Friday, January 31, 2014

பிரியாணி மசாலா பொடி - Biriyani Masala Powder




பிரியாணி மசாலா பொடி.







இங்குள்ள துபாய் சூப்பர் மார்கெட்டுகளில், இதுபோல் கலவையான மசாலா சாமான்கள் பாக்கெட்டுகளில் வைத்து இருப்பார்கள்.அதில்

பிரிஞ்சி இலை, ஏலம், பட்டை, கிராம்பு, சோம்பு சீரகம், மிளகு,ஜாதிக்காய் ,என எல்லாம் கலவையாக இருக்கும்.


சில பெரிய பெரிய சூப்பர்மார்கெட்கள் மால்கள், தமிழ் கடைகளில் இந்த மசலாவகை பவுடர்கள் தனித்தனியாகவும் கிடைக்கும்.

எல்லா வகைகளையும் 50 ,.50 கிராம் வாங்கினாலும்  செலவாக நாள் ஆகும். அதற்கு சில நேரம் நான் இப்படி ஒரு வாரத்துக்கு தகுந்தார்போல பிரஷ்ஷாக கொஞ்சம் கொஞ்சமாக நான் திரித்து வைத்து கொள்வதும் உண்டு.

இதை பிரியாணி , வறுவல் வகைகள் , செட்டிநாடு சமையல் வகைகள் மற்றும் ஹதர பாத் சமையலுக்கும் பயன் படுத்தி கொள்ள்லாம்.

ஹதராபாத் பிரியாணிக்கு சோம்பு சேர்க்காமல் , ஷாஜீரா சேர்த்து கொள்ளவேண்டும்.


தேவையான பொருட்கள்

பிரியாணி மசாலா - 1
பிரிஞ்சி இலை  - 5 இலை
பட்டை - 2 இன்ச் சைஸ் - 3
கிராம்பு - 10 எண்ணிக்கை
ஏலம் - 6 எண்ணிக்கை
சோம்பு  - ஒரு மேசை கரண்டி
சீரகம்  - இரண்டு மேசை கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
ஜாதிக்காய்  - சிறிய துண்டு ஒன்று
அன்னாசி பூ - ஒன்று
(அன்னாசி பூ வாசனை எங்க வீட்டில் யாருக்கும் பிடிக்காது ஆகையால் இதில் ஒரு சின்ன இதழ் மட்டும் தான் சேர்த்துள்ளேன்)

இதில் மிளகாய் தூள் மற்றும் தனியாதூள் தேவைக்கு சமைக்கும் கறி வகைகளை பொருத்து அதற்கேற்றாற் போல் சேர்த்து கொள்ளுங்கள்.

ஹைதராபாத்பிரியாணி மசாலா - 2

ஏற்கனவே இங்கு முன்பே கொடுத்துள்ள ஹைதராபாத் பிரியாணியில் எல்லா மசாலா வகைகளையும் முழுசாக தான் சேர்த்துள்ளேன். ஆனால் குழந்தைகளுக்கு சாப்பிடவும் இலகுவாக செய்யனும் என்றால் பொடித்துகொள்வது நல்லது.


பிரிஞ்சி இலை - 5இலை
பட்டை - இரண்டு இன்ச் சைஸ் - 3
கிராம்பு - 10 எண்ணிக்கை
ஏலம் - 6 எண்ணிக்கை
மிளகு - ஒரு மேசைகரண்டி
ஷாஜீரா - ஒரு மேசைகரண்டி
சீரகம்  - இரண்டு மேசைகரண்டி
ஜாதிக்காய் - ஒரு சிறிய துண்டு
ஜாதிபத்திரி - முன்று இதழ்
அன்னாசி பூ - ஒன்று

இதில் மிளகாய் தூள் மற்றும் தனியாதூள் தேவைக்கு சமைக்கும் கறி வகைகளை பொருத்து அதற்கேற்றாற் போல் சேர்த்து கொள்ளுங்கள்.

செய்முறை

மேற்கண்ட அனைத்து பொருட்களையும் எல்லாம் காய்ந்த ஈரமில்லாத மிக்சியில் அல்லது பவுடர் செய்யும் மிக்சியில் திரித்து பவுடராக்கி, சிறிது நேரம் ஆறவைத்து ஈரமில்லாத காய்ந்த கண்டெயினர் களில் போட்டு வைத்து கொள்ளவும்.

பிளாஸ்டிக் கண்டெயினரை விட காய்ந்த கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்தால் மிகவும் நல்லது.




இதில் பிரிஞ்சி இலையின் காம்பை கிள்ளி விட்டு திரிக்கனும்.



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

14 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

குறித்துக் கொண்டாயிற்று... நன்றி சகோதரி...

திண்டுக்கல் தனபாலன் said...

தமிழ்மணம் இணைத்து விட்டேன்... நன்றி...

+1

துளசி கோபால் said...

பிரிஞ்சி இலை சரியாக மசியாமல் திப்பி திப்பியா இருந்துச்சு ஒரு முறை கடையில் வாங்கிய மசாலாவில். எவரெஸ்ட் ப்ராண்ட்:(

உணவோடு கலந்து தொண்டையில் மாட்டும் அபாயம் இருந்தது:(

அதனால் தாளிக்கும்போது முழு இலையாப் போட்டுருவேன். சமைத்தபின் எடுத்துட சுலபமா இருக்கும்.

செய்முறை குறிப்புக்கு நன்றி.

சாரதா சமையல் said...

பிரியாணி மசாலா பொடி குறிப்பு அருமை.

Asiya Omar said...

வீட்டில் திரித்தால் அதன் மணமே தனி தான்.பொருட்களின் அளவு கொடுத்தால் திரிக்க வசதியாக இருக்கும்.நானும் வீட்டில் தான் திரித்து எடுப்பேன்.உங்க அளவு முறை தெரிந்தால் திரிக்க ஈசியாக இருக்கும்.

Jaleela Kamal said...

முதல் வருகைக்கு மிக்க நன்றி தனபாலன் சார்

Jaleela Kamal said...

துளசி கோபால்,

பிரிஞ்சி இலை அதன் காம்பு பகுதியை கிள்ளி விட்டட்டு சேர்க்கனும்.

நானும் முழுதாக தான் போட்டு சமைப்பது'

ஆனால் சில வறுவல் வகைக்கு நான் இப்படி பொடித்து வைத்துள்ளேன்.
மிக அருமையான வாசனையுடன் இருக்கும்

பாம்பே பிரியாணி , ஹதராபாத் பிரியாணி மற்றும் செட்டி நாடு பிரியாணி களுக்கு இதை சேர்க்கலாம்


Jaleela Kamal said...

வருகைக்கு மிக்க நன்றி துளசி கோபால்

Jaleela Kamal said...

ஆமாம் ஆசியா ,சின்ன பொடிதிரிக்கு மிக்சி வைத்து இருப்பதால் அப்ப அப்ப பொடித்து தான் சேர்ப்பேன்.
இதை சும்மா கை அளவு போட்டேன்

பிறகு அளவுகளை இனைக்கிறேன்

Jaleela Kamal said...

வருகைக்கு மிக்க நன்றி சாரதா/

annan.anandhakrishnan said...

பயனுள்ள குறிப்பு.
கிராமத்து கறிகுழம்பு பொடி எப்படி
செய்வது?

fathimas said...

அருமை..

Unknown said...

தமிழ்நாட்டில் மாசால தூள் சிறிய அளவில் வீட்டில் செய்து வரும் நபர்களிடம் இருந்து மொத்தமாக தேவை உடனே 9843427782 & slmkmsasikumar1976@gmail.com என்ற நெம்பருக்கே & மொயில்கே மொசேஜ் உடனே செய்யவும் விலை பட்டியல் தேவை

Jaleela Kamal said...

சசி குமார் அவர்களுக்கு உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி , விரைவில் மெயில் செய்கிறேன்

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா