ஸ்பைசி டயட் தக்காளி சாதம்
லன்ச் பாக்ஸ் க்கு புளி சாதம் , தயிர் சாதம் ,லெமன் சாதம், என்று கட்டு சாத வகைகளில் எங்க வீட்டில் எல்லாருக்கும் பிடித்தது தக்காளி சாதம். இதை இரண்டு முன்று வகைகளில் தயாரிப்பேன். சாம்பார் பொடி சேர்த்து , மிளகாய் தூள் மட்டும் சேர்த்து ஆனால் நிறைய எண்ணை ஊற்றினால் தான் சுவை வரும். நான் குறைவான எண்ணை தான் பயன் படுத்துவது.. அதில் இதை சில மசாலாக்களுடன் ஆரோக்கியமான ஆலிவ் எண்ணையில் தயாரித்துள்ளேன்.
பாசுமதி அரிசி – 200 கிராம்
பழுத்த தக்காளி – முன்று
தாளிக்க
ஆலிவ் ஆயில் – முன்று மேசை கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி
மிளகாய் வத்தல் – இரண்டு
கருவேப்பிலை- சிறிது
பூண்டு – முன்று பல்
பிரிஞ்சி இலை – இரண்டு
சோம்பு – அரை தேக்கரண்டி
சேர்க்க வேண்டிய தூள்கள்
மிளகாய் தூள் – முக்கால் தேக்கரண்டி
உப்பு தூள் - தேவைக்கு
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
செய்முறை
1. அரிசியை களைந்து 10 நிமிடம் ஊறவைத்து உதிரியாக வடித்து ஆறவைக்கவும்.
2. சட்டியை காயவைத்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
3. தக்காளி பச்சமிளகாய் சேர்த்து வதக்கவும்.
4. சேர்க்கவேண்டிய தூள் வகைகளை சேர்க்கவும்.
5. 7 நிமிடம் சிம்மில் வைக்கவும். தக்காளி கூட்டு பத்த்திற்கு வரும்.
6. ஆலிவ் ஆயில் என்பதால் எண்ணை மேலே மிதக்காது. சதா எண்ணை ஊற்றும் போது கூட்டு தனியாக எண்ணை தனியாக பிரிந்து வரும்.
7. கூட்டு பதம் வந்த்தும் ஆறவைத்து சாதம் + கூட்டை நன்கு உடையாமல் கிளறி இரக்கவும்.
8. சுவையான மணமான ஸ்பைசி டயட் தக்காளி சாதம் ரெடி.
9. இதை பிரவுன் அரிசியிலும் செய்யலாம்.
10. டயட் இல்லாதவர்கள் சாதாரணமாக நாம் பயன் படுத்தும் எண்ணை + சிறிது முந்திரி சேர்த்து கொள்ளலாம்./
தக்காளி சாத்த்தை இரண்டு முன்று வகையாக நான் தயாரிப்பேன் அதில் இது ஒருவகை.
Tweet | ||||||
11 கருத்துகள்:
"ஸ்பைசி டயட் தக்காளி சாதம் மிகவும் அருமை சகோதரி... நன்றி...
தக்காளி சாதம் சூப்பரா இருக்கு
ஸ்பைசி டயட் தக்காளி சாதம் நன்றாக இருக்கிறது ஜலீலா.
ஸ்பைசி தக்காளி சாதம் சூப்பரா இருக்கு...
இன்று எனது பக்கத்தில்
http://kovai2delhi.blogspot.in/2014/01/blog-post_16.html
தக்காளி சாதம் சூப்பர்.
சலாம் ஜலீலா அக்கா.
உங்கள் தக்காளி சாதம் நேற்று லன்ச்க்கு செய்தேன்.
சூப்பராக வந்தது..
காலை நேர அவசரத்தில் ஃபோட்டோ எடுக்கவில்லை..இல்லையெனில் இணைத்திருப்பேன்.
தக்காளி சாதம் சூப்பரா இருக்கு.
தக்காளி சாதம் அருமை...
சூப்பர்.
ஷம்மி தக்காளி சாதம் செய்து பார்த்தமைக்கு ரொம்ப சந்தோஷம்
கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா