Sunday, June 19, 2011

பிரிவின் துயரால்//என் தந்தையே
இத்தனை வருடம்
எங்களோடு ஒன்றாக இருந்து
இன்று எங்களோடு இல்லாத 
உன் பிரிவின் துயரால் 
நாங்கள் வாடுகிறோம்
உன் நற்குணத்தை
சொல்ல வார்த்தைகள் இல்லை
தாய் சொல்லை தட்டாத
மகனாய்
உடன் பிறப்புகளுக்கு
அன்பான தந்தையாய்
மைத்துனிகளுக்கு பாசமான
சகோதரராய் இருந்தாய்

என் அன்னையை பூவினும்
மேலாக பாதுகாத்தாய்
ஐந்து வைரங்களையும்
ஒரு வைடூரியத்தையும்
அழகாய் பெற்றெடுத்தாய்
மிகவும் கண்ணியமான
முறையில் அனைவரையும்
கரைசேத்தாய்

தனக்கென எதையும்
பதுக்கவில்லை
பல  ஜோடிகளை
அன்பாக பேசி சேர்த்து வைத்தாய்
உற்ற நண்பர்களை
அன்பாய் நேசிப்பாய்

 நான் சோகமாக இருக்கும்
போது குரான் வசனத்தை
எடுத்துரைத்து தெளிவு
படுத்துவாய்
என் மகனுக்கு நல்ல
உபதேசம் செய்தாய்பொறுமையின் சிகரமாய்
திகழ்ந்தாய்
அதிர்ந்து கூட ஒரு வார்த்தை
பேசியதில்லை
உற்றார் உறவினரை
கண்ணியப்படுத்துவாய்
அப்படி பட்ட என்
தந்தையை பிரிந்து
வாடுகிறோம்//


//என் தந்தையே
இத்தனை வருடம்
எங்களோடு ஒன்றாக இருந்து
இன்று எங்களோடு இல்லாத 
உன் பிரிவின் துயரால் 
நாங்கள் வாடுகிறோம்//


--ஆக்கம்
ஜலீலாகமால்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

டாடி:ஜலீ ஜலீ ஜலீ ஜலீம்ம்மா ,

நான்:என்னங்டாடி , என்னங்டாடி

இனி யார் என்னை இப்படி கூப்பிடுவாங்க./

எப்போதும், முன்பெல்லாம் சிறு வயதில் வல வல ந்னு பேசிகொண்டே இருப்பேன், சிரித்து கொண்டே எல்லாத்தையும் கேட்டுட்டு கொஞ்சம் நேரம் தேய்ந்து போன ரெக்கார்ட ஆஃப் பண்ணு என்று கிண்டல் பண்ணுவார்கள்.
போனவருடம் இதே நாள் என் டாடியிடன் பேசினேன்,   ஜலீ ஜலீ நல்ல இருக்கீயா , அப்படி கேட்டதுமே ரொம்ப நல்ல இருக்கிறேன் என்ற தெம்பு வந்துடும்.ரொம்ப நேரம் பழைய கதைகளை பேசி கொண்டு இருந்தோம்.

எவ்வளவு தான் மனதை கட்டு படுத்தினால் நினைவுகள் டாடிய சுற்றி யே தான் இருக்கு.
ஒரு வேலையும் ஓட மாட்டுங்கிறது.

நான் சோகமா இருக்கும் போது போன் செய்தால் கீழே உள்ள வசனத்தை நினைவு கூறுவார்கள். இப்போதைக்கு என் டாடி சொன்ன இந்த துஆவை ஓதிக்கொள்கிறேன்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
////லா -யுகல்லி ஃபுல்லாஹு நஃப்ஸன் இல்லா உஸ் அஹா லஹா மாகஸபத், வ அலைஹா மக்தஸபத், ரப்பனா லா துஆகிதனா இந்நஸீனா, அவ் அக்தஃனா , ரப்பனா வலா தஹ்மில் அலைனா இஸ்ரன் கமா ஹமல்தஹூ அலல்லதீன மின் கப்லினா, ரப்பனா வலா துஹம்மில்னா மாலா தாகதலனா பிஹி, வ வஃ ஃபு அன்னா, வஃக் ஃபிர்லனா, வர் ஹம்னா அன் த்த மவ்லானா ஃப்ன்சுர்னா அலல் கவ்மில் காஃபிரீன்..///

///அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் நிர்பந்திப்பதில்லை. அது தேடிக்கொண்ட நன்மை அதற்கே-( பயனளிக்கும் அவ்வாறே) அது தேடிக்கொண்ட தீமை அதற்கே ( கேடு விளைவிக்கும்)


எங்கள் இறைவனே! நாங்கள் ( எங்கள் கடமைகளைச் செய்ய) மறந்து விட்டாலும், அல்லது ( அதில்) தவறிழைத்து விட்டாலும், ( அதைப் பற்றி) நீ எங்களை (க் குற்றம் ) பிடிககதே!
 எங்கள் இறைவனே ! நீ, எங்கள் மீது ( கடினமான கட்டளைகலை விதித்துப் ) பளுவான சுவையைச் சுமத்திவிடாதே!..
எங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது ( கடினமான கட்டளைகளை) நீ சுமத்தியவாறு - ( சுமத்தாதே !)
எங்கள் இறைவனே! நாங்கள் தாங்க முடியாத கஷ்டங்களை எங்கள் மீதுசுமத்திவிடாதே!எங்கள் குற்றங்களை மன்னிப்பாயாக!
எங்களை பொறுப்பாயாக!எங்கள் மீது கருனை புரிவாயாக! நீ தான் எங்கள் இரட்சகன்! ஆகவே. ( என்னை) நிராகரிகும் ஜனங்கள் மீது (வெற்றி பெற ) நீ எங்களுக்கு உதவி புரிவாயாக! என்று பிராத்திப்பீர்களாக!)
 குர் ஆன் , 2: 286/////

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
”அன்று நீ “ அஸ்மாவின் இடுகையையும், சகோதரர ஆஷிக்கின்  வல்லையில், ஹாஜாவின் இடுகை // மரணம் முதல் மண்ணறை வரை என்ற இடுகையையும்  படித்தேன் என்னை நான் தேற்றி கொண்டேன்/இருந்தாலும் எங்களால் முடியல .

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நீங்கள் முன் சென்றவர்களாக இருக்கீறீர்கள் நாங்கள் பின்வருகிறவர்களாக இருக்கிறோம், ஆண்டவன் அனை வரின் பாவத்தையும் மன்னிப்பானாக ஆமீன்!


இதெல்லாம் படித்து தேற்றினாலும் மறுபடி நினைவெல்லாம் வாப்பாவையே தான் என்னுது,

.உலகில் உள்ள அனைத்து தந்தைமார்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்33 கருத்துகள்:

எல் கே said...

:(

athira said...

ஆ... ஜலீலாக்கா வாங்க ஜலீலாக்கா... உங்களை மீண்டும் இங்கு கண்டதும் மட்டட்ட மகிழ்ச்சியாக இருக்கு.

என்ன செய்வது ஜலீலாக்கா மனதை தேற்றியே ஆகவேண்டும்... பிறக்கும்போதே மரணத்தின் திகதியும் எழுதப்பட்டுவிட்டது. அதை ஆண்டவனால்கூட தடுக்க முடியாதாம்.

மெளனமாக இருக்காமல் மீண்டும் வலைப்பூவை ஆரம்பியுங்க, அப்பத்தான் மனம் கொஞ்சமாவது டைவேர்ட் பண்ணுப்படும்.

சிநேகிதன் அக்பர் said...

ஆற்றமுடியாத துயரில் நாங்களும் பங்கெடுக்கிறோம் சகோ.

விரைவில் மனக் கஷ்டத்தில் இருந்து மீண்டு வர துஆ செய்கிறோம்.

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீலாக்கா. நாமெல்லாம் மறுமையை நோக்கி பயணிக்கும் பயணிகளே!அவர்களின் இவ்வுலக பயணம் முடிந்துவிட்டது. நாம் பின்னால் சென்றுக் கொண்டே பயணித்துக் கொண்டிருக்கிறோம். இந்த இயற்கை நியதி நமக்கு தெரிந்திருந்தும் அதை தாங்கக்கூடிய மனதிடம் மிக மிகச் சிலருக்கே தவிர, நிச்சயமா நம் எல்லோருக்கும் இந்த நிரந்தர பிரிவைத் தாங்க முடியாதுதான்:(

என் தந்தை இங்கு வந்து ஆறே மாதங்களில் எங்களைவிட்டு பிரிந்ததும் நான் பட்ட வேதனைகளை எழுத்தில் சொல்லமுடியாது. அதேபோல் அடுத்த ஒன்றரை வருடத்தில் என் தாயையும் இழந்து தவித்தேன் :( அப்போது இறைவனின் நாட்டத்தை ஏற்றுக்கொண்டு, உள்ளுக்குள் அழுதே பொறுமை செய்வதைத்தவிர‌ வேறுவழி தெரியவில்லை. காலப்பொழுதில் காயங்கள் குறைந்தாலும் முற்றிலும் நீங்காதுதான். பொறுமை செய்வோம். பிரிந்த நாம் சுவனபதியில் ஒன்றுகூடி வாழ துஆ செய்வோம்.

'கவலைப்படாதீங்க' என்று எத்தனை பேர் சொன்னாலும் உங்களால் கவலைப்படாமல் இருக்க முடியாது. அதனால் விரைவில் உங்கள் மனதை அமைதிப்படுத்த இறைவன் உதவி செய்வானாக!

"நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்" (அல்குர்ஆன் 8:46)

ஸாதிகா said...

நீங்கள் துயரத்தில் இருந்து விடுபெற்று தங்கள் வாப்பாவுக்கு ஜன்னத்துல்பிர்தவ்ஸ் கிடைக்க துஆ செய்கின்றேன்.

அன்புடன் மலிக்கா said...

நிரந்தரமில்லா இவ்வுலகில் நமது வாழ்க்கை நிரந்தமிலை நேற்று அவர்கள் இன்று நாளை நான் இப்படி வந்தவர்கள் அனைவருக்களும் உயிர்தந்தவனிடம் மீண்டும் சென்றுவிடுவோம்.

மனம் ஆராத்துயர்தான் இருந்தபோதும் நம்மை தேற்றிக்கொள்வதை தவிர வேறுவழியில்லை. நம்மைவிட அம்மாவின் நிலைதான் சங்கடம் அவர்களுக்கு ஆறுதலாக எந்நாளும் இருங்கள். அவர்களுக்காவும் வாப்பாவுக்காகவும் தாங்கள் கேட்கும் துஆக்கள்தான் அவர்களின் இம்மை மறுமை வாழ்வுக்கு பயந்தரும்.

எல்லாம் அவன் வசம் அவனிடமே மீள்வோம்.
இறைவா!
உன்னையே வணங்குகிறோம்
உன்னிடமே உதவியும் தேடுகிறோம்
எங்களின் பாவங்களை மன்னித்து நல்லருள்பாளிப்பாயாக..

ஹுஸைனம்மா said...

ம்ம்.. அவங்க முன்னாடி; நாம பின்னாடி..

இறைவன் எல்லாருக்கும் பொறுமையைத் தரணும்.

நாஸியா said...

ஸபூர் செய்யுங்க அக்கா..

எனக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு. இன்ஷா அல்லாஹ் நீங்க உங்க வாப்பாவுக்கு செய்கிற துவாக்கள் அவங்க மரணித்த பிறகும் அவங்களுக்கு போய் சேரும். சதக்கதுன் ஜாரியா..
இப்ப அதைத்தான் உங்களால அதிகமா செய்ய முடியும், இல்லையா..

உடம்ப பாத்துக்கோங்க. அல்லாஹ் உங்களுக்கு லேசாக்கி வைப்பான்.. இன்ஷா அல்லாஹ் ஒரு நாள் சந்திப்போம்

farvin said...

ஜலீலா அக்கா உங்க மனதை தேற்றிக்கொள்ளுங்கள் தொழுது வாப்பாவுக்காக் துஆ கேளுங்கள் அதை தவிர அவங்களுக்கு நாம எதும் செய்ய் முடியாது நீங்க மனதை தைரியப்டுத்திகொண்டு கவனத்தை மாற்றி செய்லபடுங்கள் அல்லாஹ் எல்லாம் நன்மையே செய்வான்

farvin said...

ஜலீலா அக்கா உங்க மனதை தேற்றிக்கொள்ளுங்கள் தொழுது வாப்பாவுக்காக் துஆ கேளுங்கள் அதை தவிர அவங்களுக்கு நாம எதும் செய்ய் முடியாது நீங்க மனதை தைரியப்டுத்திகொண்டு கவனத்தை மாற்றி செய்லபடுங்கள் அல்லாஹ் எல்லாம் நன்மையே செய்வான்

GEETHA ACHAL said...

ஜலீலா அக்கா...,மனதினை தேற்றிகொள்ளுங்க..

உண்மை தான்..மறக்காலாம் என்று நினைத்தால் மறக்க இயலாது..மிகவும்க்‌ஷடம் தான்..

நட்புடன் ஜமால் said...

பிரார்த்தனைகளை அதிகப்படுத்துவோம்

வெங்கட் நாகராஜ் said...

:(

ஷர்புதீன் said...

:-(

இளம் தூயவன் said...

சகோதரி உங்கள் மன கஷ்டம் புரிகிறது, அவர்களை நல்லடியார் கூட்டத்தில் சேர்க்க அனைவரும் தூவா செய்வோம்.

thenikari said...

Jaleelakka,
vaappavukkaka prarthanai seithu kollkiroam. ninaivukal manathai vaattum. methuvaga samaathanam agungal. Allah nanmaiyae seivaar.

enrenrum16 said...

'இன்னா லில்லாஹி....' உங்க மனவருத்தத்தில் நாங்களும் பங்கெடுக்கிறோம்... அவர்களுடனான இனிய நினைவுகளோடும் அவர்களுக்கான நமது துஆக்களோடும் மிச்ச வாழ்க்கையைக் கழிப்போம் இன்ஷா அல்லாஹ். :(

எம் அப்துல் காதர் said...

எல்லாம் நன்மைக்காகத்தான் என்றே எண்ணுங்கள் ஜலீலாக்கா. உங்கள் மனசுக்கு தைரியமளிக்க-சகஜ நிலை திரும்ப இறைவனிடம் பிரார்த்திக் கிறேன்.அல்ஹம்துலில்லாஹ்!!

கோவை2தில்லி said...

:(

ஹைஷ்126 said...

அப்பாவின் பிரிவுக்கும் ஆழ்ந்த இரங்கல்:( அவருக்காக பிராத்தனை செய்கிறேன்.

அன்னு said...

ஜலீலாக்கா,

இப்பொழுதுதான் உங்களுடைய இந்த போஸ்டை பார்த்தேன். மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குக்கா. என் சூழ்நிலை உங்களுக்கு தெரியும். இல்லாதிருந்திருந்தால் கண்டிப்பாக ராவெல்லாம் விழித்தாவது உங்களுடன் பேசி கொஞ்சம் மன சாந்தி அடைய வைத்திருப்பேன். அக்கா, சகோ.அஸ்மா சொன்னதேதான் நானும் சொல்கிறேன். தயவு செய்து பொறுமை கை கொள்ளுங்கள். இங்கு நம்மிடத்தில் இருப்பதை காட்டிலும் அல்லாஹ்வின் ஆதரவில், அவனுடைய பாதுகாப்பில் பெற்ற குழந்தைகளின் து’ஆவினில், நிச்சயம் அவரின் நிலை உலக நிலையை விட உயர்ந்ததாகவே இருக்கும் என எண்ணுங்கள். அதே போலிருக்கவே து’ஆ செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் உங்கள் மனதிற்கு ராஹத்தை தந்தருள்வானாக. ஆமீன்.

asiya omar said...

:(((((....மனதை தேற்றிக்கொள்ளுங்கள் ஜலீலா. இந்த பதிவை பார்த்து உங்களின் துயர் என்னையும் தொற்றிக்கொண்டது என்பது தான் உண்மை.ஆறுதல்,தேறுதல் சொல்ல வார்த்தைகளில்லை தோழி.

vanathy said...

ஜலீலாக்கா, மனதை தேற்றிக்கொள்ளுங்கள்

R.Gopi said...

ஜலீலா அவர்களே ......

தகவல் இங்கு படித்தறிந்ததும், மிகுந்த கவலை கொண்டேன்... ஆயினும், நடந்ததையே நினைத்து கொண்டிருந்தால், வாழ்வில் முன்னே சென்று செய்ய காத்திருக்கும் எவ்வளவோ விஷயங்களை யார் செய்வார்...

நேற்று வந்தவர் இன்று சென்றார்... இன்று வந்தவர் நாளை செல்வர்.. இதுவல்லோ உலக நியதி..

ஆகவே... துயரத்தை மனதில் வைத்துக்கொள்ளாமல், தைரியமாக இந்த உலகை எதிர்கொள்ளுங்கள்.. நீங்கள் செய்து முடிக்க வேண்டிய எவ்வளவோ பெரிய விஷயங்கள் உங்களுக்காக காத்திருக்கிறது...

மீண்டு வரவும்... மீண்டும் வரவும், அதே பழைய தெம்புடனும், நகைச்சுவை உணர்வுடனும்...

உங்களுக்கு எல்லாவற்றையும் கடந்து வர அந்த ஆண்டவன் தெம்பளிப்பான்..

செந்தமிழ் செல்வி said...

அன்பு ஜலீலா,
நலமா? நான் ஏற்கனவே மெயில் அனுப்பி இருந்தேன்.
காலம் மட்டுமே எல்லா துயரங்களையும் மாற்றும் மருந்து. மனதை தேற்றிக் கொள்ளுங்கள். இறைவனிடம் அப்பாவின் ஆன்மா இளைப்பாற நானும் பிரார்த்திக்கிறேன்.

அந்நியன் 2 said...

எந்த உயிர் ஆனாலும் எடுக்கும் உறிமம் றப்பிற்க்கே உள்ளது.

இந்த சம்பவம் கேள்விப்பட்டு மிகத் துயரம் அடைந்தேன் அக்காள்.

நானும் ஊரில் போயி பதினைந்து நாட்கள் நலம் குன்றியவனாக இருந்த காரணத்தால் வலைப் பக்கம் வர இயல வில்லை மன்னிக்கவும்.

அண்ணார் அவர்களுக்கு இறைவன் சொர்க்கத்தினை தந்தருள துஆ செய்கின்றேன்.

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.

கோமதி அரசு said...

ஜலீலா, உங்கள் அப்பாவின் மறைவு செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.

நான் ஊரில் இல்லாத காரணத்தால் தாமதமாக விசாரிக்கிறேன் மன்னிக்கவும்.

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் மனசாந்தியை அருளுவார் எல்லாம் வல்ல இறைவன்.

கோமதி அரசு said...

அப்பாவின் பிரிவு மறக்க முடியாத ஒன்றுதான். ஆனால் என்ன செய்வது !
மனதை தேற்றிக் கொள்ள வேண்டியது தான்.

உங்கள் அப்பாவின் அறிவுரைகளை மனதில் கொண்டு உங்கள் அம்மா மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லுங்கள்.

ஜெய்லானி said...

:-((

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.

இறைவனிடமிருந்து வந்தோம் இன்னும் அவனிடமே திரும்ப வருபவர்களாக இருக்கிறாம்.


அவருக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸ் கிடைக்க துஆ செய்கின்றேன்.

Geetha6 said...

அப்பா போல் வருமா ? இருப்பினும் அவர் நம்மை ஆசிர்வதிப்பர்ர்.!
கவலை படாதீர்!

Fathima said...

Dear jaleela,
I cant even begin to imagine your sense of loss and sorrow. Allah swt give you the sabr to bear this loss. The only comfort is that we will all meet again. Insha allah.

Fathima said...

Dear jaleela,
I cant even begin to imagine your sense of loss and sorrow. Allah swt give you the sabr to bear this loss. The only comfort is that we will all meet again. Insha allah.

Fathima said...

Dear jaleela,
I cant even begin to imagine your sense of loss and sorrow. Allah swt give you the sabr to bear this loss. The only comfort is that we will all meet again. Insha allah.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா