சங்கரா மீன் தலை சூப்/ரசம்
Red Snapper Soup - Step by Step
மீன் வாங்கினால் நல்ல உப்பு, புளி, காரமாக சுல்லுன்னு சால்னா மற்றும் ஃப்ரை என்று செய்வேன்.
இப்ப இங்கு குளிர் அதிகமாக இருப்பதால் சங்கரா மீன் தலை சூப் செய்துள்ளேன். இது கடுஞ்சளி பிடித்து இருந்தால் இது போல் சூப் வகைகளை சாப்பிட்டால் கொஞ்சம் குணமாகும்.
முக்கியமாக இது பிள்ளை பெற்றவர்களுக்கு , பிரசவம் ஆனதும் 40 நாட்கள் மதியவேலைகளில் மட்டன் போன் சூப், சிக்கன் போன் சூப் என்று செய்து கொடுப்போம், ஒரே அதையே சாப்பிட்டு சலித்து போய்விடும் அதுக்கு தான் இடையில் சங்கரா மீன் , காரப்பொடி மீன் சூப் என்று செய்து கொடுப்போம்.
இதை குடித்தால் தாய் மார்களுக்கு நன்கு பால் சுரக்கும்..
இதை அறுசுவை டாட் காமில் 2008 காரப்பொடி மிளகு சூப். குழம்பு என கொடுத்துள்ளேன்,கைவசம் காரப்பொடி மீன் இல்லை ஆகையால் சங்கராமீன் தலையில் செய்துள்ளேன்.
மொத்தம் மூன்று பெரிய சங்கரா மீன் தலையை சூப் வைத்து விட்டு மிதியல் துண்டுகளாக போட்டுமசலா தடவி பொரித்து கொள்ளலாம்.
- தேவையானவை
- சங்கரா மீன் தலை - மூன்று
- வேக வைக்க:
- தாளிக்க:
- நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
- காரப்பொடி மீனை சுத்தம் செய்து கொள்ளவும். அதில் வேகவைக்க வேண்டியவைகளை போட்டு மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து குறைந்த தீயில் பத்து நிமிடம் வேக விடவும். மூடி போட்டால் பொங்கும் லேசாக மூடி வைக்கவும்.
- பிறகு தாளிக்க வேண்டியவைகளை ஒன்று சேர்த்து லேசாக ஒன்றும் பாதியுமாக தட்டி தாளித்து குழம்பில் கொட்டவும்.
- சுவையான சங்கரா மீன் சூப்/ரசம் தயார்.
- குறிப்பு: சின்ன வெங்காயத்துக்குபதில் பெரிய வெங்காயமும் சேர்த்துகொள்ளலாம், சளி தொல்லைக்கு சின்ன வெங்காயத்தை நெயில் வறுத்து சாப்பிடலாம், அதற்காக இப்ப நான் தாளிக்கும் போது சின்ன வெங்காயத்தை தட்டி தாளிப்பது ருசியும் மிக அருமையாக இருக்கும்.
Red Snapper Soup. For kids
மீன் கொதிக்கும் போது மீனை நன்கு உடைத்து விட்டு வேகவைக்கவும்.
வெந்து இரக்கும் சமையம் நன்கு கரண்டியால்மசித்து பெரிய துளை உள்ள வடிகட்டியில் வடிக்கவும். பிறகு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.
மீன் முள்ளுடன் சாப்பிடும் போது நல்ல வெளிச்சமான இடத்தில் பொறுமையாக முள் எடுத்து சாப்பிடனும் இல்லை என்றால் தொண்டையில் சிக்கி விபரீதமாகிவிடும்.
இந்த டிப்ஸையும் பாருங்கள் - தொண்டையில் முள் குத்தி விட்டால் .அபாயம்
Tweet | ||||||
7 கருத்துகள்:
மீன் சூப் முதல் முறை கேள்விப் படுகிறேன்...
செய்து பார்க்கலாம்...
Yumm...
ஜலீலா தேங்காய்ப்பால் சேர்த்து செய்திருக்கீங்க, அருமை.
http://www.arusuvai.com/tamil/node/7061
இது அறுசுவையில் காரப்பொடி மீன் சூப் என்று கொடுத்துள்ளேன்., கை வசம் காரப்பொடி இல்லை அதற்கு பதில் சங்கராமீன் சேர்த்துள்ளேன்,
First time to see our Indian fish soup. This is definitely a recipe to cherish and handover to generations. Looks super delicious akka.
மீன் சூப் முதல் தடவையாக பார்க்கிறேன் அக்கா.உண்மைதான்... ஒரே மாதிரி செய்ய போர் அடிக்கும் போது இப்படி கூட செய்யலாம் என்று நல்ல ஐடியா கொடுத்திருக்கீங்க.சூப்பர்.
தங்கள் பகிர்வுக்கு நன்றி அக்கா.
அப்சரா.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா