Tweet | ||||||
Saturday, December 8, 2012
சிம்பிள் வெங்காய நார்த்தங்காய் ஊறுகாய் (கர்பிணி பெண்களுக்கு)
சிம்பிள் வெங்காய
நார்த்தங்காய் ஊறுகாய் (கர்பிணி பெண்களுக்கு)
மசக்கையின் போது கர்பிணி பெண்களுக்கு
வாய்க்கசப்பாக இருக்கும் எது சாப்பிட்டாலும் குமட்டும், சாப்பிடும் போது நல்ல
இருக்கும் சாப்பிட்டு முடித்த்தும் மறுபடி வாய் கசக்கும்.
அதுக்குஇந்தஊறுகாய்ரொம்பநல்லஇருக்கும்.
அந்த காலத்தில் என் கிராண்மாவின் அம்மா
செய்த்து இது.
தேவையானவை
உப்பில் ஊறிய
நார்ந்தங்காய் – அரை துண்டு (அல்ல்து தேவைக்கு) அல்லது நார்த்தங்காய் ஊறுகாய் 1 மேசைகரண்டி
பொடியாக நறுக்கிய
வெங்காயம் – 2
கறி உருளை கிழங்கு
சால்னாவில் இருக்கும் பச்சமிளகாய், உருளை கிழங்கு, சால்னா ஒரு குழிகரண்டி
அல்லது வெஜ் குருமா
சிருக்கா என்பார்கள்
கருப்பாக இருக்கும் புளிப்பு தன்மைக்கு முன்பெல்லாம் ஊறுகாய்க்கு அதான் பயன்
படுத்துவார்கள்.
இல்லை என்றால்
வெள்ளை வினிகர் (அ)
கருப்பு வினிகர் - 2 தேக்கரண்டி
செய்முறை
நார்த்தங்காயை
பொடியாக அரிந்து கொள்ளவும் அதில் மேலே குறிப்பிட்ட அனைத்தையும் சேர்த்து கட்டியாக
பிசையவும்.
ஒரு முறை செய்து
சாப்பிட்டால் சுவை நாவில் அப்படியே நிற்கும்.
மறுபடியும்
மறுபடியும் சாப்பிடனும் போல் இருக்கும்
டிஸ்கி: ரசம் சாதம் ,
தயிர் சாத்துக்கு வைத்து சாப்பிடலாம்.
கர்பிணி பெண்கள் இதை
அடிக்கடி செய்து சாப்பிடலாம்.
செய்த்தும் ஒரு
நாளில் முடித்துவிடனும். கைபோட்டு பிசைந்த்தால் மறுநாள் கெட்டு போய்விடும்.
பிரஷர் (பீபி) அதிகம் உள்ளவர்களுக்கு டாக்டர் ஊறுகாயில் எண்ணையும்
உப்புமாய் இருப்பதால் ஊறுகாயை தவிர்க்க சொல்வாங்க . இதில் எண்ணையும் இல்லை உப்பில்
ஊறிய நார்த்தங்காயை கழுவிட்டும் இதில் பிசைந்து சேர்க்கலாம்.
சாப்பிடும் போது அந்த சால்னாவின் ருசி ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நார்த்தங்காயின் ஊறுக்காய் ருசி ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் வெங்காயத்தை நறுக்கு நறுக்குன்னு
கடிச்சிக்கிட்டே, பச்சமிளகாய் காரத்துடன் ஆஆஆஆ. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சப்பு கொட்டி கொண்டு
சாப்பிடலாம்.
இது எங்க டாடிக்கு ரொம்ப பிடிச்ச ஊறுகாய் இது , ய்ம்மா இன்னும் கொஞ்சம் சிறுக்கா ஊற்றுமா என்பார்கள். இந்த ஊறுகாய் எனக்கும் ரொம்ப பிடிக்கும்
இந்த ஊறுக்காய் சாப்பிட்ட சாப்பாட்டை நல்ல செமிக்க வைக்கும்.
இன்று அவர்கள் பிறந்த நாள் , எப்போதும் வருடாவருடம் நான் தான் காலையில் போன் செய்வேன்.
இப்ப எங்க டாடி எங்க கூட இல்லை. இன்றெல்லாம் மனசே சரியில்லை டாடி என்ன என்ன பேசுவாங்களோ அந்த பழைய நினைவுகள்ளைஎல்லாம் அசைபோட்டு கொண்டு இருந்தேன்.
Linking to Gayathri's Walk-through Memory Lane hosted by Nithu and My own event - Bachelor's Feast
Subscribe to:
Post Comments (Atom)
5 கருத்துகள்:
சகோதரிகளுக்கு பயன்தரும் பதிவு
தொடர வாழ்த்துகள்...
செய்முறை வித்தியாசமாக இருக்கு.யாராவது செய்து தந்தால் சாப்பிடலாம்.நார்த்தங்காய் ஊறுகாய் எனக்கு மிகவும் பிடிக்கும்.
அக்கா.... உங்களுக்காக:
கணவன் இறந்தால் நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கமாக இருக்கலாம். மற்றவர்கள் யார் இறந்தாலும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கக்கூடாது. மூன்று நாட்கள் கழிந்து விட்டால் சகஜ நிலைக்குத் திரும்பிவிட வேண்டும்.
நான், தமது சகோதரரை இழந்திருந்த ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலிலி) அவர்களிடம் சென்றேன். அவர் நறுமணம் பூசிக்கொண்டு, “"இது எனக்குத் தேவையில்லைதான்; ஆயினும் "அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பக்கூடிய பெண் தனது கணவனைத் தவிர வேறு யாருடைய இறப்பிற்கும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்கக் கூடாது; தனது கணவன் இறந்துவிட்டால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் துக்கம் கடைப்பிடிக்க வேண்டும்' என நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது நின்றவாறு கூற நான் கேட்டிருக்கிறேன்'' என்றார்.
அறிவிப்பவர் : ஸைனப் பின்த் அபீ ஸலமா (ரலி)
நூல் : புகாரி (1282)
மற்றபடி ரெசிபிய நீங்க எழுதிய விதத்திலேயே சாப்பிடும் ஆசையை த்தூண்டுது.... :))
தந்தையின் நினைவு மறக்க கூடியதா!
அவர் உங்கள் நினைவில் வாழவார். என் அப்பாவும் கார்த்திகை மாதம் தான் கார்த்திகை திங்கள் அவர் நினைவு வந்துவிடும். அம்மாவும் கார்த்திகை திங்கள் தான் இருவரையும் எப்போதும் நினைத்துக் கொள்வேன்.
ஊரிலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு தான் வந்தேன் உங்கள் அழைப்பை பார்த்தேன்.
உங்கள் அழைப்புக்கு நன்றி.
நான் இதுவரை சமையல் குறிப்பே எழுதியது இல்லை. முயற்சிக்கிறேன்.
நார்த்தை ஊறுகாய் மிக நன்றாக இருக்கிறது.
இது எனக்கு மிகவும் பிடித்த ஊறுகாய்.
பதிவைப்படித்ததும், எனக்கும் மசக்கை வந்து விட்டது போல தோன்றியதால், உடனடியாக எங்க ஊர் பெரிய மார்க்கெட்டுக்கு ஓடிப்போய் பத்து நார்த்தங்காய்கள் வாங்கிவந்து, நானே அவற்றை கழுவி விட்டு, நறுக்கி விதைகளை நீக்கி விட்டு, பொறுமையாகப் பொடிப்பொடியாக நறுக்கி உப்பு போட்டு வைத்து விட்டேன்.
நாளை என் மனைவி அதில் காரம் சேர்த்து விடுவாள்.
அடுத்த ஒரு மாதத்திற்கு வாய்க்கு ருசியாக சாப்பிட்டு மகிழ்வேன்.
பகிர்வுக்கு நன்றி. அன்புடன் VGK
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா