Tweet | ||||||
Saturday, November 17, 2012
சாசேஜ் பிரட் சாண்ட்விச் - Sausage Bread Sandwich
பிரெட் சாசேஜ் சாண்ட்விச்
தேவையானவை
பிரட் ஸ்லைஸ் - 6
சாசேஜ் - 2
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
சில்லி சாஸ் - அரை ஸ்பூன்
உப்பு தூள் - சிறிது
கெட்சப் - தேவைக்கு
பட்டர் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை
சாசேஜை வேகவைத்து இரண்டாக அரிந்து பிரெட்டில் வைக்கும் சைஸுக்கு கட் செய்யவும்.
தவ்வாவில் பட்டர் போட்டு பிரட்டை இருபுறமும் சிவற விட்டு எடுக்கவும்.
அதே தவ்வாவில் சிறிது பட்டர் போட்டு சாசேஜை மிளகாய் தூள், உப்பு தூள், சில்லிசாஸ் சேர்த்து வறுத்தெடுக்கவும்.
ஒரு ப்ரெட்டில் கெட்சப் தடவி சாசேஜை வைத்து மீண்டும் சிறிது கெட்சப் ஊற்றி மற்றொரு பிரெட்டினால் மூடவும்.
குழந்தைகளுக்கு பிடித்த பிரெட் சாசேஜ் சாண்ட்விச் ரெடி.
சாசேஜ் சாண்ட்விச் இங்கே சென்று பார்க்கலாம்
Subscribe to:
Post Comments (Atom)
16 கருத்துகள்:
அருமை... செய்து பார்ப்போம்... நன்றி...
குழந்தைகளுக்கு மட்டுமில்ல எல்லாருக்கும் பிடிக்கும்னு நினைக்கிறேன். சூப்பர் அண்ட் ஈசி ரெசிபி
என் மகளுக்கும் ரொம்ப பிடிக்கும் ..
இதுவரை பிரெட்டில் வைத்து செய்ததில்லை ..தனியாகத்தான் சாப்பிடுவா ..இது புது முறையாக இருக்கு ..ரெசிப்பி பகிர்வுக்கு நன்றி
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாண்ட்விச் சூப்பர்ர்...
சாண்ட்விச் நல்லாருக்கு ஜலீலாக்கா.
வாரத்தில் ஒருநாள் சமுனில்(லாங் பன்) வைத்து செய்து மகளுக்கு ஸ்கூலிற்கு அனுப்புவேன்.ப்ரெட்டில் எப்பவாவது செய்வதுண்டு.பார்க்கவே அருமை.
super aa irukku. kids would love this :)
Super tempting sandwich,just love it.
Seithu parka aaval varuhirathu akka
கண்டிப்பாக செய்து பாருங்கள் தனபாலன் சார் வருகைக்கு மிக்க நன்றி
ஆமாம் இது பிள்ளைகள் பெரியவர்கள் ஈசியாக சாப்பிடும் சாண்ட்விச்
ரொம்ப நாள் கழித்து தேடி வந்தமைக்கு நன்றீ
ஏஞ்சலின் உங்கள் குழந்தைக்க்கும் ரொம்ப பிடிக்குமா?
நான் பிரட் சின்ன பன், லாங்க் பன் எல்லாத்துலேயேயும் வைத்து கொடுப்பேன்ன்.
இதை எப்படி செய்து கொடுத்தாலும் பிள்ளைகளுக்கு ரொம்ப் பிடிக்கும்
ஆமாம் மேனகா குழந்தைகளுகு ரொம்ப் பிடித்த சாண்ட்விச்
சாந்தி வருகைக்கு மிக்க நன்றி
ஆமாம் ஆசியா பிள்ளைகளுக்கு பர்கர் , நக்கெட்ஸ்க்கு அடுத்து ரொம்ப விரும்புவது சாசேஜ் தான் , அதுவும் யு ஏ யில் கேட்கவே வேண்டாம்
மிக்க நன்றீ பிரியா
நன்றி சித்ரா
நன்றி பாயிஜா செய்து பாருங்கள்
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா