1. முதுகுவலி, கால் வலி உள்ளவர்கள் காலுக்க்கிடையிலோ அல்லது காலுக்கு கீழோ தலையணை வைத்து படுத்தால் ஓரளவிற்கு முதுகுவலியில் இருந்து விடுதலை பெறலாம்.
2. சிலருக்கு டெலிவரியின் போது முதுகு தண்டில் ஊசி போடுவதாலும் ஏற்படும்.
3. முதுகுவலி உள்ளவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், வெயிட் அதிகமாக தூக்கக்கூடாது.
4. ஓவர் வெயிட்டாக இருந்தாலும் முதுகு வலி வரும் வெயிட்டை குறைத்தால் கூட இடுப்பு வலி முதுகு வலியில் இருந்து விடுதலை பெறலாம்.
5. முதுகுவலி இருப்பவர்கள் அதுவும் ஆபிஸில் வேலை செய்பவர்கள் ஒரே இடத்தில் வெகு நேரம் உட்காருவதை தவிர்க்கவும்.
6. அரை பக்கெட் தண்ணீரை கூட தம் பிடித்து தூக்கக்கூடாது, இதனால் இடுப்பு வலி முதுகுவலி ஏற்பட வாய்ப்பிருக்கு.
7. ஒரு நாளைக்கு இரு முறை ஹாட் வாட்டர் பேக் ஒத்தடம் கொடுத்தால் 50% வலி குறையும்.
8. கர்பிணி மாதம் ஏற ஏற வெயிட் காலில் இறங்கும் போது அவர்களுக்கு கால் வலி பிரசவத்திற்கு பிறகு முதுகுவலி வர வாய்ப்பிருக்கு. அதற்கு அவர்கள் காலுக்கடியில் சைடில் கூட தலையணை வைத்து படுத்தால் கர்ப காலத்திலும் அதற்கு பிறகும் வரும் வலியில் இருந்து விடுதலை பெறலாம்.
9. சேரில் உட்காரும் போது பின்னாடி ஒரு சிறிய தலையணை வைத்து கொண்டு உட்காரலாம்.
10. ரொம்ப முதுகுவலி உள்ளவர்கள் பெட்டில் படுக்காமல் கீழே படுத்து கொண்டு முதுகுக்கு மட்டும் ஒரு திக்கான துணியை விரித்து படுத்தால் ஓரளவிக்கு கட்டு படும்.
11. எந்த ஒரு பொருளையும் கீழே சட்டுன்னு குனிந்து எடுக்கக்க்கூடாது.
குழந்தைகளை குளிக்க வைக்கும் போது ஒரு சிறிய சேர் போட்டு உட்கார்ந்து குளிக்க வைக்கலாம்.
12. துணிகளையும் ரொம்ப நேரம் குனிந்து துவைக்கக்கூடாத
Note:
(இடுப்பு பலம் பெற முட்டை வட்லாப்பம், சிக்கன் மற்றும், மட்டன் எலும்பு சூப்,உளுந்து கஞ்சி,உளுந்து சுண்டல்,வெந்தய கஞ்சி போன்றவை சாப்பிடலாம்.ரொம்ப இடுப்பு வலி உள்ளவர்கள் இரண்டு முட்டை அவித்து மிளகு உப்பு தூவி சாப்பிடலாம்).
Tweet | ||||||
12 கருத்துகள்:
Very Useful Tips (As usual)
//Very Useful Tips (As usual)//
நன்றி நவாஸ்.
விலை சற்று கூடுதலாய் இருந்தாலும், மேட்ரஸ் நல்ல தரமானதாக வாங்குவது நல்லது, நல்ல பதிவு ஜலீலாக்கா
Nice information. Keep it up.
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஷபிக்ஸ்
தங்கள் வருகைக்கும், கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி கண்ணன்.
உபயோகமான தகவல்
உங்கள் வலை பக்கங்கள் உள்ள பளீர் வண்ணங்களால் கண்கள் கூசுகின்றன. கொஞ்சம் இதமான வண்ணங்களுக்கு மாற்றிப்பாருங்களேன்.
// உபயோகமான தகவல்//
//செல்வ குமார் சார் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
//
இந்த கலரை மாற்ற முடியல. ஆனால் பதிவுகள் முழுவதும் நீங்கள் சொன்னவுடன் ஒரே மாதிரி கருப்பு வண்ணத்தில் மாற்றி உள்ளேன்.
இது எனக்கு பயன்படும். பகிர்வுக்கு நன்றி சகோதரி!
Thanks for your back pain tips.
Thanks for your back pain tips.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா