இனிப்பு மக்ரூணி/ஸ்வீட் பாஸ்தா
தேவையான பொருட்கள்
1. வேகவைத்த்து பாஸ்தா/மக்ரூணி - விரும்பி வடிவம் – 200 கிராம்
2. பால் அரை - லிட்டர்
3. ஸ்வீட்டன் கண்டென்ஸ்ட் மில்க் – 90 கிராம்
4. ஏலக்காய் – 2
5. பட்டை – ஒரு சிறிய துண்டு
6. நெய் – ஒரு மேசை கரண்டி
7. முந்திரி – 6
செய்முறை
1. முந்திரியை பொடியாக நறுக்கி அல்லது இரண்டாக வெட்டி நெய்யில் வறுத்து வைக்கவும்.
2. பாலை ஏலக்காய், பட்டை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
3. பால் சிறிது வற்றியதும் வேகவைத்த மக்ரூணியை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
4. கன்டென்ஸ்ட் மில்க் சேர்த்து கிளறி வறுத்து வைத்த முந்திரியை சேர்த்து நன்கு கிளறிஇரக்கவும்.
கவனிக்க :
கண்டெஸ்ட் மில்க் சேர்த்த்தும் அப்படியே கொதிக்க விடக்கூடாது, இல்லை என்றால்அடிபித்துவிடும்.
கண்டென்ஸ்ட் மில்க் இல்லை என்றால் சர்க்கரை 100 கிராம் சேர்க்கவும்.மக்ரூனியை வேகவைத்துவைத்து கொண்டால் நிமிஷத்தில் தயாரித்து விடலாம்.
சமைக்கும் போது மக்ரூனியை வேக வைப்பதாக இருந்தால் குக்கரில் ஒரு டம்ளர் மக்ரூணிஎன்றால் முன்று டம்ளர் அளவு தண்ணீரை கொதிக்கவைத்து மக்ரூணியை சேர்த்து கிளறி குக்கரைமூடி 3, 4 விசில் விட்டு இரக்கவும்.பிறகு குக்கர் ஆவி அடங்கியதும் வடித்து சேர்க்கவும்.
/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/
Tweet | ||||||
6 கருத்துகள்:
அட... சூப்பர்... செய்து பார்ப்போம் சகோ...
இனிப்பு மக்கரோனி புதுமை. இனிமை. பக்கத்தில் இருக்கும் வடையும் பசியை தூண்டுது அக்கா :)
மக்ரோனியை இனிப்பாக செய்து அட்டகாசம் பண்ணுகின்றீர்கள ஜலி :)
பார்க்க சூப்பராக இருக்கு ஜலீலா.
அருமையா இருக்கே...
இனிப்பு மக்ரோனி நன்றாக இருக்கிறது ஜலீலா அக்கா...
அவசியம் செய்து பார்க்கிறேன்...
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா