தும்மல் இருமல் சளிக்கு ஏற்ற அருமையான துளசி இஞ்சி பிளாக் காஃபி. இப்ப இந்த பனிகாலத்தில் எங்கு பார்த்தாலும் எல்லோருக்கும் தொடர்ந்து தும்மல், சளி , இருமல் அதற்கு துளசி ஒரு அருமையான மருந்து.
துளசி இஞ்சி பிளாக் காஃபி
தேவையானவை
துளசி இலை – 25 இலைகள்
இஞ்சி சாறு - ஒரு துண்டு
லெமன் ஜூஸ் – ஒரு தேக்கரண்டி
காஃபி பொடி – கால் தேக்கரண்டி
சர்க்கரை – ஒன்னறை தேக்கரண்டி
தண்ணீர் – ஒன்னறை டம்ளர்
செய்முறை
துளசி இலை சுத்தமாக கழுவி, இஞ்சி சேர்த்து நன்கு நசுக்கி சாறெடுக்கவும் , அதை தண்ணீருடன் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு காஃபி பொடி சர்க்கரை கலந்து வடிகட்டி எலுமிச்ச்சை சாறு சேர்த்து குடிக்கவும்.
இதில் துளசியை ,பிலாக் காஃபி (அ) பிலாக் டீ , அல்லது பால் சேர்த்தோ செய்து குடிக்கலாம்.
ஆக்கம்
ஜலீலாகமால்
துபாய்
sikaram
Tweet | ||||||
26 கருத்துகள்:
தும்மல், சளிக்கு ஏற்ற மருந்து ! நன்றி !
துளசி இஞ்சி ப்ளாக் காஃபி மிக தேவையான மருத்துவ பக்குவம்.
நன்றி ஜலீலா.
நல்ல கைப்பக்குவம்.இஞ்சி புதினா சேர்த்து ப்ளாக் காஃபி குடிப்பதுண்டு,துளசி சேர்த்து குடித்து விட்டால் போச்சு.ட்ரை செய்து பார்த்தாச்சு.திடீர்னு நினைவு வந்தது எல்லா ஹெர்ப்ஸ் பொடியும் வைத்திருப்பதால் பேசில்(துளசி) ஹெர்ப் பொடி சேர்த்து,(ஃப்ரெஷ்க்கு பதில் ) ரெடி செய்து சூப்பர்.
நல்லா குறிப்பு .பகிர்வுக்கு நன்றி ஜலீலா.
super post akka :)
thx. for sharing
wonderful drink boookmarked!!
வீட்டுத்தோட்டத்தில் இருக்கும் துளசி செடி பறிக்கப்படாமல் உள்ளது.இப்போ அதுக்கு வேலை வந்து விட்டது.
அருமையான ருசியான மருந்து..
சூப்பர் காஃப்பி.
ஜலீலாக்கா. சென்னை பிளாஷா என்பதும் உங்கள் வலைப்பூவோ? அப்படித்தான் நினைத்திருந்தேன், ஆனா வலைப்பூ இருப்பது இப்போதான் கண்டேன், போய்ப் பார்த்தேன், அதில் உங்கள் பெயர் இல்லை, அதனால பயத்தில் எதுவும் எழுதாமல் வந்துவிட்டேன்:))
ஆம் இது தும்மல் சளிக்கு ஏற்றது வருகைக்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்
ஆசியா தினம் இஞ்சி டீ தான்
குளிர்காலத்தில் இது போல் விதவிதமான டீ வகைகள் .
செய்வேன்
மிக்க நன்றி காஞ்சனா
வருகைக்கு மிக்க நன்றி அருனா
உஙக்ள் பாராட்டுக்கு மிக்க நன்றி கல்பனா,
கண்டிப்பாக செய்து பாருஙக்ள்
ஸாதிகா அக்கா இனி அடிக்கடி உங்கள் வீட்டில் துளசி காஃபி, துளசி டீயா
குடிங்க உடம்புக்கும் மிகவும் நல்லதும் கூட
தொடர் வருகைக்கு மிக்க நன்றி
சாந்தி மிக்க நன்றி
அதிரா சும்மா பயப்படாம வாங்க ஒன்னும் ஆகாது ஆனால் கடைக்குள்ள நுழந்தா ஏதாவது வாஙகனும்மாக்கும் வுக்கும்
சென்னை ப்ளாசாவும் நான் தான்
அதில் என் பெயர வைக்கல.
சென்னை ப்ளாசான்னே வைத்து விட்டேன்...
மிக்க நன்றி காஞ்சனா
ருசியான பானகம்..
தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_15.html
we do this for cold. useful post ..
Such a healthy coffee... Nice one...
துளசி, இஞ்சி ப்ளாக் காபி பிரமாதம். செய்து பார்த்தால் ஆச்சு.
பகிர்வுக்கு நன்றி!
காபி குடிக்க வந்துட்டேன் சுவையான சூடான காபிக்கு நன்றி ஜலீலா
காபி குடிக்க வந்துட்டேன் சுவையான சூடான காபிக்கு நன்றி ஜலீலா
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா