Thursday, July 9, 2009

சமையலறை டிப்ஸ்

சின்ன சமையல் டிப்ஸ்கள் இதன் மூலம் வேலையை சுலபமாக்கி கொள்ளலாம்.

1. எல்லா அசைவ சமையலுக்கும், குருமாக்களுக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட் அவசியம் அதை இஞ்சி அரை கிலோ , பூண்டு 300 கிராம் அளவில் உரித்து சுத்தம் செய்து அரைத்து வைத்து கொள்ளலாம். அரைத்ததும் அதனுடன் சிறிது உப்பு தூள்,கலந்து வைக்கவேண்டும்.
சின்ன பேமிலிக்கு ஒரு மாதம் வரை போதும். நல்ல ஒரு பெரிய பாட்டிலில் போட்டு வைத்து கொள்ளவும். வேண்டுமானால் நாலில் ஒரு பங்கை எடுத்து பிரீஜரிலும் வைக்கலாம்.
ச‌மைய‌லை ரொம்ப‌ சுல‌ப‌மாக‌ முடிக்க‌லாம், நேர‌த்தையும் மிச்ச‌ப்ப‌டுத்த‌லாம்

2. புளிவிட்டு செய்யும் சமயலுக்கு வேலைக்கு சொல்பவர்கள் சுடு நீரில் ஊற போட்டு கரைக்கனும் என்ற அவசியம் இல்லை சிறிது உப்பு சேர்த்து இரவே ஊறபோட்டு விடலாம்.


3. தேங்காய் நிறைய‌ இருந்தால் அதில் உப்பை த‌ட‌வி வைப்பார்க‌ள், அத‌ற்கு ப‌தில் ப‌த்தைக‌ளாக‌ போட்டோ (அ) பொடியாக‌ அரிந்தோ அதை ஒரு பாக்கெட்டில் போட்டு பிரீஜ‌ரில் வைத்து கொள்ள‌லாம். தேவையான‌ போது ச‌ட்னிக்கு,குருமாவிற்கு கொஞ்சம் எடுத்து சிறிது நேர‌ம் த‌ண்ணீரில் போட்டுவைத்தால் உட‌னே க‌ழ‌ண்டு வ‌ந்துவிடும்.



4.ஆப்ப‌த்துக்கு, இடியாப்பத்துக்கு தேங்காய்பால் ஊற்றி சாப்பிட‌ பால் எடுக்கும் போது அத்துட‌ன் ஏலாக்காய் சேர்த்து அரைத்தால் ந‌ல்ல‌ ம‌ண‌மாக‌ இருக்கும்.

5. தின‌ம் இஞ்சி டீ குடிப்ப‌வ‌ர்க‌ள் அதை போட்டு த‌ட்டி கொண்டு இருக்காம‌ல் ஒரு பெரிய‌ துண்டு அள‌விற்கு கொர‌ கொர‌ப்பாக‌ ஏல‌க்காய் சேர்த்து அரைத்து ஒரு ட‌ப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்து கொண்டால் தின‌ம் டீ கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் அள‌விற்கு எடுத்து போட்டு கொள்ள‌லாம்.அல்ல‌து கேர‌ட் துருவியில் தின‌ம் ஒரு துண்டு துருவிக்கொள்ள‌லாம்

6.பொரித்த‌ எண்ணை ம‌றுப‌டி ப‌ய‌ன் ப‌டுத்தும் போது அதை வ‌டிக‌ட்டி கொள்ளுங்க‌ள். முடிந்த‌ வ‌ரை கொஞ்ச‌மா எண்ணை ப‌ய‌ன் ப‌டுத்தி பொரிக்க‌வும். மீதியை முன்று நாட்க‌ளுக்குள் முடிக்க‌ பாருங்க‌ள்.

7.அடுத்த நாள் என்ன சமைக்க போகிறோம் என்பதை ஒரு நாள் முன்பே யோசித்து தேவையானதை வாஙகி வைத்து கொள்ளுங்கள்.காலையில் சமைக்கும் போது டென்ஷன் இல்லாமல் இருக்கும்.



8. முருங்கக்காய் அதிகமாக இருந்தால் அதை அப்ப்டியே பிரிட்ஜில்வைத்து காயவிடாதீர்கள்.அதை தோலெடுத்து ஒரு விரல் நீளத்துக்கு அரிந்து ஒரு கவரில் போட்டு பிரீஜரில் போட்டு வையுங்கள். முருங்கக்காய் சேர்த்து சமைக்கும் போது அப்ப எடுத்து அப்படியே கழுவி சேர்த்து கொள்ளலாம், இரண்டு நிமிடத்தில் வெந்துவிடும்.


9. குருமாக்களில் தேங்காயின் அளவை குறைத்து கொண்டு பாதம் சேர்த்து அரைத்து ஊற்றலாம். இது கொலஸ்ராயிலின் அளவை கட்டுபடுத்தும் குழந்தைகளுக்கும் மூளை வளர்சி அதிகரிக்கும். ரிச் டேஸ்டும் கிடைக்கும்.

10 . கருவேப்பிலை பிரெஷாக வாங்கி அதை கழுவி தண்ணீரை வடித்து ஒரு பேபப்ரில் சுருட்டி பிரிட்ஜில் வைத்தால் கொஞ்சம் நாள் ஆனதும் பொடித்தால் தூளாகிவிடும், அதை பிஸிபேளாபாத் இட்லி பொடி, மற்றும் பொடித்த கருவேப்பிலை சேர்த்து வதக்கி அரைக்கும் சமையலுக்கு பயன் படுத்தலாம்.



(தொடரும் )

5 கருத்துகள்:

ஹர்ஷினி அம்மா said...

எல்லா டிப்ஸ்சும் ரொம்ப சூப்பர் அக்கா

நான் உங்க குறிப்பை பார்த்துதான் இஞ்சி,பூண்டு போஸ்ட் அரைத்து வைக்க ஆரம்பித்தேன்....ஆனால் நான் அதில் கொஞ்சம் ஆலிவ் ஆயில் கலந்து விடுவேன்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

Thanks for the Tips Ka..

Jaleela said...

வந்து படித்து சென்றதுக்கு நன்றி தம்பி

Jaleela said...

ஹர்ஷினி நான் ஆலிவ் ஆயில் கூட் கலப்பதில்லை அப்படியே பிரெச்ஷாக இருக்கும், பூண்டு அதிகம் ஆனால் பச்சை கலர் வரும்.

நன்றி,

jayan said...

For some more tips pl. visit http://jayan-comedy.blogspot.com/2009/06/blog-post_10.html

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா