Friday, March 9, 2012

நன்னாரி லெமன் சர்பத் - Nannari Lemon Surbath


கோடைகாலம் ஆரம்பித்து விட்டது, கோடைக்கேற்ற குளு குளு பானம்.
சுவைத்து மகிழுங்கள், உங்கள் பொன்னான கருத்துகக்ளை தெரிவியுங்கள்.
நன்னாரி லெமன் சர்பத்
தேவையானவை

தண்ணீர் – 4 டம்ளர் ( 800 மில்லி)
நன்னாரி எசன்ஸ் – 2 குழிகரண்டி
சர்க்கரை – 6 தேக்கரண்டி
லெமன்  - இரண்டு பழம்
உப்பு – 1 சிட்டிக்கை

அலங்கரிக்க + ஊறவைக்க
புதினா




செய்முறை
லெமனை பிழிந்து சாறெடுத்து தண்ணீருடன் சேர்க்கவும்.
சர்க்கரை,உப்பு  சேர்த்து நன்கு கரைத்து வடிக்கட்டவும்.
அதில் நன்னாரி எசன்ஸை சேர்த்து ப்ரஷ் புதினா இலையைசேர்த்து
குளீரூட்டியில் 3 மணிநேரம் வைக்கவும்.
புதினா மணம் நன்னாரி சர்பத்தில் இரங்கி குடிக்க இதமாக இருக்கும்.
வெயிலில் சென்று வந்த களைப்பும் தீரும்.

நன்னாரி என்றதும் என் அப்பா நினைவுதான் வருது. வெயில் காலம் வந்து விட்டால் நன்னாரி வேர் வாங்கி வந்து மண்பானையில் போட்டு தண்ணீர் ஊற்றி வைப்பார்.
நாங்க பள்ளி சென்று வீட்டுக்கு வரும்போது அந்த மண் வாசனையுடன் தண்ணீர் குடிக்க சூப்பராக இருக்கும்.

//உடனே குடிப்பதாக இருந்தால் 10 ஐஸ் கட்டிகளை சேர்த்து தண்ணீருடன் மிக்சியில் லெமன் சர்க்கரை உப்பு. இரண்டு புதினாஇதழ் சேர்த்து ஓடவிட்டு வடிகட்டி நன்னாரி எசன்ஸ் கலந்து பருகவும்.  கோடைக்கேற்ற குளு குளு பானம்.//


அசதி , சோர்வை நீக்கும் அருமையான் பானம்..கர்பிணி பெண்களுக்கு, மசக்கை பெண்களுக்கு, விளையாட்டு பிள்ளைகளுக்கு அனைவருக்கும் ஏற்ற அருமையான பானம்.


சுவைத்து மகிழுங்கள், உங்கள் பொன்னான கருத்துகக்ளை தெரிவித்தால் நானும் குளு குளுன்னு ஆகிடுவேன். அடுத்த குறிப்பு எழுத ஒரு உற்சாகம் வரும் ஹிஹி  எப்பா அதுக்குன்னு ஒரு கிலோ ஐஸ அள்ளி பிலாக்குல தெளித்து விடாதீங்கோ எனக்கு ஜல்பு பிடிச்சிக்குமாக்க்கும்..


டிஸ்கி: என் பக்கம் தொடர்ந்து வருகை தரும் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் போன பதிவில் வெயிலுக்கு ஏற்றாற் போல கூலாக ஏதாவது போடுங்கள். என்றால் அவருக்காக இந்த நன்னாரி ஜூஸ்.. நீங்களும் சுவைத்து மகிழுங்கள்

24 கருத்துகள்:

நட்புடன் ஜமால் said...

கோடையின் வாடை துவங்கி விட்டதோ

இன்ஷா அல்லாஹ், இதை குடித்துடுவோம் ...

திண்டுக்கல் தனபாலன் said...

ரொம்ப நன்றிங்க ! என் பொண்ணுக்கு ரொம்ப பிடிக்கும் ! (இப்பவே வெயில் இப்படி இருக்கே ! பங்குனி, சித்திரை எப்படி இருக்குமோ ! இரண்டு மாதம் வரைக்கும் இப்படி கூலான பதிவா போடுங்க மேடம் ! நன்றி!)

Lifewithspices said...

i can drink atleast 5 - 6 large glasses in one stretch am mad at this..

ஸாதிகா said...

எங்கள் வீட்டில் ஃபிரிட்ஜ்ஜில் எப்பபொழுதும்இருக்கும் ஐட்டம்.கோடையின் வெப்பத்திற்கு இதமளிக்கும் சர்பத்

Anonymous said...

அடடா கோடை காலத்திற்கு ஏற்ற குளிர்பானம் சார் [பகிர்ந்தமைக்கு நன்றி

Menaga Sathia said...

கோடைகாலத்துக்கேத்த சூப்பர் பானம்!!

Avargal Unmaigal said...

உங்களுக்கும் திண்டுக்கல் தனபாலனுக்கும் எனது கடும் கண்டணங்கள். எனது சிறுவயதில் அதிகம் பிடித்த & அருந்திய பானம் இது, அதை மறந்து போன எனக்கு ஞாபகபடுத்தி ஆசையை தூண்டிய உங்க்ளை கண்டிக்கிறேன். முடிந்தால் சில நன்னாரி ஏசன்ஸ் பாட்டில் வாங்கி உடனே அனுப்பி வைக்க வேண்டுகிறேன்

Avargal Unmaigal said...

//எங்கள் வீட்டில் ஃபிரிட்ஜ்ஜில் எப்பபொழுதும்இருக்கும் ஐட்டம்//

முடிந்தால் உங்க ப்ரிட்ஜை எனது வீட்டிற்கு அனுப்பி வைக்கவும்

சிநேகிதன் அக்பர் said...

அருமை!

Jaleela Kamal said...

வாங்க நட்புடன் ஜமால்
மிக்க நன்றி

Jaleela Kamal said...

திண்டுக்கல் தனபாலன் ம்ம் முயற்சி செய்கிறேன். கண்டிப்பாக வெயிலுக்கேற்ற இடுகைகள் வரும்

Jaleela Kamal said...

கல்பனா நானும் அப்படி தான் தாயாரித்த ஜூஸ் ஒரே மூச்சில் குடித்துடுவே அவ்வளவு பிரியம்.

Jaleela Kamal said...

//can drink atleast 5 - 6 large glasses in one stretch am mad at this..//

same pinch

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா நீங்க தான் நன்னாரியில் விதவிதமாக தயாரிப்பிங்களே

Jaleela Kamal said...

வெஸ்மொப்

வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

ஆம் மேனகா கோடைக்கு ஏற்ற சூபப்ர பானம்

Jaleela Kamal said...

வெஸ்மொப்

வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

ஹாஹா
அவர்கள் உண்மைகள்

உங்கள் அட்ரஸ் கொடுங்க

கொரியர் பண்ணிடுரேன்

சாந்தி மாரியப்பன் said...

ஆஹா.. ஜில்லுன்னு நன்னாரி சர்பத்... இது கூட நுங்கோ இல்லைன்னா மசிச்ச பழக்கலவையோ போட்டுக் குடிச்சுப் பார்த்திருக்கீங்களா.. ஜூப்பரா இருக்கும்.

குளுகுளுன்னு குறிப்பு கொடுத்த ஜலீலாக்கா வாழ்க...

Asiya Omar said...

நன்னாரி சர்பத் சூப்பர்.புதினா சேர்த்திருப்பது புதிது.

சேக்கனா M. நிஜாம் said...

கோடைக்கேற்றக் குளிர்ச்சி !

dsfs said...

ஜில்லுன்னு கோடைக்கு ஏற்ற பதிவு.

shanuk2305 said...

dindigulil abirami amman kovil streetil enga periyappa kadai sarpath and Fruit mixer superaa irukkum.

shanuk2305 said...

madurai vilakkoo dhoon jiljil jigardhandavum ninaivukkuu varugiradhu

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா