நெத்திலி மீன்
Anchovies Gravy
தேவையான பொருட்கள்
நெத்திலி மீன் – 300 கிராம்
தாளிக்க
எண்ணை – 4 தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
காஞ்சமிளகாய் – 1
கருவேப்பிலை – இரண்டு ஆர்க்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒன்னறை தேக்க்ரண்டி
பச்ச மிளகாய் – 2 பொடியாக அரிந்த்து
வெங்காயம் – இரண்டு பெரியது
தக்காளி இரண்டு
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு தூள்
- தேவைக்கு
சிக்கன் மசாலா – ஒருதேக்கரண்டி
தனியாத்தூள் – அரை தேக்கரண்டி
கொத்துமல்லி தழை. சிறிது
செய்முறை
நெத்திலி மீனை சுத்தம்
செய்து தலையிலிருந்து வயிற்று புறம் வரை கீறி முள்ளை எடுக்கவும். நன்கு கழுவி தண்ணீரை வடித்து
அதில் மிளகாய் தூள் உப்பு தூள் சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஊறவைத்து சிறிது
எண்ணை விட்டு பொரித்து எடுக்கவும்.
முள்ளில்லாத நெத்திலி மீன்.
சட்டியை காய்வைத்து எண்ணையை ஊற்றி கடுகு,
காஞ்சமிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து தாளித்து
வெங்காயத்தை பொடியாக அரிந்து போட்டு நன்கு வதக்கவும் வதங்கியதும் அனைத்து மசாலாக்களையும்
சேர்த்து கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி குறைந்த தீயில் வேகவிடவும்.
அடுத்து தக்காளியை
நன்கு பொடியாக அரிந்து சேர்த்து நன்கு வதக்கி குழைய வேகவிடவும். (இல்லை அரைத்தும் ஊற்றலாம்)
ஒரு டம்ளர் தண்ணீர்
ஊற்றி கொதிக்க விடவும். நன்கு மசாலாவாடை போனதும் பொரித்து வைத்துள்ள மீனை சேர்த்து மீண்டும் ஒரு முறை
கொதிக்க விடவும்.
கடைசியாக கொத்துமல்லி
தழை மற்றும் பச்சமிளகாய் தூவி இரக்கவும்.
சுவையான நெத்திலி மீன் கிரேவி ரெடி.
இதில் புளி சேர்க்க வில்லை/
ஜலீலாவின் டிப்ஸோ டிப்ஸ்: பொதுவாக இந்த நெத்திலி மீன் முள் எடுப்பதால் சால்னாவில் போட்டு கொதிக்க வைக்கும் போது உடைந்து விடும் அதற்கு முதலே லேசாக வறுத்து கொண்டு பிறகு சேர்த்த்தால் மீன் உடையாமல் நிற்கும்.
நெத்திலி மீன் தொக்கு
நெத்திலிமீன் கழுவும் விதம்
பெரிய அலுமினியம் கண் வடிகட்டி எடுத்துக்க்கொள்ளுங்கள்.மீனை ஒரு சட்டியில் தண்ணீரில் போட்டு லேசாக அரிசி களைவது போல் கலந்து வடுகட்டியில் போடவும்.
சிங்கில் டேபுக்கு நேரக வடிகட்டியை பிடித்து கொண்டு இரண்டு மூன்று தடவை கையால் உலசி கழுவவும்.
இப்போது அழுக்கு மண் எல்லாம் போய் சுத்தமாகி விடும்.
மீனி தலையை கிள்ளி அப்படியே வயிற்று பகுதியில் கட்டை விறலால் கீறி தலையோடு சேர்த்து முள்ளை மீனிலிருந்து பிரித்தெடுக்கவும்.
அதே மாதிரி எல்லா மீனையும் செய்யவும்.
இப்போது மீனில் சுத்தமாக முள் இருக்காது மீண்டும் ஒரு முறை கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து வைக்கவும்.
இப்போது போன்லெஸ் நெத்திலி மீன் ரெடி அப்பரம் என்ன குழம்பு வைத்து சாப்பிடவேண்டது தான்.
பிள்ளைகளுக்கும் அப்படியே பிசைந்து ஊட்டி விடலாம். இதே கிளங்கா மீனிலும் எடுக்கலாம்.
https://www.facebook.co/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/
5 கருத்துகள்:
எங்கே...? இந்தளவு பெரிய நெத்திலி இங்கே கிடைப்பதில்லை... இருந்தாலும் செய்முறை குறித்தாகி விட்டது... நன்றி சகோதரி...
Nethili meen gravy soopero super:)mouth watering ..!! Very happy to follow you dear ..Will be happy if u follow me back
நெத்திலி மீன் கூட்டு நல்லாயிருக்கு.
தனபாலன் சார் இங்கு துபாயில் இது போலும் இதை விட சற்று பெரிய நெத்திலியும் கிடைக்கிறது, வருகைக்கு மிக்க நன்றி
வாங்க சிக்கு கிச்சன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா