங்காய் துருவி கிடையாது இது மிக்சியில் போட்டு ஃபீரீஜ் செய்தது தான்.

எனக்கு தேங்காய் துருவியில் துருவ ரொம்ப பிடிக்கும் சின்ன வயதில் தேங்காய் துருவும் வேலை எனக்கு தேடி பிடித்து ராட்டனம் மாதிரி சுத்தும் துருவி வாங்கி வந்து துருவுவேன்.

ஸாதிகா said...

ஆஹா..அருமையான யோசனையாக இருக்கே!!!!!!!!!!!!

Unknown said...

Ohh.. What a great idea.. Super akka.. Inni try paana vendiyathuthaan

இமா க்றிஸ் said...

நானும் எப்பொழுதும் தேங்காய் துருவி சிறிய ஸ்னாப்லாக் பாக்குகளில் போட்டு ஃப்ரீஸரில் வைப்பேன். 'க்யூப்ஸ்' சூப்பர் ஐடியாவாக இருக்கு ஜலீ.

enrenrum16 said...

/எனக்கு தேங்காய் துருவியில் துருவ ரொம்ப பிடிக்கும் சின்ன வயதில் தேங்காய் துருவும் வேலை/// same pinch akka.. ஒரே இடத்தில் உக்காந்து வேலை பாத்தமாதிரியும் ஆச்சு.... அம்மாவுக்கு உதவி பண்ண மாதிரியும் ஆச்சு :)

Aruna Manikandan said...

nice post akka :)

Asiya Omar said...

தேங்காய் துருவி பாக்ஸில் லூஸாக ஃப்ரீஸ் செய்து ஃபோர்க் வைத்து அப்ப அப்ப எடுத்துப் பயன்படுத்துவேன்.இதுவும் நல்ல ஐடியா தான் ஜலீலா.

semmalai akash said...

நாங்கலாம் அப்படியே ஒரு டப்பாவில் போட்டு வைத்துவிடுவோம், தேவைப்படும்போது ஒரு பத்து நிமிடத்துக்கு முன்பு வெளியில் எடுத்து வைப்போம், பிறகு பிரஷா இருக்கும், ம்ம்ம் சரி உங்கமுறையையும் பயன்படுத்திப்பார்க்கிறேன்.

semmalai akash said...

ஓ! இது சினேகிதி பக்கம் இல்லையா? சரி நீங்களும் அருமையான டிப்ஸ் கொடுக்குரிங்க, உங்களையும் பின் தொடர்ந்து வருகிறேன், என்னை ஏமாற்றாமல் அப்பப்ப நல்ல நல்ல டிப்ஸ் கொடுக்கவும்,

நேரம் கிடைக்கும்போது எனது பக்கமும் வந்து போகவும்.

Jaleela Kamal said...

வாங்க ஸாதிகா அக்கா ஹஜ்ஜிலிருந்து நல்லபடியாக வந்து சேர்ந்தது குறித்து மிக்க சந்தோஷம், உடனே என்னை தேடி இங்கு வந்தது அதை விட சந்தோஷம்.

Jaleela Kamal said...

வாங்க பாயிஜா. செய்து பாருங்கள் ரொம்ப ஈசியாக இருக்கும்

Jaleela Kamal said...

ஆமாம் இமா அக்கா நானும் கவரில் தான் தேவைக்கு பிரித்து போட்டு வைப்பேன்.

ஆனால் இது தீடீர் கண்டுபிடிப்பு.

புளி பேஸ்ட் ஐஸ் கியுப் செய்யும் போது தேங்காய் துருவலையும் செய்தால் என்ன்ன வென்று தோனியது.
அதான்
இது கண்டிப்பாக அனைவருக்கும் பயன் படும்

வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

என்றென்றும் பதினாறு, ஒரே இடத்தில் உட்கார்ந்து அத பற்றி சொல்லனுமுனா நான் இன்னும் நிறைய சொல்லலாம்.

இதை விட மாம்பழம் என்கிட்ட அரிய கொடுத்துட்டு எல்லாரும் பட்ட பாடு இருக்கே அதை சொல்லி மாளாது

வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

வாங்க அருனா வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

ஆமாம் ஆசியா முன்பு நானும் அப்படி தான் பாக்ஸ் அல்லது கவரில் குட்டி குட்டியாக பிரித்து போட்டு வைப்பேன்.

இது எல்லாத்தையும் விட மிகச்சுலபம்.

Jaleela Kamal said...

வாங்க சீமாலை, உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி

பாக்ஸில் மொத்தமாக போட்டு வைத்து பத்து நிமிடம் கழித்து வரும், ஆனால் சில நேரம் மறந்துட்டா மறுபடி எல்லாம் டீப்ராஸ்ட் ஆகிடும், சும்மா அப்படி செய்து வைப்பது சரியில்லை கொஞ்சம் நாளில் ஊசிய வாடை வரும்/

Jaleela Kamal said...

//ஓ! இது சினேகிதி பக்கம் இல்லையா? சரி நீங்களும் அருமையான டிப்ஸ் கொடுக்குரிங்க, உங்களையும் பின் தொடர்ந்து வருகிறேன், என்னை ஏமாற்றாமல் அப்பப்ப நல்ல நல்ல டிப்ஸ் கொடுக்கவும்,

நேரம் கிடைக்கும்போது எனது பக்கமும் வந்து போகவும்.//


ஒரு குத்து மதிப்பா கமெண்ட் போட்டு விட்டீர்கள் போல ஹிஹி
ஆல்ரெடி உங்களுக்கு தேவையான நிறைய டிப்ஸ்கள் இங்கு இருக்கும்



உங்கள் பக்கம் கண்டிப்பாக முடிந்தால் வருகிறேன்.

மாதேவி said...

நம் நாட்டில் நிறையத் தேவை தேங்காய் என்பதால் துருவி இதே போல் வைத்துவிடுவோம்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா