கேரளா பயறு கறி
Whole moong dal
Whole moong dal
இது இங்குள்ள எல்லா சின்ன சின்ன டீக்கடை பேச்சுலர்கள் சாப்பிடும் ரெஸ்டாரண்டுகளில் கண்டிப்பாக இந்த கறி வகை கிடைக்கும் இதை புட்டு (அ) ஆப்பம்க்கு தருவார்கள் , இடியாப்பத்துடனும் சாப்பிடலாம், நல்ல இருக்கும்.
தேவையான பொருட்கள்
குக்கரில் வேகவைக்க
சிறு பயறு – (முழு பாசிபருப்பு) ஹோல் மூம் தால் – 150 கிராம்
வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
பச்ச மிளகாய் நீளவாக்கில் கீறியது – 3
இஞ்சி துருவியது – ஒரு தேக்க்ரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
தேங்காய் பவுடர் – 1 மேசைகரண்டி
உப்பு - தேவைக்கு
தாளிக்க
எண்ணை – 3 தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
கருவேப்பிலை – 8 இதழ்
காஞ்ச மிளகாய் – 2
சின்ன வெங்காயம் – 2
செய்முறை
பாசிபயிறை இரவே ஊறவைத்து காலையில் நன்கு களைந்து காலையில் அதன் தண்ணீரை வடித்து குக்கரில் போட்டு 350 மில்லி தண்ணீர்சேர்த்து வெங்காயம் தக்காளியை அரிந்து சேர்க்கவும், தேங்காய் பவுடரை சிறிது வென்ணீரில் கரைத்து அதையும் ஊற்றி இஞ்சி ,பச்சமிளகாய்,உப்பு , மஞ்சள் பொடி சேர்த்து குக்க்ரை மூடி 3, 4 விசில் விட்டு இரக்கவும்.
ஆவி அடங்கியது குக்கரின் மூடியை திறந்து லேசாக மசித்து விட்டு ரொம்ப கட்டியாக இருந்தால் சிறிது வெண்ணீர் ஊற்றி கலக்கி கொதிக்கவிடவும்.
பிறகு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும்.
சுவையான கேரளாஸ்பெஷல் பயறு கறி ரெடி.
இதில் பெரும்பாலும் அவர்கள் தேங்காய் எண்ணையில் செய்வார்கள், ஆனால் இங்குள்ள ஷாப்களில் சன்ப்ளவர் ஆயிலில் தான் செய்கிறார்கள்.தேங்காய் பவுடருக்கு பதில் பிரஷ் தேங்காயில் பால் எடுத்தும் ஊற்றலாம்.
ஆபிஸ்க்கு காலை டிபன் கொண்டு செல்லவில்லை என்றால் ஆபிஸ் பக்கத்தில் உள்ள கடைகளில்தான் புட்டு பயறு கறி , அல்லது ஆப்பம்பயறு கறி வாங்கி சாப்பிடுவது. அப்படி சுவைத்ததில் செய்தது தான் இந்த கறி.
Tweet | ||||||
9 கருத்துகள்:
நல்லாருக்கு ஜலீலாக்கா. சத்தானதும் கூட.
செய்து பார்ப்போம் சகோதரி...
கேரளா செல்ல வேண்டியதில்லை... செலவு மிச்சம்... ஹிஹி...
நன்றி...
தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்...நன்றி...
ஹெல்தி.இது புட்டு சப்பாத்திக்கு கூட சூப்பராக இருக்கும்.
சிறு பயறு என்று சொல்வார்கள்... நம்ம ஊரில் பாசிப்பயறு இளங்குழம்பு வைப்பது போல் வைப்பார்கள். நானும் அறையில் அடிக்கடி வைப்பேன்... யூரிக் ஆசிட் பிரச்சினையால் கால்வலி வந்தபோது மருத்துவர் பயறு சாப்பிடக்கூடாது என்று சொன்னதும் நிறுத்திவிட்டேன்.
வாங்க சாந்தி வருகைக்கு மிக்க நன்றி
நன்றி தனபாலன் சார்
ஆமாம் ஆசியா கேரள மக்கள் புட்டுடன் தான் சாப்பிடுவார்கள், எனக்கு ஆப்பம், இடியாப்பத்துடன் சேர்த்து சாப்பிட பிடிக்கும்.
சே.குமார், யூரிக் ஆசிட் பிரச்சனை சமீபத்தில் தான் கேள்வி பட்டேன். ஓ பயறு சாப்பிட கூடாது என்று மருத்துவர் சொல்லி இருக்கிறாரா?
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா