Sunday, February 2, 2014

பிரியாணி மசாலா கிங்பிஷ் ஃப்ரை - King Fish Fry with Biriyani Masala



 உடல் எடை குறை க்க நினைப்பவர்களுக்கு இது ஒரு அருமையான சுவையான டயட் மெனு. உணவு வகைகளில் மீன் உணவு தான் வெயிட் போடாதாது, எந்த நாடுகளுக்கு போனாலும் கடல் உணவான மீன் உணவை (ஹாலால்) பயமில்லாமல் சாப்பிடலாம். எனக்கு உணவு வகைகளில் மிகவும் பிடித்தமானது மீன் உணவு தான். எனக்கு வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் மீன் சாப்பிட்டே ஆகனும்.இது வரை பல விதத்தில் செய்தாச்சு. போஸ்டிங் போட தான் நேரம் கிடைக்க வில்லை.



Diet Menu -1

Diabetic Chappathi
Beetroot Channa Dhal kuuttu
King Fish Fry with Biriyani masala
salad




தேவையான பொருட்கள்

சீலா மீன் - 7 துண்டுகள்


மிளகாய் தூள் - 1 மேசைகரண்டி
லெமன் சாறு - 2 மேசை கரண்டி
உப்பு - முக்கால் தேக்கரண்டி (அவரவர் ருசிக்கேற்றவாறு)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்னறை  தேக்கரண்டி

கார்ன் ப்ளார் பவுடர் - இரண்டு மேசைகரண்டி


ஆலிவ் எண்ணை மீன் பொரிக்க தேவையான அளவு ( 5தேக்கரண்டி)







மேற்கண்ட அனைத்து மசாலாக்களையும்  (எண்ணை + மீன் ) தவிர சிறிது தண்ணீர் விட்டு நன்கு பேஸ்டாக்கி மீனில் இருபுறமும் தடவி 1 மணி நேரம் ஊறவைக்கவும்.



வாயகன்ற நான் ஸ்டிக் பேனில் எண்ணையை சூடாக்கி தீயின் தனலை மிதமாக வைத்து கருகாமல் இருபுறமும் பொரித்து எடுக்கவும்.

பொடி செய்து செய்யும் மசாலாவின் சுவையே தனி தான். வழக்கமாக சாப்பிடும் பொரிச்ச மீனின் சுவையை விட இது சிறிது வித்தியாசமாக இருக்கும்.


 https://w
ww.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா... 'தக தக'வென ஜொலிக்கிறது... செய்முறைக்கு நன்றி சகோதரி...

திண்டுக்கல் தனபாலன் said...

தமிழ்மணம் இணைத்து விட்டேன் சகோதரி... நன்றி...

+1

சுந்தரா said...

பிரியாணி மசாலாவுடன் மீன் ஃப்ரை,வித்தியாசமான செய்முறை. கட்டாயம் செய்துபார்க்கிறேன்.

Asiya Omar said...

நல்ல மணமாக இருக்கும் ஃப்ரை.அருமையான பகிர்வு.

Jaleela Kamal said...

நன்றி தனபாலன் சார்

வாங்க சுந்தரா முத்து நீண்ட நாட்களுக்கு பிறகு இங்கு வந்தது மிகவும் சந்தோஷம்

நன்றி ஆசியா

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா