சிக்கன் பெப்பர் டிக்கா
தேவையானவை
1. முதலில் ஊறவைக்க.
எலும்பில்லாத சிக்கன் – அரை கிலோ
உப்பு- தேவைக்கு
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு மேசை கரண்டி
2. இரண்டாவதாக ஊறவைக்க.
தயிர் – 200 கிராம்
உப்பு – கால் தேக்கரண்டி
பச்ச மிளகாய் – ஒன்று அரைத்தது
மிளகு – இரண்டு மேசை கரண்டி (திரித்த்து)
எண்ணை – ஒரு மேசை கரண்டி
அலங்கரிக்க
கொடமொளகா
லெமன்
வெள்ளரி
தக்காளி
மேலே தூவ
லெமன் ஜூஸ்
சாட் மசாலா
உருக்கிய பட்டர்
செய்முறை
சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
தயிரில் அரைத்த பச்சமிளகாய், திரித்த மிளகு , உப்பு, எண்ணை கலந்து ஃபோர்க்கால் நன்கு அடித்து சிக்கனுடன் சேர்த்து மீண்டும் அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
முற்சூடு செய்த ஓவனில் 20 நிமிடம் வைத்து எடுக்கவும்.பார்பிகியுவும் செய்யலாம்.
ஓவன் இல்லை என்றால் டீப் ஃப்ரை செய்து எடுக்கவும்.
கிரில் செய்த சிக்கனில் சிறிது லெமன் சாறு பிழிந்து , சாட்மசாலா தூவு , சிறிது பட்டரை உருக்கி மேலே ஊற்றவும்.
கொட மிளகாய், வெள்ளரி, தக்காளி கொண்டு அலங்கரிக்கவும்.
இதில் நான் செய்துள்ளது பாலக் ஹமூஸ், வெந்த உருளை மசாலா.
Tweet | ||||||
16 கருத்துகள்:
விருந்தோம்பலுக்கு ஏற்ற டிக்கா
superaa irukku akka paarththup podavee...naanum try pannureen
ஆஹா டிக்கா நாவில் நீரை வரவழைக்கிறது.உங்க சமையலை கேட்கணுமா என்ன ?...
சூப்பரா இருக்கு....
இப்பிடியெல்லாம் சமைச்சா பரிசு தரமாட்டாங்களா என்ன.அசத்துறீங்க ஜலீலா !
செய்முறை படிக்கும் போதே.....எலும்புல்லாத கோழி 1கிலோ...முடிவு எடுத்துடோம்ல..
நல்ல இருக்கு ! அடிக்கிற வெயிலுக்கு COOL-யா ஏதாவது சொல்லுங்க ! ! !
Super ...super...super! Tikka romba nalla iruku akka.
ஆமாம் ஸாதிகா அக்கா விருந்தோம்பலுக்கு ஏற்ற டிக்கா.
கலை வருகைக்கு மிக்க நன்றி செய்து பார்த்து வந்து சொல்லனும்
ஆம் ஆசியா எனக்கே இப்ப படத்த பார்க்க பார்க்க மீண்டும் செய்யனுமுன்னு தோனுது.. வருகைக்கு மிக்க நன்றி
உங்க்ள் கருத்துக்கு மிக்க் நன்றி மேனகா
ஹா ஹா ஹேமா நான் சாதரணமாக தான் செய்கிறேன் ஹேமா..
மனசாட்சி வாங்க உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி
ஒரு கிலோ வாங்கியாச்சா செய்யுங்க இனி அடிக்கடி செய்ய வேண்டி வரும்
திண்டுக்கல் தனபாலன் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க் நன்றி.
கூலா தானே செய்துட்டா போச்சு.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி விக்கி
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா