இது என் கணவர் சின்ன குழந்தையாக இருந்த போது அவங்க அம்மா கொடுத்த முதல் உணவு ..
எங்க வீட்டு குழந்தைகள் அனைவருக்கும் ரொம்ப பிடித்த தால் இது..
வேக வைக்க
-------------
துவரம் பருப்பு - ஒரு கப்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
சீரகம் - அரைடீஸ்பூன்
வெங்காயம் - ஒன்று (நான்காக நறுக்கியது+
தாளிக்க
--------
வெங்காயம் - அரை பொடியாக நறுக்கியது
கடுகு - அரை டீஸ்பூன்
காஞ்ச மிளகாய் - இரண்டு
பச்சமிளகாய் - ஒன்று
பூண்டு - இரண்டு பல்லு
கருவேப்பிலை - இரண்டு ஆர்க்
கொத்து மல்லி - சிறிது மேலே தூவ
எண்ணை - இரண்டு டீஸ்பூன்
நெய் -ஒரு டீஸ்பூன்
உப்பு - ஒன்னரை டீஸ்பூன்
செய்முறை
பருப்புடன் வேகவைக்க வேண்டியதை போட்டு வேகவைத்து ஆற வைத்து மிக்சியில் அல்லது பிளென்டரில் ஒரு திருப்பு (மையாக அரைக்கவேண்டாம்).
மிக்சியில் அடித்ததை உப்பு, கொத்து மல்லி போட்டு ஒர் கொதி கொதித்து இறக்கவும். தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொள்ள்வும்.
ஒரு வானலியில் எண்ணை ஊற்றி கடுகு, காஞ்ச மிளகாய் போட்டு அரை வெங்காயத்தை வதக்கி லேசாக கலர் மாறியதும் பூண்டை தட்டி போட்டு கருவேப்பிலை பச்சமிளகாய் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி பருப்பில் கொட்டவேண்டும்.
கடைசீயில் நெய் ஒர் ஸ்பூன் ஊற்றி இரக்கவும்.
இந்த பருப்புக்கு வெங்காய முட்டையும் நார்த்தங்காய் ஊறுகாயும் வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
குறிப்பு:
பிள்ளைகளுக்கு வெறும் சாதத்தில் இந்த பருப்பை ஊற்றிக்கொடுத்தால் ரொம்பவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஈசியான முறை எளிதில் தயாரிக்கக் கூடியது.
இது என் கணவர் சின்ன குழந்தையாக இருந்த போது அவங்க அம்மா கொடுத்த முதல் உணவு ..
எங்க வீட்டு குழந்தைகள் அனைவருக்கும் ரொம்ப பிடித்த தால் இது..
Tweet | ||||||
9 கருத்துகள்:
இந்தக்கட்டிப்பருப்பு அவசியம் ஒருநாள் செய்து பார்க்க வேண்டும்.
மசித்த சாதத்துடன் பருப்பு பிசைந்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க... நன்றி அக்கா
அட்டகாசமா இருக்கு..
http://mathysblog.blogspot.com/2012/12/blog-post_21.html//
என்னுடைய போஸ்டின் லிங் அனுப்பி இருக்கிறேன்.
நன்றி.
கட்டிப்பருப்பு அடிக்கடி செய்வேன்.... நீங்க சொல்லியிருக்கிறதில், தாளிக்கும்போது பூண்டு சேர்ப்பது மாதிரி, நிறைய புது விஷயங்கள் இருக்கு... அதையும் செய்து பார்க்கிறேன்க்கா.
சூப்பர்.. குழந்தைகளுக்கு ஏற்றது.. எங்கள் வீட்டில் துவரம் பருப்பெனில் வடைக்கறி மட்டும்தான் பிடிக்குது..
சூப்பர் சுவை..
எனக்கும் பிடித்த உணவு இது
வீட்ல காமிச்சாச்சி :)
என் குழந்தைகளுக்கு பருப்பு என்றாலே சுத்தமாக பிடிக்காது. இன்ஷா அல்லாஹ் செய்து பார்க்கிறேன் அக்கா :))
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா