Monday, February 18, 2019

Dindigul Biriyani/Seeraka Samba Rice/ஒரிஜினல் திண்டுக்கல் தலப்பாக்கட்டி...





Please Visit and subscribe our channel and share with your friends and family.






திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி

How to Make Dindugal thalappakatti Biriyani?
பல திண்டுக்கல் பிரியாணி இருந்தாலும் ஊருக்கே பெயர் போன திண்டுக்கல் தலப்பாகட்டி மட்டன் பிரியாணி அதே ருசியில் .
முயற்சி செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.

திண்டுகல் தலப்பாகட்டி பிரியாணி


சீரக சம்பா அரிசி –  1 kg  
ஆட்டு கறி – ஒன்ன்றை கிலோ மட்டன்  
நெய் – 200 கிராம்
கடலை எண்ணை (or) தேங்காய் எண்ணை – 100 கிராம்
ரீபைண்ட் ஆயில் – 100 கிராம்
சின்ன வெங்காயம் – 300 கிராம்
பெரிய வெங்காயம் ‍ 3
தக்காளி ‍ - 2
மிளகாய் தூள் – ஒரு மேசைகரண்டி
தயிர் – அரை கப் 200 gram
கொத்துமல்லி புதினா – இரண்டு கை பிடி
எலுமிச்சை பழம் – 1
இஞ்சி பூண்டு அரைத்தது – 200 கிராம்
பச்சமிளகாய் – 5
தாளிக்க - பட்டை 1 inch size, ஏலம் 4, கிராம்பு 4
தனியாக மேலே தூவ பட்டை ஏலம் கிராம்பு தூள் –  1 tspn 
தனியாதூள் - 25 gram (or) 10 gram
மிளகாய் தூள் - 25 gram
===
ஒன்ன்றை கிலோ மட்டன்
மிளகாய் தூள்: ஒரு மேசைகரண்டி
உப்பு ‍ ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு மேசைகரண்டி

மட்டனில் மிள்காய் தூள் உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வேகவைத்து கொள்ளவும். 


செய்முறை
ஆட்டுக்கறியை சுத்தம் செய்து மீடியாமான துண்டுகளாக போட்டு கழுவி தண்ணீரை வடித்து தனியாக வைக்கவும்.
சீரக சம்பா அரிசியை கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்.
சின்ன வெங்காயத்தை ஒன்றும் பாதியுமாய் அரைத்து வைக்கவும்.

பிரியாணி செய்ய தேவையான சட்டியை அடுப்பில் ஏற்றி காயவைத்து அதில் நெய், கடலை எண்ணை or தேங்காய் எண்ணை,ரீபண்ட் ஆயில் சேர்த்து சூடானதும் பட்டை ஏலம் கிராம்பு போட்டு தாளித்து நீளமாக வெட்டிய ஒரு பெரியவெங்காயம் மற்றும் அரைத்த சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
பிறகு இஞ்சி  பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
கொத்துமல்லி புதினா தழை முக்கால் பாகம் சேர்த்து வதக்கி தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்து அதில் பச்சமிளகாயை ஒடித்து சேர்க்கவும்.
சிறிது வதங்கியதும் அதில் மிளகாய் தூள் மற்றும் உப்பு தூள் சேர்த்து வதக்கி வேக வைத்துள்ள ஆட்டுகறியை சேர்த்து  நன்கு வதக்கி குறைந்த தீயில் வேகவிடவும்.
பிறகு தயிர் சேர்த்து கலக்கி நன்கு தனலை குறைத்து வைத்து தண்ணீர் வற்றியதும் அக்னி கறி போல வந்ததும் 
தண்ணீரை ஒரு பங்கு அரிசிக்கு ஒன்னறை பங்கு ஊற்றி கொதிக்க விட்டு உப்பு சரி பார்த்து எலுமிச்சைசாற்றை பிழிந்து, அதன் மேல் கொத்துமல்லி, புதினா தழை ,  கரம் மசாலா தூள்(பட்டை, ஏலம் , கிராம்பு தூள் )சேர்த்து ,சிறிது நெய் சேர்த்து அரிசியை அதிக தீயில் 10 நிமிடம் வேக விட்டு, குறைந்த தனலில் 20 நிமிடம் தம் போடவும்.
 பிரியாணி, சாதம் வகை, பாரம்பரியசமையல்,

இதுல ஒரு கிலோ rice அளவுக்கு செய்து இருக்கிறேன்.

.

1. திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணிக்கு சீரக சம்பா அரிசிதான் பயன் படுத்தனும்.

2. இதில் சேர்க்கவேண்டிய எண்ணை முக்கூட்டு எண்ணை ( கடலெண்ணை, நெய், ரீபைன்ட் ஆயில்)

3. சின்ன வெங்காயம் கண்டிப்பாக சேர்க்கனும். அதை கர கரப்பாக மிக்சியில் அரைத்து சேர்த்து தாளிக்கனும்..

4. வெந்த கறிகூட்டிலேயே தண்ணீர் அளந்த்து அரிசி தட்டி கொதிக்க விட்டு தம் போடனும்.

5. ரொம்ப் முக்கியமான விஷியம் கடையில் கரம் மசாலா தூவி நெய் ஊற்றி 5 நிமிடம் தம் போட்டு  இரக்கனும்

கவனிக்க :கறி தாளிக்கும் போது அக்னி யோடு தான் போட்டு வேக வைக்கனும், எனக்கு நேரமில்லாததால் குக்கரில் வேகவைத்து சேர்த்துள்ளேன்.தக்காளி இதற்கு குறைவாக சேர்த்தால் போதும்.

சிலருக்கு தனியாத்தூள் சேர்ததால் பிடிக்காது வேண்டுமானால் குறைத்து கொள்ளுங்கள்


6 பேர் சாப்பிடலாம், மட்டன் தாளிப்பில் போட்டு வேகவிடனும் நான் நேரமின்மையால் குக்கரில் வேகவைத்துள்ளேன். பாரம்பரியமாக செய்யும் ராவுத்தர் வீட்டு பிரியாணி திண்டுக்கலில் உள்ள எங்க நாத்தனாரின் மருமகளின் நானிமா சொன்ன அளவுகள், இதற்கு முன் நான் என் இஷ்டத்துக்கு செய்து இருக்கிறேன், இது சரியான முறையில் கேட்டு செய்தது



Facebook: https://www.facebook.com/jaleela.kamal
Face Book Page:https://www.facebook.com/Samaiyalattakaasam/
Dubai Burka Group wholesale and Retail:https://www.facebook.com/groups/Dubaiburka/
Tamil Blog:http://samaiyalattakaasam.blogspot.com
English Blog:http://cookbookjaleela.blogspot.com/
for Inquiry: cookbookjaleela@gmail.com

Tags- One potmeal/Biriyani/Traditional Food/


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

0 கருத்துகள்:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா