முர்தபா முட்டை அல்லது கறி கீமா, சிக்கன் கீமா , மீன் கீமாவில் செய்வது ஸ்டப்டு பரோட்டா. இதை ஆபிஸ் , குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸ்க்கு இப்படி வெஜ் முர்தபா செய்து கொண்டு செல்லலாம்.
கேரட் முர்தபா :
பரிமாறும் அளவு - 3 நபர்களுக்கு அல்லது இரண்டு நபர்களுக்கு
மிகவும் சத்தானது + பவர் பேக் காலை உணவு.
இப்போது கடையில் ரெடிமேட் சப்பாத்தி, ரொட்டிகள், பரோட்டாக்கள் அதிகம் கிடைக்கின்றன. பொரியல் நிறைய செய்து கொண்டு அதை வாங்கி நடுவில் வைத்து இப்படி மடித்தும் செய்யலாம் இன்னும் வேலை சுலபமாக முடிந்து விடும்.
பரோட்டா தயாரிக்க:
மைதா அல்லது கோதுமை - 1 டம்ளர்
உப்பு - தேவைக்கு
தண்ணீர்
நெய் (அ) பட்டர் - 1 மேசைகரண்டி
சர்க்கரை - ஒரு தேகக்ரண்டி
கேரட் பொரியல் : 3 குழிகரண்டி
அலங்கரிக்க : வட்டமாக அரிந்த கேரட்
செய்முறை
ஒரு வாயகன்ற பவுளில் மைதா, சர்க்கரை, உப்பு , பட்டர் சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து பரோட்டாவிற்கு மாவு குழைக்கவும்.
குழைத்ததை 10 நிமிடம் ஊறவைக்கவும்
மாவை உருண்டைகளாக போடவும்/
ஒரு உருண்டையை வட்டவடிவமாக திரட்டி நடுவில் ஒரு குழிகரண்டி அளவு கேரட் பொரியலை வைத்து நாலாபக்கமும் மடித்து தவ்வாவில் பட்டர் அல்லது நெய் விட்டு சுட்டு எடுக்க்கவும்.
காலை டிபனுக்கு இது ஒன்று சாப்பிட்டாலே போதுமானது, நல்ல பில்லிங்காக இருக்கும்.
டிஸ்கி: சின்ன வயதில் எங்க லஞ்ச் பாக்ஸ் அம்மா ரொட்டி , பீட்ரூட் கடலை பருப்பு பொரியல் போல செய்து கொடுப்பாங்க வாரம் ஒரு நாள் அது தான்.
என் பிள்ளைகளுக்கு கேரட் தான் ரொம்ப பிடிக்கும் ஆகையால் நான் அவர்களுக்கு இது போல் செய்வது.
மிகவும் சத்தானது + பவர் பேக் காலை உணவுன்னு சொல்லலாம்.
.
8 கருத்துகள்:
ஆவ்வ்வ் சூப்பர்ர்....
நோஓஓஓஓஓஒ நான் இதை ஒத்துக்க மாட்டேன்ன்.. அதெப்பூடி நீங்க இந்தப் போடியில் பங்குபற்றலாம்ம்?:) எனக்கு பரிசு கிடைக்காமல் போகப்போகுதே சாமீஈஈஈஈ:)
சூப்பராக இருக்கு.
நல்ல சத்துள்ள கேரட் முர்தபா ஜலீலா.
அதிரா கவலை படவேண்டாம்
நான் லிஸ்டில் இல்லை, என்னை தள்ளி கணக்கு பண்ணி கொள்ளுங்கள்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சூப்பர் செய்து பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது.அருமையான பகிர்வு நன்றி.
வாவ்.... சூப்பர் அக்கா...
Supper ra iruku
.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா