Friday, November 6, 2009

நெத்திலி மீன் தொக்கு


மீன் டிப்ஸ்க்கு கீழே கவி ஜலீலாக்கா முள்ளே இல்லாமல் மீனை எப்படி சாப்பிடுவது என்று கேட்டாங்க.இதோ நெத்திலி மீனில் முழுவதும் முள் ஆனால் அதை முள்ளே இல்லாமல் சாத்தத்தில் பிசைந்து சாப்பிடலாம்.

மீன் கழுவும் விதம்


பெரிய அலுமினியம் கண் வடிகட்டி எடுத்துக்க்கொள்ளுங்கள்.மீனை ஒரு சட்டியில் தண்ணீரில் போட்டு லேசாக அரிசி களைவது போல் கலந்து வடுகட்டியில் போடவும்.
சிங்கில் டேபுக்கு நேரக வடிகட்டியை பிடித்து கொண்டு இரண்டு மூன்று தடவை கையால் உலசி கழுவவும்.
இப்போது அழுக்கு மண் எல்லாம் போய் சுத்தமாகி விடும்.
மீனி தலையை கிள்ளி அப்படியே வயிற்று பகுதியில் கட்டை விறலால் கீறி தலையோடு சேர்த்து முள்ளை மீனிலிருந்து பிரித்தெடுக்கவும்.
அதே மாதிரி எல்லா மீனையும் செய்யவும்.
இப்போது மீனில் சுத்தமாக முள் இருக்காது மீண்டும் ஒரு முறை கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து வைக்கவும்.
இப்போது போன் லெஸ் நெத்திலி மீன் ரெடி அப்ப‌ர‌ம் என்ன‌ குழ‌ம்பு வைத்து சாப்பிட‌வேண்டது தான்.
பிள்ளைக‌ளுக்கும் அப்ப‌டியே பிசைந்து ஊட்டி விட‌லாம். இதே கிள‌ங்கா மீனிலும் எடுக்க‌லாம்
.
தேவையான பொருட்கள்நெத்திலி மீன் - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - கால் கிலோ
பச்ச மிளகாய் - முன்று
மிளகாய் தூள் - ஒன்னறை தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி (தேவைக்கு)
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - ஆறு பல்
கருவேப்பிலை - அரை கை பிடி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
எண்ணை - முன்று மேசைகரண்டி
புளி - சிறிய எலுமிச்சை அளவு
தேஙகாய் பால் - அரை கப் (இரண்டு பத்தை)

1. முதலில் நெத்திலியை முள்ளெடுத்து கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும்.2. வெங்காயம், தக்காளியை பொடியாக அரியவும்.3.ஒரு பெரிய வாயகன்ற வானலியை காயவைத்து அதில் எண்ணையை ஊற்றி கடுகு,சீரகம்,வெந்தயத்தை போட்டு கருகாமல் வெடிக்கவிட்டு பூண்டை தட்டி போடவும்.3.பூண்டு லேசாக வதங்கியதும் வெங்காயம், கருவேப்பிலையை போட்டு நன்கு வதக்கவும்.4.எல்லா மசாலாதூள்வைகளையும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி தக்காளி, பச்ச மிளகாயை இரண்டாக ஒடித்து போட்டு நன்கு கிளறி ஐந்து நிமிடம் தீயை சிம்மில் வைக்கவும்.5. புளியை கட்டியாக கரைத்து ஊற்றி பச்ச வாடை போகும் வரை கொதிக்கவிடவும்.6.இப்போது வடித்து வைத்திருக்கும் நெத்திலி, தேங்காய் பாலை சேர்த்து மீண்டும் ஐந்து நிமிடம் சிம்மில் வைக்கவும்.7.நெத்திலி கொதித்து கிரிப்பானதும். கொத்துமல்லை தழை தூவி இரக்கவும்.8. சுவையான நெத்திலி தொக்கு ரெடி.
குறிப்பு
1.நெத்திலியை கழுவும் போது தலை பகுதியை பிடித்து கொன்டு கட்டி விரலால் நடுவில் கீறினால் முள்ளை அப்படியே எடுத்து விடலாம்.சாப்பிடும் போது ஒரு முள் கூட இருக்காது.


2.நெத்திலியை கழுவும் போது ஒரு பெரிய கண் வடிகட்டியில் (புளி வடிகட்டி போல்) வைத்து கழுவினால் கீழே விழாது. அரிசி க‌ளைவ‌து போல் க‌ழுவ‌னும் இல்லை என்றால் குழைந்து விடும்.


3.நெத்திலி மீன் சீக்கிரம் வெந்து விடும் ஆகையால் கடைசியில் போடனும்.


4.காரசாரமாக சாப்பிடுபவர்கள் இன்னும் அரை தேக்கரண்டி மிள‌காய் தூளும், ஒரு பச்சமிளகாயும் கூட சேர்த்து கொள்ளலாம்.


5.கடைசியில் உப்பு பார்த்து தேவைக்கு சேர்த்து கொள்ளவும்9 கருத்துகள்:

அன்புடன் மலிக்கா said...

ஹை நாந்தான் ஃபஸ்ட்,

நல்ல ரெசிபி ஜலீலாக்கா..

Balakrishna Saraswathy said...

I just love these dried fish..very yummy and delicious looking pa..

seemangani said...

ம்ம்ம்ம்....நல்ல ருசிய இருக்கும் போல இருக்கே....அப்படியே சாப்டுவேன்...

நட்புடன் ஜமால் said...

நெத்திலி கருவாடு(ஃபிரை) தான் நம்ம சாய்ஸ்
----------

டிப்ஸ் நல்லாயிருக்கு.

Jaleela said...

மலிக்கா மிக்க நன்றி

சரஸ்வதி இது நெத்திலி மீன். கருவாடு இல்லை

சீமான் கனி நானும் தான் அப்படியே சாப்பிடுவேன். வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி

நட்புடன் ஜமால் வாங்க ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கீங்க. நன்றி.
வெரும் பருப்பு நெத்திலி கருவாடும் ம்ம் ஒரு புடிதான் போங்க , ஆனால் இது நெத்திலி மீன்..

S.A. நவாஸுதீன் said...

நட்புடன் ஜமால் said...
நெத்திலி கருவாடு(ஃபிரை) தான் நம்ம சாய்ஸ்
------------------
நீ என்னமாதிரியே மாப்ள. ஆனால் எண்ணெய் சட்டி எனக்குதான் வேணும்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

நன்றிங்க,,கண்டீப்பா செய்ய சொல்லிடலாம்..

Jaleela said...

நவாஸ் உங்களுக்கும் நெத்திலி கருவாடு தான் பிடிக்குமா.

ம்ம் இன்னும் கொஞ்ச நாளில் அதையும் போட்டுடலாம்/

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

Jaleela said...

வாங்க ராஜ் தங்கமணிகிட்டயா?

கருத்த்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி/

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா