Monday, July 13, 2009

ஹீட் ஸ்டோக் என்ற வெப்பத்தாக்கம்


ஹீட் ஸ்டோக் என்ற வெப்பத்தாக்கம் தவிர்த்துக் கொள்ள முடிந்ததே!

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

அறிந்து கொள்ள வேண்டிய அறிகுறிகள்

களைப்பு
உடம்பு வலி
அதிக வியர்வை
அதீத தாகம்
குமட்டல், வாந்தி
தசைவலி
தலைசுற்றல்
நினைவிழப்பு
இசுவு அல்லது இழுப்பு அல்லது வலிப்பு

தவிர்க்கும் வழிகள்

நடுப்பகல் நேரத்து வேலைகளைத் தவிர்த்தல்.
நேரடி சூரிய வெளிச்சத்தில், புழுக்கத்தின்போது வேலைகளைத் தவிர்த்தல்.
காஃபி, டீ, கார்பன் அடைத்த பானங்கள், மது, போதை மருந்து போன்ற நீரிழப்பை ஏற்படுத்தும் உணவு வகைகளைத் தவிர்த்தல்.
புகை பிடித்தலைத் தவிர்த்தல்.
செயற்கை நூலிழைகளிலான இறுக்கமான உள்ளாடைகளைத் தவிர்த்தல்.


செய்து கொள்ள வேண்டியவை


உச்சிப் பொழுதில் ஓய்வு.

உப்பு மாத்திரைகள், பொடிகள் கலந்த தண்ணீரை அடிக்கடி குடித்தல்.

முடிந்தால் ஒரு நாளைக்கு 2 முறையாவது பழச்சாறுகள் அருந்துதல்.

சிறுநீர் மெல்லிய மஞ்சள் நிறத்தில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுதல்.

வெப்பத்தாக்கத்தின் அறிகுறிகள் உங்களுக்கோ அல்லது உங்கள் சகதொழிலாளிக்கோ

தெரிந்தால் உடனே மேலாளருக்குத் தெரிவித்தல்.

வெப்பத்தாக்குதலுக்கான நபரை எப்படிக் கையாள்வது

(மேலாண்மை நிர்வாக அலுவலர்களுக்கு)

குளிர்ச்சியான ஓரிடத்துக்குக் கொண்டு செல்லுதல்.

சீருடை, வெளி உடைகளை நீக்குதல்.

குளிர்ந்த நீரில் முக்கி எடுத்த ‘ஸ்பாஞ்ச்’ மூலம் ஒத்தடம் கொடுத்தல் அல்லது ஸ்ப்ரே செய்தல்.

மின்விசிறி அல்லது குளிர்சாதனம் வழி குளிர்ச்சியூட்டல்.

வாந்தி இல்லாவிட்டால் குடிக்க தண்ணீர் கொடுத்தல்.

முன்னேற்றம் இல்லாவிட்டால் அருகில் உள்ள மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லுதல்.

( துபாய் இந்திய‌ க‌ன்ச‌ல் ஜென‌ர‌ல் அலுவ‌ல‌க‌த்தால் க‌ட‌ந்த‌ ஆண்டு வெளியிட‌ப்ப‌ட்ட‌ இத்த‌க‌வ‌ல் த‌மிழக‌ம் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு ப‌குதிக‌ளில் இருந்து வ‌ளைகுடாவில் ப‌ணிபுரிபவ‌ர்க‌ளுக்கு மிக‌வும் ப‌ய‌னுடையதாய் இருக்கும். ஆங்கில‌ம், ஹிந்தி, ம‌லையாள‌ம் போன்ற‌ மொழிக‌ளில் வெளிவந்த‌ இத்த‌க‌வ‌ல் த‌மிழில் வெளிவ‌ர முக்கிய‌க் கார‌ண‌மான‌வ‌ர் தொழிலாள‌ர் ந‌ல க‌ன்ச‌லாக‌ ப‌ணிபுரிந்த‌ பி.எஸ். முபார‌க் அவ‌ர்க‌ளே. த‌ற்பொழுது ஜெத்தா இந்திய‌ துணைத் தூத‌ர‌க‌த்தில் ஹ‌ஜ் க‌ன்ச‌லாக‌ ப‌ணிபுரிந்து வ‌ருகிறார். )


இது மெயிலில் வந்த தகவல்,




இது என் டிப்ஸ்


1. ஆர‌ஞ்சில் உப்பு குளுக்கோஸ் க‌ல‌ந்து குடித்தால் போதும்.


2. லெமென் ஜூஸ், லெமென் சாத‌ம் சாப்பிட‌லாம்.

3. த‌யிர் சாத‌ம், ஸ்வீட் ல‌ஸ்ஸி, மோரில் இஞ்சி, கொத்தும‌ல்லி , சிறிது வெந்த‌ய‌ பொடி க‌ல‌ந்து அடித்து குடிக்க‌லாம்.

4. மேற்க‌ண்ட‌வைக‌ளை தின‌ம் அல்ல‌து வார‌ம் முன்று நாட்க‌ள் குடித்தால் ஹீட் ஸ்டோக் வ‌ராம‌ல் பாதுகாக்க‌லாம்.

5.உட‌ம்புக்கு குளிர்சி த‌ர‌க்கூடிய‌ உண‌வு க‌ளை உண்ப‌து ந‌ல்ல‌து.

6.சிக்க‌ன், பீஃப்,இறால் போன்ற‌வ‌ற்றை அள‌வோடு சாப்பிட‌வேண்டும்,இதெல்லாம் உட‌ல் சூடு அதிரிக‌ரிக்கும் உண‌வுக‌ள், முறையாக‌ த‌யிர் , லெமென் சேர்த்து ச‌மைத்தால் சாப்பிட‌லாம்.

4 கருத்துகள்:

S.A. நவாஸுதீன் said...

வளைகுடா நாட்டில் பணி புரிபவர்களுக்கு பயனுள்ள குறிப்புகள். நன்றி சகோதரி

Jaleela said...

இத பற்றி நானே விரிவாக எழுத இருந்தேன், ஆனால் அதற்குள் மெயிலில் இந்த தகவல் வரவே, சும்மா ஆறு பாயிண்ட் மட்டும் போட்ட்டுள்ளேன்.

நேற்று கூட ஆபிஸிலிருந்து வீட்டுக்கு போகும் போது கட்டட பணியில் வேலை பார்த்து கொண்டு இருப்பவர்களை பார்த்து போகும் போது இதற்குண்டான டிப்ஸ் போடனும் என்று ஆனால் நேரம் இல்லை.
பிறகு தான் போடனும்.

நன்றி நவாஸ் உங்கள் மூலமா ஒரு பத்து பேருகாவது தெரியும் இல்லையா?

ஹர்ஷினி அம்மா said...

http://kathampamtamil.blogspot.com/2009/07/32.html

ஜலீலா அக்கா இங்கே கொஞ்சம் பாருங்க .... அப்படியே பதிலும் கொடுத்துருங்க. :-)

Jaleela said...

ஹர்ஷினி பார்க்கிறேன் பார்த்து பதில் போடுகீறேன்

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா