டயட்டில் இருப்பவர்களுக்கு அருமையான பொரியல் , சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.சீக்கிரமாக வெந்துவிடும். பேச்சுலர்கள் சுலபமாக தயாரித்து விடலாம்.
மஞ்சள்
பூசணி பொரியல்
தேவையானவை
மஞ்சள் பூசணி
– 250 கிராம்
மிளகாய் தூள்
– ½ தேக்கரண்டி
உப்பு –தேவைக்கு
மஞ்சள் தூள் –
¼ தேக்கரண்டி
துருவிய
தேங்காய் ஐஸ் கியுப் – 2
தாளிக்க
எண்ணை - 2 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம்
பருப்பு, கடலை பருப்பு – தலா ஒரு தேக்கரண்டி
காஞ்ச மிளகாய் - 2
பூண்டு - 2 பல்
பொடியாக அரிந்த
பச்சமிளகாய் – 1
பொடியாக அரிந்த
தக்காளி – 1 மேசைகரண்டி
செய்முறை
தாளிக்க
கொடுத்துள்ளவைகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கருகாமல் தாளிக்கவும்.
அரிந்த பூசணிக்காயை
சேர்த்து மிளகாய்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி தண்ணீர் தெளித்து மூடி
போட்டு தீயின் தனலை குறைவாக வைத்து வேகவிடவும், 5 நிமிட்த்தில் வெந்து விடும்.
வெந்த்தும் துருவிய
தேங்காய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி இரக்கவும்.
சுவையான மஞ்சள் பூசணி
பொரியல் ரெடி.
வொயிட் ரைஸ் மற்றும் சப்பாத்தி, ரசம் சாத்துக்கு பொருத்தமாக இருக்கும்.
பரிமாறும் அளவு : 3 நபர்களுக்கு
ஆயத்த நேரம் : 7 min
சமைக்கும் : 10 min
ஆயத்த நேரம் : 7 min
சமைக்கும் : 10 min
Tweet | ||||||
7 கருத்துகள்:
பூசணிப் பொரியல் ஊரில் வீட்டில் காய்க்கும் பூசணிக்காயில் செய்வார்கள். இங்கு வந்த் பிறகு சாப்பிடவே இல்லை.
சுலபமான செய்முறை விளக்கம் அக்கா.
அருமை....
இங்கு தான் எல்லா மார்கெட்டுகளிலும் மஞ்சள் பூசணி கிடைக்கிறதே.. சே குமார்.
வருகைக்கு மிக்க நன்றி
we call it as PARANGI FRUIT poosai veru
பூசணி புராணம் ஆரம்பிக்கப்போகின்றதே :))) நானும் பூசணிசமைத்து படம் எடுத்து வைத்திருக்கின்றேன் பின்பு தருகின்றேன்.
நன்றாக இருக்கின்றது ஜலீலா.
இப்போது மஞ்சள் பூசணி சீஸன்.
பூசணி சமையல் குறிப்பு அருமை.
செய்து விடுகிறேன்.
Naan ithanai samaithathey illai.. Ungal seimurai partha pinbu aasai varuherathu.
நல்லாயிருக்கு ஜலீலா.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா