கோதுமை மாவு = கால் கிலோ
பட்டு போல் உள்ள ரவை = 25 கிராம்
சர்க்கரை = ஒரு தேக்கரண்டி
உப்பு = ஒரு தேக்கரண்டி
தண்ணீர் = ஒரு டம்ளர்
எண்ணை = இரண்டு தேக்கரண்டி
செய்முறை
கோதுமைமாவில் மேற்கண்ட அனைத்து பொருட்களையும் எண்ணை தவிர போட்டு குழைக்கவும்.
குழைக்கும் போது இடையில் ஒரு தேக்கரண்டி எண்ணையும், கடைசியில் ஒருதேக்கரண்டி எண்ணையும் சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும்.
தண்ணீர் முதலில் முக்கால் டம்ளர் ஊற்றி குழைக்கவும், பிறகு தேவைக்கு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து குழைக்கவும்.
தேவையான பொருட்கள்
உருளை கிழங்கு = கால் கிலோ
வெங்காயம் = முன்று
தக்காளி = ஒன்று
மிளகாய் தூள் = அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் = அரை தேக்கரண்டி
உப்பு = முக்கால் தேக்கரண்டி
இஞ்சி = ஒரு தேக்கரண்டி (பொடியாக அரிந்தது)
பச்ச மிளகாய் = முன்று (இரண்டாக ஒடித்து கொள்ளவும்)
கடுகு = அரை தேக்கரண்டி
முந்திரி = முன்று (பொடியாக அரிந்து கொள்ளவும்)
உளுந்தம் பருப்பு = அரை தேக்கரண்டி
கருவேப்பிலை = சிறிது
எண்ணை = நான்கு தேக்கரண்டி
செய்முறை
பூரிக்கு மாவு குழைக்கும் முன் உருளை கிழங்கை வேக போடவும்.- உருளை கிழங்கை நன்கு மண் போக கழுவி இரண்டாக வெட்டி அதில் கால் தேக்கரண்டி உப்பு, கால் தேக்கரண்டி சேர்த்து மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி குக்கரில் நான்கு ஐந்து விசில் விட்டு இரக்கவும்.ஆறியதும் தோலை உறித்து மசித்து வைக்கவும்.
- ஒரு வாயகன்ற வானலியில் எண்ணையை காயவைத்து அதில் கடுகு,உளுத்தம் பருப்பு, முந்திரி,கருவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் தக்காளியை ஆறாக அரிந்து சேர்த்து பச்சமிளகாய், இஞ்சியை சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு மிளகாய் தூள்,கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் , உப்பு அரை தேக்கரண்டி சேர்த்து இரண்டு நிமிடம் வதங்க விடவும்.- மசித்த உருளையை சேர்த்து கிளறி கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து முடி போட்டு சிறிது நேரம் சிறு தீயில் விடவும்.கடைசியாக கொத்து மல்லி தழை தூவி இரக்கவும்.
குறிப்பு:
பூரி பாஜி என்பது ரொம்பசுலபம் தான் பல வகைகளில் செய்யலாம்.மைதாவில் செய்தால் உடனே சுட சுட சாப்பிடனும்.இது கோதுமையில் செய்வதால் பள்ளிக்கோ ஆபிஸுக்கோ கட்டி கண்டு போகலாம்.பூரியை எண்ணை நன்கு காய்ந்ததும் தீயின் அளவை மீடியமாக வைத்து சுடவும்.ஒரே சீராக தேய்த்து போடனும். எண்ணையில் போட்டதும் சும்மா சும்மா போட்டு கிண்டக்கூடாது.ஒரு பக்கம் வெந்ததும் , உடனே மறுபக்கம் திருப்பி பொங்கி வரும் போது எடுத்து விடவேண்டும்.
(இந்த அயிட்டம் என் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பேவரிட் .முன்று பேரும் முன்று விதமா சாப்பிடுவர்கள். பெரியவர் பூரிக்கு பொட்டுகடலை துவையல், சின்னவர் பூரி சாம்பார் , எங்க அத்தானுக்கு பூரி பாஜி ரொம்பவே பேவரிட்) ஆபிஸ் கொண்டு போன பக்கத்து டேபுள் அரபிகளுக்கு கூட மூக்கை துளைத்து கேட்டு சாப்பிடுவார்கள்.)இந்த பூரிக்கு மீன் குழம்பு, பீஃப் பிரை,மட்டன் குருமா, மட்டன் கூட்டு எல்லாம் நல்ல இருக்கும்.
Tweet | ||||||
2 கருத்துகள்:
அக்கா எனக்கும் இது ரொம்ப பிடிக்கும்... அப்படியே இங்கேயும் ஒரு பார்சல்...!!!!
ஹர்ஷினி அம்மா.
பூரி உருளை பிடிக்காதவர்களே கிடையாது புசு புசுன்னு பொங்கிவந்ததெல்லாம் சுட்டதும் ஒடி போச்சு கடைசியா என்னுடையது அது சாப்பிடும் போது தான் ஞாபகம் வந்தது குறிப்பில் போட்டுவிடலாம் என்று, இல்லை என்றால் படம் இன்னும் அப்படியே எடுத்து சாப்பிடுவது போல் வந்து இருக்கும்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா