Friday, April 23, 2010

பேச்சுலர்ஸ் பிஷ் சால்னா



மீன் குழம்பு பிடிக்காதவர்கள் யாருமே கிடையாது.வெளிநாடுகளில் சமைத்து சாப்பிடும் பேச்சுலர்களுக்கு ஈசியாக செய்ய இந்த முறை உதவும்.
மீன் குழம்பு என்றாலே மசலாக்களை வதக்கி செய்வது, மிளகு சேர்த்து அரைத்து செய்வது, தக்காளி அரைத்து செய்வது இது போல் பல வகையாக செய்யலாம்.

தேவையானவை

கிங் பிஷ் = அரை கிலோ
வெங்காயம் = முன்று
தக்காளி = ஐந்து பெரியது
பச்ச மிளகாய் = முன்று
மிளகாய் தூள் = இரண்டு தேக்கரண்டி
தனியாத்தூள் (கொத்துமல்லி)= இரண்டு மேசை கரண்டி
மஞ்சள் தூள் = கால் தேக்கரண்டி
உப்பு தூள் = தேவைக்கு (இரண்டு தேக்கரண்டி)
புளி பேஸ்ட் இரண்டு மேசைக்கரண்டி (அ) இரண்டு நெல்லிக்கய் சைஸ் புளி
தேங்காய் பவுடர் = முன்று தேக்கரண்டி
தாளிக்க‌
எண்ணை = ஆறு தேக்கரண்டி
க‌டுகு = ஒரு தேக்க‌ர‌ண்டி
வெந்த‌ய‌ம் = கால் தேக்க‌ர‌ண்டி
பூண்டு = ப‌த்து ப‌ல்
க‌ருவேப்பிலை = ஐந்து ஆர்க்
கொத்து ம‌ல்லி த‌ழை = சிறிது





செய்முறை
1. மீனை கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
2. வ‌ய‌க‌ன்ற‌ ச‌ட்டியை காய‌வைத்து எண்ணையை ஊற்றி, க‌டுகு, வெந்தய‌ம், பூண்டு த‌ட்டி போட்டு, க‌ருவேப்பிலை சேர்த்து க‌ருகாம‌ல் வ‌த‌க்க‌வும்.
3. வெங்காய‌த்தை பொடியாக‌ அரிந்து சேர்த்து ந‌ன்கு வ‌த‌க்க‌வும்.
4. வெங்காய‌ம் லேசாக‌ ம‌ட‌ங்கிய‌தும் த‌க்காளியை பொடியாக‌ அரிந்து சேர்த்து ப‌ச்ச‌மிளகாயும் சேர்த்து ந‌ன்கு வ‌த‌க்கி தீயின் த‌ன‌லை இர‌ண்டு நிமிட‌ம் குறைத்து வைத்து வேக‌ விட‌வும்.
5. கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ தூள்வ‌கைக‌ளை சேர்த்து இர‌ண்டு ட‌ம்ள‌ர் த‌ண்ணீர் சேர்த்து மீடிய‌மான‌ தீயில் கொதிக்க‌ விட‌வும்.
6. புளி பேஸ்ட் சேர்க்க‌வும். அல்ல‌து புளியை க‌ட்டியாக‌ க‌ரைத்து ஊற்ற‌வும். கிரேவி திக்காக‌ இருந்தால் கூட‌ கொஞ்ச‌ம் த‌ண்ணீர் சேர்க்க‌வும்.

7. ந‌ல்ல‌ கொதித்து ம‌சாலா வாடை அட‌ங்கிய‌தும். மீனை சேர்த்து, தேங்காய் ப‌வுட‌ரையும் க‌ரைத்து ஊற்றி மீண்டும் 7 நிமிட‌ம் கொதிக்க‌ விட்டு இற‌க்கும் போது கொத்து ம‌ல்லி த‌ழை தூவி இர‌க்க‌வும்.















மீன் சீக்கிரத்தில் வெந்துவிடும், மீனை போட்டதும் சும்மா கரண்டிய போட்டு கிளறக்கூடாது. இல்லை என்றால் யாருக்கும் ஒரு துண்டும் கிடைக்காது. அப்படியே லேசாக சட்டியின் இருபக்கமும் துணி கொண்டு பிடித்து உலசி விடனும்.

// இப்போது வெளி நாடுகளில் எல்லா பொருட்களூம் பாக்கெட்டு களில் கிடைக்கிறது , மீன் மசாலா கூட கிடைக்கும், தக்காளி வதக்க முடிய வில்லை என்றால் தக்காளி பேஸ்ட் டின், பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. வேலையும் மிச்சம். அவசரமாக செய்யும் பேச்சுலர்களுக்கு இது ரொம்ப ஈசி.
//ஆறு நபர்கள் இதை சாப்பிடலாம்//






51 கருத்துகள்:

GEETHA ACHAL said...

சூப்பர்ப் மீன் குழம்பு...அருமை....

பித்தனின் வாக்கு said...

நல்லா இருக்குங்க. இதுல கிங் பிஷ்ன்னு சொன்னிங்க பாருங்க. அது எங்களுக்கு கிங் பிஷ்சர்ன்னு தெரியுது. ஹா ஹா நன்றி ஜலில்லா.

Chitra said...

என்னதான் சொல்லுங்க..... மீனு மீனுதான்.... :-)

ஜெய்லானி said...

//கிங் பிஷ் = அரை கிலோ//

//ஆறு நபர்கள் இதை சாப்பிடலாம்//


ஆறு பேரும் மூனு வயசுல உள்ள வங்களா ?.ஏன்னா எனக்கே நாலு கிலோ வேனும்.

ஜலீலக்கா இந்த கமெண்ட பாத்துட்டு நீங்க மாத்தினா அப்புறம் பாருங்க . எனக்கு கெட்ட கோவம் வந்து மங்குக்கு 20 தூக்க மாத்திரையை குடுத்து தூங்க வச்சிடுவேன் .

இல்லாட்டி மங்கு ஊரூராபோய் என் மானத்தை வாங்கிடுவான்.

சசிகுமார் said...

//கிங் பிஷ் = அரை கிலோ//

வேறெந்த மீனிலும் செய்ய கூடாதா. அப்படி செய்தால் என்னவாகும். சூப்பர் பதிவு அக்கா. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Jaleela Kamal said...

முதலில் வந்து கமெண்ட் கொடுத்ததற்கு ரொம்ப சந்தொஷம் கீதா ஆச்சல்
நன்றி

Jaleela Kamal said...

சுதாகர் சார் சாப்பிடா த உணவிற்கும் வந்து கமெண்ட் போட்டது ரொம்ப சந்தோஷம்.

உங்கள் எந்த பிஷுன்னு தெரியாது தான் நீங்கள் இதே செய்முறையில் சேன கிழங்கு, கருனைகிழங்கு, சேப்பங்கிழங்கில் செய்யலாம்

Jaleela Kamal said...

சித்ரா ஆமாம் மீனு தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் , எனக்கு சங்கரா மின் தான் பிடிக்கும் , ஊருக்கு போனதும் அம்மா ஒரு பிளேட் பில்லா பொரித்து கொடுத்து சாப்பிட சொல்வாங்க , ஒரு வருடம் பிரிந்த அத்தனை மீனுன்னு அவர்களுக்கு கனக்கு போல ,

தொடர் வருகை தந்து கமெண்ட் அளித்தமைக்கு மிக்க ந்ன்றி சித்ரா

Jaleela Kamal said...

நான் நினைத்தேன் ஜெய்லானி, மீன் பிரியர்களுக்கு அரைகிலோ கூட பத்தாதேன்னு,

இது குழம்பு, இதற்கு முன்கொடுத்த கிரிஸ்பி பிஷ் பிரை தேவைக்கு பொரித்து கொள்ள வேண்டியது,எவ்வளவு வெனுமே அடித்து கொள்ளலாம்.

இத படிச்சதும் சரியான காமடி , மங்கு வந்து உங்களை கண்டிப்பா நொங்க் தான் போகுது,

Jaleela Kamal said...

சசி குமார் , எல்லா விதமான மீனிலும் செய்யலாம், முள்ளு மீனுக்கு அரைத்து ஊற்றி செய்வது நல்லது.

எல் கே said...

//மீன் குழம்பு பிடிக்காதவர்கள் யாருமே கிடையாது.//

ஏனுங்க எனக்கு பிடிக்காதுங்க..

//இல்லாட்டி மங்கு ஊரூராபோய் என் மானத்தை வாங்கிடுவான்.//

நடக்கட்டும்

malar said...

இன்சாஅல்லா நாளைக்கு வைது பார்கவேண்டியதுதான்....

முற்றும் அறிந்த அதிரா said...

(ஜலீலாக்கா, இது 2ம் தடவை அனுப்புகிறேன், முன்பு அனுப்பியது கிடைக்காவிட்டால் இதைப் போடுங்கோ, முன்பு எரர் என வந்தது).

ஜலீலாக்கா அருமையான ரெசிப்பி. தக்காளி, பழப்புளி, தே.பால் மூன்றும் சேர்ந்தாலே அதன் சுவையே தனிதான்.

சொல்லவும் பயம்மாஆஆஆஆஅக்கிடக்கு.... இங்க கழுகுக் கண், மீன் கண்ணோடெல்லாம் சனம் திரியினமாமே... இருந்தாலும் சொல்லுறேன், எனக்கு மீனை எப்பூடிச் சமைத்தாலும் புய்க்கும்..... இது நமக்குள் இருக்கட்டும் ஜலீலாக்கா....

ஏதோ நித்திரைக்குளிசையாமே... காதில கேட்டுது... உண்மையிலேயே கொடுத்தாச்சோ? ஏனெண்டால் ஆளைக்காணேல்லை:)... நான் எம்பியைச் சொன்னேன்...

மங்குனி அமைச்சர் said...

மங்குனி அமைசர் ?
ஆஜர் டீச்சர்

மங்குனி அமைச்சர் said...

///ஜெய்லானி said...

//கிங் பிஷ் = அரை கிலோ//

//ஆறு நபர்கள் இதை சாப்பிடலாம்//


ஆறு பேரும் மூனு வயசுல உள்ள வங்களா ?.ஏன்னா எனக்கே நாலு கிலோ வேனும்./////


எப்போல இருந்து மீன் விக்க ஆரம்பிச்ச

/// ஜலீலக்கா இந்த கமெண்ட பாத்துட்டு நீங்க மாத்தினா அப்புறம் பாருங்க . எனக்கு கெட்ட கோவம் வந்து மங்குக்கு 20 தூக்க மாத்திரையை குடுத்து தூங்க வச்சிடுவேன் .

இல்லாட்டி மங்கு ஊரூராபோய் என் மானத்தை வாங்கிடுவான்.///



அப்பா உன் மானம் உன்கிட்ட இல்லையா? , ஊரு ஊரா தெரு தெருவா சந்தி சிரிசிகிட்டு இருக்கா ?

ஜெய்லானி said...

@@@ malar--//இன்சாஅல்லா நாளைக்கு வைது பார்கவேண்டியதுதான்....//


வச்சி பாத்துட்டு தூக்கி போட்டுடாதீங்க. முடிஞ்சா சப்பிடுங்க முடியாட்டி பத்து நாள் ஃபிரீஸர்ல வச்சி பின்ன மங்குகிட்ட குடுத்துடுங்க அது பழசு தாங்க விரும்பி சாப்ப்பிடும்

மங்குனி அமைச்சர் said...

/// Chitra said...

என்னதான் சொல்லுங்க..... மீனு மீனுதான்.... :-)////


என்னா ஓர் தத்துவம் , என்ன ஒரு கண்டு பிடிப்பு , இவருக்கு ஆஸ்கார் அவார்ட் தர பரிதுரை செய்கிறேன்

மங்குனி அமைச்சர் said...

/// Jaleela said...

சித்ரா ஆமாம் மீனு தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் , எனக்கு சங்கரா மின் தான் பிடிக்கும் , ஊருக்கு போனதும் அம்மா ஒரு பிளேட் பில்லா பொரித்து கொடுத்து சாப்பிட சொல்வாங்க , ஒரு வருடம் பிரிந்த அத்தனை மீனுன்னு அவர்களுக்கு கனக்கு போல ,

தொடர் வருகை தந்து கமெண்ட் அளித்தமைக்கு மிக்க ந்ன்றி சித்ரா///


பாருங்க நீங்க ஒரு வருஷம் பிரிஞ்சதுக்கே உங்க அம்மா உங்கள தேடுராக , ஆனா அந்த தட்டுல இருந்த பொரிச்ச சகரா மீனோட அம்மா , அப்பா , தாத்தா, பாட்டி , சிஸ்டர்ஸ் , பிரதர்ஸ் எல்லாரும் அதுகள தேட மாட்டாகளா ?
(உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.......................... அப்பா மேடம் கொஞ்சம் தண்ணி குடுங்க )

மங்குனி அமைச்சர் said...

///athira said...

(ஜலீலாக்கா, இது 2ம் தடவை அனுப்புகிறேன், முன்பு அனுப்பியது கிடைக்காவிட்டால் இதைப் போடுங்கோ, முன்பு எரர் என வந்தது).////

மொதொது வர்ற வழில கழுத சாப்ற்றுச்சு

/// ஜலீலாக்கா அருமையான ரெசிப்பி. தக்காளி, பழப்புளி, தே.பால் மூன்றும் சேர்ந்தாலே அதன் சுவையே தனிதான்.////


கொஞ்சம் பெனாயிலும் செதிங்கன்னா இன்னும் சுவையா இருக்கும்

//// சொல்லவும் பயம்மாஆஆஆஆஅக்கிடக்கு.... இங்க கழுகுக் கண், மீன் கண்ணோடெல்லாம் சனம் திரியினமாமே...////

யானை கண்ணோட ரெண்டு மூணு யான திரியுதாமே ?

/// இருந்தாலும் சொல்லுறேன், எனக்கு மீனை எப்பூடிச் சமைத்தாலும் புய்க்கும்..... இது நமக்குள் இருக்கட்டும் ஜலீலாக்கா....///


மேடம் , மீனு முள்ளு பிறை போட்டு இங்க ஒரு பிளேட் குடுங்க

//// ஏதோ நித்திரைக்குளிசையாமே... காதில கேட்டுது... உண்மையிலேயே கொடுத்தாச்சோ? ஏனெண்டால் ஆளைக்காணேல்லை:)... நான் எம்பியைச் சொன்னேன்...////


ஆமா , இனிமே எல்லாரு நித்திரையிலும் (உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... என்னா தமிழ் வார்த்த ) வந்து சாவடிப்பேன்

மங்குனி அமைச்சர் said...

///ஜெய்லானி said...

@@@ malar--//இன்சாஅல்லா நாளைக்கு வைது பார்கவேண்டியதுதான்....//


வச்சி பாத்துட்டு தூக்கி போட்டுடாதீங்க. முடிஞ்சா சப்பிடுங்க முடியாட்டி பத்து நாள் ஃபிரீஸர்ல வச்சி பின்ன மங்குகிட்ட குடுத்துடுங்க அது பழசு தாங்க விரும்பி சாப்ப்பிடும்////


மேடம் , ஜெய்லானிக்கு தெரியாம வைங்க , இல்லாட்டி நைட்டு வந்து திருடிட்டு போய்டுவான்

சீமான்கனி said...

ஐ..ஈசியா இருக்கு அக்கா ட்ரை பண்ணிருவோம்...நன்றி அக்கா..

Starjan (ஸ்டார்ஜன்) said...

சூப்பர் மீன் குழம்பு.. நானும் இந்தமுறையில்தான் செய்வேன். என் மனைவி சொல்லிக் கொடுத்தாங்க..

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஆஹா சூப்பரா இருக்கே மீன். நல்லா ஆக்கிருக்கீங்க ஜலீலாக்கா.

Asiya Omar said...

பேச்சுலர்ஸ் ஃபிஷ் சாலனா பேரு நல்லா இருக்கு,படமும் சூப்பர்.

malar said...

இந்த மங்குனியும் ஜெய்லானியும் ஒன்ரா அல்லது பிரதாபும் கண்ணனும் மாதிரி அடிச்சுகிறாங்களா?

SUFFIX said...

ஜலீலாக்காக்கு தான் இது மாதிரி பெயரெல்லாம் வைக்கத் தெரியும்போல!!

//Chitra said...
என்னதான் சொல்லுங்க..... மீனு மீனுதான்.... :-)//

ஆமா மீனு மீனு தான், அது ஆடு ஆக முடியாது....:)

ஹரீகா said...

ஜலீலாக்கா வந்துட்டேன்)))). இது பேச்சுலர்களுக்கு மட்டும் தானா. இல்லை என்னை மாதிரி எதுவுமே பேசாத "பேச்சிலார்" எல்லாம் சாப்பிடகூடாதக்கா. கிங் பிஷ் என்றால் நெய் மீன்/வஞ்சிர மீன் தானே. சரியா
**// இந்த மங்குனியும் ஜெய்லானியும் ஒன்ரா, அல்லது பிரதாபும் கண்ணனும் மாதிரி அடிச்சுகிறாங்களா? //**

-- அதானே !! ஆமா ஜெய்லானி அங்கிள், மங்குனி அமைச்சர் அங்கிள் ஊரில் மீன் கிடைக்காதா?? மீனே கிடைக்காதா ஊரிலிருந்து வந்த மாதிரி இப்படி அடிச்சு கிறாங்களே.. எப்பூடி நாங்களும் ராக்கிங் வைப்போம்ல.. ஹை ஜிங்குச்சா

அன்புடன்
ஹரீகா

malar said...

''என்னதான் சொல்லுங்க..... மீனு மீனுதான்....'''

வச்செங்க நல்ல இருந்தது...

நன்றி...

Jaleela Kamal said...

LK வருகைக்கு மிக்கநன்றி


மலர் செய்து பார்த்து சொல்லுங்கள்.

.

Jaleela Kamal said...

எனக்கு மீனை எப்பூடிச் சமைத்தாலும் புய்க்கும்.....அதிரா இத காதில் சொல்ல்லுங்க அப்பரம் பின்னாடி, மீன ஒரு கிலோ வ மொத்த்மா சாப்பிடுபவர் வந்தால் அப்புட்டு தேன்

Jaleela Kamal said...

//வச்சி பாத்துட்டு தூக்கி போட்டுடாதீங்க. முடிஞ்சா சப்பிடுங்க முடியாட்டி பத்து நாள் ஃபிரீஸர்ல வச்சி பின்ன மங்குகிட்ட குடுத்துடுங்க அது பழசு தாங்க விரும்பி சாப்ப்பிடும்////


ஏன் அமைச்சரே மீன பார்த்து வருஷ காலம் ஆகுதா?

Jaleela Kamal said...

எல்லோரும் தேட தான் செய்வார்கள், ஊருக்கு போனா அன்பு தொல்லைகள் தாஙக் முடியாது.

Jaleela Kamal said...

சீமான் கனி இது கண்டிப்பா சுல்பமாக இருக்கும் செய்து பாருஙக்ள்.

Jaleela Kamal said...

ஸ்டார்ஜன் வருகைக்கு மிக்க நன்றி.
நீங்கள் எல்லாம் மீன் குழம்பில் எக்ஸ்பேட் போல இருக்கு,
வெளிநாட்டில் சமைக்கும் பேச்சுலர்கள் எல்லாம் கிரேட் குக்க்கள்.
தான்.

Jaleela Kamal said...

நன்றி ஆசியா

Jaleela Kamal said...

குசும்ப பாருங்க ஷஃபிக்கு..

Jaleela Kamal said...

டியர் ஹரிகா வாஙக் உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.

அட நீங்களும் மங்குவ ஓட்ட ஆரம்பிச்சாசா//

ஜெய்லானி said...

@@@ HARIKA--//
ஜலீலாக்கா வந்துட்டேன்)))). இது பேச்சுலர்களுக்கு மட்டும் தானா. இல்லை என்னை மாதிரி எதுவுமே பேசாத "பேச்சிலார்" எல்லாம் சாப்பிடகூடாதக்கா.//

சாப்பிடலாம் ஆனா தலை, வால் ,ரெக்கை வெட்டி போடுவாங்க இல்லை மீனை கழுவும் போது அதை மட்டும் எடுத்து ஃபிரை பண்னி சாப்பிடுங்க.
//கிங் பிஷ் என்றால் நெய் மீன்/வஞ்சிர மீன் தானே. சரியா//

இல்லைங்க தலையில தொப்பி வச்சிருக்கும் . பாக்குறதுக்கு நம்ம மங்கு மூஞ்சி மாறியே இருக்கும் அசப்பில அது பேரு கிங் ஃபிஷ் . இல்லாட்டி கடல் பாம்பை தின்னுடுவீங்க ஜாக்கிரத

//ஊரிலிருந்து வந்த மாதிரி இப்படி அடிச்சு கிறாங்களே.. எப்பூடி நாங்களும் ராக்கிங் வைப்போம்ல..
//

எலெய் மங்கு, ஓடியேலே ஆடு தானா வந்து தலைய குடுக்குது. சீக்கிரமா வாலே அது வரைக்கும் ஈர துணிய தலைக்கு போட்டு வைக்கிறேன். ஓடிடப்போகுது.

//ஹை ஜிங்குச்சா //

நாங்களும் பாடுவோமே!!!. மட்டன் பிரியாணி ஜிங்குச்சா!!, பாயா ஜிங்குச்சா!! கிட்னி ஃபிரை ஜிங்குச்சா

ஜெய்லானி said...

@@@ Jaleela--//ஏன் அமைச்சரே மீன பார்த்து வருஷ காலம் ஆகுதா?//

இப்ப தான் வெளியே விட்டாங்க .அது வரை கேப்பை களி , சாம்பார்தான் மங்குக்கு கிடைச்சது

ஜெய்லானி said...

@@@Jaleela--//எனக்கு மீனை எப்பூடிச் சமைத்தாலும் புய்க்கும்.....அதிரா இத காதில் சொல்ல்லுங்க அப்பரம் பின்னாடி, மீன ஒரு கிலோ வ மொத்த்மா சாப்பிடுபவர் வந்தால் அப்புட்டு தேன்//

அதிரா வுக்கு புய்த்த மாதிரி ஒரு ரெஸிபி ஜெய்லானி டீ வீ ல வரும் சொல்லி வையுங்க

நட்புடன் ஜமால் said...

அந்த தேங்காய் சேர்ப்பது தான் பேச்சிலார் வாழ்க்கையில் மிக முக்கியம்

Jaleela Kamal said...

//கிங் பிஷ் என்றால் நெய் மீன்/வஞ்சிர மீன் தானே. சரியா//

ஆமாம் ஹரிகா சரிய்யே.

Jaleela Kamal said...

அட டீவியில அடுத்த சமையல் அதிராவிற்கு பிடித்த மீனாம்.

அமைச்சரே, உங்கள் யாணை முட்டை பாயில்ட் புரோகிராஅம் அப்ப கேன்சல்.

அப்படின்னு ஜெய்லானி சொல்லிட்டார்.

அவஙக் வீட்டுக்கு போய் அவரக்ளை கவனித்து கொள்ளுஙக்ள்

Jaleela Kamal said...

சகோ. ஜமால் தேங்காய் பால் சேர்த்தால் மிகவும் சுவை, ஆனால் இப்போது கொலஸ்ராய்ல்,பேட் என்று தேஙகாயின் அளவை எல்லோரும் குறைத்து கொண்டு வருகிறார்கள்.

வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.

Menaga Sathia said...

குழம்பு நல்லா கலரா சூப்பராயிருக்கு...

Unknown said...

Sooper!!

ஹுஸைனம்மா said...

தக்காளி பேஸ்ட் மட்டுமா, வெங்காய பேஸ்ட் கிடைக்குது, தேங்காய்ப் பால் டின்ல கிடைக்குது, சுத்தம் செய்த மீனும் டின்ல கிடைக்குது. செய்முறையும் நீங்க சொல்லிடுறீங்க!! எல்லாத்தையும் ஒண்ணா சேத்து குழம்பு செய்றது பேச்சுலர்ஸ்க்கு ரொம்ப ஈஸிதான்!!

அன்புத்தோழன் said...

அப்போ! திஸ் இஸ் நாட் பார் பேமிலி பீபுல்சா... பேருலயே பேச்சளர் வச்சுருக்கீங்க....

Looks Great......

Vikis Kitchen said...

மீன் குழம்பு சூப்பரோ சூப்பர். பார்த்தாலே சுவை தெரியுது.

பித்தனின் வாக்கு said...

/ / @@@ Jaleela--//ஏன் அமைச்சரே மீன பார்த்து வருஷ காலம் ஆகுதா?//

உங்களுக்குத் தெரியாதா? மங்கு ஆப்கானிஸ்தான் போன கதை. இத்தினி நாளும் அய்யா ஒட்டக கறியும், ஒட்டக பால், வறட்டு ரெட்டிதான் சாப்பிட்டாக.

Krishnaveni said...

looks great. Nice click too

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா