Thursday, July 9, 2009

பிரிவு என்பது ஏன் வருகிறது


என் செல்லம் ஹகீம்
என் செல்லம் ஊருக்கு போய் இன்றோடு ஒரு மாதம் ஆகப்போகிறது.
அப்துல் ஹகீம் காலேஜ் சேர ஊருக்கு போய் விட்டான்.
அவன் ஊருக்கு போன‌திலிருந்து ஒரு வேலையும் ஓட‌ல‌ இது வ‌ரை பிரிந்த‌தே இல்லை.
ஒரு ர‌ச‌ம் வைக்க‌ கூட‌ என்னால் முடிய‌ல‌, வீட்டில் சின்ன‌ பைய‌னும், என் ஹஸும் இருந்தால் கூட அவர்களுக்காகவும் சமைக்க முடியல, ஒரே அழுகை தான் அவன் துணியாபார்த்தா அழுகை வருது , அவன் புக்கை பார்த்தா அழுகை வருது.


ஏன் பிரிவு என்பது ஏன் வருகிறது. எப்ப பார்த்தாலும் ஹகீம் ஹகீம் ம்ம்ம்ம்ம்ம் என்று கூப்பிட்டு கொண்டே இருப்பேன்.
அமைதியான தங்கமான பையன், ஒரு சாக்லேட் வாங்கி சாப்பிடுவதா இருந்தால் கூட என் கிட்ட கேட்டுட்டு தான் சாப்பிடுவான். அவன் உண்மைய சொல்வதில் அவன் காந்திஜி வீட்டு பக்கத்து வீட்டு பையன் என்றூ சொல்லலாம்.
நானும் பிளாக்கில் எவ்வளவோ பதிவுகள் போட்டு மனசை தேர்த்த பார்த்தேன், ஆனால் என்னால் முடியல.
எல்லோரும் ப‌டிக‌க் தானே போகிறான், பொம்ப‌ல‌ பிள்ளைக‌ளே த‌னியா போய் ப‌டிக்கிறார்க‌ள். இவ‌னை அனுப்பிட்டு ஏன் இப்ப‌டி அழுகிறாய் என்று கேட்டார்க‌ள். என்ன‌ தான் ச‌மாதான‌ ப‌டுத்தினாலும் என‌க்கு முடிய‌ல‌.

போய் ஊருக்கு போய் பார்த்து விட்டு வ‌ர‌போறேன்.

6 கருத்துகள்:

R.Gopi said...

www.jokkiri.blogspot.com

www.edakumadaku.blogspot.com

R.Gopi said...

இப்போதுதான் முதன் முதலாக இங்கு வருகிறேன்.......... நானும் இங்கு துபாயில்தான் இருக்கிறேன். மத்திய கிழக்கு நாடுகள் பற்றி தொடராக எழுதி வருகிறேன். ஆறு பாகம் முடிந்து, ஏழாவது பாகம் தயாராகி கொண்டிருக்கிறது. ஓரிரு நாளில் அதுவும் அப்லோட் செய்யப்படும். அவசியம் வந்து படியுங்கள்.

பிரிவு என்பது எப்போதும் கொடுமைதான்.

நீங்கள் அதை மிகவும் சிலாகித்து எழுதி இருக்கிறீர்கள்.

//இவ‌னை அனுப்பிட்டு ஏன் இப்ப‌டி அழுகிறாய் என்று கேட்டார்க‌ள். என்ன‌ தான் ச‌மாதான‌ ப‌டுத்தினாலும் என‌க்கு முடிய‌ல‌.

போய் ஊருக்கு போய் பார்த்து விட்டு வ‌ர‌போறேன். //

கண்டிப்பா போயி, பாத்துட்டு வாங்க......

வாழ்த்துக்கள்.

நேரம் கிடைக்கும் போது, இங்கேயும் வந்து பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.

ராமலக்ஷ்மி said...

உங்கள் உணர்வுகள் புரிகிறது.

Jaleela said...

நன்றி இத பற்றி எழுத பிள்ளைகளை பற்றி எழுத இன்னும் நிறைய இருக்கு.

ஆனால் நேரம் கிடைக்க வில்லை, இதற்கு பதிவு வந்ததை இப்பதான் பார்த்தேன்.

மிக்க நன்றி புதிதாக வருகை தந்திருக்கும் கோபி ராமலக்ஷ்மி,

க‌ண்டிப்பாக‌ நேர‌ம் கிடைக்கும் போது உங்க‌ள் ப‌க்க‌த்துக்கு வ‌ருகீறேன்.


நாளைக்கு ஊருக்கு கிளம்புகிறேன்.

R.Gopi said...

//நாளைக்கு ஊருக்கு கிளம்புகிறேன்.//

I wish you a VERY VERY HAPPY JOURNEY" and "BON VOYAGE".

Enjoy your holidays......

We will wait for your further postings....

Ticket romba costly aache ippo?... Endha Airlines?

Jaleela said...

கோபி ஜெட் ஏர் வேஸில் தான் போனேன், ஊர் போய் வந்தாச்சு. மனசே சரியில்லை போஸ்டிங் மெதுவாதான் போடனும்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா