என்னுடைய வலைப்பூவில் முதல் போட்டியாக பேச்சுலர் சமையல் போட்டியினை ஆரம்பம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு. உங்கள் அனைவரையும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்.
போட்டி பற்றி சில அறிவிப்புகள்:
1.வெளிநாடுகளில் பேச்சுலர்கள் தனியாக சமைக்கிறார்கள் அவர்களுக்கு ஏற்றார் போல ரொம்ப ஈசியாக அளவும் சரியான அளவில் இரண்டு நபர் அல்லது முன்று நபர்களுக்கு தாயரிக்கும் அளவில் பேர் சாப்பிடலாம் என்ற அளவுடன் குறிப்பிட்டால் தனியாகவோ , குருப்பாகவோ சமைத்து சாப்பிடும் பேச்சுலர்களுக்கு இது உதவும்.
2.. ரொம்ப ஈசியான டிபன் அயிட்டம், சாதம் வகைகள், பக்க உணவு வறுவல் பொரியல், இரவு டிபன், சாலட் வகைகள்,
சைவம் மற்றும் அசைவம் இரண்டு வகையான உணவு வகைகளையும் அனுப்பலாம்.
(இதில் கூடுமானவரை சைவம், சிக்கன், முட்டை சமையல் வகைகள் அனுப்பினால் மிகவும் நல்லது.)
4. ஒருவர் எத்தனை குறிப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். பழைய குறிப்புகளை இனைப்பதாக இருந்தால் (2012) மட்டும் அந்த பழைய குறிப்புக்கு கீழே போட்டி லின்க்கை கொடுக்கவும் லோகோ இணைத்து கொள்ளுங்கள்.
5.நீங்கள் பிளாக் வைத்திருக்கவில்லை எனில் எனக்கு மெயில் மூலம் உங்கல் குறிப்புகளை அனுப்பவும்.
6.உங்கள் ப்ளாகில் குறிப்புகள் போட்டவுடன் கீழே உள்ள லின்கில் இணைத்து விடவும், லிங்க் செய்ய முடியவில்லை என்றால் cookbookjaleela@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பவும்.
மேலே கொடுக்க பட்டுள்ள முகவரி சமையல் போட்டிக்கு மட்டும்.
உங்கள் பெயர்:
வலைப்பூ முகவரி:
வலைப்பூவின் பெயர்:
உணவின் பெயர்:
சப்ஜெக்ட் : பேச்சுலர் சமையல் போட்டி
உணவின் படம்: உணவின் தெளிவான அழகான கடைசி படமும் இணைத்து அனுப்பவும்.படிப்படியாக போட விருப்பம் உள்ளவர்கள் படிப்படியாக்வும் குறிப்பினை போட்டும் இனைக்கலாம்.
6. கீழ் இருக்கும் add your link என்ற பட்டனை அழுத்தி உங்களின் குறிப்புகளை இணைத்துக்கொள்ளவும்.
url : உங்கள் குறிப்பின் லின்கினை பேஸ்ட் பண்ணவும்
name: போட்டி குறிப்பின் பெயரினை கொடுக்கவும்
email: உங்களின் இமெயில் முகவரி கொடுக்கவும்
next step
குறிப்பின் புகைபடத்தினை இணைக்கவும்.
7.போட்டிக்குரிய காலம், நாளை முதல் நவம்பர் 20ம் தேதி முதல் டிசம்பர் 20 வரை குறிப்புகளை அனுப்பலாம்.
///இதில் கலந்து கொள்ள மேனகா, பாயிஜா, கீதா ஆச்சல், ஆசியா, ஹுஸைனம்மா, ஜே மாமி, ஸாதிகா அக்கா, மனோ அக்கா,அஸ்மா, என்றென்றும் பதினாறு, ஏஞ்சலின், அதிரா, புதுகை தென்றல், அமைதிச்சாரல், தேனக்கா, அன்னு,மாதேவி, அப்பாவி தங்கமணி, தளிகா, விஜி,இமா அக்கா, மகி, ஆமினா,மலிக்கா, கோவை2 தில்லி, ராமலஷ்மி, நாஸியா, காஞ்சனா,வானதி,கவிசிவா,விஜி பார்த்திபன்,ராதா ராணி , கலை, இளமதி,
துளசி கோபால், தெய்வ சுகந்தி, அமுதா, புவனேஸ்வரி, சாரு, கோமதி அரசு
இன்னும் இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அனைவரையும் அழைக்கிறேன்.///
இங்கு என் பிளாக்கில் கீழே கமெண்ட் போட வருகிறவர்கள் மற்றும் வலைப்பூ வைத்திருப்பவரகளை இங்கு குறிப்பிட்டு இருக்கிறேன்.
இன்னும் விடுபட்டு போனவர்கள் வலைப்பூ வைத்திருந்தால் கோபித்து கொள்ளாமல் வந்து உங்கள் முகவரியை இங்கு தந்து நீங்களும் கலந்து கொள்ளுங்கள்.வலைப்பூ இல்லை எனில் மெயில் மூலம் அனுப்புங்கள்.
சமையல் குறிப்பு இதுவரை எழுதாத தோழிகளையும் அழைத்துள்ளேன் கண்டிப்பாக நீங்களும் கலந்து கொள்ளும் படி அன்புடன் அழைக்கிறேன்.
இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் கண்டிப்பாக அவர்டு.
பரிசு தேர்வு எப்படி என்பது பற்றி பின்னர் அறிவிக்கிறேன்.
பேச்சுலர்கள் விருப்பபட்டால் கலந்து கொள்ளலாம்.
ஆண்களும் கலந்து கொள்வதாக இருந்தால் கலந்து கொள்ளலாம்.
போட்டியில் பங்கு பெரும் அனைத்து தோழியர்களுக்கும் வாழ்த்துக்கள்..
ஆங்கில பிலாக்கில் உள்ள தோழிகளும் இதில் கலந்து கொள்ளலாம்.இங்கு லின்க் கொடுக்கவும்.பிரியா சுரேஷ், அருனாமாணிக்கம், அகிலா,நீத்துபாலா, ஷாமா,சித்ரா கணபதி,விமிதா ஆனந்த் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
டிஸ்கி: நிறைய பேச்சுலர்கள் இதை பார்த்து சமைத்தாலும் இப்ப என் தம்பி தங்க கம்பி இப்ப இதை பார்த்து தான் சமைக்க ஆரம்பித்து இருக்கிறார். இதை பார்த்து புரோகோலி பொரியல், சிக்கன் சால்னா, ஷீர் குருமா செய்தாராம் ரொம்ப நல்ல வந்ததாம்.மிக்க மகிழ்சி. இது போல் பலதம்பிகளுக்கு இது கண்டிப்பாக பயன் படும்.
நேரமின்மை காரணமாக உடனுக்குடன் கமெண்ட் போட முடியாது. முடிந்த போது பதில் அளிக்கிறேன். எனக்கு நெட் கனெக்ஷனும் ரொம்ப ஸ்லோவாக இருக்கு.நீங்கள் இனைப்பை முடிந்தவரை இணையுங்கள்.பிறகு வந்து பதில் அளிக்கிறேன்.
79 கருத்துகள்:
பேச்சுலர் சமையல் போட்டி நல்ல ஐடியா ....வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
உங்க அன்புக்காகவும் ஆசைக்காகவும் நான் ஒன்றிரண்டு குறிப்புக்களை இணைக்கிறேன் ..
Nice n useful event jaleela Akka! Will send the recipes soon!
நல்லதொரு முயற்சி...
வாழ்த்துக்கள் சகோதரி....
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.முடிந்தளவு குறிப்புக்களை இணைக்கிறேன்.
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
அழைப்புக்கு நன்றி ஜலீ. முடிந்தவரை முயற்சிக்கிறேன்.
Will send my recipes soon..
Check out Fast & Quick Healthy Dishes Event
http://lifewithspices.blogspot.in/2012/11/fast-quick-healthy-dishes-event.html
Akka kathayam ithil naan kalanthu kulheren.
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் ஜலீலா.
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் ஜலீலா.
Happy hosting.
ஜலீ வாழ்த்துக்கள். நம்ம ஜலீயின் அழைப்பை ஏற்று வராமல் அனுப்பாமல் இருக்க முடியும. எப்பவுமே ஜலீ ஜலீ தான். அவசியம் வந்து கலந்துக்கறேன். என் வரவு எப்பவுமே லேட் தான் ஆனல் லேட்டஸ்டாக இருப்பேன். நன்றி ஜலீ.
அக்கா, வாழ்த்துகள்!!
எல்லாரும் போட்டி நடத்துறாங்க, நீங்களும் ஜோதியில் ஐக்கியமாகிட்டீங்களா. சிரமமான வேலைதான் இல்லியா? ரொம்பப் பொறுமை வேணும் இதுக்கு.
////இதில் கலந்து கொள்ள மேனகா, பாயிஜா, கீதா ஆச்சல், ஆசியா, ஹுஸைனம்மா, //
என்னாஆஆஆது..... அவ்வ்வ்வ்வ்வ்......
நானா? என் பேருமா இதில்?????? ஏன்க்கா ஏன்? என் தினப்படி சமையலே “பேச்சிலர் சமையல்” மாதிரிதான் அள்ளித் தெளிச்ச கோலமா இருக்கும். நான் போட்டியிலா.... வேணாம்க்கா இந்த விஷப் பரீட்சை (எனக்கு)!! :-))))))))
வாழ்த்துக்கள் அக்கா...கூடுமானவரை லிங்க் செய்கிறேன்...
அவ்வ்வ்வ்வ் ஜல் அக்கா.. அதெப்பூடி என்னைக் கேட்காமல் என் பெயரைக்கூப்பிடலாம் என்றெல்லாம் கேட்க மாட்டேன், ஏனெனில் மீ ரொம்ப நல்ல பொண்ணு.
பங்குபற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... நானும் பங்குபற்றுவேன், பரிசு தரோணும்.. அந்த பவுள்தான் வாணும் ஜொள்ளிட்டேன்ன்ன்:))
அதுசரி பஜ்ஜுலருக்காக குறிப்புகள் அனுப்புறம், ஆனா ஏன் இங்கின ஒரு பஜ்ஜுலர்ஸும் இணையவில்லை:)))..
//
angelin said...
பேச்சுலர் சமையல் போட்டி நல்ல ஐடியா ....வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
உங்க அன்புக்காகவும் ஆசைக்காகவும் நான் ஒன்றிரண்டு குறிப்புக்களை இணைக்கிறேன் .//
நோ ...நோஓஓஓ.. உது சரிவராது:)... முறுக்கில் இருந்து ஆட்டுக்கால் பாயா வரை நிறையக் குறிப்பு அனுப்போணும் என.. பிரித்தானிய நீதிமன்றம் ஆணை இடுகிறது:)... ஆனா பரிசு என்னவோ எனக்குத்தேன்ன்ன்:)).. இப்பவே ஜொள்ளிட்டேன்ன்:).
அக்கா இவெண்ட் போட்டோ காப்பி பண்ண முடியவில்லை.. டெஸ்ட் பண்ண பழைய குறிப்பு 2 சேர்த்திருக்கிறேன்...
ஏஞ்சலின் வாங்க கண்டிப்பாக அனுப்புங்கள்
வந்து கலந்து கொள்கிறேன் என்று சொன்னமைக்கு மிக்க நன்றி மகி
தனபாலன் சார் உங்கள் வீட்டம்மாவையும் கலந்து கொள்ள சொல்லுங்கள்
வாங்க ஆசியா முடிந்த வரை அனுப்புங்கள்
இமா அக்கா வாங்க நீங்களும் கண்டிப்பாக அனுப்புங்கள்
மிக்க நன்றீ வருகைக்கு மிக்க நன்றி கல்பனா
வாங்க பாயிஜா ரொம்ப சந்தோஷம்
வருகைக்கு மிக்க நன்றி ஸ்டார்ஜன்
ப்ரியா வாங்க கண்டிப்பாக குறிப்புகளை பகிர்ந்து கொள்ளூங்கள்.
விஜி வலைப்பக்கம் வரவே முடியாம இருந்த நீங்க எப்படி எனக்காக இங்குவந்த்து ரொம்ப சந்தோஷம் ஒரு மாதம் டைம் இருக்கு லேட்டாக லேட்டஸ்டாக வாங்க...
ஹுஸைனம்மா இந்த ஜகா வாங்குற வேலையெல்லாம் இங்க வேண்டாம், இத்தனை நாள் பிள்ளைகளுக்கு சமைத்து கொடுத்து கொண்டு இருக்கீங்கள் சமைக்க தெரியல அள்ளி தெளிக்கிறேன் என்றெல்லாம் உடனாஸ் விடப்படாது ஒரு குறிப்பாவது அனுப்பிதான் ஆகனும்
மேனகா வாங்க கண்டிப்பாக முடிந்த வரை அனுப்புங்கள்
அதிரா வாங்கோஒ வாங்கோ வந்ததே ரொம்ப ஜந்தோஷம்
ஆட்டுகால் பாயா முட்டை வட்லாப்பம் எல்லாம் செய்ய போறீங்களா அப்ப இன்னும் சந்தோஷம்
nalla muyarchi akkaa. ennudaiya kurippukalai anuppi vaikkiren.
வாழ்த்துகள் ஜலீலா.
// மேனகா, பாயிஜா, கீதா ஆச்சல், ஆசியா, ஹுஸைனம்மா, ஜே மாமி, ஸாதிகா அக்கா, மனோ அக்கா,அஸ்மா, என்றென்றும் பதினாறு, ஏஞ்சலின், அதிரா, புதுகை தென்றல், அமைதிச்சாரல், தேனக்கா, அன்னு,மாதேவி, அப்பாவி தங்கமணி, தளிகா, விஜி,இமா அக்கா, மகி, ஆமினா,மலிக்கா, கோவை2 தில்லி, காஞ்சனா,வானதி,கவிசிவா,விஜி பார்த்திபன்,ராதா ராணி , கலை, இளமதி,
துளசி கோபால், தெய்வ சுகந்தி, அமுதா, புவனேஸ்வரி, சாரு, கோமதி அரசு//
பேச்சிலர்களுக்கான போட்டின்னு சொல்லிட்டு, கல்யாணம் ஆனவங்களையா கலந்துக்க கூப்பிட்டு இருக்கீங்க?? அப்ப பேச்சிலர்னு சொல்றதெல்லாம் பார்மாலிட்டிக்கு தானா??
ஆகா! செம கொண்டாட்டம் போல, நிறைய பேச்சிலார்களின் சமையல் குறிப்புகள் ஒரே இடத்தில், ம்ம்ம் செம ஐடியா! அடிச்சி ஆடுங்க மக்களே :)
ஜலீலா நானும் உள்ளே வரலாமா பழைய குறிப்பு ஏற்கனவே பதிவுல போட்டிருப்பது அனுப்பலாமா?
இங்கு இந்த ஈவண்டுக்கு இனைப்பு கொடுத்து கொண்டிருக்கும் அனைத்து அக்காமார்கள், தங்கைமார்கள் தோழிமார்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
நேரமின்மை காரணத்தாலும், பிளாக் சரியாக ஓப்பன் ஆகாத காரணத்தாலும் என்னால் உடனுக்குடன் பதில் அளிக்க இயலவில்லை.
தயவு செய்து தவறாக எண்ண வேண்டாம்.
முடிந்த வரை வந்து பதில் அளிக்கிறேன்.
மிகவும் நல்ல முயற்சி.
பாராட்டுக்கள். பங்குபெறப்போகும்
அனைவருக்கும் வாழ்த்துகள்.
மிக நல்ல முயற்சி. பாராட்டுகள்.
அழைப்புக்கும் நன்றி. முயன்றிடுகிறேன்:).
கலந்து கொள்ள இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்!
ஜலீலா,என்னுடைய சிக்கன் புலாவ் இரண்டு முறை லின்க் ஆகிவிட்டது.முடிந்தால் ஒன்றை நீக்கிவிடுங்கள்.சிரமத்திற்கு பொறுத்து கொள்ளவும்.:)..
பாராட்டுக்கள் ஜலீ... அழைப்பிற்கு மிக்க நன்றி..முடிந்தளவு குறிப்புகளை இணைக்கின்றேன்.
அருமை அக்கா
நானும் இங்கு பெச்சுலஸ் படும் பாடுகளை கண்கூடு காண்கிறேன்...
பழைய குறிப்பொண்றை இணைத்துள்ளேன்
புது டிஷ் ஒன்றுக்கு தயாராகனும்...
http://echumi.blogspot.sg/2012/04/blog-post_18.html (புளி பொங்கல்)
http://echumi.blogspot.sg/2012/10/blog-post_8.html (கோவக்காய் சாதம்)
http://echumi.blogspot.sg/2012/10/blog-post_22.html (எலுமிச்சம்பழ ரசம்)
http://echumi.blogspot.sg/2012/07/blog-post_04.html (பூண்டு கடலைப்பொடி)
jaleela unaku mail pannina poka matenguthu athan inga anupinen eppadi kurippu anuppanumnutheriyale
யக்கோவ் என்னால் அதில் இணைக்க முடியல்லக்கா. என்ன செய்ய
மெயிலுக்கு அனுப்பவா?
ஆவ்வ்வ்வ்வ் மீதன் 100 ஆவது நபர்:))0, படத்தில பாருங்கோ.. அப்போ பரிசு எனக்கேஏஏஏஏஏஏஏஏஏ:))))
லஷ்மி அக்கா உங்களுடையது நானே இணைக்க முடியுதான்னு பார்க்கிறேன்.
குறிப்பு அனுப்பியமைக்க்கு மிக்க நன்றி
மலிக்கா இணைக்க முடியலையா?
மறுக்க ஒருக்கா முயற்சி செய்யுங்கோஒ
இல்லன்னா என்னான்னு பார்க்கலாம்//
அம்மணி பிஸியிலும் இந்த அக்காவின் அழைப்புக்கு இங்க வந்து எட்டி பார்த்ததுக்கு மிக்க நன்றி ந்க்கோஓஓஓஓ ஓஓ
அதிரா இன்னும் நிறைய அனுப்ப்புங்கோ படம் அழகாக இருக்ன்கோனுமாக்க்கும்//
ஆசியா எப்படி நீக்குவதுன்னு தெரியல , நீங்க இணைக்கும் போது உங்களுக்கு இண்டு மார்க் காண்பிக்கும் முடிந்தால் டெலிட் பண்ணுங்கள்
இல்லனா விட்டுங்கோ
கோவை2தில்லி வருகைக்கும் , குறிப்புகளை இணைப்புகொடுத்தமைக்கும் மிக்க நன்றி
மாதேவி வாங்கோ இணைப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி
கோபு சார் வருகைக்கு மிக்க நன்றி
//பேச்சிலர்களுக்கான போட்டின்னு சொல்லிட்டு, கல்யாணம் ஆனவங்களையா கலந்துக்க கூப்பிட்டு இருக்கீங்க?? அப்ப பேச்சிலர்னு சொல்றதெல்லாம் பார்மாலிட்டிக்கு தானா??//
தம்பி சிராஜ்
இது பேச்சுலர்கள் சமையலுக்கு குறீப்பு தேடும் போது ஈசியா இருக்க நாங்க போட்டு வைக்கிறோம்.
முடிந்தால் நீங்களும் கலந்து கொள்ளலாம்.
வருகைக்கு மிக்க நன்றி
நட்புடன் ஜமால் நீங்கள் எல்லாம் சமைத்து போஸ்ட் பண்ணுவீங்கன்னு பார்த்தேன்
வாங்க ல்ஷ்மி அக்கா இதென்ன கேள்வி வரலாமான்னு.
நிஹானா குறிப்பை இணைத்தமைக்கு மிக்க நன்றி
மேனகா உங்கள் ஈசி குறீப்புகளை நான் எதிர் பார்க்கிறேன்.
ராதா ராணி மிக்க நன்றி
ராம லஷ்மி நீங்களும் கண்டிப்பாக அனுப்பனும்.
ஜலீலா நீயே இணைச்சுடும்மா சிரமத்துக்கு ஸாரிம்மா
நல்லதொரு முயற்சி !
வெற்றிகரமாக அமைந்திட என் வாழ்த்தும் / துஆவும்
நன்றி !
நல்லதொரு ஈவெண்ட், இன்ஷா அல்லாஹ் கலந்துக்கொள்ள முயற்சி செய்கிறேன். என்னையும் அழைத்ததற்கு நன்றி ஜலீலாக்கா :)
jaleela en i d echumi@gmail.com
Perfect event for all.. Glad to follow u...
http://recipe-excavator.blogspot.com
என்னுடைய 10 குறிப்புகளை இனைத்துள்ளேன் அக்கா....
அன்பின் ஜலீலா - ஏற்கனவே 161 குறிப்புகள் வந்துள்ளன - இன்னும் 6 நாட்கள் உள்ளன - நல்லதொரு முயற்சி - அட்டகாசமான போட்டி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
லஷ்மி அக்கா உங்கள் குறிப்புகளை இணைத்து விட்டேன்
சேக்கன்னா உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
அழைப்பை ஏற்று வருகைக்கு மிக்க நன்று அஸ்மா
வருகைக்கு மிக்க நன்றி சங்கீதா
நன்றி மேனகா
வாங்க சீனா ஐய்யா .
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
ஜலீ முடிந்தமட்டும் ஒரு வழியா போராடி அனுப்பி ஜெயித்து விடேன். இந்த ஈவெண்டுக்கு என்னோட குறிப்பு போகுமா திரும்ப வருமா, இல்லை பாதியிலே உப்பு காரம் கம்மி என்று திரும்ப வருமா என்று எதிர்பார்த்து ஒரு வழியா இங்கு வந்து சேர்ந்துடுச்சு. அதில் ஒரு சின்ன பிழை ஜலீ மிண்ட் ரைஸ் என்று ஆட் செய்வதற்க்கு பதி வெஜ் கேசடியா என்று டைப் செய்துவிட்டேன் அதை எப்படி ரீ நேம் ஆட் செய்வது தெரியல்லை கொஞ்சம் கோபிச்சுக்காமா இந்த விஜிக்காக அதை ஏதாவது டெலிட் செய்ய முடியுமா இல்லை நேம் செரிமனி வைத்தால் கூட போதும்
இதில் பங்கு பெற்ற எலலோருக்கும் என் வாழ்த்துக்கள். வாழ்க ஜலீ.
http://pudugaithendral.blogspot.com/2012/12/blog-post_18.html
இதோ என்னுடைய பதிவு
http://mytadkacorner.blogspot.in/2011/08/paneer-burji-dosa.html
இன்னொரு லிங்க் :))
http://enrenrum16.blogspot.com/2012/12/blog-post_19.html
ஈசி இறால் குழம்பு
இது என்றென்றும் பதினாறின் குறிப்பு
இணைக்க வந்தேன் அதற்குள் லின்கி டூல் குளோஸ் ஆகி விட்டது.
இதை கணக்கில் எடுத்து கொண்டேன்.
போட்டி அறிவித்து ஒரு மாதம் ஆகி விட்டது.
நாளை குளாஸ் ஆக வேண்டிய லின்கி டூல் இன்றே குளாஸ் ஆகிவிட்டது.
பரவாயில்லை யாரும் பயப்பட வேண்டாம்
எல்லாம் என் மெயிலுக்கு வந்து விட்டன.
இனி இன்றிலிருந்து யார் யார் கிட்ட இருந்து எத்தனை குறிப்புகள் கிடைக்க பெற்றன என்று கணக்கெடுகக் ஆரம்பிக்கனும்.
அனுப்பிய வரை எல்லாருடைய குறிப்பும் கிடைத்து விட்டது
வேறு யாரும் அனுப்ப விரும்பினால் , நாளைக்குள் என் மெயில் ஐடிக்கு அனுப்பிவிடுஙக்ள்
இன்று அஸ்மா இணைக்கிறேன் என்றார்கள் அஸ்மா என் மெயிலுக்கு அனுப்பி விடுஙக்ள்
பூஸாரே நீங்க இன்னும் நிறைய செய்து எடுத்து வரேன் என்றீர்கள்
நாளை வரை மெயிலில் அனுப்பலாம். அதற்கு பிறகு நோ நோ நோ
ஒகே
இதையே அடுத்த பதிவிலும் போடுகீறேன்.
ஜலீலாக்கா.. என்னோட குறிப்புகளை மெயிலில் அனுப்பியிருக்கேன் பாருங்க..
சரி, ஜலீலாக்கா என்னை மிரட்டாத குறையா செல்லமா, வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக்கு ஒரு ரெசிபி சொல்லுங்க் சொல்லுங்கன்னு நச்சு.... நம்புறீங்களா இல்லியா.. ம்ம் நம்புங்க....நம்பித்தேன் ஆகணும் :)) அதனால அவங்க முதல் போட்டிக்கு என்னுடைய குறிப்பு. (இது உன்னுதா, அம்மாவுதான்னு யாரும் கேட்கப்படாது.... ரூல்ஸ்...ஸ்ஸ்ஸ்!!)
லஞ்சில் பிரியாணி + தால்ச்சா + தயிர் சட்னி + சிக்கன் பர்பட்வாலா (கரெக்ட்டா சொல்லுங்க.... BURBETWAALAA)... சரி ஒவ்வொன்னா பாக்கலாம் :))
ப்ளாக் லின்க்: http://mydeartamilnadu.blogspot.com/2012/12/blog-post_22.html
தமிழ்மணம் ஓட்டு லின்க்: http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1211835
குறிப்பு போட்டுட்டேன்... எப்படி உங்க ப்ளாக்ல இணைப்பது தெரில :( ப்ளீஸ் இணைச்சுடுங்க அக்கா... :)
எல்லாருடைய குறீப்புகளும் கிடைக்க பெற்றேன்
அனைவருக்கும் மிக்க நன்றி
http://samaiyalattakaasam.blogspot.com/2013/01/blog-post_3.html
இதில் அனைத்தையும் இனைத்துள்ளேன் சரி பாருங்கள்
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா