Sunday, February 23, 2014

மிளகு முட்டை தோசை - Egg Dosa with Pepper - (பேச்சுலர்களுக்கு)


வெளிநாடுகளில் சமைத்து சாப்பிடும் பேச்சுலர்கள் இதை சுலபமாக செய்து சாப்பிடலாம்.

காலை டிபன் அல்லது மாலை பசியாக இருந்தாலோ. இரவு டிபனுக்கோ இது போல் செய்து சாப்பிடலாம்.
ரொம்ப ஷாப்டாக இருக்கும் வயதானவர்களுக்கும் ஹெல்தியான டிபனாக இருக்கும்.


தேவையான பொருடகள்
முட்டை - 1
ஒன்றும் பாதியுமாக பொடித்த மிளகு - சிறிது
உப்பு - தேவைக்கு
தோசைமாவு.- 1 1/2 குழிகரண்டி
எண்ணை -  ஒரு தேக்கரண்டி


செய்முறை
தோசை தவ்வாவை காயவைத்து அதில் தோசைமாவை ஊற்றி தடிமனான பெரிய தோசையாக வார்த்து

அதில் முட்டையை கொஞ்சம் குலுக்கி முழுவதும் உடைக்காமல் மேலே சிறித ஓட்டை மற்றும் கொஞ்சமாக பிரித்து தோசையிம்ன் மேல் பரவலாக தெளித்து விடவும்.

உப்பு, மிளகு தூள் தூவி, சுற்றிலும் எண்ணையை ஊற்றி தீயின் தனலை சிம்மில் வைத்து வேகவிடவும்.

சுவையான முட்டை தோசை ரெடி
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

5 கருத்துகள்:

Menaga Sathia said...

சூப்பர்ர்..குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்று...

திண்டுக்கல் தனபாலன் said...

ஒன்று சாப்பிட்டாலே வயிறு நிரம்பி விடும்...

Asiya Omar said...

சூப்பர் ,ஹெல்தியான தோசை.

சாரதா சமையல் said...

பார்க்கும் போதே சாப்பிடணும் போல இருக்கு!!

'பரிவை' சே.குமார் said...

சூப்பர்...

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா