Thursday, March 22, 2012

தேனி கூடு கட்டி விட்டதா?



உங்கள் வீட்டு தோட்ட்த்திலோ அல்லது பால்கனியிலோ தேனி கூடி கட்டி விட்ட்தா கவ்லை வேண்டாம் , இங்கு துபாயில் அடிக்கடி அங்காங்கே இது போல் தேனி கூடு கட்டிவிடும் ஓவ்வொரு முறையும்  யாரும் பால்கனி பக்கம் போக முடியாது கொட்டி விடுமோன்னு பயம் தான்.
முன்பெல்லாம் என்ன செய்வது என தெரியாமல் பேகான் ஸ்ப்ரே வாங்கி ஸ்பெரே பண்ணிடுவாங்க. இந்த முறை யாரும் ஸ்ப்ரே பண்ண கூடாதுன்னு சொல்லிட்டேன். தேனிகளும் சாக்க்கூடாது, அதிலிருந்து தேனும் எடுக்கனும் என்ன செய்யலாம்.
 அரபி வில்லாக்களில் வீட்டை சுற்றி செடி கொடிகள் இருக்கும் ஆனால் அங்கு கண்டிப்பாக தேனி கூடு கட்ட தானே செய்யும் என்று, வில்லா வில் வசிப்பவர்களிடம் கேட்டேன்.அதற்கு ஒன்றும் அதை துண்புறுத்தாதவரை ஒன்றும் பிரச்சனை இல்லை. அப்ப எப்படி ஓட்டி விடுவது என்றேன்  

ஒன்றும் இல்லை தேனிக்கள் கூடு கட்டி உள்ள இட்த்தில் கீழே நெருப்பை கொளுத்தி வைத்தால் எல்லாம் பறந்து போய் விடும், அடுத்து உள்ளே வலை அழகிய வெள்ளை நிற  கூடு இருக்கும் ஒரு பக்கமா குச்சியால் குத்தி விட்டு கிழே ஒரு கப்பை வைத்து விட்டால் கொஞ்சம் கொஞ்சமாக தேன் வடிந்து விடும். சுத்தமான தேன் நமக்கு கிடைக்கும் என்றார்.


நான் வரும வரை அந்த தேனிக்க்ளை கொல்ல கூடாது நானும் வீட்டில் சொல்லிட்டேன். இரண்டு நாள் ஆச்சு யாரும் பால்கனி பக்கம் போகல துணி எல்லாம் உள்ளேயே காயப்போட்டு கொண்டோம்.
அந்த வில்லாவில் உள்ளவர் சொன்ன படி பேப்பரை எரித்து எல்லா தேனியையும் ஓட்டி விட 3 மணி நேரம் ஆச்சு. அவர் சொன்ன படி தேனை எடுத்தேன்.

கொஞசம் பயம் தான் என்னை கடித்துடுமோன்ன்னு சேஃப்டிக்கு கையில் டைகர்பாம் தேய்த்து கொண்டேன், அப்ப தேனி கிட்ட வந்தால் அதுக்கு கண் எரியுமே....ஹிஹி
தேனிக்களும் சாகவில்லை. சிறிய கூடு என்பதால் இரண்டு மேசை கரண்டி தேன் கிடைத்த்து.

// ஆனால் நான் ஆபிஸிலிருந்து வருவதற்குள் என் பையனும் ஆத்துகாரரும் சேர்ந்து பேப்பர கொளுத்துரேன்னு  பால்கனி முழுவதும் கரியாக்கி அரை மணி நேரம் சுத்தம் செய்ய வேண்டியதா போச்சு//
அப்படி அடுக்குமாடி கட்டிடங்களில் நெருப்பு கொளுத்தி போட முடியாதவர்கள் ஒரு பெரிய ச்ட்டியில் உள்ளே துணியை கொளுத்தி போட்டு எரிய விடவும்.சுத்தமான தேனை நாமும் எடுக்கலாமே
தேனி கூடு பார்க்க ரொம்ப அழகாக இருந்து படம் இனைத்துள்ளேன்.


எப்படி எல்லோரும் ஒன்றாக இனைந்து ஒரு கூட்டை கட்டுகிறார்கள். இதே போல் நாமும் வீட்டிலும் ஊர்களிலிலும் , நாட்டிலும் நற்செயல்களுக்கு ஒன்று கூடினால் சிறப்பாக இருக்குமே!!!!!

டிஸ்கி : தேனிய கொல்லாம எப்படி தேனை எடுப்பது.வேற யாருக்கும் ஐடியா இருந்தா கூட இங்கு சொல்லலாம்.
இன்னொரு விஷியம் இது நடந்து 5 மாதம் ஆகுது ஆனால் இன்னும்  அந்த தேன் எடுத்தில் இருந்து ஒரே ஒரு தேனி மற்றும் இன்னைக்கு வரை என்னையே சுற்றி சுற்றி வருது... அவ்வ்வ பேபே
ஆக்கம்
ஜலீலாகமால்








20 கருத்துகள்:

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

மிக அழகான பகிர்வு...

வஸ்ஸலாம்,

ஸாதிகா said...

பால்கனி சுவர் இத்தனை அசிங்கமாகி ரெண்டு டேபிள் ஸ்பூன் தேன் எடுக்கத்தான் வேண்டுமா ஜலி? :)

சாந்தி மாரியப்பன் said...

தேனீ கிட்ட தேன் வாங்குனீங்கல்ல.. காசு கொடுத்தீங்களா?.. ஒரு அஞ்சோ பத்தோ கொடுத்துருங்க. அந்தத் தேனீ இனிமே உங்க கிட்ட வராது. அது வசூல் தேனீயாக்கும் :-))

Asiya Omar said...

நல்ல பகிர்வு ஜலீலா.
//இன்னும் அந்த தேன் எடுத்தில் இருந்து ஒரே ஒரு தேனி மற்றும் இன்னைக்கு வரை என்னையே சுற்றி சுற்றி வருது... அவ்வ்வ //

வெரி இண்ட்ரஸ்டிங்..

ADHI VENKAT said...

தேன் எடுப்பதற்கு உங்களுக்கு தைரியம் தான்....

Menaga Sathia said...

சூப்பர் பகிர்வு!! ஆனாலும் உங்களுக்கு தைரியம் அதிகம் தான் அக்கா...

திண்டுக்கல் தனபாலன் said...

தேன்கடி எப்படி இருக்கும் தெரியுமா? ஹி ஹி !

Starjan (ஸ்டார்ஜன்) said...

படிக்க ரொம்ப இன்ரஸ்டிங்கா இருக்கு.. நல்ல பகிர்வு ஜலீலாக்கா.

Jaleela Kamal said...

வா அலைக்குக்கும் ஸலாம் ஆஷிக் நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்தது ரொம்ப சந்தோஷம்

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா ஒரு ஆசை தான் என்ன ஆகுதுன்னு ஒரு கை பார்த்துடுவோம்,அதே நேரம் புஸுன்னு ஒரே யடியா அந்த தேன் முழுவதும் சாவதை நான் விரும்பல.

இரண்டு ஸ்பூன் தேன் என்றால் அது சுத்தமான தேன்.

Jaleela Kamal said...

ஆமா சாந்தி ஏதாவது தட்சனை வைத்து இருக்கனும்.

நெசமா தான் இன்னும் கூட என் பின்னாடியே தான் சுத்திட்டு இருக்கு
ஒன்னே ஒன்று மட்டும்.

Jaleela Kamal said...

ஆமாம் ஆசியா, வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

கோவை2 தில்லி

ஹி ஹி ரொம்ப வே தைரியாம் தான்

முன்பெல்லா எலி, பல்லி, கரப்பான், எதுவந்தாலும் வரிஞ்சி கட்டி கொண்டு நான் தான் முன்னாடி நிற்பேன்...

Jaleela Kamal said...

வாங்க மேனாகா ஆமாம் மேனகா முதல கொஞ்சம் பயமா தான் இருந்தது,

என்னை கடிக்க கூடாதுன்னு கையில் டைகர் பார்ம் தேய்த்து கொண்டேன்
வந்து கடிச்சா அதுக்கு கண்ணு எரியும் இல்ல ஹிஹி

Jaleela Kamal said...

திண்டுக்கல் தனபாலன் வேனுமுன்னா அதுகூட்ட கலச்சி ஒரு கடிவாங்கிட்டு வந்து சொல்றீங்களா?

ஹிஹி தேனி கடி எப்படி இருந்துச்சின்னு....

Jaleela Kamal said...

ஸ்டார்ஜன் வாங்க வருகைக்கு மிக்க நன்றி

'பரிவை' சே.குமார் said...

மிக அழகான பகிர்வு...

'பரிவை' சே.குமார் said...

அது சரி... இங்கயும் வந்து தேன் எடுத்தாச்சா அக்கா...

Vijiskitchencreations said...

நல்ல பதிவு. எனக்கு பிடித்தடு டைகர்பாம் கையில் தடவி ... சூப்பரா திங்கிங் ஜலீ.

Mahi said...

சிறு வயதில் எங்க வீட்டில் தேன்கூடு அழித்தது நினைவு வருது ஜலீலாக்கா! இன்னும் நிறையத் தேன்கூடுகள் கட்டி நீங்களும் தேன் எடுக்க வாழ்த்துக்கள்! அந்த ஒரு தேனீ கிட்ட மட்டும் எச்சரிக்கையா இருங்க! ஹிஹி!

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா