Beetroot Varavu/thoran/poriyal/Stir Fry
பீட்ரூட் வறவு என்றதும் என்ன இது வரவு என்று நினைக்கவேண்டாம்,
இது கேரளாவில் சிலர் பொரியலை , தோரன் என்றும் வறவு என்றும் சொல்வார்கள், இது ரொம்ப சிம்பிளான வறவு.
கேரளாவில் கண்ணூர், எர்னாகுளம், கொல்லம், திரிசூர் , தெல்லஷேரி,போன்ற இடங்களில் ஊருக்கு ஊர் உணவு வகைகளின் பெயர் வித்தியாம் உள்ளது. இது ரொம்ப சிம்பிளாகவும் ஈசியாகவும் தயாரிக்க கூடிய பொரியல்.
அன்றாட உணவில் வாரம் ஒரு முறையாவது பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்ளவேண்டும்.
பல நோய்களுக்கு அருமருந்து.கேன்சர் நோய் வராமல் தடுக்க இது போல் பீட்ரூட்டை அடிக்கடி பலவகைகளாக செய்து சாப்பிடலாம். இரத்தசோகை உள்ளவர்களுக்கும் , கர்பிணி பெண்களுக்கும் இதை செய்து கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு கலர் ஃபுல்லாக காரமில்லாமல் இருப்பதால் விரும்பி சாப்பிடார்கள்.
தேவையான பொருட்கள்
பீட்ரூட் - 2
தாளிக்க
எண்ணை சன்ப்ளவர் ஆயில் (அ) தேங்காய் எண்ணை (அ) எல் கே நிர்மல் எண்ணை - ஒரு மேசைகரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கருவேப்பிலை - பொடியாக நறுக்கியது - ஒரு தேக்கரண்டி
பச்ச மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது
சீரகம் - அரை தேக்கரண்டி
செய்முறை
பீட்ரூட் தேலொடுத்து கழுவி மிகக்குறுகலாக பொடிப்பொடியாக அரிந்து கொள்ளவும்.
வானலியை காயவைத்து எண்ணை ஊற்றி கடுகு, சீரகம், கருவேப்பிலை , பச்சமிளகாய் போட்டு தாளித்து பீட்ரூட்டையும் சேர்த்து உப்பு போட்டு நன்கு பிரட்டவும்.
தீயின் தனலை மிகக்குறைவாக வைத்து நன்கு வேகவிட்டு இரக்கவும்.
அப்படியே சாதத்தில் போட்டு பிரட்டி சாப்பிட அருமையாக இருக்கும்.
Kerala Recipe - Beetroot Varavu/Thoran/Poriyal/Stir Fry
Linking to Walk through memory lane hosted by Amrita
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/
Tweet | ||||||
9 கருத்துகள்:
எனக்கு பிடித்த பொரியல். அருமை.
சுவையான பீட்ரூட் பொரியல்.
asalamalikum iam DILSATH BEGAM FROM PONDICHERRY.I love this site it reaches me through mail.its so usefull to me.i love beetroot but my son dosn't what to do jaleela sister.we can add coconutflower on the finishing it will give much tast.iam not to good in cooking but umm...... i think it will be nise.
asalamalikum iam DILSATH BEGAM FROM PONDICHERRY.I love this site it reaches me through mail.its so usefull to me.i love beetroot but my son dosn't what to do jaleela sister.we can add coconutflower on the finishing it will give much tast.iam not to good in cooking but umm...... i think it will be nise.
மிகவும் அருமையாக செய்துள்ளீர்கள்... நன்றி சகோதரி...
பீட்ரூட் பொரியல் சூப்பரா இருக்கு!
வா அலைக்கும் சலாம் தில்ஷாத்.
உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.
இது டயட் பொரியல் போல் கேரளா ஸ்டைலில் செய்தது,
ஏறகன்வே இங்கு பீட்ரூட் பொரியல் போஸ்ட் போட்டுள்ளேன், பிறகு லின்க் எடுத்து சேர்க்கிறேன்.
தேங்காய் சேர்த்து செய்தால் இன்னும் நல்ல இருக்கும்.
பீட்ரூட் கடலை பருப்பு கூட்டு போல் செய்தாலும் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
நன்றி ஆசியா
நன்றி ஆதி வெங்கட்
நன்றி சாரதா
நன்றி தனபாலன் சார்
எனக்கு மிகவும் பிடித்த பொரியல்...
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா