தேவையானவை
பால் பவுடர் - எட்டு தேக்கரண்டி
தண்ணீர் - நாலு டம்ளர் + கால் டம்ளர்
சர்க்கரை - ஏழு தேக்கரண்டி
ஏலக்காய் - முன்று
இஞ்சி - 25 கிராம்
டீ தூள் - இரண்டு தேகக்ரண்டி
செய்முறை
1. தண்ணீர், பால் சர்கக்ரை சேர்த்து கொதிக்க விடவும்.
2. கொதிக்கும் போது டீதூள், இஞ்சி துருவி, ஏலக்காயை தட்டி (அ) இஞ்சியுன் ஏலக்காயை கொர கொரப்பாக அரைத்து சேர்த்து தீயின் தனலை குறைத்து வைத்து கொதிக்க விடவும்.
3. கொதித்து ரங்கு இரங்கியதும் வடிகட்டி விடவும்.
4. சுவையான புத்துணர்வு தரும் இலாச்சி, ஜின் ஜர் டீ ரெடி
குறிப்பு: பால் பவுடரில் டீ போட்டால் திரிந்து போகாதா என்ற சந்தேகம் சிலருக்கு உண்டு, திரிந்து போகும். (பயப்பட வேண்டாம்)
நாங்க டீக்கு பயன் படுத்தும் கெட்டில் மற்றும் கரண்டியை வேறு எதற்கும் பயன் படுத்த மாட்டோம்.
அது டீ போடும் கெட்டிலில், கலக்கும் கரண்டியில் ஏதாவது கார உணவில் பட்டு இருந்தால் திரியும்.அதே போல் இஞ்சியை சரியாக கழுவ வில்லை என்றாலும், கத்தி வேறு ஏதும் வெங்காயம் தக்காளி நறுக்கிய கத்தி பயன் படுத்தினாலும் திரிந்து போகும். பாலை கலக்கியதும் உடனே இஞ்சிய போட்டாலும் திரியும்.
பால் கலக்கி கொதிக்க ஆரம்பித்ததும், டீதூள் போட்டு விட்டு பிறகு இஞ்சி சேர்த்து டீயின் ரங்கு+இஞ்சி காரம் அதில் இறங்க சிறிது நேரம் சிம்மில் வைத்து கொதிக்க விட்டு ஆஃப் செய்து ஒரு நிமிடம் கழித்து வடிக்கவும்.
பிரெஷ் மில்கிலும் போடலாம், அது ஒரு கப்புக்கு ஒன்னே கால் கப் தண்ணீர் அல்லது சம அளவு பயன் படுத்தியும் போடலாம்.
பால் சேர்த்து இஞ்சி சாயா பிடிக்காதவர்கள், பிளாக் டீயில் இஞ்சி ஏலம் தட்டி போட்டும் தயாரித்தும் குடிக்காலாம்.
Tweet | ||||||
33 கருத்துகள்:
அடிக்க வராதீங்க ஜலீ. உங்களுக்குத் தான் தெரியுமே, இமாவுக்கு உங்க பேச்சு புரியிறது இல்ல. வெங்காயத்த உள்ளி என்பீங்க. அது யாரு ரங்கு? நுரையா!!!
tondaiku ithamaathanu
ஆஹா!!! இஞ்சி சாயா வாசனை வருது,
செரிமானத்திற்கு நல்லது.
எனக்கு ஒரு கிளாஸ் பத்தாது .ரெண்டு கிளாஸ் சூடா , பார்ஸல் பிளீஸ்.
நாம ஒன்லி சுலைமானி(எப்பனா ...)
அதுலையும் ஏலக்காய், இஞ்சி போட்டு சாப்பிடுவதுண்டு :)
//அது யாரு ரங்கு? நுரையா!!!//
டீயின் நிறம் இறங்குவதை சொல்வது ரங்-ன்னா கலர்ன்னு அர்த்தம் .இஸ்லாமிய வீடுகளில் உருது,அரபி கலந்த தமிழ் நிறைய இருக்கும்.
Thanks Jeylani. ;)
Nice healthy tea :-)
ரொம்ப நல்லா இருக்கு....
பால் பவுடரில் டீ நல்லாயிருக்கும்மா??கொதிக்கும் போது பால் திரிந்து போகாதா?? இஞ்சி டீ அருமை!!
visit my blog
www.vaalpaiyyan.blogspot.com
super!!!! superb tea!!!
Tea sooper !!
இமா அடிக்க எல்லாம் வரமாட்டேன்,
இது வெங்கயாதத்தை உள்ளி என்று சொல்வது மலையாளிகள்.
ரங்குக்கு அர்த்தம் ஜெய்லானி சொல்லிட்டார்.
நிறம் என்பதை ரங்கு என்றூ சொல்வோம்.
டீ டிகஷனும் ரங்கு தான்.
ஆமாம் எல்.கே தொண்டைக்கு மிக இதமானது.
ஜெய்லானி பத்து கிளாஸ் ஸா,
போதுமா?
சை.கொ.ப.
இஞ்சி சாயா கொதிக்கும் போதே வாசைனாயா இருக்கும், செரிமானத்துக்கும் மிக நல்லது தான்.
நன்றி.
ஆமாம் சில நேரம் சுலைமானியில் ஏலக்காய், இஞ்சி போட்டு குடிப்பதுண்டு
இமாக்கு விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி.
அருனா, சாருஸ்ரீ,வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.
மேனகா இங்கு வந்தநாள் முதல் பால் பவுடரில் தான் டீ போடுகிறேன்,காபி, பிள்ளைகலுக்கு ஹார்லிக்ஸ், பூஸ்ட்,காம்ப்ளான் எல்லாம் இந்த பால்பவுடர் காய்ச்சி இதில் தான் போடுவது
ஸ்வீட் செய்யவும் பால் பவுடர் தான்
திரிந்து போவதற்கான விளக்கத்தை, டீ குறிப்பிலேயே போடுகிறேன்.
வால் பையன் வருகை தந்தமைக்கு மிக்க நன்றி
வந்ததற்கு ஒன்றும் சொல்லாமல் போனால் எப்படி, நேரம் கிடைக்கும் போது வரேன்.
///5 மணிக்கு டீ போடுவது என் வேலை அம்மா வீட்டில், அடுத்து மாமியார் வீட்டில், இப்ப இங்கும் முதலில் காலையில் இந்த டீ போட்டு குடித்துட்டு விட்டால், மீதி வேலைய பம்பராம சுற்றி பார்த்து விடலாம். ////
சூப்பர் டீ
, நம்பிட்டோம் ,ஆமா , நீங்க தான் வீட்டுல எல்லா வேலையும் செய்றிங்க நம்பிட்டோம்
@@@ மங்குனி அமைச்சர்--// நம்பிட்டோம் ,ஆமா , நீங்க தான் வீட்டுல எல்லா வேலையும் செய்றிங்க நம்பிட்டோம்//
மட மங்கு , காலையில எந்திரிச்சி முஞ்சி கழுவாம டீ குடிப்பது பெரிய வேலை இல்லையா. கேள்வியே சரியில்லையே.
@@@ Jaleela--//ஜெய்லானி பத்து கிளாஸ் ஸா, போதுமா?//
ஒரு கிளாஸ் திருப்தியா இருக்காது அதான் ரெண்டு கிளாஸ்.
கடையில குடுக்கிற கிளாஸா அப்ப பத்து சரிதான்.ஓகே..ஓகே..
மனமும், குணமும் நிறைந்தது..சியர்ஸ்:)
அமைச்சரே மிக்க நன்றி.
ஷபிக்ஸ் மிக்க நன்றி
ஜலீலா எனக்கு யாராவது டீ போட்டு தந்தால் ஆனந்தமாக சாப்பிடுவேன்,அதுவும் cardamom ginger tea
விட முடியுமா?
எனக்கு யாராவது டீ போட்டு தந்தால் ஆனந்தமாக சாப்பிடுவேன்,ஏலம்,இஞ்சி போட்ட டீயை விட முடியுமா?
ஜலீ சூப்பர் டீ. நான் அடிக்கடி மண்டை இடிக்கு போட்டு குடிப்பதுண்டு.
இஞ்சி சாய் அருமையுளும் அருமை, நன்றி சகோதரி.
எனக்கும் யாராவது டீ போட்டு கொடுத்தால் இப்பொழுது சூப்பராக தான் இருக்கும்...யாரும் இல்லையே...சரி விடுங்க..நானே ஜலிலா அக்காவின் இந்த டீயினை போட்டு குடிக்கிறேன்..யாராவது டீ குடிக்க வரிங்களா...
ஆசியா அதுக்கென்னா வாங்க நான் போட்டு தாரேன்/
நன்றி திவ்யா
விஜி நீங்க அடிக்கடி, நாங்க தினம் இப்படி தான் குடிப்பது.
கியாஸ் முதல் வருகைக்கு மிக்க நன்றி
கீதா ஓ நீங்களே போட்டு குடித்து விட்டீர்களா இப்ப உற்சாகமா 10 குறிப்பு கூட போஸ்ட் பண்ண தெம்பு வருமே,
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா